குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மேல் நம் எல்லோருக்குமே நம்முடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலை என்பது இயல்பாகவே வந்துவிடும். அதிலும் குறிப்பாக நாம் தனிமையில் இருக்கின்ற போது, நான் எதிர்காலத்தில் என்னவாக வர போகின்றேன்? என்னால் என்னுடைய இலக்குகளை அடைந்து கொள்ள முடியுமா? எவ்வாறு நான் வெற்றி அடைவது? நான் அடைய நினைக்கின்ற பணத்தினை என்னால் அடைந்து கொள்ள முடியுமா? என்று பல்வேறு விதமான கேள்விகள் நமக்குள் எழும்.
நான் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் எனக்கு தோல்வியே மிஞ்சுகின்றது. நான் எங்கு தவறு செய்கின்றேன்? என்று உங்களது எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்வீர்கள். இத்தகைய உங்களது எதிர்காலத்தைப் பற்றிய அனைத்து கவலைகளையம் நீக்கி உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை குறிப்பிடுகின்ற The 10x Rule for Multiply Your Income பற்றி இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். நிச்சயமாக இந்தப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
MIDDLE CLASS FEAR
பொதுவாகவே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலை என்பது மிகவும் அதிகமாகவே காணப்படும். அவர்களில் பலர் தங்கள் இலக்குகளை நோக்கி பல முயற்சிகளை செய்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாதது போன்று உணர்வார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தான் ஏன் தோல்வி அடைகின்றேன்? எதனால் என்னால் முன்னேற முடியவில்லை? என்று புரியாமல் புலம்பியிருப்பார்கள். ஒரு சிலர் தங்களுடைய தோல்விக்கான காரணத்தை ஒரளவு நெருங்கியிருப்பார்கள்.
இந்தப் பதிவினை வாசிக்கின்ற நீங்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞராக இருந்து உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் பல முயற்சிகளை செய்தும் அதில் உங்களால் வெற்றி பெற முடியவில்லையென்றால் உங்கள் தோல்விக்கான காரணத்தை முதலில் தேடுங்கள்.
அவ்வாறு நீங்கள் உங்கள் தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்திருந்தாலும், இல்லையென்றாலும் இந்தப் பதிவினை முழுமையாக வாசித்து முடிக்கும் தருவாயில் உங்கள் தோல்விகளுக்கான மிகச்சிறந்த தீர்வொன்றினை பெற்றிருப்பீர்கள்.
4 TYPES OF PEOPLE
ஒவ்வொரு மனிதனையும் அவர்களது செயற்பாட்டின் அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கலாம். முதலாவது வகை No Action Taker என அழைக்கப்படுவர். இவர்கள் வாழ்வில் வெற்றியடைய வேண்டுமென்று நினைப்பவர்கள். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியினையும் அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். இவர்களிடம் சென்று அவர்களின் தோல்விக்கான காரணத்தை கேட்டால், அர்த்தமே இல்லாத காரணங்களை கூறுவார்கள். அத்தோடு நான் வெற்றிபெறாததற்கு இவர்கள்தான் காரணம், அவர்கள்தான் காரணம் என்று மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள்.
இரண்டாவது வகை Action Avoider என அழைக்கப்படுவர். இந்த வகையைச் சேர்ந்தவர்கள் No Action Taker போன்றல்லாது தன்னுடைய இலக்கினை அடைவதற்கு தேவையான பல விடயங்களை கற்றுக் கொள்வார்கள். பல புத்தகங்களை படிப்பார்கள். ஆனால் கற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்துவதை தள்ளிப்போடுவார்கள். நாளை செய்யலாம், நாளை மறுநாள் செய்யலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். இதனால் இவர்களும் தன் வாழ்வில் தோற்றுக்கொண்டே இருப்பார்கள்.
மூன்றாவது வகை Normal Action Taker என அழைக்கப்படுவர். இவர்கள் தன் வாழ்வில் வெற்றி பெற தேவையான பல விடயங்களை கற்றுக் கொள்வதோடு கற்றுக்கொண்ட விடயங்களை சுறுசுறுப்பாகவும், வெற்றியடைய வேண்டுமென்ற எண்ணத்துடனும் செயற்படுத்தவும் செய்வர். ஆனால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு அவர்களுடைய Motivation Level குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுவர். இதனால் இவர்களும் தன் வாழ்வில் தோற்றுக்கொண்டே இருப்பார்கள்.
ஆனால் இந்த மூன்று வகையினரையும் போன்றல்லாது நான்காவது வகையைச் சேர்ந்தவர்கள் தன் வாழ்வில் தனக்கென்று ஒரு இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு அந்த இலக்கினை அடைவதற்கு எதுவெல்லாம் தேவையோ அவை அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்வார்கள். அதன்பின்னர் தான் கற்றுக் கொண்ட விடயங்களை செயற்படுத்துவதற்கு சரியான திட்டமொன்றினை அமைத்து தன்னுடைய இலக்கினை முழுமையாக அடையும் வரை தொடர்ச்சியாக அதனை செயற்படுத்துவார்கள். இதனால் இவர்கள் Massive Action Taker என அழைக்கப்படுவர்.
MASSIVE ACTION TAKER
இந்த வகையைச் சேர்ந்தவர்கள் அவர்களது வாழ்வில் எவ்வளவு பெரிய இலக்கினை வைத்திருந்தாலும் அதில் வெற்றிபெறுவார். இவ்வாறு அவர்கள் வெற்றி பெறுவதற்கு அவர்களுடைய தொடர்ச்சியான முயற்சிதான் காரணம்.
Massive Action Taker ஆக நீங்கள் செயற்பட வேண்டுமென்றால் அதற்கு மூன்று விடயங்கள் தேவை. ஒன்று Massive Action, இரண்டு Discipline, மூன்று Persistence என்பனவாகும். இந்த மூன்று விடயங்களையும் நீங்கள் பின்பற்றினீர்கள் என்றால் நீங்கள் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது.
நீங்கள் Massive Action Taker ஆக செயற்படுவதற்கு முதல் Massive Action Taker ஆக மாறவேண்டும். அதாவது இந்த நான்காவது வகை Action Taker ஆக மாறுவதற்கு சில விடயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்கும் போதுதான் உங்களால் எத்தகைய மிகப்பெரிய இலக்காக இருந்தாலும் அதனை வென்று உங்கள் வாழ்வில் மிகப்பெரும் வெற்றியாளராக மாற முடியும். ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம்.
1. SET A 10x BIG GOAL
நீங்கள் உங்கள் வாழ்வில் மிகப்பெரும் வெற்றியை அடைந்து கொள்ள வேண்டும் என்றால் நிச்சயமாக உங்களுடைய இலக்குகளும் அந்தளவு பெரியதாக இருக்க வேண்டும். உங்கள் இலக்கினை பணத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயித்தீர்கள் என்றால் இப்போது நீங்கள் பெரும் வருமானத்தினை விட 10 மடங்கு இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும். உதாரணமாக மாதம் 20,000/= சம்பாதிக்கிண்றீர்கள் என்றால் உங்களின் அடுத்த இலக்காக மதமொன்றிற்கு 200,000/= இருக்க வேண்டும்.
நிர்ணயித்த இலக்கினை முழுவதுமாக அடைந்து கொள்வதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதனை முறையாக திட்டமிட்டு அதனை சரியாக நிறைவேற்றுங்கள். உங்கள் இலக்கு பணமாக இருந்தால் எந்தந்த வழிகளில் எல்லாம் பணத்தை உழைக்க முடியும். எந்த திறமையை கற்றுக்கொண்டால் பணத்தினை அதிகமாக உழைக்க முடியும் என்று சரியாக ஆராய்ந்து முறையாக திட்டமிடுங்கள். அதேபோல் உங்கள் இலக்கினை அடைந்து கொள்வதற்கான இறுதி திகதியொன்றினையும் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் இன்னும் காலம் இருக்கின்றது என்று அலட்சியமாக இருந்துவிடுவீர்கள்.
இவ்வாறு உங்கள் இலக்கினை அடைந்துகொள்வதற்காக முறையான திட்டமொன்றினை எழுத்துவடிவில் எழுதி அதற்கான Dead Line ஒன்றையும் நிர்ணயம் செய்து, அந்த குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் திட்டத்தினை முறையாக செயற்படுத்துகின்ற போது குறிப்பிட்ட Dead Line க்குள் இலக்கினை அடைய முடியாவிட்டாலும் ஒருகட்டத்தில் நிச்சயமாக உங்களால் உங்களது இலக்கினை அடைந்துகொள்ள முடியும்.
2. BE OBSESSED
உங்களுடைய இலக்குகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அந்த இலக்கின் மீது நீங்கள் மிகப்பெரும் பிடிவாதத்தை காட்ட வேண்டும். நான் இந்த இலக்கை அடைந்தே தீருவேன் என்று அதில் பைத்தியமாக இருக்க வேண்டும். இதனை கேட்கும் போது உங்களுக்கு சிரிப்பு வரலாம். ஆனால் அதுதான் உண்மை. வாழ்வில் வெற்றி பெற்ற பலர் அவர்களுடைய இலக்கின் மீது பைத்தியமாக இருந்தார்கள். உங்கள் இலக்கினை அடையும் வரை மிகுந்த அர்ப்பணிப்போடு நீங்கள் செயற்படவேண்டும்.
இவ்வாறு நீங்கள் உங்களது இலக்கின் மீது மிகத்தீவிரமாக, சீரியஸாக இருப்பதை பார்த்து மற்றவர்கள் உங்களுக்கு எதாவது நோய் வந்துவிட்டது. அதனால்தான் நீங்கள் இவ்வாறு பைத்தியமாக உங்கள் வேலையில் இருப்பதாக கருதுவர்.
ஆனால் தன்னுடைய இலக்கின் மீது மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவது நோய் கிடையாது. அது இறைவனிடமிருந்து ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கின்ற மிகப்பெரிய வரமாகும். அந்த வரம் கிடைக்கப்பெற்றவர்களே மிகப்பெரும் சாதனையாளர்களாகவும், மில்லியனராகவும் மாறியுள்ளனர்.
அவ்வாறில்லாது சாதாரணமாக செயற்பட்டீர்கள் எனில், உங்கள் இலக்கினை அடைவதற்கான செயற்பாடுகளும் சாதாரணமாகவே இருக்கும். அப்போது நீங்கள் உங்கள் இலக்கினை அடைந்துகொள்ள மிக நீண்டகாலம் எடுக்கும்.
எனவே உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி. அதில் பிடிவாதமாக இருங்கள். சுருக்கமாக சொன்னால் “Do Or Die”. இந்த பிடிவாதக்கானைத்தை உணர்த்தும் விதமாக ஒருமுறை Steve Jobs கூட “Stay Hungry, Stay Foolish” என்று கூறியிருக்கின்றார்.
3. SPEED + CONSISTENCY
இந்த பதிவை வாசித்து கொண்டிருக்கின்ற எல்லோருக்குமே முயல் மற்றும் ஆமையினுடைய கதை தெரிந்திருக்கும். அந்த கதையில் முயலானது ஆரம்பத்தில் அதிக வேகத்துடன் சென்று பின்னர் களைப்படைந்து உறங்கிவிடும்.
ஆனால் ஆமையானது ஆரம்பத்திலிருந்தே தன்னால் இயன்றளவு மெது மெதுவாக சீரான வேகத்தில், தொடர்ச்சியான கவனத்துடன் சென்று தன் இலக்கினை அடைந்து வெற்றியாளனாக வரும். இக்கதையில் முயலானது என்னதான் வேகமாக ஓடி வெற்றிக்கோட்டை நெருங்கினாலும் தன்னுடைய கவனக்குறைவினால் இறுதியில் தோற்றுவிடும்.
ஆனால் நாம் இக்கதையில் வருகின்ற முயல் போன்றோ அல்லது ஆமை போன்றோ இருப்பது கிடையாது. முயலினுடைய வேகம் உள்ள, அதேசமயம் ஆமையைப் போன்று சீரான தொடர்ச்சியான கவனத்துடன் செயற்படக்கூடிய ஒருவராக மாறவேண்டும்.
அப்போதுதான் நம்முடைய இலக்கினை விரைவாகவும், சீரானதொரு வேகத்திலும் அடைய முடியும். நம்முடைய இலக்கான 10 மடங்கு வருமானத்தை அடைய நாம் முயலைப் போன்று அதிக வேகமுள்ளவராகவும் இருக்கவேண்டும். ஆமையைப்போல் சீரான கவனமும் இருக்கவேண்டும்.
இவ்வாறு Speed + Consistency இருப்பதனால் நம்மை தோற்கடிக்க வைப்பது மிகவும் கடினமான விடயமாகும். 10 மடங்கு அதிகமான உங்கள் வருமானத்தினை அடைய இக்கதையில் வரும் முயல் போல் அதிக வேகத்தில் சென்று பின்னர் ஒரேயடியாக ஓய்வெடுக்காமலும், அதேசமயம் ஆமையைப்போன்று மந்தமாக ஓடி மெதுவாக நீண்ட நாட்களுக்குப் பிறகு இலக்கினை அடையாமலும், மிக விரைவாகவும் கவனம் சிதறாமலும் இலக்கினை அடைய Speed + Consistency நமக்கு மிகவும் தேவைப்படுகின்றது.
4. FACE THE FEAR
நம்முடைய இலக்குகள் எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அந்தளவுக்கு அந்த இலக்கினை நம்மால் செய்ய முடியுமா? என்ற பயமும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இத்தகைய பயம் உங்களுக்கு வந்தால் நீங்கள் சரியான இலக்கினை மிகச் தெரிவு செய்திருக்கின்ரீர்கள் என்பது அர்த்தமாகும். அதேசமயம் ஒரு இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கினை என்னால் செய்ய முடியுமா? என்ற பயம் உங்களுக்குள் வரவில்லை என்றால் உங்கள் இலக்கு பிழையானது.
எனவே எப்போது உங்கள் இலக்கினை உங்களால் செய்ய முடியுமா? என்ற பயம் உங்களுக்குள் வருகிறதோ அப்போது நீங்கள் வெற்றியின் அருகில் வந்துவிட்டீர்கள் என்பது அர்த்தமாகும். எனவே உங்களுக்குள் ஏற்படும் பயத்தினை எதிர்கொள்ள தயங்காதீர்கள். அதனை முழுமனதோடு எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் பயத்தை போக்குவதற்க்கான மிகச்சிறந்த வழி அப்பயத்தினை எதிர்கொள்வதுதான். அவ்வாறு எதிர்கொள்ளும் போது பயமானது நம்மைவிட்டும் சென்றுவிடும்.
அவ்வாறில்லாது நீங்கள் உங்கள் பயத்தினை எதிர்கொள்ள தயங்கினால் நாளடைவில் அந்த பயம் அதிகரித்து கொண்டே சென்று, ஒரு கட்டத்திற்கு மேல் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து உங்கள் முயற்சியை கைவிட்டுவிடுவீர்கள். ஒரு விடயத்தில் உங்களுக்கு பயம் ஏற்பட்டால், உடனேயே அப்பயத்தை எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் பயத்திற்கு அதிக நேரத்தினை நாம் கொடுப்பது அந்த பயம் நம்மை சூழ்ந்து கொள்ள வழிவகுக்கும்.
உங்களுக்கு எதில் பயம் இருக்கின்றதோ அந்த விடயத்தினை தைரியமாக எதிர்கொள்ள பழகுங்கள். அது பணம் சம்பாதிப்பதாக இருக்கலாம், பரீட்சையொன்றை எழுதுவதாக இருக்கலாம், விளையாட்டு போட்டியொன்றாக இருக்கலாம், அல்லது Interview ஒன்றாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளும் போது அதிலுள்ள பயம் நீங்கி வெற்றியினை அடைந்துகொள்ள முடியும். ஏனெனில் வெற்றியினை மறைக்கின்ற முகமூடிதான் பயமாகும். எனவே பயம் என்ற முகமூடியை கழற்றி எறிவதன் மூலம் வெற்றியினை சொந்தமாக்கிக் கொள்வோம்.
SHORT STORY FOR YOUR SUCCESS
இங்கு மிகச்சிறந்த உதாரணமொன்றை கூறலாம் என்று நினைக்கின்றோம். சீனாவின் மூங்கில் மரங்களை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அது சரியாக வளர்வதற்கு சுமார் ஐந்து வருடங்கள் எடுக்கும். அந்த ஐந்து வருடங்களில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் அம்மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி உரமிட வேண்டும். ஆனால் அந்த ஐந்து வருடங்கள் முடியும் வரை அந்த மூங்கில் மரமானது நிலத்தை விட்டு ஒரு அடி கூட வளர்ந்திருக்காது. ஆனால் சரியாக ஐந்து வருடம் கழித்து ஐந்தே வாரங்களில் சுமார் 90 அடிவரை வளரும்.
இந்த மூங்கில் போன்றுதான் வரலாற்றில் சாதனை படைத்த, படைக்க இருக்கின்ற ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும். எந்தவித முன்னேற்றமும் தெரியாதது போன்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீங்கள் உங்கள் இலக்கினை அடைய என்ன செய்யவேண்டுமோ அதை செய்துகொண்டே வாருங்கள். சீன மூங்கில்களுக்கு தண்ணீர் இறைப்பதைப் போல. உங்கள் விடா முயற்சிக்கான வெற்றியானது உங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை தாண்டி மூங்கில் போன்று வளரும்.
FINALLY
இப்போது நாம் இந்த பதிவின் இறுதிப்பகுதிக்குள் வந்துவிட்டோம். நாம் மேலே கூறியது போல இந்தப்பதிவில் உள்ளவற்றை உங்கள் வாழ்வில் கடைபிடிக்கின்ற போது நிச்சயமாக உங்கள் தோல்வியிலிருந்து விடுபட்டு நீங்கள் அடைய நினைக்கின்ற இலக்கினை மிக விரைவாகவும், முழுமையாகவும் அடைந்துகொள்ள முடியும். அதேபோல் இந்த முறைகளை பயன்படுத்தி நீங்கள் அடைய நினைக்கின்ற பணத்தினையும் அடைந்துகொள்ள முடியும்.
How to Increase Your Income என்ற கேள்விக்கு இப்போது எல்லோருக்கும் பதில் தெரிந்திருக்கும். உங்கள் வருமானத்தை 10 மடங்கு அதிகரிக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் Massive Action Taker ஆக மாறவேண்டும். Massive Action Taker ஆக மாறுவதற்கு பெரிய இலக்கொன்றினை நிர்ணயித்து (Set a Big Goal) அந்த இலக்கினை அடையும் வரை மிகுந்த அர்ப்பணிப்புடன் தீவிரமாக செயற்படவேண்டும்.(Be Obsessed)
தனது இலக்கான 10 மடங்கு வருமானத்தினை அடைவதற்கு மிகுந்த வேகத்துடன் சீரான அடிப்படையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். (Speed and Consistency) அவ்வாறு திட்டங்களை நிறைவேற்றுகின்ற போது ஏற்படுகின்ற பயத்தினை தைரியமாகவும், மிகுந்த ஆர்வத்தோடும் எதிர்கொள்ள வேண்டும். (Face the Fear) இந்த நான்கு விடயங்களை பின்பற்றுவதன் மூலம் உங்களால் Massive Action Taker ஆக மாறமுடியும்.
அவ்வாறு Massive Action Taker ஆக மாறியதன் பின்னர் நீங்கள் அடைய நினைக்கும் வருமானத்தை அடைந்துகொள்ள முடியும். இந்தப்பதிவு உங்களுக்கு பயனுடையதாக இருந்திருக்குமென்று நினைக்கின்றோம். அவ்வாறு பிடித்திருந்தால் உங்கள் குடும்ப உறவினர்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம்.