Important of Kindness - Buddha Short Story | Life changing Short Stories in Tamil

 

அன்பு , கருணை இந்த வார்த்தைகளுக்கு இருக்கின்ற சக்தி அளப்பரியதாகும். ஏனெனில் உலகின் முக்கிய தலைவர்கள் உட்பட மத தலைவர்களும் இந்த மந்திரச் சொல்லைக் கொண்டே மக்களை தன்வசப்படுத்திக் கொண்டனர்.

அதற்குச் சான்றாக மகாத்மா காந்தி, அன்னை தெரேசா உட்பட புத்தர் வரை இந்த மந்திரச் சொற்களை கொண்டே உலகை இன்று வரை தன்வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இன்றுள்ள மக்களிடத்தில் இவை கடைபிடிக்கப்படுகின்றதா? என்றால் அது சற்று சந்தேகம்தான். ஏனெனில் எல்லோரும் ஒரு கட்டத்துக்கு மேல் கோபப்பட்டு கோபத்தின் விளைவாக பிறர் மீது அதை பிரயோகம் செய்கின்றனர்.

ஆனால் இவ்வாறு கோபப்படுவதற்கு பதிலாக அன்பு , கருணை என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை உள்வாங்கி தனக்கு கெடுதல் செய்பவர்களாக இருந்தாலும் அவர்களின் நிலைப்பாட்டில் இருந்து அவர்களை திருத்துவோமாக இருந்தால் நிச்சயம் இந்த உலகம் நம்மை அங்கீகரிக்கும். அதனை உணர்த்துகின்ற இரண்டு உண்மை சம்பவங்களை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அன்பினால் திருடனை வென்ற புத்தர் 

ஒரு சமயம் புத்தரும் அவருடைய சீடர்களும் காட்டில் தன்னுடைய ஆசிரமத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த திருடன் ஒருவன் புத்தரின் அருகில் இருந்த கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடினான்.


அவ்வாறு அவன் ஓடும்போது அவனது கால் புத்தரின் காலில் பட்டு இடறியது. புத்தரோ விழித்துக் கொண்டார். கால் இடறியதால் சற்று தடுமாறிய அந்த திருடன் ஒரு மாதிரியாக சமாளித்து விட்டு வேகமாக அங்கிருந்து ஓடினான். அப்போது அவன் அங்கிருந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடுவதை பார்த்தார் புத்தர்.


உடனே தன் அருகே படுத்திருந்த ஒரு சீடனை தட்டி எழுப்பினார் புத்தர். பிறகு துணி மூட்டையில் இருந்து ஓர் அழகிய கிண்ணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார். “யாரோ ஒருவன் நம்மிடமிருந்து ஓட்டை கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். பாவம்…. அந்தக் கிண்ணம் அவனுக்கு எந்தவகையிலும் பயன்படாது. உடனே நீ வேகமாக ஓடிச்சென்று இந்த புதிய கிண்ணத்தினை அவனிடம் கொடுத்துவிட்டு வா. இதோ இந்தப் பக்கமாகத் தான் அவன் ஓடினான். நீ வேகமாக ஓடிச்சென்று அவனிடம் இதை கொடுத்துவிடு” என்றார் புத்தர். 


Important of Kindness - Buddha Short Story | Life changing Short Stories in Tamil

புத்தர் காட்டிய திசையில் ஓடிய சீடன் நீண்ட நேரம் ஓடிய பின்னர் திருடனை பிடித்தான். “அன்பனே! சற்று நில். நீ தூக்கிக்கொண்டு ஓடி வந்தது ஒரு ஓட்டை கிண்ணம் ஆகும். அது எதற்கும் பயன்படாது. அதற்கு பதிலாக இந்த புது கிண்ணத்தை வைத்துக்கொள். என் குருநாதர்தான் இந்த விஷயத்தை என்னிடம் கூறி கிண்ணத்தை உன்னிடம் கொடுத்து விட்டு வருமாறு சொன்னார்!” என்று சொல்லிவிட்டு கிண்ணத்தை திருடன் கையில் கொடுத்தார் சீடன்.


ஆனால் திருடனோ இந்த சம்பவத்தால் நெகிழ்ந்து விட்டான். உடனே அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது. புத்தரின் அன்பு அவனை தடுமாற வைத்தது. மறுகணமே சீடருடன் நடந்து புத்தரை வந்தடைந்தான் திருடன். 


புத்தரை கண்ட திருடன் உடனே புத்தரின் காலில் விழுந்து “என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான். புத்தரோ அவனை வாஞ்சையோடு அள்ளி அணைத்தார். அப்போதிலிருந்தே அவனும் புத்தரின் சீடர்களில் ஒருவராக மாறினான். அன்பு மற்றும் மன்னிப்பு என்ற இந்த இரண்டு குணங்கள் மனிதர்களை எப்படி மாற்றி விடுகிறது பார்த்தீர்களா?


திருடனை மாற்றிய சாமர்த்தியமான அன்பு 


சில ஆண்டுகளுக்கு முன்பு America வில் Julius Dias என்கிற சமூக ஆர்வலர் ஒருவர் ஒரு நாள் பணி முடிந்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சுரங்கப் பாதையை கடக்க முற்பட்ட Julius Dias ஐ திடீரென திருடன் ஒருவன் வழிமறித்து கூரிய கத்தியை காட்டி உன்னுடைய Purse ஐ கொடுத்துவிடு. இல்லையென்றால் உன்னுடைய குரல் வலையை அறுத்து விட்டு அதை நான் பறித்துக் கொண்டு ஓட நேரிடும் என்று மிரட்டுகிறான்.


திருடனை சரியாக கண்ணுற்ற Julius Dias, அவனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும் என்பதை உணருகிறார். அவனுடைய வயது Teenage என்பதினால் Julius Dias அவனிடம் பதில் ஏதும் பேசாமல் அவர் தன்னிடம் உள்ள Purse ஐ ஒப்படைக்கிறார். 


Purse ஐ எடுத்துக்கொண்டு திருடன் தப்பியோட முயற்சிக்கும் போது, அவனை அழைத்த Julius Dias “தம்பி.. ஒரு நிமிஷம்.. நீ இரவு முழுக்க இதே மாதிரி கத்தியை காட்டி எல்லோரிடமும் பணம் பறிப்பதாக இருந்தால் இந்த கோட்டை உன்னிடம் தருகிறேன். இது உனக்குத் தேவைப்படும். இதனை அணிந்து கொள். ஏனென்றால் வெளியில் ரொம்ப குளிராக உள்ளது” என்றவாறு தன்னுடைய கோட்டை கழற்றி திருடனிடம் கொடுக்கிறார்.


திருடனுக்கு ஒரு கணம் குழப்பம். இவரை வித்தியாசமாக பார்த்தான். இந்நிலையில் அவர் ஒரு படி மேலே போய்... “நீ பசியோடு இருக்கிறாய் என்று நான் நினைக்கிறேன். உனக்கு விருப்பம் இருந்தால் அருகிலுள்ள ஏதாவது கடையில் இரவு சாப்பாட்டை சாப்பிடலாம் என்றார். அவன் இன்னும் Julius Dias ஐ நம்பாமல் துருதுருவென பார்த்துக்கொண்டிருந்தான்.


இந்த வயதில் ஒரு சில நூறு ரூபாய்களுக்காக நீ உன் உயிரை பணையம் வைத்து உன் சுதந்திரத்தை அடகு வைக்கிறாய் என்றால் நீ ஏதோ பெரும் கஷ்டத்தில் இருக்கிறாய் என்று தான் அர்த்தம். உனக்கு விருப்பம் இருந்தால் நீ என்னோடு இரவுச் சாப்பாட்டுக்கு வரலாம் என்றார் Julius Dias.


திருடனுக்கு மேலும் குழப்பம் அதிகரித்தது. அவர் வேறு ஏதாவது கத்தி , ஆயுதம் மறைத்து வைத்திருக்கிறாரா என்று அவரை நோட்டமிட்டான் திருடன். அவ்வாறு எதுவும் இல்லை என்பதை அறிந்ததும் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்கு அவரோடு சென்றான்.


அங்கு சென்றதும் திருடனுக்கு ஒரே ஆச்சரியம். ஏனெனில் அங்கு மேனேஜர் முதல் வெயிட்டர் வரை Julius Dias ஐ விஷ் செய்கின்றனர். இதனால் திருடன் Julius Dias இடம், “என்ன இது உங்களுக்கு இப்படி மரியாதை தருகிறார்கள்? நீங்கள் தான் ஒருவேளை இந்த இடத்திற்கு சொந்தக்காரரா?” என அவரைப் பார்த்து கேட்டான் திருடன்.


அதற்கு Julius Dias “இல்லை... இல்லை... நான் இங்கு அடிக்கடி வந்து சாப்பிடுவது வழக்கம்..! எனவே எனக்கு அனைவரும் நல்ல அறிமுகம் என்றார். அதற்குத் திருடன் “வெயிட்டர் இடம் கூட பண்பாக நடந்து கொள்கிறீர்கள்” என்று Julius Dias ஐ பார்த்து கூறினான். அதற்கு Julius Dias “நாம் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று உனக்கு பாடசாலையில் சொல்லித் தரவில்லையா?” என்று கேட்டார். அதற்குத் திருடன் “ஆம்.. ஆனால் அதை நான் நம்பவில்லை” என்றான்.


சாப்பிட்டு முடிந்த பிறகு, திருடனைப் பார்த்து Julius Dias “என்னிடம் கொடுப்பதற்கு பணம் கிடையாது. என்னுடைய Purse (பர்ஸ்) உன்னிடம் தான் உள்ளது. எனவே அதை திருப்பிக் கொடுத்தால் நான் பணத்தை கொடுத்து விடுவேன். அத்தோடு உன்னையும் கண்ணியமாக நடத்துவேன் என்றார்.


இதைக் கேட்ட திருடன் நியாயமாக அங்கிருந்து ஓடி இருக்க வேண்டும். ஆனால் அவன் ஓடாமல் Purse ஐ அவரிடமே திருப்பிக் கொடுத்தான். அதன்பிறகு Julius Dias உண்டதற்கான பணத்தை கொடுத்ததோடு, திருடனின் கையிலிருந்த கத்தியையும் பேரம் பேசி நல்ல விலை கொடுத்து வாங்கினார். இதன் மூலம் திருடனை அவனுடைய செயலிலிருந்து திருத்தியதோடு மட்டுமன்றி தன்னையும் தன் பொருளையும் காப்பாற்றிக் கொண்டார் Julius Dias.


பின்னர் வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் நடந்ததை கூறுகிறார் Julius Dias. அதற்கு அவரது அம்மா “மகனே நீ டைம் கேட்டால் Watch ஐ கழட்டி கொடுப்பவன். அப்படி இருக்க நீ இவ்வாறு நடந்து கொண்டதிலும் திருடன் அவ்வாறு நடந்து கொண்டதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை!” என்று கூறினார். பின்னாளில் இந்த செய்தி அமெரிக்க ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது!!

FINALLY

இந்த இரண்டு சம்பவங்களும் உங்களுக்கு ஒரு விடயத்தை நிச்சயமாக உணர்த்தி இருக்கும். எந்த ஒரு மோசமான சூழ்நிலை வந்தாலும் அதை அணுகுவதற்கு இரண்டு வகையான வழிகள் உண்டு. ஒன்று கோபப்பட்டு அதனை தவறான வழியிலும் நாம் அணுக முடியும். அல்லது பொறுமையாக இருந்து அன்பினாலும் சாமர்த்தியத்தையும் பயன்படுத்தி அணுகமுடியும்.


அவ்வாறே இந்த இரண்டு சம்பவங்களிலும் அவர்கள் இருவரும் அந்தப் பிரச்சினையை அணுகிய விதம் திருடர்கள் தன் தவறை உணர்ந்து அதனை விடும் அளவுக்கு மாற்றியது என்றால் நாமும் இந்த மாதிரியான சந்தர்ப்பங்கள் வரும்போது இதுபோன்று செயற்படுவோமானால் நிச்சயமாக இதனை எத்தகைய பிரச்சினையையும் சமாளிக்க முடியும். 

                                                            -END-

Post a Comment

Previous Post Next Post