Best Motivational Story in Tamil | Life Changing Motivational Story in Tamil


எனக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் ஏதாவது கூற முடியுமா? 

இன்று பல இளைஞர்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பலர் கேட்கின்ற விடயம் என்னவென்றால் எனக்கு தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் ஏதாவது கூற முடியுமா? என்பதாகும். இவ்வாறு அவர்கள் கேட்பதற்கு காரணம் தன் வாழ்வில் தான் எடுக்கின்ற பல முயற்சிகளில் தொடர் தோல்விகளை சந்திப்பதாகும்.

அவ்வாறு அவர்கள் தோல்வியினை சந்திக்கின்ற போது மனதளவில் உடைந்து போகின்றனர். காலப்போக்கில் தனது முயற்சியை கைவிட்டு விட்டு தன்னைத்தானே ஒரு தோல்வியாளனாக மதிப்பிட்டு கொள்கின்றனர். இந்த நிலையில்தான் படித்த மனிதரையோ அல்லது வாழ்வில் வெற்றி பெற்றவர்களை சந்திக்கின்ற போது என்னை ஊக்குவிக்கின்ற வகையில் ஏதாவது கூற முடியுமா? என கேட்கின்றனர். 

அந்த வகையில் உங்களை நீங்களே உரமாக்கி கொண்டு உங்களுடைய கனவை அடைவதற்கான சிறந்த ஒரு ஊக்குவிப்பினை இந்த பதிவில் நாம் தரப்போகிறோம். நிச்சயமாக இந்தப் பதிவு உங்களை சிறந்த முறையில் வழிநடத்தும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.


எனவே இந்த பதிவினை இறுதி வரை படித்து முடித்து தன் வாழ்வில் அவற்றை நடைமுறைப் படுத்துங்கள். குறிப்பாக என்றும் உங்கள் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள் மற்றும் உங்கள் முயற்சியையும் தொடர்ச்சியாக செய்து வாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்விலும் வெற்றி என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிடும். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம். 


Best Motivational Story in Tamil | Your Life Changing Motivational Story in Tamil

நாம் அதிர்ஷ்டசாலிகள் 

நாம் எல்லோருமே நமது பிறப்பு எவ்வாறு இருந்தது என்பதை பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.  ஏனெனில் இன்று நாம் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சினைகளை விடவும் மிகப் பெரும் பிரச்சினைக்கு மத்தியில் தான் நாம் பிறந்து இருக்கின்றோம். நாம் பிறக்கும்போதே மிகப்பெரும் போருக்கு மத்தியில் அதில் வெற்றி பெற்றுதான் நாம் ஒரு குழந்தையாக இவ்வுலகுக்கு வருகின்றோம்.


அதாவது ஒரு ஆரோக்கியமான ஆண் உடலுறவில் ஈடுபட்டவுடன் வெளியேறும் மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை 400 மில்லியன் என்று அறிவியல் உலகம் கூறுகிறது. எனவே இந்த விவாதத்தின் படி அந்த அளவு விந்தணுக்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு இடத்தைக் கண்டால் 400 மில்லியன் குழந்தைகள் உருவாக்கிவிடும். ஆனாலும் அந்த 400 மில்லியன் விந்தணுக்களும் அவ்வாறே குழந்தைகளாக மாறுவதில்லை. அவற்றுள் சுமார் 300 - 500 விந்தணுக்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றது.


ஏனெனில் இந்த 400 மில்லியன் விந்தணுக்கள் தாயின் கருப்பையை அடைந்து கொள்வதற்காக பைத்தியம் போல ஓடும். அவற்றுள் இந்த 300 - 500 விந்தணுக்கள் மட்டுமே தாயின் கருப்பையை சென்றடைகிறது. மற்றும் மீதமுள்ள அணுக்கள் வழியில் சோர்வு அல்லது தோல்வியின் காரணமாக இறக்கின்றன. இறுதியில் இந்த 300-500 விந்தணுக்கள் கருமுட்டையை அடைய முடிந்தது.


அந்த 300-500 விந்தணுக்களில் ஒரு விந்தணு மட்டுமே மிகவும் வலுவானது, கருமுட்டையை உரமாக்கி கருவாக உருவாகிறது. அல்லது கருமுட்டையில் ஒரு இடத்தைப் பிடிக்கின்றது. அந்த அதிர்ஷ்ட விந்து வேறு யாரும் இல்லை. நீங்கள் தான் அல்லது நான் அல்லது நாம் அனைவரும்.... உண்மையிலேயே நாம் அனைவரும் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதனை இப்போது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். 


உங்களின் முதல் வெற்றி 


இவ்வாறு தான் நமது பிறப்பானது நிகழ்கின்றது. இத்தகைய பல போராட்டங்களுக்கு மத்தியில், சுமார் 400 மில்லியன் விந்தணுக்கள் உடன் போட்டி போட்டு அதில் முதலாவதாக வென்று தான் நாம் இந்த உலகிற்கு பிரவேசிக்கின்றோம்.


இந்த மாபெரும் போரைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதுபற்றி நீங்கள் ஒரு கணம் சிந்தித்து இருந்தால் இவ்வாறு தோல்விகள் ஏற்படும் போதெல்லாம் துவண்டு விடமாட்டீர்கள். இங்கு நான் கீழே சில விடயங்களை குறிப்பிடுகின்றேன். அவற்றை ஒரு கணம் நீங்கள் சிந்தித்து பாருங்கள்.


நீங்கள் விந்தனுக்கள் ஆக தாயின் கருப்பையை நோக்கி ஓடியபோது "கண்கள், கைகள், கால்கள், தலை போன்றவை உங்களுக்கு கிடையாது., இருந்தும் நீங்கள் முதலாமவனாக வெற்றி பெற்றீர்கள். நீங்கள் ஓடியபோது ​​உங்களிடம் எந்தவிதமான சான்றிதழும் இல்லை,.உங்களுக்கு மூளை கிடையாது. ஆனாலும் நீங்கள் முதலாமவனாக வெற்றி பெற்றீர்கள்.


நீங்கள் ஓடும்போது உங்களுக்கு  கல்வி அறிவு கிடையாது. யாரும் உங்களுக்கு உதவி செய்யவும் இல்லை. ஆனாலும் நீங்கள் முதலாமவனாக வெற்றி பெற்றீர்கள். நீங்கள் ஓடும்போது உங்களுக்கு ஒரு இலக்கு இருந்தது.


நீங்கள் ஒரே மனதுடன் ஓடி அந்த இலக்கினை அடைவதனை நோக்காக கொண்டு, இறுதியில் நீங்கள் வெற்றியையும் அடைந்தீர்கள். அதன் பிறகு, தாயின் வயிற்றில் பல குழந்தைகள் இறக்கின்றன.. ஆனால் நீங்கள் இறந்துவிடவில்லை. நீங்கள் முழுமையாக 10 மாதங்களை முடித்துவிட்டீர்கள்.


தோல்விகளைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?


இவ்வாறு முதன் முதலில் நீங்கள் இவ்வுலகை பார்ப்பதற்கு உள்ளேயே இத்தகைய சாதனைகளை எல்லாம் செய்துவிட்டு தான் வருகின்றீர்கள். ஆனால் இவ்வுலகில் வாழ ஆரம்பித்து ஒரு சில வருடங்களுக்குப் பிறகு நாம் ஒரு முயற்சியினை, ஒரு இலக்கை நோக்கிச் செல்கின்ற போது, அதில் தோல்விகளும், பிரச்சனைகளும், சங்கடங்களும் ஏற்படுவதனை அடுத்து நாம் நமது முயற்சியினை கைவிட்டு விடுகின்றோம்.


மனதளவில் பலவீனம் அடைகின்றோம். எம்மோடு சேர்ந்து அம்முயற்சியை செய்தவர்கள் எல்லாம் வெற்றிப்படியை நோக்கி சென்று கொண்டிருக்க நாம் மட்டும் தோல்வியின் சுவடுகளால் பொறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம். இவ்வாறு தோல்வி மட்டுமே நம் வாழ்வில் தொடர்ச்சியாக கிடைப்பதற்கு காரணம் நாம் அம்முயற்சியை கைவிடுவதும், நமது தன்னம்பிக்கையை இழப்பதும் ஆகும்.


இந்த பதிவினை வாசிக்கின்ற யாராவது நான் எதைச் செய்தாலும் அதில் எனக்கு தோல்வியே மிச்சம். நான் எதிலும் வெற்றி பெற்றவனாக இல்லை. எனது வாழ்க்கை மிகவும் வெறுப்பாக இருக்கின்றது எனக் கூறுவார் ஆனால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் அவர்தான்.


ஏனெனில், ஒரு தாயின் கருவறையில் சுமார் 4 மில்லியன்  விந்தனுக்கலோடு போட்டி போட்டு அதில் முதலாவதாக வெற்றிபெற தெரிந்த உங்களுக்கு இவ்வுலகில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல.


உங்களாலும் வெற்றி பெற முடியும் 


இன்னும் தெளிவாக கூறப்போனால் பிறக்கும்போதே பல குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. ஆனால் நீங்கள் அவ்வாறு இறக்கவில்லை. இன்னும் பல குழந்தைகள் வாழ்க்கையின் முதல் 5 ஆண்டுகளிலேயே இறக்கின்றன.


நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறீர்கள். இன்னும் பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக இறக்கின்றனர். உங்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இன்னும் சிலர் வளர்ந்து வரும் வழியில் உலகை விட்டு பிரிந்து விடுகின்றனர். நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றீர்கள்.


இவ்வாறு எல்லா விடயங்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பினும் கூட, இன்று ஏதாவது பிரச்சினை நடக்கின்ற போது நீங்கள் பீதியடைகிறீர்கள், நீங்கள் விரக்தி அடைந்து விட்டதாக ஏன் நினைக்கிறீர்கள்?, நீங்கள் ஏன் தோற்று விட்டதாக நினைக்கிறீர்கள்?, நீங்கள் ஏன் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்? இப்போது உங்களோடு நண்பர்கள், உடன்பிறப்புகள், படிப்பு சான்றிதழ்கள் எல்லாம் இருக்கிறது.


கைகளும், கால்களும் நன்றாகவே உள்ளன. நல்ல கல்வி அறிவும் இருக்கிறது. திட்டமிட மூளை இருக்கிறது. உதவி செய்ய மக்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்.


வாழ்க்கையின் முதல் நாளில் நீங்கள் கைவிடாதபோது. 400 மில்லியன் விந்தனுக்கள்  உடன்  போட்டி போட்டு எவருடைய உதவியும் இல்லாமல் தொடர்ச்சியாக ஓடுவதன் மூலம் தனியாக போட்டியில் வெற்றி அடைந்தீர்கள்.


இவ்வாறே மிகப்பெரிய சாதனை புரிந்த உங்களால் ஏதாவது பிரச்சினையினை சந்திக்கின்ற போது ஏன் மனம் தளர்கின்றீர்கள்? நான் வாழ விரும்பவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்? நான் தோற்றுவிட்டேன் என்று ஏன் சொல்கிறீர்கள்? இதுபோன்ற பல விடயங்களை குறிப்பிட முடியும்.


ஆனால் நீங்கள் ஏன் விரக்தியடைகிறீர்கள்? ஆரம்பத்தில் வெற்றி அடைந்தீர்கள். இறுதியில் வெற்றி அடைவீர்கள். உங்களுக்கு நேரம் கொடுங்கள். உங்களிடம் என்ன திறமை இருக்கிறது என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். 

FINALLY 

இதுதான் எங்களால் உங்களுக்கு  கூற முடிந்த, உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்கின்ற எங்களால் முடிந்த ஒரு சிறிய உதவியாகும். இங்கு மேலே  குறிப்பிட்டுள்ள விடயங்களை கருத்தில் கொண்டு உங்களை நீங்களே பலப்படுத்திக் கொள்ளுங்கள்.


நிச்சயமாக உங்களது வாழ்வில் சந்திக்கின்ற ஒவ்வொரு தோல்விக்கு பின்னாலும் மிகப்பெரிய வெற்றி ஒன்று உள்ளது என்பதை நீங்கள் யாருமே மறந்துவிடாதீர்கள்.


உண்மையில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்வில் தான் நினைத்ததை சாதித்து காட்ட முடியும் என்கின்ற விதியினை ஒரு சில வெற்றியாளர்கள் மாத்திரமே அறிந்து வைத்திருக்கின்றனர். நிச்சயமாக நீங்களும் அதனை நம்பிக்கை கொண்டு நீங்கள் அடைய நினைக்கின்ற உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்து பாருங்கள்.


நிச்சயம் உங்கள் வாழ்விலும் வெற்றி என்பது உங்களை ஆர்ப்பரித்துக் கொள்ளும். பாதுகாப்பாக இருங்கள்; மகிழ்ச்சியாக இருங்கள்.மீண்டும் ஒரு சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகின்றோம்.  நன்றி...

                                                                         -END-

Post a Comment

Previous Post Next Post