இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இலக்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இலக்கு இல்லாத மனிதர்கள் வாழ்வில் வெற்றியை சுவைக்காது தொடர் தோல்விகளால் நிரம்பி இருப்பார்கள்.. நீங்கள் நிர்ணயிக்கின்ற இலக்கு தான் வருங்காலத்தில் உங்களது வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகும் திருப்புமுனையாக அமையும்.
இலக்கை தெரிவு செய்து அவ்வாறு தெரிவுசெய்த இலக்கை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும். இலக்குகளை வகுத்து அதை சிறிது சிறிதாக அடைய முயற்சிக்கலாம். இலக்குகளை அமைத்து அவற்றை அடைவதற்காக முயற்சியினை மேற்கொள்கிறவராக நீங்கள் இருந்தால், இங்கே கீழே தரப்பட்டுள்ள 10 எளிமையான வழிகள் நிச்சயம் உங்கள் இலக்கினை அடைவதற்கு உங்களுக்கு வழிகாட்டும்.
01. CHOOSE YOUR GOAL
உங்கள் இலக்குகளை ஒரு நோட் புத்தகத்தில் குறிப்பாக, தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள். இலக்குகளை எழுதி அவற்றை அடிக்கடி பார்த்து மனதில் பதிய வைத்தவர்களில் 80 சதவீதமானவர்கள் வெற்றி பெற்றிருப்பதாக ஆய்வுகள் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே நீங்கள் அடைய இருக்கின்ற இலக்குகளை தெளிவாக ஒரு நோட் புத்தகத்தில் எழுதி தினமும் குறைந்தது இரண்டு முறையாவது அவற்றை வாசித்து வாருங்கள். இதன் மூலம் உங்கள் இலக்கை அடைவது என்பது இலகுவானதாக அமையும்.
02. PLANNING
உங்கள் இலக்குகளை அடைவதற்காக நீங்கள் அமைக்கின்ற திட்டங்களை எளிதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அந்தத் திட்டங்களை எளிதில் செயல்படுத்தக் கூடிய வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.
இலக்கினை குறிப்பிட்ட காலத்திற்கு முடிக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். நீண்டகாலம் எடுத்துக்கொள்ளுமாறு திட்டங்களை அமைக்காதீர்கள். நீங்கள் வகுத்த திட்டத்தை அல்லது எழுதிவைத்த இலக்குகளை மாதம் ஒருமுறை மனதில் அசைபோட்டு கொள்ளுங்கள்.
03. FIND THE REASON FOR GOAL
மூன்றாவதாக உங்களுடைய இலக்குகளுக்கான காரணங்களை எழுதுங்கள். அந்த இலக்கினை அடைவதற்கு உங்களை தூண்டுகின்ற காரணிகளையும் எழுதுங்கள். அவை உங்கள் மனதிற்கு ஊக்கமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.
நீங்கள் இந்த இலக்குகளை ஆழமாக சிந்திக்கின்ற போது அவை மிகவும் முக்கியத்துவம் மிகுந்தவையாக இருக்க வேண்டும். இவ்வாறு உங்களது இலக்குகள் காணப்படுமாயின், நீங்கள் உங்கள் இலக்கினை அடைவதற்கான முயற்சியை தொடரலாம்.
04. DEVELOPING POSITIVE THOUGHTS
நேர்மறையான எண்ணங்களை வளர்கின்ற வாக்கியங்களை எழுதுங்கள். அத்தகைய புதிய வாக்கியங்களை உங்களுக்கென்று தனித்துவமானதாக உருவாக்கங்கள். உதாரணமாக “என்னால் முடியும்” இந்த வேலையை ஒரு வாரத்திற்குள் நான் முடித்துவிடுவேன் என்பதாக நேர்மறையான அதேசமயம் உங்களை உத்வேகப்படுத்துகின்ற வாக்கியங்களை எழுதுங்கள்.
நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி தன்னம்பிக்கையை அதிகரிக்கச்செய்யும் இவ்வாறான புதிய வாக்கியங்களை உருவாக்குங்கள். இவை உங்களுடைய தன்னம்பிக்கை குறையாமல் எப்போதும் பார்த்துக் கொள்ளும்.
05. IMAGINATION FOR GOAL
உங்கள் மனதில் உள்ள இலக்குகளை உருவகப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். அதாவது இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் கனவு காணுங்கள். ஏனெனில், வரலாற்றில் சாதித்த அனைவருமே தங்களுடைய இலக்கு பற்றி கனவு காண்பவராகவே இருந்துள்ளனர்.
இவ்வாறு நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்களோ அது குறித்து அனுதினமும் மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அது பற்றி கனவு காணுங்கள். உங்களுடைய இலக்குகளை அடைகின்ற வரை அந்த நினைப்பு உங்கள் உயிரிலே கலந்து இருக்க வேண்டும் மற்றும் மூச்சிலும் நிறைந்திருக்க வேண்டும்.
06. SELF-CONFIDENCE AND ACTION
காலையில் நீங்கள் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தேவையற்ற விடயங்களில் ஈடுபடாமல் உங்கள் இலக்குகள் பற்றிய விடயங்களை மனதில் அசைபோடுங்கள். தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வார்த்தைகளையும், உற்சாகம் தருகின்ற வார்த்தைகளையும் உரக்க கூறுங்கள். அந்த இலக்குகளை உருவகப்படுத்திப் பாருங்கள்.
இதனோடு முடித்து விடாமல் உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு நடவடிக்கை அல்லது திட்டத்தை வகுத்து செயல்படுங்கள். அவற்றை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் செயலில் இறங்குங்கள். எத்தகைய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படினும் உங்கள் இலக்குகளை அடைவதற்கான அன்றைய நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதீர்கள்.
07. IGNORE NEGATIVITY
முதலில் நீங்கள் உங்கள் மனதில் உள்ள அனைத்து வகையான எதிர்மறையான எண்ணங்களையும் துடைத்தெறியுங்கள். உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு மிகப்பெரும் தடையாக அமைவது இத்தகைய எதிர்மறையான எண்ணங்கள் ஆகும். இவை உங்கள் மனதில் ஏதாவது ஒரு ஓரத்தில் இருக்கக்கூடும்.
நல்ல வகையான சிந்தனைகள் உருவாவதற்கும், நம்பிக்கை ஊட்டுகின்ற வார்த்தைகள் மனதில் நிறைந்து கொள்வதற்கும் நீங்களும் உங்கள் மனதுமே காரணம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். ஆதலால் உங்கள் மனதில் உள்ள எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடுபட்டால் மட்டுமே உங்களால் உங்கள் இலக்கினை இலகுவாக அடைய முடியும்.
08. FACING CHALLENGES
நீங்கள் உங்களுடைய இலக்கினை அடைவதற்காக ஒவ்வொரு நாளும் செயற்படுகின்ற போது பல்வேறு வகையில் , பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அவற்றை குறித்து வையுங்கள். அந்த சவால்களை முறியடிப்பதற்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை பதிவு செய்யுங்கள்.
அவ்வாறு நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் எதிர்கொண்ட தடைகளை எல்லாம் வரிசைப்படுத்துங்கள். அதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் மற்றும் அதில் கிடைத்த வெற்றிகளையும் குறித்து வையுங்கள்.
இவ்வாறு வரிசைபடுத்துகின்ற போது தான் நீங்கள் சந்தித்த தடைகள் எத்தனை, அவை எத்தகைய விளைவை ஏற்படுத்தியது என்பதை பற்றி உங்களுக்கு தெரியவரும். அவற்றை தகர்ப்பதற்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், வெற்றி எவ்வாறு கிடைத்தது என்பதை உணர்ந்து உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு அவை உதவியாக இருக்கும்.
09. CHOOSE THE GOOD FRIENDS
நீங்கள் உங்களது இலக்கினை அடைவதற்கு உங்களோடு நட்பு பாராட்டுகின்ற உங்களது நண்பனும் ஒரு வகையில் காரணமாக அமைவான். இதனால்தான் தமிழில் ஒரு பழமொழி உண்டு. “ உன்னுடைய நண்பன் யாரென சொல். நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன்” என்பதுதான் அந்தப் பழமொழி.