“என்னால் வெற்றிபெற முடியவில்லை. நான் எவ்வளவு முயற்சி செய்தும் அவை அனைத்துமே தோல்வியில் தான் போய் முடிகின்றது. என்னிடம் பணம் அதிகமாக இல்லை. எனக்கு உதவி செய்யவும் யாரும் இல்லை. என்னிடம் ஒரு Degree கூட கிடையாது. என் நண்பர்களே எனக்கு துரோகம் செய்துவிட்டனர்.
என் அம்மா, அப்பா கூட என்னை நம்புவதில்லை. நான் என்னதான் சிறப்பாக ஒரு விடயத்தை செய்தாலும் அதனை கேலி, கிண்டல் செய்வதற்கு அனைவருமே திரண்டு வருகின்றனர். எனக்கு வாழவே பிடிக்கவில்லை. என் வாழ்க்கையை நினைத்து எனக்கு கடுமையான வெறுப்பாக உள்ளது. இதன் பின்னரும் என்னால் தாக்குப் பிடிக்க முடியாது” என்று போலியான காரணங்களை கூறி வாழ்வை வெறுக்கின்றவர் ஆக நீங்கள் இருந்தால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
இந்த பதிவில் உலகில் எந்த ஒரு மனிதனுக்கும் வரக்கூடாத ஒரு வழியினை அனுபவித்த ஒரு மனிதனின் கஷ்டங்கள், துன்பங்கள், அவர் அனுபவித்த வேதனைகள், அதன் பின்னரும் இவற்றையெல்லாம் கடந்து தான் நினைத்த வெற்றியை எவ்வாறு அடைந்தார் என்பதனை சுருக்கமாகவும், உங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் கூறியுள்ளோம்.
BIRTH OF NICK VUJICIC
1982 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி Australia வில் ஒரு தாய் பிரசவ வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். என்னதான் வலியில் தான் அவஸ்தைப்பட்டாலும் அது தன்னுடைய முதல் குழந்தை என்பதால் மிகவும் சந்தோஷத்துடன் பிரசவத்தை அணுகுகிறார்.
சற்று நேரத்தில் குழந்தை பிறக்கவே குழந்தையை பார்க்க மிகுந்த ஆவலோடு வருகிறார் அக்குழந்தையின் தந்தை. ஆனால் குழந்தையை பார்த்த மறுகணமே, அதிர்ச்சியாகி வாந்தி எடுக்க உணர்கிறார். இதனைப் பார்த்த அருகிலிருந்த தாதியர்கள் இங்கே வாந்தி எடுக்கக் கூடாது என வெளியே போக சொல்கின்றனர்.
தன் கணவரை பார்த்த அந்த தாய், தன் கணவர் வாந்தி எடுக்கும் அளவுக்கு அக்குழந்தைக்கு என்னதான் பிரச்சினை என்று தான் வலியோடு பெற்றெடுத்த பிள்ளையை உற்று நோக்குகிறார் அக்குழந்தையின் தாய். அவ்வாறு பார்த்த மறுகணமே, இது என்னுடைய குழந்தை இல்லை என அலறுகிறார்.
நீங்கள் என் குழந்தையை மாற்றி விட்டீர்கள் என மருத்துவர்களை பார்த்து கடுமையாக அழுகிறார். இவ்வாறு தன்னை பெற்றெடுத்த பெற்றோரே தன்னை வெறுக்கும் அளவுக்கு தன் பிறப்பிலேயே Tetra-Amelia Syndrome எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகள் மற்றும் கால்கள் இன்றி பிறக்கிறார் Nick Vujicic.
CHILDHOOD & SCHOOL Life of NICK VUJICIC
என்னதான் தங்களுடைய முதல் பிள்ளை இரண்டு கை, கால்களை இழந்து பிறந்தாலும் அது எங்களுடைய பிள்ளை என்பதை உணர்ந்த Nick Vujicic ன் பெற்றோர்கள் அதனை சுதாகரித்துக் கொண்டு அவரை எடுத்து வளர்ப்பதற்கு முடிவு செய்து வளர்த்ததோடு “நீ சாதிக்க பிறந்தவன். நீ கடவுளின் வரம்” என்று Nick Vujicic தனது குறையை மறக்கும் அளவுக்கு தைரியம் ஊட்டி வளர்க்கின்றனர்.
இந்நிலையில் Nick Vujicic க்கு பாடசாலை பருவம் வரவே அவரை பாடசாலையில் சேர்ப்பதற்காக அவரது பெற்றோர் சென்றபோது Nick Vujicic நிலைமையை பார்த்துவிட்டு, “Nick Vujicic ஐ இந்த பள்ளியில் சேர்க்க முடியாது. இவருக்கு என்று Special Schools உண்டு. அங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்” என பாடசாலை நிர்வாகம் Nick Vujicic இன் பெற்றோரிடம் கூறி விடுகிறது.
ஆனால் ஸ்பெஷல் ஸ்கூலில் சேர்த்தால் அவன் மனதளவில் பாதிப்படைவான் என்பதற்காக அவர்கள் சென்ற பாடசாலையிலேயே விடாப்பிடியாக நின்று Nick Vujicic ஐ சேர்த்து விடுகின்றனர் அவரது பெற்றோர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக மிகப்பெரிய அளவில் மன அழுத்தத்தை Nick Vujicic ன் பாடசாலை வாழ்க்கை அவனுக்குக் கொடுத்தது.
Nick Vujicic பாடசாலை செல்லும் போதெல்லாம் அவனை அனைத்து மாணவர்களும் அதிகமாக கேலி, கிண்டல் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக ஏழு பேர் கொண்ட குழு தொடர்ச்சியாக ஒரு நாளைக்கு ஒருவர் என்று Nick Vujicic ஐ கேலி கிண்டல் செய்வதோடு அடிக்கவும் செய்கின்றனர். இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளான Nick Vujicic தன்னுடைய எட்டாவது வயதிலேயே தனது முதல் தற்கொலை முயற்சியை மேற்கொள்வதோடு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கிறார்.
INCREASED STRESS
இவ்வாறே சில வருடங்கள் செல்ல தன்னுடைய பத்தாவது வயதில் அதிகரித்த மன அழுத்தம் காரணமாக தன்னுடைய இரண்டாவது தற்கொலை முயற்சியை தன் வீட்டில் உள்ள தண்ணீர் தடாகத்தின் அடியில் சென்று மூச்சினை அடக்கி முயற்சிக்கிறார்.
அப்போது அவ்வழியே வந்த Nick Vujicic இன் தந்தை Nick Vujicic ஐ பார்த்து,” தண்ணீருக்குள் என்ன செய்கிறாய்?” என்று கேட்க Nick Vujicic உடனே எழுந்து நீருக்கடியில் மூச்சை அடக்கி பயிற்சி செய்கிறேன் என கூறினார். இதைக் கேட்ட Nick Vujicic இன் தந்தை இது நல்ல முயற்சி. செய்து பார் என உற்சாகம் ஊட்டுகிறார். இதைக் கேட்ட Nick Vujicic தனது தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு தன் தந்தையிடம் சென்று, தான் பயிற்சி செய்யவில்லை தற்கொலை செய்ய முயற்சித்தேன் என அழுதவாறே தனது மன அழுத்தத்தை வெளிப்படுத்துகிறார்.
இதனை பார்த்த Nick Vujicic இன் அம்மா Nick Vujicic ஐ கட்டிப்பிடித்து அழுதுவிட்டு Nick Vujicic ஐ அவரது அறைக்கு அழைத்துச் சென்று Nick Vujicic ஐ போன்றே இரு கை, கால்கள் இல்லாத ஒருவரின் புகைப்படத்தை காட்டி இவரும் உன்னை போன்றவர் தான். ஆனால் இன்று எல்லா Paper மற்றும் TV News களிலும் இவர்தான் பேசப்படும் அளவுக்கு புகழ் அடைந்துள்ளார். நீயும் இவர்போல் புகழ் அடைய விரும்புகிறாயா? இல்லை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாயா? எனச் சொல்லிவிட்டு சென்று விட்டார். இந்த ஒரு நிகழ்வு Nick Vujicic இன் வாழ்க்கையை மாற்றிப் போட்டது.
தன்னுடைய கவலைகள் மன அழுத்தங்களை எல்லாம் விட்டுவிட்டு ஒரு புது மனிதனாக வெளிவந்தார் Nick Vujicic. என்னதான் தனது எண்ணத்தை மாற்றினாலும் Nick Vujicic ஐ கேலி, கிண்டல் செய்பவர்கள் குறையவில்லை. என்றாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளவில்லை Nick Vujicic.
அதுமட்டுமின்றி தன் குறைகளை மறந்து, புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்கிறார். தன் பாதத்தில் உள்ள இரு விரல்களைக் கொண்டு எழுத, Golf, Football விளையாட என பல விடயங்களை கற்றுக் கொள்வதோடு தனது வகுப்பின் மாணவ தலைவனாகவும் மாற்றம் பெறுகிறார் Nick Vujicic.
NEW JOURNEY AS A MOTIVATIONAL SPEAKER
அதுமட்டுமன்றி தன்னுடைய பதினேழாவது வயதில் இலாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்றை அமைத்து தன்னை போன்ற உடல் ஊனமுற்ற மனிதர்களுக்கு உதவுவதோடு, தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மன அழுத்தத்தினால் வாழ்க்கையை தொலைத்து இருப்பவர்களுக்கு உதவும் விதத்தில் தன்னுடைய வாழ்க்கையை உதாரணமாக வைத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வேலையில் இறங்கினார்.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த ஒரு விடயமே அவரை பெரிய அளவில் பிரபலம் அடையச் செய்கிறது. அதுவரை Australia வில் மற்றும் பிரபல்யமான அவரை உலகின் பல நாடுகள் Nick Vujicic ஐ Motivational Speech கொடுப்பதற்காக அழைக்க, உலகின் பல கோடி மக்களிடையே அவருடைய பேச்சு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்குகிறது. அது மட்டுமன்றி உலக அளவில் Famous ஆகவும் ஆகிறார்.
NICK VUJICIC'S WIFE AND CHILDREN
அதோடு Nick Vujicic ஐ சிறுவயதில், “உன்னை யாரும் லவ் பண்ண மாட்டார்கள். அப்படியே பண்ணினாலும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். அப்படியே திருமணம் செய்தாலும் உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது” என்று சொன்னவர்களுக்கு செருப்படி ஆக 2008 இல் Kanae Miyahara என்ற பெண்ணை காதலித்து 2012 இல் திருமணம் செய்து கொண்டதோடு இப்போது அவருக்கு நான்கு பிள்ளைகளும் உண்டு. இன்றைய Nick Vujicic இன் சொத்து மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
THE COURAGE OF NICK VUJICIC
ஒருமுறை Nick Vujicic இடம் நீங்கள் Disable Person ஆக உணர்கிறீர்களா? என கேட்டபோது, “Disable என்பது எந்த வேலையுமே செய்யாமல் இருப்பவர்கள்தான். ஆனால் நான் அவ்வாறு அல்ல. நீங்கள் என்னிடம் எந்த வேலையை கொடுத்தாலும் நான் செய்வேன். நான் Able தான்” எனக் கூறினார்.
அவருடைய இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் தான் அவரை கை, கால்களை இழந்த நிலையிலும் சாதிக்க வைத்தது. ஆனால் அவரை சிறுவயதில் குறை கூறியவர்கள் எல்லாம் இன்று எதனையும் சாதிக்க இயலாமல் வாழ்வில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு நிகழ்வு Nick Vujicic இன் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
FINALLY
இந்த பதிவினை படிக்கின்ற யாராக இருந்தாலும் Nick Vujicic இன் வாழ்வில் நடந்த சோதனைகளை விட அதிகமான சோதனைகளை யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவருடைய வாழ்வில் அவரால் வெற்றி பெற முடியும் என்றால் உங்களாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும். முயற்சி செய்யுங்கள் முழு மனதோடும் மிகுந்த தன்னம்பிக்கையோடும். நிச்சயம் உங்களுடைய வாழ்விலும் வெற்றி என்பது உங்களை வாரி அணைத்துக் கொள்ளும்.