How to Handle an Insults? | 3 Ways to Ignore Insults in Tamil


இன்றைக்கு இந்த பதிவில் நாம் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விடயத்தை பற்றி பார்க்க இருக்கின்றோம். நிச்சயமாக இது உங்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவும் என்று நாங்கள் நம்புகின்றோம். அது வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் உங்கள் வாழ்வில் சந்திக்கின்ற அவமானங்களை எவ்வாறு கையாள்வது? அந்த அவமானங்களை விட்டு உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு? என்பது பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.


How to Handle an Insults?

How to Handle an Insults? என்கின்ற கேள்வி உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் என்றாவது, எங்காவது ஒரு இடத்தில் அவமானங்களை சந்தித்திருப்போம். ஏன் ஒவ்வொரு நாளுமே அவமானங்களை சந்தித்து கொண்டுதான் இருக்கின்றோம்.


எனவே நீங்கள் உங்களுடைய அவமானங்களை கையாள்வதற்கும், அதற்கு முகம் கொடுப்பதற்கும் பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறு அவமானங்களை கையாள்வதற்கான மூன்று வழிகளை 3 Ways to Ignore Insults என்ற பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம். 

INSULTS IN OUR LIFE 

நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுடைய வாழ்க்கையில் பல இடங்களில் அவமானங்களை சந்திக்க வேண்டி இருந்திருக்கும். பல இடங்களில் பல்வேறு தரப்பட்டவர்களினால் நீங்கள் அவமானப்படுத்த பட்டிருப்பீர்கள். கேலி, கிண்டல் செய்யபட்டிருப்பீர்கள்.


அது உங்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்கலாம். உங்களுடைய நண்பர்களாக இருக்கலாம். நீங்கள் வேலை செய்கின்ற இடங்களில் இருப்பவர்களாக இருக்கலாம் அல்லது நீங்கள் மாணவர்களாக இருப்பீர்கள் என்றால் உங்கள் பாடசாலை மற்றும் நீங்கள் கல்வி கற்கின்ற இடத்தில் உள்ளவர்களாக  இருக்கலாம்.


இப்படி உங்களை அவமானப்படுத்தி கேலி, கிண்டல் செய்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு இடத்திலாவது அவமானத்தை சந்தித்திருப்பீர்கள். அவ்வாறு நீங்கள் பெறுகின்ற அவமானங்கள் அனைத்தும் உங்களை செதுக்க வேண்டும்.


உங்களை எந்த விடயத்திற்காக கேலி, கிண்டல் செய்து அவமானப்படுத்தினார்களோ அதே விடயத்தில் நீங்கள் முன்னேற்றம் அடைந்து உங்களை அவமானப்படுத்தியவர்களே உங்களை புகழ்ந்து பேசுமளவுக்கு,  நீங்கள் முன்னேறிவிட்டீர்கள் என்று சொல்லுமளவுக்கு நீங்கள் மாற வேண்டும். அதுதான் உண்மையான வெற்றி.


ஆனால் ஒவ்வொரு முறை நாம் அவமானப்படுகின்ற போதும் நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கின்றோம். மனதளவில் பலவீனம் அடைகின்றோம். இன்னொரு முறை இவ்வாறு அவமானப்படுவதை வெறுக்கின்றோம். ஆனால் இவ்வாறு அவமானங்களுக்கு பயந்து கொண்டு இருப்பது என்பது ஒரு முயற்சியாளனினதோ அல்லது ஓர் திடமான இலக்கினை நோக்கி செல்கின்ற வெற்றியாளனினதோ பழக்கம் கிடையாது. அவர்கள் எத்தகைய அவமானங்களாக இருந்தாலும் அதனை வித்தியாசமான கோணத்தில் அணுகுவார்கள்.

DON’T DO THIS WHEN OTHERS INSULT YOU

சிலபேர் எப்போதுமே நம்மை டார்கட் செய்து அவமானப்படுத்துவார்கள். ஏனெனில் அவர்களுக்கு நம்மீது பொறாமை இருக்கலாம். நாம் ஒவ்வொரு முறை வெற்றியடையும் போதும் அவர்கள் அதனை வெறுப்பவர்களாக இருக்கலாம். இதன் காரணமாக நாம் என்ன விடயத்தை அவர்களிடம் கூறினாலும் அல்லது நாம் ஏதாவது ஒரு விடயத்தை செய்வதென்று அவர்கள் தெரிந்து கொண்டால் அதற்காக நம்மை எப்போதும் கேலி செய்து கொண்டு நம்மை அவமானப்படுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள். 


இவர்கள் மாறப் போவதில்லை. ஏனெனில் நம்மை கேலி செய்வதும், கிண்டல் செய்வதும் தான் அவர்களுடைய பொழுதுபோக்காகும். அது  அவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும் கூடிய விடயமாகவும் இருக்கின்றது. எனவே இவ்வாறு யாராவது உங்களை குறிவைத்து அவமானப்படுத்தும் போதும் அல்லது நீங்கள் சாதாரணமாக அவமானங்களை சந்திக்கின்ற போதும் சில விடயங்களை செய்யவே கூடாது. ஏனெனில் அந்த விடயங்களை நீங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் உங்களை அவமானப்படுத்துகின்றனர். 


அவ்வாறு மற்றவர்கள் உங்களை அவமானப்படுத்துகின்ற போது நீங்கள் செய்யக் கூடாத விடயங்களில் முதன்மையானது எக்காரணம் கொண்டும் கோபப்படக்கூடாது. ஏனெனில் நீங்கள் கோபப்பட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் உங்களை அவமானப்படுத்துகின்றனர்.


அவ்வாறு நீங்கள் கோபப்படுகின்ற போது அவர்களுடைய நோக்கம் நிறைவேறி அவர்கள் உச்சகட்ட சந்தோஷத்தை அனுபவிக்கின்றனர். நீங்கள் கோபப்படுவது இன்னும் அவர்களை மோட்டிவேட் செய்கின்றது. எனவே மற்றவர்கள் உங்களை அவமானப்படுத்துகின்ற போது கோபப்படுவது கூடவே கூடாத விடயமாகும். 

3 WAYS TO HANDLE AN INSULTS

மற்றவர்கள் உங்களைக் கேலி, கிண்டல் செய்து அவமானப்படுத்துகிறது போது நீங்கள் கோபப்படுவது கூடாத விடயமாகும், மாறாக அந்த அவமானங்களை கையாள்வதற்கு மூன்று வழிகளை நீங்கள் பின்பற்ற முடியும். ஒன்று நகைச்சுவை உணர்வு. இரண்டாவது தவிர்த்தல் அல்லது புறக்கணித்தல். மூன்றாவது உங்களை அவமானப் படுத்துவதை திசை மாற்றுதல் என்பனவாகும்.  இந்த மூன்று விடயங்களை கடைபிடிப்பதன் மூலம் நீங்கள் சந்திக்கின்ற அவமானங்களை மிக இலகுவாகவும், உங்களை பாதிக்காத வண்ணம் எளிமையாக கையாள முடியும். 


How to Handle an Insults? | 3  Ways to Ignore Insults in Tamil

HUMOR OR COMEDY 

One of the Best way to Ignore Insults என்றால் அது காமெடி தான். யாராவது உங்களை கேலி, கிண்டல் செய்து அவமானப்படுத்த முயற்சிக்கின்ற போது அதனை Divert பண்ணுகின்ற மிகச் சிறந்த வழியாக Humor காணப்படுகின்றது. மற்றவர்கள் உங்களை அவமானப்படுத்துகின்ற போது அதற்கு கோபப்பட்டு அவர்களை சந்தோஷப்படுத்துவதற்குப் பதிலாக அதனை ஒரு காமெடி போன்று நீங்கள் மாற்றும் போது அங்கே உங்களை அவமானப்படுத்துகின்றவர்கள் தோல்வி அடைகின்றனர்.


உதாரணமாக நீங்கள் குண்டாக இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் குண்டாக இருப்பதை வைத்து உங்கள் நண்பரொருவர் உங்களை அவமானப்படுத்த முயற்சி செய்தால் அதற்காக கோபப்படாமல் அதனை ஒரு காமெடி போன்று மாற்றி விடுங்கள்.


“மச்சான் நானும் நீயும் ஒரே அளவுலதான் சாப்பாடு தின்றோம். ஆனா பாரு ஏன் நல்ல மனசுக்கு நான் குண்டாகிட்டேன். உன்னோட கெட்ட மனசு நீ இன்னும் ஒல்லியாவே இருக்காய். மனசு வேணும். மனசு… அப்போதான் குண்டாகலாம்.. என்ன ஓகேதானே” என்று காமெடியாக மாற்றிவிடுங்கள்.


உங்களை அவனமானப்படுத்த நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த பதிலடியாக இருப்பது அவர்கள் உங்களை அவமானப்படுத்தியதற்கு கோபப்படாமல் காமெடியாக பேசி அவர்களையும் சிரிக்க வைப்பதுதான். இதன் மூலம் உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற அவர்களின் எண்ணமும் உடைத்தெறியப்படும்.


உங்களாலே காமெடி பண்ண முடியல அப்படின்னா அதற்கு பதிலாக ஒரு Thanks சொல்லிடுங்க. அப்போ அவங்க சொன்ன எதையுமே நீங்க கண்டுக்கலண்டு உங்களை அவமானப்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள்.

AVOID OR IGNORE INSULTS

மேலே குறிப்பிட்ட முறையை விட இந்த முறை சற்று வித்தியாசமானதாகும். இங்கு மற்றவர்கள் உங்களை அவமானப்படுத்துகின்ற போது அதற்கு பதிலாக நீங்கள் கோபப்படாமல் அதனை புறக்கணித்தல் வேண்டும்.


அவர்கள் என்னதான் உங்களைப் பற்றி கேவலமாக கூறினாலும் கேலி, கிண்டல்கள் செய்து உங்களை அவமானப்படுத்தினாலும் அதைப்பற்றி சற்றும் நீங்கள் பொருட்படுத்த கூடாது. வலது காதால் கேட்டீர்கள் என்றால் அதனை இடது காதால் விட்டுவிட்டு சென்று விடுங்கள் அவ்வளவுதான்.


இன்னும் சிம்பிளாக கூற வேண்டுமென்றால், உங்களிடம் யாராவது ஒருவர் Gift Box ஒன்றை தந்துவிட்டு அதனை வாங்கிக்கொள்ளுமாறு உங்களிடம் கூறுகின்றார். ஆனால் நீங்கள் அந்த Gift Box ஐ வாங்காமல் மறுத்து விட்டீர்கள் எனில் அவர் என்ன செய்வார்கள். எப்படியாவது உங்களை வற்புறுத்தி அதனை வாங்க வைப்பார். இல்லையென்றால் அவரே அதை வைத்துக் கொள்வார்.


இதே போன்றதொரு வேலையைத்தான் மற்றவர்கள் உங்களை கேலி செய்கின்ற போதும் செய்யப் போகின்றீர்கள். மற்றவர்கள் உங்களை கேலி, கிண்டல்கள் செய்து அவமானப்படுத்துகின்ற போது அதனை உங்களுக்குள் நீங்கள் எடுத்துக்கொள்ளாமல் அந்த அவமானங்களை உங்களை அவமானப்படுத்தியவர்களிடமே கொடுத்து விடுங்கள்.


மேலே சொன்ன உதாரணத்தை போன்று அவர்கள் உங்களுக்கு தருகின்ற அவமானங்களை எல்லாம் அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவ்வாறு செய்யும் போது நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். உங்களை அவமானப்படுத்த நினைத்தவர்கள் உங்களை அவமானப்படுத்த முடியாமல் வேதனையால் சிக்கித்தவிப்பார்கள்.

MAKING THEM RETHINK OR DIVERT

உங்களை யாராவது மோசமான வார்த்தைகளை கொண்டு கடுமையான முறையில் கேலி, கிண்டல் செய்வார்கள் எனில் அத்தகையவர்களை கையாள்வதற்காக இந்த முறையை நீங்கள் பயன்படுத்தலாம். மோசமான கெட்ட வார்த்தைகளை கொண்டு உங்களை யாராவது அவமானப்படுத்துகின்ற போது அவர்கள் கூறியது உங்களுக்கு கேட்காதது போல் நடியுங்கள். அதன் பின்னர் “ஆ…என்ன…என்னது…கேக்கலே நீங்க சொன்னது மறுபடியும் சொல்லமுடியுமா?” என்றவாறு கேட்டுப்பாருங்கள்.


அவ்வாறு நீங்கள் கேட்கும் போது மீண்டும் அந்த கடுமையான வார்த்தைகளை திரும்ப கூறி உங்களை அவமானப்படுத்த தயங்குவார்கள். அதற்கு பதிலாக கண்ணியமான நல்ல வார்த்தைகளைக் கொண்டு உங்களிடம் பேசுவார்கள். இதனால் அந்த இடத்தில் உங்களை அவமானப்படுத்துகின்ற அவர்களது நோக்கம் தவிடுபொடியாகும். இதனால் இலகுவாக அவர்களது அவமானப்படுத்தலை Ignore பண்ண முடியும். ஏனெனில் இது பொதுவான மனித உளவியல் ஆகும். 


ஒருவரை நீங்கள் கடுமையான வார்த்தைகளை கொண்டோ அல்லது அவர்கள் கோபப்படும் படியோ கூறிவிட்டு நீங்கள் கூறியது உரிய நபருக்கு விளங்காமல் பின்னர் மீண்டும் நீங்கள் கூறியவற்றை அவர் கேட்டால் முதற்தடவை கூறியதை கூறுவதற்கு நீங்கள் தயங்குவீர்கள். ஒரு வகையான தயக்கம் உங்களுக்குள் ஏற்படும். அதனால் ஏற்கனவே கூறியதை கூறாமல் அதனை நல்லவிதமாக கூறுவீர்கள். இந்தவகை மனித உளவியலைத்தான் நீங்கள் உங்களை அவமானப்படுத்துபவர்களிடம் பயன்படுத்த போகின்றீர்கள்.

FINALLY 

மேலே குறிப்பிட்ட இந்த மூன்று வழிமுறைகள்தான் 3 Ways to Ignore Insults ஆகும். இவற்றை பின்பற்றுவதன் மூலம் மற்றவர்களின் கேலி, கிண்டல்களிலிருந்து இலகுவாக வெளிவர முடியும். இவற்றை பின்பற்றுவதோடு மட்டுமின்றி உங்களை அதிகமாக அவமானப்படுத்துகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உறவிலிருந்து சற்று விலகியே இருங்கள். அது உங்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் வேலை செய்கின்ற இடத்தில் அல்லது நீங்கள் படிக்கின்ற இடத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி. 


ஏனெனில் அவர்கள் உங்கள் மீது நம்பிக்கையற்றவர்கள். உங்கள் வெற்றியை தடுக்க நினைக்கின்றவர்கள். அவர்கள் ஒருபோதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் உங்களுடன் இருக்கின்ற போது உங்களால் எந்தவொரு நிலையான வெற்றியையும் அடைந்துகொள்ள முடியாது.


நீங்கள் தடுமாறி தோல்வியில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் உடனான உறவை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள். நேர்மறையான எண்ணங்கள் உள்ளவர்களோடு பழக்கத்தை அதிகப்படுத்துங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.


இந்த பதிவின் மூலம் How to Handle an Insults? என்பது பற்றி மிகத்தெளிவாக புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். அதேபோல் அவமானங்களுக்கு இனிமேல் உங்களால் இலகுவாக முகம்கொடுக்க முடியும் என்று நம்புகின்றோம். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் குடும்ப உறவினர்களிடமும், உங்கள் நெருங்கிய  நண்பர்களிடமும் இப்பதிவினை பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம். நன்றி.



Post a Comment

Previous Post Next Post