Heath Ledger Joker Biography - Inspiring Life Story of Heath Ledger in Tamil

சினிமா என்பது உலகின் பல கோடிக்கணக்கான மக்களால் ரசிக்கப்படுகின்ற மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகும். ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை மக்கள் மத்தியில் சினிமாவானது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றது.

அந்த வகையில் சினிமாவில் கதாபாத்திரங்களாக தோன்றி நடிக்கின்ற பல நடிகர், நடிகைகள், அப்படத்திற்கு பின்னாலிருந்து உழைக்கின்ற இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று பல பிரபலங்கள் மக்களால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றனர்.


Heath Ledger Joker Biography - Inspiring Life Story of Heath Ledger in Tamil

அப்படி மக்களால் கொண்டாடப்பட்ட, கொண்டாடப்பட்டு வருகின்ற ஹாலிவுட் திரையுலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களையும் தன் நடிப்பினால் கவர்ந்த 2008 ஆம் ஆண்டு Christopher Nolan இயக்கத்தில் வெளியான “The Dark Knight” திரைப்படத்தில் Joker கதாப்பாத்திரத்தில் நடித்த Heath Ledger உடைய வலிகள் நிறைந்த வாழ்க்கை வரலாற்றினை இந்தப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். சரி வாருங்கள் Heath Ledger Joker Biography பதிவிற்குள் செல்லலாம்.

EARLY LIFE OF HEATH LEDGER

Kim Ledger மற்றும் Sally Ledger தம்பதிகளுக்கு 1979 ஏப்ரல் 4 ஆம் திகதி ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பிறக்கின்றார் Heath Ledger. இந்நிலையில் Heath Ledger உடைய பத்தாவது வயதில் அவரது அப்பாவும், அம்மாவும் பிரிந்து விவாகரத்து பெற்றுவிடுகின்றனர். இந்த விடயம் Heath Ledger ஐ பெரிதளவில் பாதிப்படைய வைக்கின்றது. இதற்கு மத்தியிலும் நன்றாக படிக்கக்கூடியவராகவும், செஸ் விளையாடக்கூடியவராகவும் இருக்கின்றார் Heath Ledger.


இவ்வாறு சாதாரணமாக போய்க்கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையில் நடிப்பின் மீதான ஆர்வம் துளிர்விடுகின்றது. காரணம் அவரது அக்கா விளம்பர படங்களில் நடிகையாக இருந்ததால் அவரது நடிப்பைப் பார்த்து நடிப்பின் மீதான ஆர்வம் Heath Ledger க்குள் ஏற்படுகின்றது. இதன் காரணமாக தன்னுடைய பத்தாவது வயதிலேயே நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு Heath Ledger க்கு கிடைக்கின்றது. இந்நிலையில் நடிப்பின் மீதான அவரது அதீத ஆர்வம் அவரை தன்னுடைய பதினாறாவது வயதிலேயே பள்ளி படிப்பை விட வைத்தது.

BEGINNING STAGE OF ACTING

தன்னுடைய பதினாறாவது வயதில் நடிப்பிற்காக தனது படிப்பை விட்ட Heath Ledger தனது நெருங்கிய சிறுவயது நண்பனோடு சேர்ந்து பேர்த்திலிருந்து சிட்னிக்கு தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடிப்பதற்காக வேண்டி செல்கின்றார். அந்த வகையில் 1993 இலிருந்து 1997 வரை ஆவுஸ்திரேலியாவின் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து அவுஸ்திரேலியா முழுவதும் பிரபலம் அடைகின்றார் Heath Ledger.


இவ்வாறு தொலைக்கட்சித் தொடர்களில் மட்டுமே நடித்து வந்த Heath Ledger முதன் முதலாக 1997 இல் அவுஸ்திரேலிய திரைப்பட இயக்குனர் Gregor Jordan இயக்கத்தில் வெளியான Blackrock என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மீண்டும் 1999 இல் தன் முதற்பட இயக்குனர் Gregor Jordan இயக்கத்தில் Two Hands என்ற அவுஸ்திரேலிய comedy crime thriller திரைப்படத்தில் நடித்தார் Heath Ledger. 

HEATH LEDGER IN HOLLYWOOD 

இந்நிலையில் Heath Ledger க்கு மிகப்பெரிய இலட்சியமொன்று இருந்தது. அது தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஆஸ்கார் விருதினை வென்றுவிட வேண்டும் என்பதாகும். அதன் முதற்படியாக 1999 ஆம் ஆண்டே 10 Things I hate about You என்ற அமெரிக்க romantic comedy திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக ஹோலிவுட்டில் அறிமுகமானார் Heath Ledger. அப்போது அவருக்கு வயது 19 ஆகும்.


இத்திரைப்படத்தை தொடர்ந்து 2000, 2001 ஆம் ஆண்டுகளில் The Patriot மற்றும் Monster’s Ball ஆகிய திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் Heath Ledger. அடுத்ததாக அதே ஆண்டில் (2001) A Knight’s Tale என்ற திரைப்படத்திலும் நடித்தார்.


2002 இல் The Four Feathers என்ற திரைப்படத்திலும், 2003 The Order மற்றும் Ned Kelly ஆகிய இரண்டு திரைப்படங்களிலும், 2005 Casanova, The Brothers Grimm மற்றும் Lords of Dogtown ஆகிய மூன்று திரைப்படங்களிலும் பிரதான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.

GROWTH OF HEATH LEDGER IN CINEMA 

இவ்வாறு தொடர்ச்சியாக பல படங்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டிய Heath Ledger, 2005 ஆம் ஆண்டு Brokeback Mountain என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அமெரிக்கா முழுக்க பரவலாக பேசப்பட்டார். ஏனெனில் அந்தளவுக்கு மிக அற்புதமான நடிப்பினை வழங்கியிருந்தார். ஊடகங்கள், திரை விமர்சகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் சாதாரண ரசிகர்கள் என்று அனைவராலும் Heath Ledger இன் நடிப்பானது இப்படத்தில் கொண்டாடப்பட்டது.


Brokeback Mountain திரைப்படத்தில்  தனது அசாத்திய நடிப்பு திறனுக்காக “Best Actor of 2005”, “Golden Globe Award for Best Actor”, “BAFTA Award for Best Actor” போன்ற பல விருதுகளை சுவீகரித்ததோடு, தன்னுடைய 26 வது வயதில் “Academy Award for Best Actor” எனும் Oscar விருதுக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டார். மிக இளவயதில் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டதில் இது எட்டாவது பரிந்துரையாகும்.


இத்திரைப்படத்திற்கு பின்னர் நாவலை மைய்யப்படுத்தி 2006 இல் எடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய Romantic Drama திரைப்படமான “Candy” திரைப்படத்தில் நடித்தார் Heath Ledger. இத்திரைப்படத்திலும் தனது அசாத்திய நடிப்பிற்காக பல விருதுகளையும் வென்றார்.


அதனைத் தொடர்ந்து 2007 இல் “I’m Not There” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் Heath Ledger. இவ்வாறு வெற்றிகளோடும், புகழ்ச்சியோடும் சென்றுகொண்டிருந்தாலும் அவரது இலட்சியமான Oscar விருதினை அப்போது அவர் வாங்கியிருக்கவில்லை. ஆனால் அதற்கான அவரது நேரம் நெருங்கியது.

RISING OF THE JOKER

The Dark Knight” திரைப்படத்தை எடுக்க முடிவுசெய்து அதற்கான கதாப்பாத்திரங்கள் தேர்வு நடந்து கொண்டிருந்த வேளையில் பேட்மேன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக Heath Ledger செல்கிறார். ஆனால் Heath Ledger இன் நடிப்பைப் பார்த்த Christopher Nolan அவரை “Joker” கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்கின்றார்.


இதனால் Heath Ledger வேறு வழியில்லாமல் Joker கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்கிறார். இதிலிருந்து தொடங்குகிறது ஜோக்கரின் மிரட்டலான பயணம். Joker கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு Heath Ledger ஒப்பந்தமானதை அறிந்து பல பத்திரிக்கை நிறுவனங்களும், திரை விமர்சகர்களும் மற்றும் ஊடகங்களும் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.


“Joker கதாப்பாத்திரம் மிகவும் அற்புதமான, அதேசமயம் மிகவும் சவாலான கதாப்பாத்திரம். அதில் நடிப்பதற்கு அனுபவமில்லாத 28 வயதான இவரையா தெரிவு செய்வது! இது மிகவும் தவறான பிழையான முடிவாகும்” என்று விமர்சனம் செய்தனர். ஆனால் பின்னாளில் Joker கதாப்பாத்திரத்திற்க்கே அகராதியாய் Heath Ledger மாறப்போகிறார் என்பதை அப்போது யாரும் நினைத்தும் கூட பார்க்கவில்லை.

HEATH LEDGER AS THE JOKER

அதுவரை காலமும் Heath Ledger ஆகவும் சிறந்த நடிகராகவும் கருதப்பட்ட அவர் முழுமையாக தன்னை ஒரு Joker ஆக மாற்றவேண்டும் என்று Joker தொடர்பான முந்தைய திரைப்படங்கள், காமிக்ஸ் புத்தகங்கள் என ஜோக்கர் பற்றி கடுமையாக ஆய்வு செய்தார். அதற்காக தன்னை 45 நாட்கள் ஹோட்டல் அறையொன்றில் வெளியுலக தொடர்புகள் ஏதுமின்றி பூட்டிக்கொண்டார். முடிவு 46 வது நாள் இதுவரை யாரும் பார்த்திடாத சைக்கோவான புதுவகை Joker ஆக மாறியிருந்தார் Heath Ledger.


“The Dark Knight” திரைப்படத்துக்கான படப்பிடிப்பில் கலந்து joker ஆகவே வாழ்ந்திருப்பார் Heath Ledger. படத்தின் இயக்குனரிலிருந்து படத்தில் நடித்த முக்கியமான கதாப்பாத்திரங்கள் வரை அனைவரையும் Heath Ledger இன் பிரம்மிக்கத்தக்க நடிப்பினை பார்த்து வியந்து போனர். நடிப்பின் மீது அவர் வைத்திருந்த அலாதி பிரியம் அவரை Real Joker ஆகவே மாற்றியது. ஷூட்டிங் முடிந்த பின்னரும் அவரால் Joker கதாப்பாத்திரத்திலிருந்து வெளிவர முடியவில்லை. Joker அவரை முழுமையாக ஆற்கொண்டுவிட்டான்.

AFFECT OF JOKER

The Dark Knight” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது புகழின் உச்சத்தில் இருந்தார் Heath Ledger. படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் முழுவதுமாக முடிந்தது. ஆனால் Heath Ledger ஆல் Joker கதாப்பாத்திரத்திலிருந்து மீண்டுவர முடியவில்லை. Insomnia நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.


ஒரு நாளில் அதிகபட்சமாக 2 மணி நேரமே அவரால் தூங்க முடிந்தது. Heath Ledger செய்தியாளருக்கு அளித்த பேட்டியொன்றில் “உடல் மற்றும் மன ரீதியாக Joker என்னை முழுவதுமாக ஆற்கொண்டுவிட்டான். என் உடல் வெறும் கூடாகி விட்டது. நான் நானாக இல்லை” என்று கூறினார். அப்போது இக்கூற்றை அவர் கூறியபோது பலரும் அதை நம்பவில்லை. படத்திற்கான ப்ரொமோஷன் என்று கூறினர்.


ஆனால் உண்மையிலேயே Heath Ledger Joker ஆல் கடுமையாக பாதிக்கப்பட்டார். Joker ஆக மாற 45 நாட்கள் தனி அறையொன்றில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு அவர் செய்த முயற்சியின் விளைவு அது. படத்தில் மட்டுமன்றி நிஜத்திலும் Joker உயிர் பெற்றான். கோமாளித்தனம் கொண்ட மனநோயாளி Joker ஆக முழுவதுமாக மாறினார் Heath Ledger. 


இவ்வாறு சரியான தூக்கமில்லாமல் Joker இன் பிடியினால் அவஸ்தைப்பட்ட Heath Ledger 2008 ஜனவரி 22 ஆம் திகதி தனது படுக்கையறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். அவருடைய இறப்பு செய்தி The Dark Knight படக்குழுவினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என எல்லோரையும் கவலையில் ஆழ்த்தியது.


மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு தூக்கமின்றி தவித்த Heath Ledger, அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் இறந்துள்ளார் என Heath Ledger Death Reason ஆக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

SUCCESS OF JOKER

Heath Ledger Joker Biography - Inspiring Life Story of Heath Ledger in Tamil

Heath Ledger இறந்த போது The Dark Knight திரைப்படம் வெளியாகியிருக்கவில்லை. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மீதமிருந்ததால் அவர் இறந்து 6 மாதங்கள் கழித்தே திரைக்கு வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய The Dark Knight திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட மிகச்சிறந்த திரைப்படமாக மாறியது. அதற்கு மிகப்பிரதான காரணம் Heath Ledger இன் பிரம்மாண்டமான நடிப்பு. திரையில் மனசாட்சி இல்லாத, கொலைகார கோமாளி Joker ஆக தோன்றி படத்தில் நடித்தவர்களை மட்டுமன்றி படம் பார்க்க வந்தவர்களையும் நடுங்க வைத்திருப்பார். 


படத்தில் நடித்த பேட்மேன் கதாபாத்திரம் உள்ளடங்கலாக ஏனைய கதாபாத்திரங்கள் பலரது பாராட்டினை பெற்றாலும் Heath Ledger நடித்த Joker கதாபாத்திரம் தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Joker கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு Heath Ledger ஐ ஒப்பந்தம் செய்த போது கிண்டல் செய்து விமர்சனம் எழுதியவர்களை எல்லாம் அவர்கள் வாயாலேயே இதைவிட அற்புதமாக Joker கதாபாத்திரத்தை வேறு யாராலும் செய்ய முடியாது என்று சொல்ல வைத்தார் Heath Ledger.


அந்தளவுக்கு Joker கதாபாத்திரம் என்றால் அது Heath Ledger தான் என்பதை திரையில் உணர்த்தியது The Dark Knight திரைப்படம். $185 Million அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படமானது சுமார் $1 Billion அமெரிக்க டாலர்களை வசூலித்து பிரம்மாண்டமான சாதனை செய்தது. இத்தகைய மாபெரும் வெற்றிக்கு Heath Ledger என்ற அசாத்திய நடிகனின் மிரட்டலான Joker கதாபாத்திரம் பெருமளவில் உதவியது என்றால் அது மிகையாகாது.

JOKER WON THE OSCAR

Heath Ledger பொதுவாகவே ஒரு Method Actor. தான் நடிக்கும் படங்களின் கதாப்பாத்திரமாகவே படப்பிடிப்பு முடியும் வரை இருக்கக்கூடியவர். அதே முயற்சியைத்தான் The Dark Knight திரைப்படத்திலும் அவர் மேற்கொண்டார். ஆனால் இந்த முறை Joker அவரை வென்றுவிட்டான். படப்பிடிப்பு முடிந்து மற்றொரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதும் ஜோக்கரை அவரால் விடமுடியவில்லை. விளைவு Joker என்ற கதாப்பாத்திரத்திற்கே அகராதியாக மாறினார் Heath Ledger.


Joker கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக Heath Ledger பல விருதுகளை வென்றதுடன் தனது மிகப்பெரும் இலட்சியமான ஆஸ்கார் விருதினையும் வென்றார். Academy Award for Best Supporting Actor என்ற பிரிவில் Oscar விருதினை தட்டிச் சென்றது Heath Ledger’s Joker கதாபாத்திரம். ஆனால் இதில் மிகப்பெரும் கவலை என்னவென்றால் ஆஸ்கார் விருதினை பெரும்போது அவர் உயிரோடு இல்லை. அவர் சார்பாக அந்த விருதினை அவரது இரு பெற்றோரும் மற்றும் அவர் நடிப்பதற்கு காரணமான அவரது அக்காவும் வாங்கிச்சென்றனர். 

RELATIONSHIP OF HEATH LEDGER

தான் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்திலிருந்தே பல பெண்களோடு Relationship இல்  இருந்தார் Heath Ledger. ஆனால் யாரோடும் நீண்ட நாட்கள் உறவினை தொடர இயலவில்லை. அதற்கான காரணத்தை அவரின் காதலிகளிடம் கேட்டபோது , “Heath Ledger ஒரு படத்தில் நடிப்பதாக உறுதியானால் அந்தப்படம் முடியும் வரை அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்வார். அப்போது எங்களால் Heath Ledger ஐ கண்டுகொள்வது முடியாது போய்விடும். இதன் காரணமாக எங்களுக்குள் Breakup ஏற்பட்டது” என்று கூறினர். 


அந்தளவுக்கு நடிப்பின் மீது அலாதி விருப்பத்தினை கொண்டிருந்தார் Heath Ledger. 2004 இல் Brokeback Mountain திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது Michelle Williams உடன் காதல் வயப்பட்டு உறவில் ஈடுபடுகின்றார். அதன் பின்னர் 2005 அக்டோபர் மாதத்தில் Matilda Rose Ledger என்ற பெண் குழந்தைக்கு தந்தையாகின்றார். இந்நிலையில் 2007 செப்டெம்பர் மாதம் Michelle Williams இடமிருந்து பிரிந்து விவகாரத்துப் பெறுகின்றார் Heath Ledger.

FINALLY

Heath Ledger உடைய இந்த Inspiring Life Story உங்களுக்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்தியிருக்கும். நாம் எந்த தொழில் செய்தாலும் அதனை முழுமனதாக விரும்பி, அதனை காதலித்து செய்வோமானால் நிச்சயமாக நம்மால் மிகப்பெரும் வெற்றியினை அடைய முடியும். சினிமா மீது அவர் வைத்திருந்த எல்லையற்ற காதலுக்கு அடையாளமாக இருப்பது Joker கதாபாத்திரம் தான். இனி எத்தனை Joker கதாபாத்திரங்கள் வந்தாலும் Heath Ledger என்ற ஆளுமையின் Joker என்றும் முதலிடத்தில் நிலைத்து நிற்பான்.


தன்னுடைய பத்தாவது வயதில் தன் பெற்றோர்களின் விவகாரத்தால் மனமுடைந்து தன்னுடைய பதினாறாவது வயதில் நடிப்பிற்காக பள்ளிப்படிப்பினை விட்டார். தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் Hollywood திரையுலகில் கால்பதித்த அவர் ஒருமுறையாவது ஆஸ்கார் விருதினை வாங்கிவிட வேண்டுமென்று கடுமையாக உழைத்து தன்னை ஒரு சிறந்த நடிகனாக மாற்றிக்கொண்டார். கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதன் பலனாக ஆஸ்கார் விருது உட்பட பல்வேறு விருதினை வாங்கி வரலாற்றில் மறக்கமுடியாத சிறந்த நடிகனாக உருவெடுத்தார்.

   

எனவே நீங்கள் எதன் மீது அதிக காதல் கொண்டிருக்கின்ரீர்களோ அதனை நம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் அடைய நினைக்கின்ற இலக்கினை அடைந்து கொள்வீர்கள். நான் சிறந்தவன். என்னால் என்னுடைய இலக்கினை அடைய முடியும் என்று திட உறுதி கொள்ளுங்கள். அதற்கான முதற்படியாக இந்த Heath Ledger Joker Biography பதிவு இருக்குமென்று நம்புகின்றோம். மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம். நன்றி.

Post a Comment

Previous Post Next Post