Lionel Messi Biography - Inspiring Life Story of Lionel Messi in Tamil

 


உலகில் பல கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படுகின்ற விளையாட்டு என்றால் அது கற்பந்தாகத்தான் இருக்க முடியும். அத்தகைய கற்பாந்து விளையாட்டில் பல சாதனைகளை செய்து தன்னுடைய அசாத்திய திறமையினாலும், வசீகரமான ஆட்டத்தினாலும் ஒட்டுமொத்த காற்பந்து ரசிகர்களையும் கவர்ந்தவர்கள் எனும் போது ஒரு சிலருடைய பெயர் மட்டுமே எமது ஞாபகத்துக்கு வரும். அத்தகைய பெயர்களில் ஒன்றுதான் Lionel Messi.

Lionel Messi Biography


சிறுவயதிலேயே வளர்ச்சி Hormone குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட மெஸ்ஸியை பலரும் அவர் குள்ளமானவர் என்பதற்காக கேலி செய்தனர். ஆனால் எதைவைத்து தன்னை கேலி செய்தார்களோ அதனையே தன்னுடைய பலமாக மாற்றி World Best Football Player ஆக உருவெடுத்தார். அதுமட்டுமின்றி தலைசிறந்த காற்பந்து வீரருக்கு வழங்கப்படுகின்ற Ballon d'Or விருதினை அதிக தடவை வென்ற  என்ற பெருமையையும் Messi பெற்றுக்கொண்டார்.


இவ்வாறு பல சாதனைகளை செய்து காற்பந்து உலகின் மிகப்பெரும் ஜாம்பவானாக திகழும் Lionel Messi உடைய Inspiring Life Story பற்றித்தான் இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். நிச்சயமாக இந்தப்பதிவு உங்களை வேறு தளத்திற்கு கொண்டுசெல்லும். நானும் என் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்ற ஓர் தன்னம்பிக்கையினையும், துணிச்சலையும் இந்தப்பதிவு உங்களுக்குள் ஏற்படுத்தும். சரி வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

BORN AND CHILDHOOD

1987 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் திகதி ஆர்ஜென்டினாவின் Rosario என்ற நகரில் இரும்பு பட்டறையொன்றில் முகாமையாளராக பணிபுரிந்த Jorge Messi மற்றும் Celia Cuccittini தம்பதிகளின் மூன்றாவது செல்வ புதல்வனாக பிறக்கின்றார் Lionel Messi. தன்னுடைய சிறுவயதிலிருந்தே காற்பந்து விளையாடுவதில் மிகவும் திறமைசாலியாக இருந்தார். அவருக்கு தேவையான காற்பந்து பயிற்சிகளை அவரது தந்தையே வழங்கினார். 


மெஸ்ஸியின் இந்த திறமைக்கு தீனி போடும் விதமாக அவரது அப்பா அவரை அவரை விட பெரியவர்களோடு விளையாட வைத்தார். அப்போதும் தன் அசாத்திய திறமையின் மூலம் பலரை வியப்பில் ஆழ்த்தினார் மெஸ்ஸி. அதுவரை உள்ளூர் கிளப் போட்டிகளில் விளையாடி வந்த மெஸ்ஸிக்கு 1995 ஆம் ஆண்டு மிகப்பெரிய வாய்ப்பாக Newell's Old Boys Football Club அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது.


இவ்வாறு சிறப்பாக சென்றுகொண்டிருந்த மெஸ்ஸியின் காற்பந்து வாழ்க்கையில் மிகப்பெரும் சோதனையாக அமைந்தது வளர்ச்சி தொடர்பான ஹார்மோன் குறைபாடு. ஆம், அவருடைய 11 வது வயதில் வளர்ச்சி தொடர்பான ஹார்மோன் குறைபாடு மெஸ்ஸிக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த நோயினை குணப்படுத்துவதற்கான சிகிச்சையினை மேற்கொள்ள மாதமொன்றிக்கு $900 டாலர்கள் தேவைப்பட்டது. ஆனால் மெஸ்ஸியின் தந்தையிடமோ இதற்கான சிகிச்சையினை மேற்கொள்வதற்கு போதுமான பணம் இருக்கவில்லை. 


மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் 2 வருடங்கள் வரை சிகிச்சையினை மேற்கொள்ள மெஸ்ஸியின் தந்தையால் முடிந்தது. அதற்கு மேல் அவரிடம் போதுமான பணம் இருக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று இருந்த நிலையில்தான் மெஸ்ஸியின் காற்பந்து மீதான ஆட்டத்திறமை பற்றி அவரது உறவினர்கள் மூலம் அறிந்திருந்தார் Barcelona FC அணியின் Sporting Director ஆன Carles Rexach


அதன்படி மெஸ்ஸியின் ஆட்டத்தினை நேரடியாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து பார்வையிட்ட Carles Rexach மெஸ்ஸியின் ஆட்டத்தில் மெய்மறந்து அவரை உடனடியாக Barcelona FC அணியில் ஒப்பந்தம் செய்தார். அதுமட்டுமின்றி மெஸ்ஸி ஸ்பெயினுக்கு வருவதாக இருந்தால் அவருக்கு தேவையான மருத்துவ செலவுகளையும் Barcelona அணி ஏற்றுக்கொவதாகவும் வாக்குறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மெஸ்ஸியின் குடும்பம் ஸ்பெயினுக்கு சென்று மெஸ்ஸியின் சிகிச்சைகளை மேற்கொண்டதோடு, மெஸ்ஸியை Barcelona கிளப்பின் இளைஞர் அணியில் விளையாடவும் வைத்தனர்.

EARLY IN BARCELONA FC 

தன்னுடைய சிகிச்சைக்காகவும், தன்னுடைய கனவாகிய காற்பந்துக்காவும் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு ஸ்பெயின் சென்ற மெஸ்ஸி அங்கு 2001 தொடக்கம் 2003 வரை பார்சிலோனாவின் இளைஞர் அணி சார்பாக விளையாடினார்.


ஹோர்மோன்களை மாற்றுகின்ற தன் சிகிச்சைகளை மேற்கொண்டவாறே போட்டிகளில் களமிறங்கியதால் ஆரம்பத்தில் சிறப்பான விளையாட்டை மெஸ்ஸியினால் கொடுக்க முடியவில்லை. எனினும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் சிகிச்சை முடிந்ததனால் மீண்டும் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார் மெஸ்ஸி.


அதன்படி 2003 ஆம் ஆண்டு நட்புரீதியாக, FC Porto அணிக்கெதிராக இடம்பெற்ற உத்தியோகபூர்வமற்ற போட்டியில் களமிறங்கினர் மெஸ்ஸி. ஆனால் அதிகாரபூர்வமாக பார்சிலோனா அணியில் மெஸ்ஸி விளையாடுவதற்கு இன்னும் 1 வருடங்கள் தேவைப்பட்டன.


அதன்படி 2004 ஆம் ஆண்டு Espanyol அணிக்கெதிராக இடம்பெற்ற லீக் போட்டியில் களமிறங்கினார் மெஸ்ஸி. இதன் மூலம் Barcelona அணியில் விளையாடிய மூன்றாவது இளவயது வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுக்கொண்டார். Barcelona FC அணிக்காக அதிகாரபூர்வமாக களமிறங்கியதிலிருந்து தன்னுடைய கன்னி கோலினை அடிப்பதற்கு சில மாதங்களை மெஸ்ஸி எடுத்துக்கொண்டார்.


2005 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி Albacete அணிக்கெதிராக தன்னுடைய முதல் கன்னி கோலினை அடித்தார் மெஸ்ஸி. இதில் சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் அந்த கோளினை அடிப்பதற்கு மெஸ்ஸிக்கு உதவியது முன்னாள் Barcelona அணியின் நட்சத்திர வீரரான Ronaldinho ஆவார்.

MESSI IN CHAMPIONS LEAGUE   

இந்நிலையில் Barcelona அணி மெஸ்ஸியை 2014 ஜூன் வரை மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்து மெஸ்ஸியுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்தது. காற்பந்து போட்டிகளின் மத்தியில் மிகப்பெரும் அந்தஸ்த்தினையுடைய European Champions League போட்டிகளில் விளையாட வேண்டுமெனில் ஐரோப்பாவின் குடியுரிமை மெஸ்ஸிக்கு கட்டாயமாக தேவைப்பட்டது. இதனிடையே பல சட்டப்  பிரச்சினைகளுக்கு அப்பால் 2005 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் குடியுரிமை மெஸ்ஸிக்கு கிடைத்தது. 


இவ்வாறு ஸ்பெயின் நாட்டின் குடியுரிமை கிடைத்த பின்னரே தன்னுடைய முதலாவது Champions League போட்டியில் விளையாடியதுடன் தனது முதல் கோலினையும் நட்சத்திர வீரரான Ronaldinho வின் உதவியுடன் அடித்து தன் கனவினை நிறைவேற்றிக்கொண்டார். Ronaldinho மெஸ்ஸியிடம் பந்தினை லாவகமாக Pass செய்ய அதனை பெற்றுக்கொண்ட Messi பந்தினை Goal Keeper இன் தலைக்கு மேல் சிறப்பாக அடித்து தனது காற்பந்து விளையாட்டின் முதல் மைல்கல்லை எட்டினார்.


Messi பார்சிலோனா கிளப்பில் விளையாடிய பொழுது அவரது வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பை வழங்கியவர் Barcelona அணியின் பயிற்றுவிப்பாளரான Carles Rexach மற்றும் அந்த அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவரான Ronaldinho வும் தான். Ronaldinho மெஸ்ஸியை தன்னுடைய சகோதரராகவே கருதினார். அதேபோல் மெஸ்ஸி மிகவும் திறமை வாய்ந்த காற்பந்து வீரர் என்றும் காற்பந்து உலகில் Messi பல பிரம்மாண்ட சாதனைகளை படைப்பார் என்றும் புகழ்ந்துரைத்தார்.


இதுவரை 154 ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடி Messi 125 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அதிக கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் Messi பெற்றுக்கொண்டார். இவருக்கு முதலிடத்தில் மெஸ்ஸியுடைய ஆஸ்தான போட்டியாளராக திகழும் Cristiano Ronaldo 140 கோல்கள் அடித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

MESSI IN ARGENTINA NATIONAL TEAM 

Lionel Messi Biography

2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் குடியுரிமை மெஸ்ஸிக்கு கிடைத்த போது மெஸ்ஸிக்கு தீர்க்கமான முடிவொன்றினை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அது என்னவெனில், தன் சொந்த நாடான ஆர்ஜென்டினாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதா? இல்லை, தனக்கு குடியுரிமை அளித்த ஸ்பெயின் நாட்டுக்காக விளையாடுவதா? என்று. ஆனால் மெஸ்ஸியோ மிகவும் முதிர்ச்சியாக தன் சொந்த நாடான ஆர்ஜென்டினாவுக்காக விளையாடுவதென்று முடிவெடுத்தார்.


அவரது இந்த முடிவு ஆர்ஜென்டினாவில் பல ரசிகர்களை மெஸ்ஸிக்கு பெற்றுத் தந்தது. அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற FIFA Youth உலகக்கோப்பை போட்டியில் Argentina அணிக்கு கேப்டனாக களமிறங்கிய Lionel Messi அப்போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி Argentina அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்தார். இதன் பின்னர் Argentina சீனியர் அணிக்கு தெரிவான மெஸ்ஸி அந்த ஆண்டே Hungary அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம்கண்டார். 


Argentina ரசிகர்கள் மெஸ்ஸியை Maradona வுடன் ஒப்பிட்டுப்பேச ஆரம்பித்தனர். இதற்கு காரணம் Argentina அணியை தலைமை ஏற்று சிறப்பாக வழிநடத்தியதோடு மட்டுமின்றி, தன்னுடைய சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்டி  உலகக்கோப்பை உட்பட மிக முக்கியமான தொடர்களை Maradona வென்று கொடுத்ததாகும். அதேபோல் Maradona போன்றே மெஸ்ஸியும் இடதுகால் ஆட்டக்காரராக இருந்தார். அதுமட்டுமன்றி Messi பல காற்பந்து நுணுக்கங்களை கற்று தேர்ந்திருப்பதாக மரடோனாவே புகழாரம் சூட்டினார். 

MESSI IN FIFA WORLD CUP

Messi அர்ஜென்டினாவின் சர்வதேச அணியில் விளையாடியதன் பின்னர் இதுவரை 4 FIFA உலக கோப்பை தொடர்களை சந்தித்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நான்கு போட்டிகளிலும் கோப்பையை வெல்ல முடியாமல் தோல்வியைச் சந்தித்தனர் அர்ஜென்டினா அணி.


என்னதான் மெஸ்ஸி என்னும் மிகப்பெரும் திறமை வாய்ந்த ஆளுமை அர்ஜென்டினா அணிக்குள் இருந்தாலும் ஒரு அணியாக ஒன்றிணைந்து விளையாடாததுதான் அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.


அதிலும் குறிப்பாக பங்கேற்ற முதல் இரண்டு FIFA உலக கோப்பை தொடர்களிலும் காலிறுதி வரை மட்டுமே அர்ஜென்டினா அணியினால் செல்ல முடிந்தது. இத்தகைய மிகப்பெரும் தோல்வி பல்வேறு விதமான விமர்சனங்களை மெஸ்ஸிக்கு பெற்றுத்தந்தது. இருந்தாலும் கிளப் போட்டிகளில் சிறப்பாகவும், திறமையாகவும் விளையாடியதனால் உலகம் முழுக்க அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து கொண்டே இருந்தது.


2006 மற்றும் 2010 உலக கோப்பைகளில் தான் சந்தித்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடியாக 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் இடம்பெற்ற உலகக்கோப்பை போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி மிகப்பெரும் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது. அந்த போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்று அர்ஜென்டினா ரசிகர்களை குஷிப்படுத்தியதோடு தன் மீதான விமர்சனங்களுக்கும் சிறந்த பதிலடி கொடுத்தார். 


2014 ஜூலை 13 அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாளாகும். Messi என்ற தனிமனிதனுக்காக ஆர்ஜெண்டினா அணி வெற்றிபெற வேண்டுமென்று உலகம் முழுக்கவுள்ள அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நேரம். போட்டியின் இறுதி நேரம் வரை இரு அணியும் கோல் அடிக்காதாதினால் மேலதிக நேரம் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட மேலதிக நேரத்தில் ஜெர்மனி வீரர் கோலினை அடிக்க மெஸ்ஸியின் உலக கோப்பை கனவு மீண்டுமொருமுறை சிதைந்து போனது.


இதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் Knockout சுற்றோடு வெளியேறியது Messi தலைமையிலான அர்ஜென்டினா அணி. இதனால் மீண்டும் விமர்சனங்களுக்கு உள்ளானார் Messi. இதுவரை அர்ஜென்டினா அணிக்காக 158 சர்வதேச போட்டிகளில் விளையாடிய Messi 80 கோல்களை அவ்வணிக்காக அடித்துள்ளார். அதுமட்டுமன்றி அர்ஜென்டினா அணிக்காக இதுவரை 7 Hat-Trick கோல்களை மெஸ்ஸி அடித்துள்ளார். 

MESSI VS RONALDO 

எந்தவொரு துறையினை எடுத்துக்கொண்டாலும் அதில் முன்னணியில் உள்ள இரண்டு பேரை வைத்து உலகம் முழுக்கவுள்ள அவர்களது ரசிகர்கள் ஆரோக்கியமான முறையில் சண்டை போடுவது என்பது சாதாரண விடயம்தான்.


அந்தடிப்படையில் மெஸ்ஸிக்கு பரம போட்டியாளராக கருதப்படுபவர் Cristiano Ronaldo ஆவார். எப்போதுமே இவர்கள் இருவரினதும் ரசிகர்கள் தனது ஆஸ்த்தான வீரர்களின் சாதனைகளை ஒருவொருக்கொருவர் சொல்லி மெஸ்ஸிதான் சிறந்தவர். ரொனால்டோதான் சிறந்தவர் என்று சமூக ஊடகங்களில் பேசிக்கொள்வர். 


ஆனால் உண்மை என்னவென்றால் மெஸ்ஸியோ, ரொனால்டோவோ இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை. அவர்கள் இருவருமே காற்பந்து வரலாற்றில் மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ளதுடன் காற்பந்து இருக்கும் வரை இவர்கள் இருவரின் பெயரும் அழியாத பொக்கிஷமாக இருந்துகொண்டே இருக்கும்.


அந்தளவுக்கு இருவரும் காற்பந்துக்காக அளப்பெரும் பங்களிப்பினை செய்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலகட்டத்தில் அதிகமான ரசிகர்கள் கால்பந்தை பார்வையிடுவதற்கு மிக முக்கியமான காரணம் இவர்கள் இருவரும் தான்.


இதுவரை காற்பந்தில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 802 கோல்கள் அடித்து முதலாவது இடத்திலும், மெஸ்ஸி 758 கோல்கள் அடித்து மூன்றாவது இடத்திலும் உள்ளார்.


அதேபோல் சிறந்த காற்பந்து வீரருக்கான விருதாக வழங்கப்படுகின்ற Ballon d'Or விருதினை 7 முறை வென்று அதிகதடவை Ballon d'Or விருதினை வென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகினர் Messi. ஆனால் ரொனால்டோவை பொறுத்தவரை 5 முறை மட்டுமே Ballon d'Or விருதினை வென்றுள்ளார்.


இதுவரை ரொனால்டோ 58 முறை ஹாட்ரிக் கோல்களை அடித்ததுள்ளதுடன், மெஸ்ஸி 55 முறையும் ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார். அதேபோல் La Liga  போட்டிகளில் 10 முறை சாம்பியன் பட்டத்தை மெஸ்ஸி அணி வென்றுள்ளதுடன், 7 முறை ரொனால்டோ அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதேபோல் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளை பொருத்தவரை ரொனால்டோ 5 முறையும், மெஸ்ஸி 4 முறையும் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளனர்.

PERSONAL LIFE OF MESSI 

மெஸ்ஸியினுடைய தனிப்பட்ட வாழ்க்கையினை பொறுத்தளவில் வாழ்க்கையை தோல்விகளும், அவமானங்களும், பெரும் சர்ச்சைகளும் நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது. தன்னுடைய சிறுவயதிலிருந்தே வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட மெஸ்ஸியை, அவர் வளர்ச்சி குன்றியவர் என்பதற்காக பலரும் கேலி, கிண்டல் செய்தனர். அதிலிருந்து சிகிச்சைகளை மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி தொடர்பான பிரச்சினை முடிந்த பின்னரே மற்றவர்களுடன் சகஜமாக பேசுவதற்கு மெஸ்ஸியினால் முடிந்தது. 


என்னதான் Messi, La Liga மற்றும் Champions League போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும் அர்ஜென்டினா அணிக்காக ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்க முடியவில்லை என்று பலராலும் விமர்சனம் செய்யப்பட்டார். அது அவருக்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது. இதற்கு மிகச்சிறந்த பதிலடியாக 2021 இடம்பெற்ற Copa America தொடரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று அர்ஜெண்டினா அணிக்கான தனது கனவினை நிறைவேற்றினார் Messi.


Lionel Messi Biography

மெஸ்ஸியின் திருமண வாழ்க்கையினை பொருத்தவரையில் தனது நீண்ட நாள் காதலியான Antonela Roccuzzo என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததோடு Thiago Messi, Mateo Messi மற்றும் Ciro Messi என்ற மூன்று ஆண் குழந்தைளுக்கு தந்தையும் ஆனார். இப்போதும் மெஸ்ஸியின் மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகளும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MESSI IN SOCIAL SERVICE 

Messi காற்பந்தில் மட்டுமின்றி சமூக சேவைகள் செய்வதிலும் மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றார். Unicef நிறுவனத்தின் சர்வதேச தூதுவராக மெஸ்ஸி காணப்படுவதுடன், Messi Foundation மூலம் பல கோடிக்கணக்கான மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றார். குறிப்பாக இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேடிச்சென்று பல்வேறு உதவிகளையும் Messi மேற்கொண்டுள்ளார்.


தனது Messi Foundation மூலம் உலகளவில் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற மிக முக்கியமான விடயங்களுக்காக மெஸ்ஸி பல்வேறு விதமான உதவிகளைச் செய்து வருகின்றார். சிறுவயதிலிருந்தே சமூக சேவை செய்வதில் ஈடுபாட்டுடன் திகழ்ந்த மெஸ்ஸி Messi Foundation என்றவொரு நிறுவனத்தை அமைத்து அதன்மூலம் இத்தகைய சமூக சேவைகளை செய்து வருவது என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கதுக்குரிய விடயமாகும்.

MESSI AWARDS AND RECORDS 

Messi பல விருதுகளை இதுவரை தன்னுடைய அசாத்தியமான திறமைக்காக வாங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக ஆண்டின் சிறந்த வீரருக்கு வழங்கப்படுகின்ற Ballon d'Or விருதினை 7 முறை வாங்கியுள்ளார். இவ்விருதினை 7 முறை வாங்கிய ஒரே வீரர் மெஸ்ஸி மாத்திரமே. அதுமட்டுமின்றி 2009 ஆம் ஆண்டு FIFA World Player of the Year விருதினையும் மெஸ்ஸி தட்டிச்சென்றார். 


European Golden Shoe விருதினை முறையே 2013, 2017, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் Messi பெற்றுக்கொண்டதுடன் 2005 ஆம் ஆண்டு Golden Boy விருதினையும், 2014 ஆம் ஆண்டு FIFA World Cup Golden Ball விருதினையும் மெஸ்ஸி தனதாக்கிக்கொண்டார். அதுமட்டுமின்றி 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் UEFA Men's Player of the Year Award விருது என பல்வேறுபட்ட விருதுகளை மெஸ்ஸி பெற்றுக்கொண்டார்.


லா லிகா தொடர்களில் 474 கோல்களை அடித்ததன் மூலம் அத்தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுக்கொண்டதோடு லா லிகா தொடர்களில் 36 ஹாட்ரிக் கோல்களை அடித்ததன் மூலம் அத்தொடரில் அதிக ஹாட்ரிக் கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் தனக்கு சொந்தமாக்கினார் மெஸ்ஸி. அதுமட்டுமின்றி La Liga தொடர்களில் பத்து முறை கோப்பையை வென்றதுடன், UEFA Champions League போட்டிகளில் நான்கு முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளார்


அதுமட்டுமின்றி தன்னுடைய மிகப்பெரிய கனவாகவும், நிறைவேறாத ஆசையாகவும் இருந்த அர்ஜென்டினா அணிக்காக ஒரு சர்வதேச கோப்பையை வென்று கொடுக்க வேண்டுமென்ற மெஸ்ஸியின் ஆசையானது 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற Copa America தொடரை வென்றதன் மூலம் நிறைவேறியது. இப்படி சொல்லிக்கொண்டே போகுமளவுக்கு பல்வேறு விருதுகளையும், சாதனைகளையும் மெஸ்ஸி தன் காற்பந்து வரலாற்றில் செய்துள்ளார் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

FINALLY

அர்ஜெண்டினாவின் சாதாரண ஒரு நகரில் நடுத்தரவர்க்க குடும்பத்திற்கு பிறந்த ஒருவரால் இத்தகைய சாதனைகளை படைக்க முடியும் என்றால் அது சாதாரண விடயம் கிடையாது. எத்தகைய தோல்விகள் மற்றும் அவமானங்களை நாம் சந்தித்தாலும் நம்முடைய இலக்கை நோக்கி நாம் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் பயணித்தால் நிச்சயமாக நாம் நினைக்கின்ற வெற்றியானது மிக விரைவில் நம்மை வந்து சேரும் என்பதை Lionel Messi Biography பதிவு உணர்த்தியிருக்கும். 


ஆரம்பத்தில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த போதும் அதையெல்லாம் பொருட்படுத்தாது தனக்கு இருக்கின்ற திறமையையும், காற்பந்து மீதான தன்னுடைய தீராத மோகத்தினையும் கொண்டு முயற்சி செய்து இன்று உலகளவில் பல கோடிக்கணக்கான ரசிகர்களின் ரத்த ஓட்டமாக Lionel Messi மாறியிருக்கின்றார் என்றால் அது உண்மையிலேயே வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய மிகப்பெரிய வெற்றியாகும். 


Inspiring Life Story of Lionel Messi என்ற இந்தப்பதிவு உங்களுக்கு நிச்சயம் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நிச்சயமாக இந்த பதிவினை வெறுமனே வாசித்துக்கொண்டு மட்டும் செல்லாமல் இதிலிருந்து உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை எடுத்துக் கொண்டு நீங்களும் வெற்றியை நோக்கி பயணியுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்விலும் வெற்றி வந்து சேரும். மீண்டும் ஒரு சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகின்றோம். நன்றி.

Post a Comment

Previous Post Next Post