Top 10 Highest Paying Skills for Success in 2022 | Most in Demand Skills in 2022

 


நாம் எல்லோருமே ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புது விடயத்தை கற்றுக்கொண்டேதான் இருக்கின்றோம். அவ்வாறு நாம் கற்றுக்கொள்கின்ற விடயங்கள் எந்த அடிப்படையில் நமக்கு பயனளிக்கின்றது என்பதை பொறுத்தே நாம் கற்றுக்கொண்ட விடயங்கள் பெறுமதியானவையா? இல்லையா? என்று தீர்மானிக்கப்படுகின்றது. அந்தவகையில் இந்த 2022 இல் உங்கள் வாழ்க்கையினை வெற்றிகரமானதாக மாற்றிக்கொள்வதற்கு தேவையான Top 10 Highest Paying Skills பற்றி இந்தப் பதிவில் நாம் பார்க்கப்போகின்றோம். 


Top 10 Highest Paying Skills for Success in 2022

இங்கு குறிப்பிடப்படுகின்ற இந்த 10 Highest Paying Skills ஊடாக நீங்கள் Active Income மாத்திரமின்றி Passive Income உழைக்க முடியும். அதாவது இத்திறமைகளை கற்றுக் கொண்டதன் பின்னர் அதனை வைத்து உங்களால் பணம் ஈட்ட முடியும் என்பதாகும். 2022 ஆம் ஆண்டை பொருத்தளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்புள்ள மற்றும் அதிக பணத்தை ஈட்டித்தரக்கூடிய Most in Demand Skills 2022 பற்றித்தான் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

1. DIGITAL MARKETING 

இப்போது இருக்கின்ற டிஜிட்டல் யுகத்தை பொறுத்தளவில் Digital Marketing என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. குறிப்பாக எதிர்வருகின்ற 2022 ஆம் ஆண்டில் Digital Marketing இன் தாக்கம் மிகப் பெரியளவில் காணப்படும். பொதுவாக Digital Marketing எனும்பொழுது அதனுள் Social Media Marketing தொடக்கம் Search Engine Optimization (SEO) வரை உள்ள பல விடயங்களே உள்ளடக்கப்படும்.


இன்றைய காலகட்டத்தில் நீங்கள் உங்களது வணிகத்தை உங்கள் இலக்கு வாடிக்கையாளர்களை நோக்கி விளம்பரம் செய்ய வேண்டுமென்றால் Social Media Marketing மற்றும் Search Engine Optimization என்று Digital Marketing பாடப்பரப்புக்குள் வருகின்ற பல விடயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி நீங்கள் முழுமையாக கற்றுத் தேர்ந்து உங்கள் வணிகத்தை நடாத்துகின்ற போது நிச்சயமாக பெருமளவிலான வாடிக்கையாளர்களையும் உங்களால் பெற முடியும்.


டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது கற்றுக்கொள்வதற்கு மிகவும் இலகுவானதாகும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய வணிகத்தை நோக்கி கவர்ந்திழுக்க கூடிய மிகப்பெரும் சக்தியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் திகழ்கின்றது.


நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கான சிறந்த தளமாக YouTube காணப்படுகின்றது. YouTube இல் Digital Marketing சம்பந்தமாக பல வீடியோக்கள் இலவசமாக பதிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிகளில் முழுமையான வழிகாட்டுதலுடன் உள்ளது. 


Digital Marketing Complete Course For Free in Tamil 

Digital Marketing Complete Course For Free in English 


மேலே டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி முழுமையாக கற்றுக்கொள்ள YouTube வீடியோ லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் சென்று பார்வையிடுங்கள். டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையாக கற்றுக்கொள்வதன் மூலம் உங்களுடைய வணிகத்தை நீங்கள் ஆன்லைனில் விரிவுபடுத்த முடிவதோடு, சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தி அதன் மூலம் வருமானம் ஈட்டவும் முடியும். எனவே நீங்கள் அனைவரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்வதன் மூலம் 2022 இல் வெற்றியாளராக வருவதற்கு எங்களது வாழ்த்துக்கள்.

2. AFFILIATE MARKETING

அப்ளியேட் மார்க்கெட்டிங்கை பொருத்தளவில் மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டக்கூடிய ஒரு துறை ஆகும். Affiliate Marketing என்பது, “பெரும் கம்பனிகள் உற்பத்திகளை உலகம் முழுக்கவுள்ள அவர்களது வாடிக்கையாளர்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக கம்பனியின் சார்பாக நாம் அவர்களின் உற்பத்திகளை உலகம் முழுக்கவுள்ள வாடிக்கையாளர்களை நோக்கி விளம்பரம் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவது தான் Affiliate Marketing ஆகும். 


Affiliate Marketing


Digital Marketing உங்களுக்கு தெரியுமென்றால் Affiliate Marketing செய்வது மிகவும் இலகுவாக மாறிவிடும். ஏனெனில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் கற்றுக்கொண்ட விடயங்களை வைத்துதான் நீங்கள் Affiliate Marketing செய்து அதன் மூலம் வருமானம் உழைக்கபோகின்றீர்கள்.
எனவே Affiliate Marketing செய்வதாக இருந்தால் முதலில் Digital Marketing கற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னர் Affiliate Marketing செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களால் வெற்றிபெற முடியும். 

நீங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ள விரும்பினால் யூடியூபில் அதிகமான வீடியோக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கின்றன. அதனைப் பார்த்து Beginner Level Affiliate Marketing உங்களால் கற்றுக்கொள்ள முடியும். அவ்வாறில்லாது Affiliate Marketing Expert ஆக மாற Udemy, Skillshare போன்ற சில வெப்சைட் மற்றும் Paid Course போன்றவற்றை வாங்குவதன் மூலம் உங்களால் Expert Level Affiliate Marketing கற்றுக்கொள்ள முடியும்.

3. WEBSITE DEVELOPMENT

இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் Website என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. எந்தவொரு வணிகத்தை எடுத்துக்கொண்டாலும் Website இல்லையென்றால் உலகளவில் உள்ள வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பது மிகவும் கடினமாக அமைந்துவிடும்.


அதேபோல் உங்களுக்கென்று ஒரு வெப்சைட் இல்லை என்று உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிந்தால் உங்கள் மீதான நம்பிக்கை அவர்களுக்கு போய்விடும். அந்தளவுக்கு வெப்சைட் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது. 


நீங்கள் ஒரு வணிகத்தை நடத்துபவராக இருந்தாலோ அல்லது ஒரு சேவை வழங்குனராக இருந்தாலோ அல்லது ஒன்லைன் மூலம் வெப்சைட் வைத்து அதில் சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி Website தொடர்பான அறிவு உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.


இல்லையென்றால் Website Development செய்வதற்காக மற்றவர்களிடம் பணம் கொடுத்து செய்யவேண்டிய நிலமை உங்களுக்கு ஏற்படுவதுடன் வெப்சைட்டில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் மற்றவர்களின் உதவியையே நாட வேண்டும். 


இவ்வாறான மேலதிக அலைச்சல்கள் மற்றும் செலவினை குறைக்க வேண்டுமென்றால் Website Development தொடர்பாக நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு முதல் நீங்கள் HTML கற்றுக்கொள்ளவேண்டும். அதன்பின்னர்  CSS, Javascript போன்ற வெப்சைட் உருவாக்க தேவையான அடிப்படை Programming Languages கற்றுக்கொள்ள வேண்டும். இதனோடு PHP Language கற்றுக்கொள்வதும் சிறந்ததாக அமையும். இவ் அனைத்துக்குமான Complete YouTube Tutorial Video கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


HTML Complete Course For Free in Tamil 

CSS Complete Course For Free in Tamil

Javascript Complete Course For Free in Tamil

PHP Complete Course For Free in Tamil

4. MOBILE APPLICATION DEVELOPMENT

இன்றைய உலகில் வெப்சைட் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு Mobile Application என்பதும் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இன்று உலக சனத்தொகையை விட அதிகமான அளவு மொபைல் போன்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கின்றன. தனக்கு எது தேவை என்றாலும் அதனை ஒரு Mobile Application மூலமே தேடுகின்றனர். Mobile Application மூலம் தனக்கு தேவையான எல்லாவற்றையும் ஒரு மனிதனால் பெற்றுக்கொள்ள முடியும்.


ஒரு விடயத்தை தேடுவதென்றாலோ அல்லது பார்ப்பதென்றாலோ, வெளிநாட்டில் உள்ள தன் உறவுகளோடு ஆடியோ கால் மூலமாகவோ அல்லது வீடியோ கால் மூலமாகவோ பேசுவதென்றாலோ, அவர்களோடு சேட் செய்வது என்றாலோ, அருகில் ஏதாவது ஹோட்டல் இருக்கிறதா?, வைத்தியசாலை இருக்கின்றதா? என்பதை பார்வையிடுவது என்றாலோ, அன்றாட உலக செய்திகளை பார்வையிடுவதாக இருந்தாலோ என்று பல்வேறு விடயங்களையும் ஒரு மொபைல் அப்ளிகேஷன் மூலம் நம்மால் பார்வையிட முடியும்.


இவ்வாறு பல விடயங்களை ஒரு சாதாரண மொபைல் அப்ளிகேஷன் செய்கின்றது என்றால் அதனை உருவாக்கியவரின் திறமையும், அவருக்கான வருமானமும் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஆம் Highest Paying Skills in 2022 என்றால் அதற்குள் Mobile Application Development உம் உள்ளடங்கும். நீங்கள் Mobile Application Development கற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTube வீடியோவை பார்வையிடுங்கள்.


Android Development for Beginners - Full Course

Android Full Course - Android Development Tutorial for Beginners| Edureka

5. FREELANCING

Freelancing

Freelancing
என்பது நமக்குத் தெரிந்த வேலையை மற்றவர்களுக்கு செய்து கொடுப்பதன் மூலம் வருமானம் உழைப்பதாகும். அதாவது வேலை இருப்பவர்கள் நம்மிடம் அந்த வேலையை தர அதனை நாம் செய்து கொடுப்பதன் மூலம் இது இடம்பெறும். இதனைத்தான் சுருக்கமாக Freelancing என்று சொல்லுவார்கள். சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் இதனை நாம் வீட்டிலிருந்துகொண்டே செய்துகொடுக்க முடியும்.

இப்போது உங்களுக்கு நாம் இந்த Freelancing வேலையை எங்கே செய்வது? நமக்கு வேலை தருபவர்கள் யார்? எப்படி நாம் செய்த வேலைக்கு பணத்தை பெற்றுக் கொள்வது? என்ன மாதிரியான வேலைகளை செய்ய முடியும்? அதனை எப்படி நமக்கு வேலை தருபவர்களுக்கு கொடுப்பது? என்று பல கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கும். அதற்கான பதில் Fiverr இல் உள்ளது. 


ஆம், நாம் வேலை செய்யப்போவது Fiverr இல் தான். நமக்கு வேலை தருபவர்களும் அங்கு தான் இருக்கின்றார்கள். நமக்குத் தெரிந்த வேலைகளையும் Fiverr இல் இணைவதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க முடியும். அதன்பின் பணத்தை நமது வங்கிக் கணக்கிற்கே எடுத்துக் கொள்ளலாம். எனவே எவ்வாறு Fiverr மூலம் Freelancing செய்வது? என்பது பற்றிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.


நிச்சயமாக 2022 ஐ பொருத்தவரையில் உங்கள் வாழ்வில் மிகப்பெரும் வெற்றிகளையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தக்கூடிய மிகச்சிறந்த ஆண்டாக இருக்க உங்களுடைய Freelancing திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.


Freelancing பற்றிய ஆரம்ப அறிவினை பெற யூடியூபில் பல வீடியோக்கள் இருக்கின்றது. அவற்றினைப் பார்த்து ஆரம்ப அறிவினை வளர்த்துக் கொள்ளுங்கள். அதனோடு சேர்த்து மேலதிகமாக கற்றுக்கொள்ள பணம் செலுத்தி Freelancing Expert இடம் கற்றுக்கொள்ளுங்கள்.  

6. VIDEO CREATION

Video Creation பண்ணுவது என்பது இப்போதெல்லாம் அதி அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. எந்தவொரு விளம்பரங்களை நீங்கள் பார்த்தாலும் அது பெரும்பாலும் வீடியோவாக தான் இருக்கின்றது. ஏனெனில் விளம்பரங்களை வீடியோவாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்கின்ற போது அந்த இடத்தில் அதிக அளவில் விற்பனை நடக்கின்றது. ஏனெனில் வீடியோவுக்கான Engagement Rate மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. 


அதேபோல் இப்போதெல்லாம் YouTube Video Creation க்கான Demand மிகவும் அதிகரித்துவிட்டது. ஏனெனில் இப்பொழுதெல்லாம் பெரும்பாலான விளம்பரங்கள் யூடியூப் மூலமே வாடிக்கையாளர்களை சென்றடைகின்றது. அதேசமயம் வீடியோ கிரியேட் செய்து அப்லோட் செய்வதன் மூலம் இன்று பல லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் நிறுவனங்கள் YouTube மூலம் ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் டாலர்களை சம்பாதித்துக் கொண்டு வருகின்றனர். 


எனவே நீங்களும் ஒரு Video Creator ஆக மாறுங்கள். நிச்சயமாக அதற்கான வாய்ப்புகள் இங்கே அதிகமாக கொட்டிக் கிடக்கின்றது. நீங்கள் ஒரு சிறந்த Video Creator ஆக இருப்பீர்கள் என்றால் உங்களிடம் அதிகளவான வாடிக்கையாளர்கள் அவர்களுடைய விளம்பரங்களுக்காக வீடியோ கிரியேட் பண்ணி தருமாறு கேட்டு வருவார்கள். அதேசமயம் வீடியோ கிரியேட் பண்ணி நீங்கள் YouTube போன்ற சமூக வலைத்தளங்களில் இடுவதன் மூலமும் உங்கள் வருமானத்தை நீங்கள் அதிகரித்துக்கொள்ள முடியும். 


யூடியூபில் சென்று How to Make Money on YouTube in 2022 என்று Search செய்து பாருங்கள். பல ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தமிழிலேயே கொட்டிக்கிடக்கும். அவற்றை வரிசையாக பார்வையிடுங்கள். முன்னரை விட இப்போது YouTube மூலம் பணம் சம்பாதிப்பது மிகவும் இலகுவாகி விட்டது. காரணம் YouTube Shorts என்ற ஒரு புது விடயத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் இலகுவாக YouTube மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.

7. CREATIVE WRITING

Creative Writing என்பது ஒரு அற்புதமான விடயமாகும். ஏனெனில் எந்தவொரு விடயத்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதற்கு Writing என்பது அத்தியாவசியமானதாகும். உங்களுக்கு Writing நன்றாக வரும் என்றால் நிச்சயமாக அதனை நீங்கள் பணத்தை உருவாக்கக்கூடிய திறனாக மாற்ற முடியும். அதாவது நீங்கள் ஒரு Blog ஆரம்பிப்பதன் மூலம் உங்களுக்கு தெரிந்த விடயங்களை அதில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.


அதேபோல் YouTube சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் உங்களுடைய விடயங்களை விடியோவாக போடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். அல்லது மற்றவர்களுக்கு Articles, Blog Posts, Books, Video Scripts எழுதி கொடுப்பதன் மூலம் உங்களால் பணத்தினை சம்பாதிக்க முடியும். இதனை நீங்கள் Freelancing Service ஆக Fiverr இலும் செய்ய முடியும். 


எப்படி வேண்டுமானாலும் நீங்கள் இதனை செய்யலாம். அது உங்களுடைய விருப்பம். ஆனால் நிச்சயமாக உங்களுக்கு எழுத்தாற்றல் இருக்கின்றது என்றால் அதனை பணமாக மாற்ற உங்களால் முடியும். ஏனெனில் 2022 ஐ பொருத்தவரையில் Creative Writing Skills என்பது Highly Demanded Skill ஆகும். எனவே இப்போதிருந்தே உங்களது Writing Skill இனை வளர்த்துக்கொள்ளுங்கள். 

8. GRAPHIC DESIGN 

Graphic Design பொருத்தவரையில் ஆன்லைனில் வருமானம் உழைக்கின்ற அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஏனெனில் நீங்கள் சாதாரணமாக சமூக வலைத்தளங்களில் போடுகின்ற பதிவினை கூட ஏனோ தானோ என்று போட்டு விட முடியாது. உங்கள் வாடிக்கையாளரை கவரும் வண்ணம் அதனை அழகாகவும், கவர்ச்சியாகவும் டிசைன் செய்த பின்னரே பதிவிட முடியும். எனவே இந்த இடத்தில் உங்களுக்கு Graphic Design தேவைப்படுகின்றது.


Graphic Design நீங்கள் கற்றுக் கொள்வதன் மூலம் உங்களது சமூக வலைத்தள பக்கத்துக்கு தேவையான பதிவுகள் மற்றும் கவர் போட்டோக்களை டிசைன் செய்தல், வணிகத்தின் ஏனைய தேவைகளுக்கான டிசைன்களை செய்தல் மூலம் உங்களுடைய  வணிகத்தை விரிவுபடுத்த முடிவதோடு அதிகளவான வாடிக்கையாளர்களையும் பெற்றுக்கொண்டு விற்பனையை அதிகரிக்க முடியும். அதேபோல் Graphic Design தொடர்பாக நீங்கள் கற்றுக்கொள்வதன் மூலம் அதனை மற்றவர்களுக்கு ஒரு சேவையாக வழங்கி அதன் மூலம் வருமானம் பெற முடியும்.


Graphic Design

இங்கே மற்றவர்களுக்கு உங்கள் Graphic Design சேவையினை வழங்கும் போது அதனை உள்நாட்டிலுள்ளவர்களுக்கும் வழங்கலாம் அல்லது வெளிநாட்டு வாடிக்கையாளருக்கும் வழங்க முடியும். அதேபோல் Fiverr இலும் உங்களால் Graphic Design சேவையினை வழங்க முடியும். இவ்வாறு பல வழிகளில் வருமானம் கிடைக்கின்ற ஒரு துறையாக இருப்பதினால் 2022 ஆம் ஆண்டை இறந்த வெற்றிகரமானதாக மாற்ற உடனே  Graphic Design கற்றுக்கொள்ள தயாராகுங்கள். 

9. ETHICAL HACKING 

இன்று எந்தளவுக்கு தொழில்நுட்பமானது வளர்ந்து மனிதர்களுக்கு பல வழிகளில் நன்மையுடையதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற மோசமான ஆபத்துக்களும் அதில் இருக்கின்றது.


அதில் முதன்மையானது Privacy. நமது பெரும்பாலான தகவல்கள் இன்டர்நெட்டில் இருப்பதனால் அதனை ஒரு சிலர் நமது அனுமதி இல்லாமல் திருடி நமது Privacy க்கு பாதகம் விளைவிக்கின்றனர். இவ்வாறு இன்டர்நெட்டில் திருடுபவர்களை பொதுவாக நாம் Hackers என்று அடையாளப்படுத்துவோம்.


இந்த Hackers பொறுத்த வரையில் மற்றவர்களுடைய எந்த ஒரு அனுமதியும் இன்றி மற்றவர்களுடைய பர்சனல் டேட்டாக்களை திருடி அதனை தவறாக பயன்படுத்துவர். இவ்வாறு செய்பவர்கள் Black-Hat Hackers மற்றும் Red-Hat Hackers ஆக காணப்படுவர்.


ஆனால் இவர்களைப் போன்று மற்றவர்களுடைய தகவல்களை திருடி அதனை தவறான முறையில் பயன்படுத்துகின்ற Hackers ஆக நீங்கள் வரக்கூடாது. எனவே நீங்கள் ஹேக்கிங் படிப்பதாக இருந்தால் தேர்ந்தெடுக்க வேண்டியது Ethical Hacking ஆகும்.


Ethical Hacking பொருத்தவரையில் யார் வேண்டுமானாலும் அதனை படிக்கலாம். அதற்கு உங்களுடைய விருப்பம் மற்றும் விடாமுயற்சி இருந்தாலே போதும். 2022 ஆம் ஆண்டில் அதிக வருமானம் தரக்கூடிய, போட்டி குறைந்த  திறன்களில் இதுவும் ஒன்றாகும்.


இதனால் படித்து முடித்தவுடன் விரைவாக வேலை ஒன்றினை எடுத்துக்கொள்ள முடியும். நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை வைத்து மற்றவர்களுக்கு பாடம் நடத்தவும் முடியும். எனவே இன்றிலிருந்தே Ethical Hacking படிக்க தொடங்குங்கள்.

10. ARTIFICIAL INTELLIGENCE 

இப்போது இருக்கின்ற தொழில்நுட்ப யுகமானது முழுவதும் Artificial Intelligence தொழில்நுட்பமாக மாறிவிட்டது. மனிதனால் செய்ய முடிந்த அனைத்து வேலைகளையும் ஒரு ரோபோட்டினால் செய்ய முடியுமென்றால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விண்ணைத் தொட்டுவிட்டது என்றே சொல்ல முடியும். ஆனால் இங்கு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் அந்த Robotic AI தொழில்நுட்பத்தையும் செய்வது நம்மை போன்ற மனிதர்கள் தான். 


இன்று அதிகமான இளைஞர்கள் Google, Amazon மற்றும் Microsoft போன்ற Robotic AI தொழில்நுட்பத்தை வைத்து இயங்குகின்ற உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு ஆசைப்படுகின்றனர். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.


Artificial Intelligence தொடர்பான கற்கை நெறியினை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். Artificial Intelligence ஐ பொறுத்தவரையில் 2022 ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கின்ற ஒரு திறனாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. 

FINALLY 

மேலே குறிப்பிட்ட இந்த Top 10 Skills இல் ஏதாவது ஒன்றை நீங்கள் முறையாக கற்றுக் கொண்டீர்கள் என்றால் எதிர்வருகின்ற 2022ஆம் ஆண்டில் அது உங்களுக்கு வீட்டில் இருந்துகொண்டே வருமானத்தை ஏற்படுத்திக் தருகின்ற ஓர் மூலமாக மாறிவிடும். இத்திறமைகளை கற்றுக்கொண்டு வேலைக்கு சென்றும் சம்பாதிக்கலாம் அல்லது உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் Fiverr, Social Media மற்றும் Website போன்றவற்றை பயன்படுத்தி சம்பாதிக்க முடியும். 


Top 10 Highest Paying Skills in 2022 இனை இந்த பதிவில் நாம் பட்டியலிட்டுள்ளோம். நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு பயனுடையதாக இருக்குமென்று நினைக்கின்றோம். எதிர்வருகின்ற 2022 ஆம் ஆண்டானது உங்களுக்கு மிகவும் சிறந்த வெற்றிகரமான ஆண்டாக அமைய Tamil Motivations சார்பாக வாழ்த்துக்கள். மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வருகின்றோம் நன்றி.



Post a Comment

Previous Post Next Post