நிச்சயமாக இந்தப்பதிவு இந்த இந்த வருடத்தினை சிறப்பாக தொடங்கி வைக்கின்ற ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று நாம் நினைக்கின்றோம். ஆம், இந்தப்பதிவில் நாம் How to Achieve Your Goals in 2022 பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். உங்கள் இலக்குகளை அடைந்து வெற்றிகரமான ஆண்டாக இந்த 2022 ஐ மாற்றுவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
FOLLOW THIS IN 2022
இந்த பதிவினை வாசித்துக் கொண்டிருக்கின்ற உங்களுக்கு 15 வயதாகி இருக்கலாம். அல்லது இருபது வயதை தாண்டி இருக்கலாம். அல்லது 25 வயது 30 வயது என்று எத்தனை வயதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நம்முடைய வாழ்வில் அத்தனை வருடங்களை கடந்து வந்து விட்டோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. நமக்கு எத்தனை வயது என்பது முக்கியமில்லை நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளையும் எவ்வாறு கழித்தோம் என்பது தான் முக்கியம்.
சென்ற 2021 ஆம் ஆண்டினை நாம் எவ்வாறு கழித்தோம் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். நீங்கள் 2021 ஆம் ஆண்டினை உங்களுடைய இலக்கினை அடைவதற்காக சிறந்த முறையில் பயன்படுத்தி இருப்பீர்கள் என்றால் அதற்கு முதற்கண் வாழ்த்துக்கள். அப்படி என்னால் பயன்படுத்த முடியவில்லை என்று நீங்கள் கவலைப்பட்டால் உங்களிடம் கூறி கொள்வது, உங்களுக்காகவே இந்த 2022 ஆம் ஆண்டு உள்ளது. இந்த ஆண்டை சரியாகத் திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அவ்வாறு இந்த ஆண்டினை சிறப்பாக திட்டமிட்டு உங்களுடைய இலக்கினை அடைந்து மிகவும் வெற்றிகரமான ஒரு ஆண்டாக மாற்றுவதற்கு தேவையான New Year Motivation for 2022 பதிவாக இந்தப் பதிவு இருக்கப்போகின்றது. எனவே இப்பதிவினை முழுமையாக படித்துவிட்டு இதில் குறிப்பிட்ட விடயங்களை இந்த வருடம் முழுவதும் பின்பற்றி வாருங்கள். நிச்சயமாக இந்த வருடமானது வெற்றிகரமாக ஆண்டாக உங்களுக்கு இருக்கும்.
SET YOUR GOALS
எல்லாவற்றுக்குமே அடிப்படையானது இலக்குகள் தான். எந்தவொரு இலக்குகளையும் நிர்ணயிக்காமல் என் வாழ்வில் நான் வெற்றியடைய வேண்டும், அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தினை அடைய வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமாகும். நீங்கள் என்னவாக வர ஆசைப்படுகின்றீர்கள்? நீங்கள் உறுதியாக அடைய நினைக்கின்ற இலக்கு எது? என்று மிகத் திட்டவட்டமாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
சென்ற வருடத்தில் எந்தவொரு இலக்கும் இல்லாமல் நீங்கள் பயணித்தவராக இருக்கலாம். பிரச்சினை கிடையாது. இந்த வருடத்திலிருந்து நீங்கள் அடைய நினைக்கின்ற இலக்கு எது? என்று உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் இலக்கினை தீர்மானியுங்கள். உதாரணமாக இந்த வருடம் முடிவதற்குள் 10 லட்சம் டாலர்களை நான் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதனை உங்கள் இலக்காக நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவினை வாசித்துக்கொண்டிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வெவ்வேறான இலக்குகள் இருக்கும். உங்கள் இலக்குகள் எதுவாக இருந்தாலும் சரி. அது உங்களுடைய இயலுமையை தாண்டி இருந்தாலும் அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
அதனை உங்களால் அடைய முடியுமென்று உறுதி கொண்டு அதனை உங்கள் இலக்காக நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ஒன்று மட்டும்தான் உங்களுக்கு அதில் தீராத விருப்பமும், ஆசையும் இருந்தால் நீங்கள் எதை வேண்டுமானாலும் உங்கள் இலக்காக தேர்ந்தெடுக்கலாம்.
PERFECT PLAN
உங்களுடைய உறுதியான இலக்கு எது என்று தீர்மானித்து அதன் பின்னர் அந்த இலக்கினை முழுமையாக அடைந்து கொள்வதற்காக படிப்படியான திட்டங்களை உள்ளடக்கிய முறையான திட்டம் ஒன்றினை நீங்கள் உருவாக்க வேண்டும். இத்திட்டமானது உங்களுடைய இலக்கினை இறுதி வரை சென்று அதனை முழுமையாக அடைந்து கொள்வதற்கு உதவி செய்யும் படி இருக்க வேண்டும்.
சரியான தனக்கேற்ற திட்டவட்டமான இலக்கொன்றினை மட்டும் நிர்ணயிப்பது நமது கடமை கிடையாது. அதனையும் தாண்டி அந்த இலக்கினை முழுமையாக அடைந்து கொள்வதற்கு தேவையான முறையான திட்டமிடலை உருவாக்குவது நம் அனைவருக்கும் அத்தியாவசியமானதாகும். முறையான திட்டமிடல் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு எளிதான இலக்கினை வைத்தாலும் கூட அதனை உங்களால அடைந்துகொள்ள முடியாது போய்விடும்.
எனவே இந்த 2022 ஆம் ஆண்டுக்குள் நீங்கள் அடைய நினைக்கின்ற இலக்கினை அடைந்து கொள்வதற்கு தேவையான முறையான திட்டத்தினை தயார்படுத்துங்கள். குறிப்பாக அதனை எழுத்து வடிவில் உருவாக்குவதே மிகவும் சிறந்ததாகும்.
உங்களுடைய திட்டமிடலானது ஒட்டுமொத்த 2022 ஆம் ஆண்டுக்கான திட்டமாகவும், அதே சமயம் ஒவ்வொரு மாதமும் நீங்கள் அடைந்திருக்க வேண்டிய நிலை எது என்ற விடயங்களை உள்ளடக்கியதாக ஒரு சரியான திட்டத்தை உருவாக்குங்கள்.
CONSISTENCY
உங்களுடைய இலக்கினை அடைவதற்கான முறையான மற்றும் சரியான திட்டத்தை உருவாக்கியதன் பிற்பாடு, உங்கள் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை தொடர்ச்சியான சீரான வேகத்தில் பின்பற்றிக் கொண்டு வரவேண்டும். இன்று செய்ய வேண்டியதை நீங்கள் இன்று தான் செய்ய வேண்டும். மாறாக அதனை நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகின்ற பழக்கத்தினை ஒருபோதும் கையில் எடுத்து விடாதீர்கள்.
இன்னும் சொல்லப்போனால் நாளை செய்ய இருக்கின்ற வேலைகளை நீங்கள் இன்று செய்தாலும், ஒருபோதும் இன்று செய்ய இருக்கின்ற வேலைகளை நாளை செய்து விடலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.
இவ்வாறு நீங்கள் அலட்சியமாக இருப்பது உங்களுடைய இலக்கும், இலக்கை அடைவதற்கான திட்டமிடலும் சரியாக இருந்தாலும் அதனை அடைய முடியாது செய்துவிடும். எனவே உங்கள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை தொடர்ச்சியான முறையில் பின்பற்றி வாருங்கள்.
MOTIVATE YOURSELF DAILY
உலகில் மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே தன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருந்தாலும் எல்லோராலும் அவர்கள் நினைத்தபடி வெற்றி பெற முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் காரணம் நம்முடைய Motivation Level ஒருவகையில் காரணம் தான். ஏனெனில் நம்முடைய Motivation Level ஆனது ஒவ்வொரு நாளும் கூடி குறைந்துகொண்டே செல்கின்றது.
இன்று நாம் மற்றவர்கள் யாராவது வெற்றி பெறுவதை கண்கூடாக பார்த்தாலோ அல்லது நம்முடைய மோட்டிவேஷன் லெவலை அதிகரிக்கச் செய்கின்ற YouTube வீடியோ ஒன்றினை அல்லது ஏதாவது Blog Post ஒன்றினை பார்த்து விட்டாலோ நமக்குள் ஏதோ ஒருவித ஆற்றல் உருவாகி இந்த நொடியிலிருந்து நான் என்னுடைய இலக்கினை அடைவதற்கான முழுமையான முயற்சியில் ஈடுபட போகின்றேன் என உறுதிமொழி எடுக்கின்றோம். ஆனால் உறுதிமொழி எடுத்த அதேவேகத்தில் அடுத்த நாளே மறந்து விடுகின்றோம்.
இவ்வாறு எதையாவது பார்த்துவிட்டு மோட்டிவேஷன் லெவல் அதிகரித்ததன் பின்னர் ஒரு முயற்சியை செய்து மோட்டிவேஷன் லெவல் குறைந்த பின் அதனை விடுவது என்பது சோம்பேறிகளின் பழக்கமாகும். அவ்வாறானவர்களாக நீங்கள் இருக்காமல் உங்களை ஒவ்வொரு நாளும் மோட்டிவேட் பண்ணி கொண்டே இருங்கள். எந்த விடயத்தை செய்தால், எந்த விடயத்தை கேட்டால், எந்த விடயத்தை பார்த்தால் உங்களுடைய மோட்டிவேஷனல் அதிகரிக்குமோ அதனை தொடர்ச்சியாக செய்து வாருங்கள்.
CREATE THE OPPORTUNITY
நீங்கள் வெற்றியடைவதற்கு தேவையான தகுந்த வாய்ப்பு ஒன்றை நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்றால் வாய்ப்புக்காக காத்திருக்காமல் அத்தகைய வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம் நம்மிடம் வருகின்ற வாய்ப்புகளை சரியாக உணர்ந்து அதனை பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். ஆனால் நம்மில் பலர் தனக்கான வாய்ப்பு வந்தும் அதனை புரிந்து கொள்ளாமல் சரியான வாய்ப்புக்கள் வரட்டுமென்று காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒருமுறை உலகப் பணக்காரர்களில் ஒருவரான Bill Gates ஐ பேட்டி எடுத்த பெண் செய்தி நிருபர் ஒருவர் பில்கேட்ஸ் இடம், “நீங்கள் எவ்வாறு இவ்வளவு பெரிய பணக்காரராக மாறினீர்கள்?” என்று கேட்டார். இதனைக்கேட்ட பில்கேட்ஸ் அப்பெண் நிருபரிடம் தன் பின் பாக்கெட்டில் இருந்து Blank Cheque ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்து இதில் எவ்வளவு தொகை வேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதனைக்கேட்ட அப்பெண் செய்தி நிருபர் செய்வதறியாது நான் ஏதாவது தவறாக கேட்டிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று தடுமாறியபடியே பில்கேட்ஸ் இடம் வெற்று காசோலையை திருப்பிக் கொடுத்தார்.
காசோலையை பெற்றுக்கொண்ட பில்கேட்ஸ் அப்பெண்ணைப் பார்த்து நான் உங்களைப் போல் வந்த வாய்ப்பினை தவற விடவில்லை. சரியாக பயன்படுத்திக் கொண்டேன். அதனால் தான் இன்று நான் இவ்வளவு பெரிய பணக்காரனாக இருக்கின்றேன்.
ஆனால் நீங்கள் வந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவற விட்டீர்கள். நீங்கள் நினைத்திருந்தால் இந்த உலகிலேயே மிகப்பெரிய பணக்கார பெண் செய்தியாளராக மாறியிருக்கலாம். நான் என் வாழ்வில் வந்த வாய்ப்புகள் எதையும் தவற விட்டது கிடையாது. முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன் என அப்பெண் செய்தி நிருபரிடம் கூறினார். எனவே நீங்களும் உங்களுக்கு வந்த வாய்ப்புகளை சரியாக உணர்ந்து அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
BELIEVE GOD
எப்போதுமே தன்னம்பிக்கை என்பது நம்மை காப்பாற்றக்கூடிய விடயமாகும். காப்பாற்றக் கூடிய விடயம் என்பதை தாண்டி நம்மை நாம் தளர்வாக இருக்கின்ற போதும் கூட வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய மிகப்பெரிய ஆயுதம் ஆகும். இத்தகைய தன்னம்பிக்கை எங்கிருந்து பிறக்கிறது என்றால் நீங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைக்கின்ற அந்த ஒரு நொடியில் இருந்துதான்.
நமக்கு எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் நாம் தைரியமாகவும், கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையோடு பேசுகின்ற ஒரு இடம் என்றால் அது இறைவனிடம் தான். ஏனெனில் இவ்வுலகில் உள்ள யார் நமக்கு உதவி செய்ய மறுத்தாலும் நமக்கு உதவி செய்ய இறைவன் மறுப்பதில்லை. எனவே இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வையுங்கள். இறைவன் மீது உறுதியாக நம்பிக்கை வைத்து தொடங்குகின்ற எந்தவொரு விடயமும் தோல்வி அடையாது.
FINALLY
மேலே குறிப்பிட்ட இந்த விடயங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருந்திருக்கும். இந்த விடயங்களை உங்கள் வாழ்வில் பின்பற்றி வாருவதன் மூலம் இந்த வருடத்தை மிகச்சிறந்த வெற்றிகரமான வருடமாக மாற்ற முடியும். How to Achieve Your Goals in 2022 என்ற கேள்விக்கு பதில் தருகின்ற மிகச்சிறந்த பதிவாக இது இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இந்த வருடத்தின் New Year Motivation பதிவாக இதனை நாம் பதிவிட்டுள்ளோம். இப்பதிவினை பதிவிட்டதன் எங்களது நோக்கம் இந்த வருடத்தில் உங்களுடைய அனைத்து இலக்குகளையும் அடைந்து மிகப்பெரும் வெற்றியாளராக உருவாக வேண்டும் என்பதுதான். அவ்வாறு உங்கள் இலக்குகளை அடைந்து வெற்றியாளராக உருவாவதற்கு எங்கள் சார்பாக வாழ்த்துக்கள். மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகின்றோம். நன்றி.