எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அத்துறையில் சாதித்த எத்தனையோ சாதனையாளர்களை நாம் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அவர்களுடைய வாழ்க்கை முறை, அவர்கள் எவ்வாறு இத்தகைய சாதனைகளை அடைந்துள்ளனர் எனும்போது அது எம்மை பூரிப்படைய செய்கின்றது. அந்தவகையில் இசைத்துறையில் மிகப்பெரும் சாதனைகளை செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்த A.R. Rahman Biography பற்றித்தான் இந்தப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
இந்தியாவின் தமிழ்நாட்டினை பிறப்பிடமாக கொண்ட ஏ. ஆர். ரஹ்மான் முதன்முதலாக இந்தியா சார்பில் Golden Globe Awards, BAFTA Awards போன்ற மிக உயரிய விருதுகளை வென்றதுடன், இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றதன் மூலம் Most Oscar Winner in India என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். இதன் மூலம் இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவையும் திரும்பிப்பார்க்க வைத்தார் A.R. Rahman.
இவ்வாறு பல சாதனைகளை படைத்த A.R. Rahman உடைய Inspiring Life Story பற்றிதான் இந்தப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். நீங்கள் ஏ. ஆர். ரஹ்மானுடைய ரசிகனாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி நிச்சயம் உங்களை இந்தப்பதிவு ஊக்குவிக்கும். சரி வாருங்கள் Inspiring Life Story of A.R. Rahman பதிவிற்குள் செல்லலாம்.
BORN AND CHILDHOOD OF RAHMAN
மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக இருந்த R.K. Shekhar மற்றும் Kareema Begum தம்பதிகளின் செல்வப்புதல்வனாக 1967 january 06 ஆம் திகதி சென்னையில் பிறக்கின்றார் திலீப்குமார் எனும் A.R. Rahman. திலீப்குமார் எனும் பெயரை உடைய ஏ. ஆர். ரஹ்மான் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்று Allah Rakha Rahman ஆக மாறினார்.
தன்னுடைய தந்தை இசையமைப்பாளராக இருந்ததினால் சிறுவயதிலிருந்தே இசையை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதன்படி தன்னுடைய நான்காவது வயதில் Piano கற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றார்.
இவ்வாறு மிகவும் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த ரஹ்மானின் வாழ்க்கையில் மிகப்பெரும் சோதனையாக, அவருடைய ஒன்பதாவது வயதில் அப்பாவின் மரணம் நிகழ்ந்தது. இதனால் மொத்த குடும்பமுமே செய்வதறியாது கலங்கி இருந்தது.
தன்னுடைய அப்பா இறந்தபோது ரஹ்மானுக்கு ஒன்பது வயது தான் ஆகியிருந்தது. இதனால் ரஹ்மான் மற்றும் அவரது தங்கைகள் அனைவருமே தாயினுடைய பராமரிப்பிலேயே வளர்ந்தனர். தன்னுடைய அப்பாவின் மரணத்துக்குப் பின்னர் குடும்பத்தை எவ்வாறு நடத்த போகின்றோம் என்று தெரியாத நிலையில் அவரது அப்பாவுடைய இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைத்த வருமானத்தினை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தனர்.
தன் குடும்பத்தின் சூழ்நிலை ரஹ்மானை உழைப்பதற்கு கட்டாயப்படுத்தியது. இதனால் பாடசாலைக்கு சரியாக செல்ல முடியவில்லை. அதேசமயம் பரீட்சை தேர்வுகளிலும் குறைந்தளவான மதிப்பெண்களையே பெற்றார்.
இதனால் கல்லூரி நிர்வாகம் அவரை அப்பள்ளியில் இருந்து நீக்கி விட்டனர். அதன் பின்னர் வேறொரு பள்ளியில் ஒருவருடம் பயின்றுவிட்டு, தன்னுடைய இசைத்திறமையின் காரணமாக Madras Christian College Higher Secondary School இல் படிப்பதற்கான வாய்ப்பு ரஹ்மானுக்கு கிட்டியது.
என்னதான் மிகவும் பிரபலமான பள்ளியில் படிப்பதற்கான வாய்ப்பு ரஹ்மானுக்கு கிடைத்திருந்தாலும் இசையின் மீது அவருக்கிருந்த ஆர்வம் பள்ளிப் படிப்பினை முழுமையாக விட்டுவிட வைத்தது. முழு நேர இசைக்கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு தன் தாயின் அனுமதி பெற்று தன் இசை பயணத்தை ஆரம்பித்தார் A.R. Rahman.
BEGINNING OF RAHMAN MUSIC JOURNEY
இசை மீது இருந்த ஆர்வத்தினால் மாஸ்டர் தன்ராஜ் என்பவரின் வழிகாட்டலின் கீழ் இசையை நன்றாக கற்றுக்கொண்ட ரஹ்மான் Keyboard, Harmonium, Piano போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதில் திறம்பட செயல்பட்டார். இவ்வாறு பல்வேறு வகையான இசைக் கருவிகளை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்ததால் அவரது தந்தையின் நண்பராகிய M. K. அர்ஜுனன் என்பவரின் இசை குழுவில் சேர்ந்து பணியாற்றினார்.
தன்னுடைய 11 வது வயதிலேயே பிரபல இசையமைப்பாளர்களான M. S. Viswanathan, Ilaiyaraaja போன்ற பல இசையமைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து பணியாற்ற கூடிய வாய்ப்பு ரஹ்மானுக்கு கிடைத்தது. அதன் பின்னர் சென்னையில் Western Classical Music இல் டிப்ளோமா பெற்றார். தன்னுடைய ஆரம்ப காலத்தில் அதிகளவான ஆவணப்படங்களுக்கும், விளம்பரப் படங்களுக்கும் இசையமைப்பதற்கான வாய்ப்பு ரஹ்மானுக்கு கிட்டியது.
RAHMAN AS A MUSIC DIRECTOR
அதுவரை ஆவணப்படங்களுக்கும் விளம்பர படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருந்த ரஹ்மானுக்கு முதன் முதலாக முழு நீள திரைப்படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பானது 1992 ஆம் ஆண்டு Mani Ratnam இயக்கத்தில் Arvind Swamy மற்றும் Madhubala ஆகியோரின் நடிப்பில் வெளியான ரோஜா படத்தில் பணியாற்றியதன் மூலம் கிடைத்தது. இத்திரைப்படத்தில் ரஹ்மானின் துள்ளல் நிறைந்த இசையை மக்கள் பட்டிதொட்டி எங்கும் கொண்டாடினர்.
இன்னும் சொல்லப்போனால் ரோஜா படத்தினுடைய வெற்றியில் ரஹ்மான் உடைய இசையானது பெரும் பங்கு வகித்தது என்றே சொல்லலாம். குறிப்பாக படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமன்றி இன்று வரைக்கும் அனைவரினதும் விருப்பத்திற்குரிய பாடல்களாக இருந்து வருகின்றன. அதை பறைசாற்றும் விதமாக ரோஜா திரைப்படத்தில் இசையமைத்ததற்காக ஏ. ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
தன்னுடைய முதல்படத்திலேயே மிகப்பெரும் முத்திரையைப் பதித்தார் ஏ. ஆர். ரஹ்மான். ரோஜா திரைப்படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருது மட்டுமன்றி தமிழ்நாடு Filmfare Award for Best Music Director என்ற விருதினையும் பெற்றுக்கொண்டார்.
ரோஜா படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பல படங்கள் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கிடைத்தன. ரோஜா திரைப்படம் வெளியான அதே ஆண்டில் Mohanlal நடிப்பில் மலையாளத்தில் வெளியான Yoddha திரைப்படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பு ரஹ்மானுக்கு கிட்டியது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் Shankar இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்திற்கு இசையமைத்ததோடு, பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கிழக்குசீமையிலே, கருத்தம்மா போன்ற திரைப்படங்களுக்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார்.
அதுமட்டுமன்றி தன் முதல் பட இயக்குனரான மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான திருடா திருடா மற்றும் பம்பாய் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான டூயட் திரைப்படத்திற்கும் இசையமைத்தார். இத்திரைப்படங்களை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் வெளியான mr.ரோமியோ மற்றும் லவ் பேர்ட்ஸ் திரைப்படத்துக்கும் இசையமைத்தார்.
இதனை தொடர்ந்து Super Star Rajinikanth நடித்து K.S. Ravikumar இயக்கத்தில் வெளியான முத்து திரைப்படத்துக்கு இசையமைத்ததன் மூலம் ஜப்பானிய ரசிகர்கள் மத்தியிலும் புகழ் பெற்றார் A.R. Rahman. முத்து திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்று ரஹ்மானை இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
RAHMAN IN TAMIL CINEMA
முத்து திரைப்படத்துக்கு பின்னர் 1996 இல் கமலஹாசன் நடித்து ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்திற்கு ரஹ்மான் இசையமைத்தார். அதே ஆண்டில் இன்னும் சில தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான் காதல் தேசம் திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 1997இல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்சாரகனவு திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, பிலிம்பேர் விருது மற்றும் தமிழ்நாடு விருதினையும் ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.
ரோஜா படத்திற்கு பின்னர் மணிரத்தினத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே ரஹ்மான் மாறிவிட்டார். பம்பாய் படத்திற்கு பிறகு மணிரத்னத்தோடு சேர்ந்து மோகன்லால் நடித்த இருவர், ஷாருக்கான் நடித்த உயிரே, மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் உட்பட இறுதியாக நடித்து முடித்து வெளியீட்டுக்கு தயாராகி கொண்டிருக்கின்ற Ponniyin Selvan பகுதி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய திரைப்படங்களுக்கும் ரஹ்மான்தான் இசை.
இயக்குனர் சங்கரோடு சேர்ந்து ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு பிறகு Kadhalan, Indian, Jeans ஆகிய திரைப்படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்ததோடு தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 1999 இல் அர்ஜுன் நடிப்பில் வெளியான Mudhalvan, 2003 இல் வெளியான Boys, 2007 இல் Super Star Rajinikanth நடிப்பில் வெளியான சிவாஜி, 2010 இல் வெளியான எந்திரன், 2015 இல் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ மற்றும் 2018 இல் வெளியான 2.0 திரைப்படத்திற்கும் ரஹ்மான் இசையமைத்தார்.
இத்திரைப்படங்கள் மட்டுமின்றி படையப்பா, ரிதம், நியூ, அன்பே ஆருயிரே போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு தொடர்ந்து Suriya நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் மற்றும் Ajith Kumar நடிப்பில் வெளியான வரலாறு மற்றும் Vijay நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன் படத்திற்கும் ரஹ்மான் இசையமைத்தார். அதுமட்டுமின்றி சிம்பு நடித்த விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படத்துக்கும் ரஹ்மான் இசையமைத்தார்.
இத்திரைப்படங்கள் மட்டுமன்றி Thalapathy Vijay நடித்த Mersal, Sarkar, Bigil ஆகிய திரைப்படங்களுக்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார். அதுவரை படங்களில் இசையமைப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ரஹ்மான் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடலின் மூலம் Cameo Appearance கொடுத்தார். அதுவே ஏ. ஆர். ரஹ்மான் திரையில் தோன்றிய முதல் தடவையாகும்.
RAHMAN IN BOLLYWOOD
1995 ஆம் ஆண்டு Ram Gopal Varma இயக்கத்தில் Aamir Khan நடிப்பில் வெளியான Rangeela திரைப்படத்துக்கு இசையமைத்ததன் மூலம் முதன் முதலாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார் A.R. Rahman. அதனை தொடர்ந்து மீண்டும் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 1997 இல் Sanjay Dutt நடிப்பில் வெளியான Daud திரைப்படத்துக்கு இசையமைத்தார்.
இதன் பின்னர் பல பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கன வாய்ப்பு ரஹ்மானுக்கு கிடைத்தது. அதன்படி Priyadarshan இயக்கத்தில் 1998 இல் Kabhi Na Kabhi, Doli Saja Ke Rakhna ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, மணி ரத்னம் இயக்கத்தில் 1998 இல் Dil Se திரைப்படத்துக்கும் 2007 இல் Guru மற்றும் 2010 இல் Raavan திரைப்படத்துக்கும் ரஹ்மான் இசையமைத்தார்.
இத்திரைப்படங்கள் மட்டுமின்றி 2001 இல் Aamir Khan நடிப்பில் வெளியான Lagaan திரைப்படத்துக்கும் ரஹ்மான் இசையமைத்தார். இத்திரைப்படத்திற்காக ரஹ்மானுக்கு National Film Award for Best Music Direction மற்றும் Filmfare Award for Best Music Director போன்ற விருதுகள் உட்பட மொத்தமாக 6 விருதுகள் கிடைத்தது. அத்தோடு வரலாற்று சுயசரிதை படங்களான The Legend of Bhagat Singh மற்றும் Netaji Subhas Chandra Bose: The Forgotten Hero ஆகிய படங்களுக்கும் ரஹ்மான் இசையமைத்தார்.
2006 ஆம் ஆண்டு ஆமிர் கான் நடிப்பில் வெளியான Rang De Basanti திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான Filmfare விருது உட்பட பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றார். அதேபோல் 2008 ஆம் ஆண்டு Hrithik Roshan மற்றும் Aishwarya Rai நடிப்பில் வெளியான Jodhaa Akbar திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சிறந்த பின்னணி இசைக்கான Filmfare விருது உட்பட பல விருதுகளை தன்வசப்படுத்தினார் A.R. Rahman.
RAHMAN IN WORLD CINEMA
ஏ. ஆர். ரஹ்மானை பொருத்தவரை இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் தன் முத்திரையை பதித்தவராக திகழ்கின்றார். ஹாலிவுட்டிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ள ரஹ்மான் உலக அளவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 2003 ஆம் ஆண்டு சீன இயக்குனரான He Ping இயக்கத்தில் வெளியான “Warriors of Heaven and Earth” படத்திற்கு இசையமைத்தன் மூலம் சீன திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து 2007 ஆம் ஆண்டில் வெளியான பிரித்தானிய திரைப்படங்களான “Provoked” மற்றும் “Elizabeth: The Golden Age” ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பிரித்தானிய திரையுலகுக்கு அறிமுகமானார் ஏ. ஆர். ரஹ்மான்.
இத்திரைப்படத்துக்கு அடுத்த ஆண்டே Danny Boyle இயக்கத்தில் வெளியான “Slumdog Millionaire” திரைப்படத்திற்கு இசையமைத்தார். Slumdog Millionaire திரைப்படத்திற்காக 2 முறை ஆஸ்கார் விருதினை ஏ. ஆர். ரஹ்மான் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
2009 இல் வெளியான “Couples Retreat” என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததன் மூலம் முதன்முதலாக ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதோடு மட்டுமன்றி Couples Retreat திரைப்படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான BMI London Award இனையும் ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து People like Us, Million Dollar Arm மற்றும் பீலேவின் வாழ்க்கை வரலாற்று படமான Pele: Birth of a Legend போன்ற ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் ரஹ்மான் இசையமைத்தார்.
REVOLUTION OF RAHMAN IN MUSIC
இசைத்துறையில் ரஹ்மான் மிகப்பெரும் புரட்சியை செய்தார். ரஹ்மானுக்கு முன்னிருந்த அனைத்து வகையான இசை தொடர்பான வரைமுறைகளையும் ரஹ்மான் மாற்றியமைத்தார். தான் இசையமைக்கும் பெருமளவான புதுமுக பாடகர்களுக்கு ரஹ்மான் வாய்ப்பளித்தார்.
அதன்படி தன்னுடைய முதல் படமான ரோஜா திரைப்படத்தில் ஹரிஹரனையும், காதலன் திரைப்படத்தில் உன்னிகிருஷ்ணனையும் மற்றும் இந்திரா திரைப்படத்தில் ஹரிணி, கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் சின்மயி என பல புதுமுக பாடகர்களை ரஹ்மான் அறிமுகம் செய்தார்.
இவ்வாறு பல புதுமுக பாடல்களை தன்னுடைய படங்களின் மூலமாக அறிமுகம் செய்ததோடு மட்டுமன்றி தன்னுடைய பாடல்களில் அதுவரை பலருக்கு தெரியாத மேற்கத்திய இசையை கலந்து வழங்கியதன் மூலம் பல இளைஞர்களையும் ரஹ்மான் கவர்ந்தார்.
ஜென்டில்மேன், காதலன் திரைப்படங்களில் வந்த பாடல்கள் 90’s கிட்ஸ், 2k கிட்ஸ் என பலரையும் ஆட வைக்கின்ற துள்ளல் இசை பாடல்களாக இன்றளவும் இருக்கின்றன. மேற்கத்திய இசையைக் கொண்டு அதிகளவான பாடல்களை உருவாக்கியதால் ரஹ்மானுக்கு கிராமிய இசை வராது என்ற ஒரு விமர்சனமும் இருந்தது.
அந்த விமர்சனங்களுக்கு சிறந்த பதிலடியாக பாரதிராஜாவோடு சேர்ந்து பணியாற்றிய கிழக்குசீமையிலே மற்றும் கருத்தம்மா படங்கள் இருந்தன.
தனக்கு கிராமிய இசை நன்றாகவே வரும் என்பதை கிழக்குசீமையிலே மற்றும் கருத்தம்மா படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் ரஹ்மான் உணர்த்தினார்.
குறிப்பாக கருத்தம்மா படத்தில் வந்த “போறாளே பொன்னுத்தாயி” பாடலுக்காக அப்பாடலை பாடிய ஸ்வர்ணலதாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இசை உலகில் தனக்கு எதிராக இருந்த விமர்சனங்களை எல்லாம் தன்னுடைய படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலமாகவே பதிலடி கொடுத்ததன் மூலம் இன்றும் இசையுலகில் ராஜாவாக A.R. Rahman திகழ்கின்றார்.
PERSONAL LIFE OF RAHMAN
1984 ஆம் ஆண்டு ரஹ்மானின் இளைய தங்கை கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது குடும்பம் காதிரி தரீக்கா சென்று அங்கு நோய் குணமாக வேண்டி நேர்ச்சை செய்தனர். அவர்கள் நேர்ச்சை செய்தபடியே தன் தங்கையின் நோய் குணமான படியினால் தொடர்ச்சியாக தரீக்காவிற்கு செல்லும் பழக்கத்தினை திலீப் குமாரான ஏ. ஆர். ரஹ்மான் கொண்டிருந்தார்.
இந்நிலையில் சூபித்துவம் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக 1989 இல் தன்னுடைய இருபத்தி மூன்றாவது வயதில் தன் குடும்பத்தோடு சேர்ந்து மதம் மாறியதோடு திலீப்குமாராக இருந்த தன்னுடைய பெயரை அல்லா ராக்கா ரஹ்மானாக மாற்றி கொண்டார். இதனைத்தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி Saira Banu என்பவரை ஏ. ஆர். ரஹ்மான் திருமணம் செய்து கொண்டார்.
ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் சைரா பானு தம்பதிகளுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் கதீஜா ரஹ்மானுக்கு சென்ற மாதம் தான் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், ஏ. ஆர். ரஹ்மானின் அக்காவின் மகன் தான். அதுமட்டுமின்றி பிரபல நடிகரான ரகுமான், ஏ. ஆர். ரஹ்மானின் இணை சகோதரர் ஆவார்.
AWARDS AND ACHIEVEMENTS OF RAHMAN
தன் அசாத்திய திறமைக்காக ஏ. ஆர். ரஹ்மான் பல்வேறுபட்ட விருதுகளை வாங்கியுள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஆறு முறை வாங்கியுள்ளார். ஒரு இசையமைப்பாளராக 6 முறை தேசிய விருதை வாங்கிய முதல் நபர் இவராவார்.
இந்த விருதுகள் மட்டுமின்றி இந்திய அரசின் பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் ஏ. ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுக்கொண்டார்.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான Ohio Miami University, Chennai Anna University, Aligarh Muslim University மற்றும் London Middlesex University என்பவற்றில் ரஹ்மானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான் ஹாலிவுட்டிலும் மிக உயரிய விருதுகளை வாங்கியுள்ளார்.
Slumdog Millionaire திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான Golden Globe விருது மற்றும் BAFTA விருதினை முதன்முதலாக பெற்றுக்கொண்டதுடன் எல்லோரினதும் கனவாக இருக்கின்ற ஆஸ்கார் விருதினை இரண்டு முறை வென்றார் A.R. Rahman. ஆசியாவிலேயே இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற முதல் நபர் என்ற பெருமையை ஏ. ஆர். ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.
விருதுகள் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகளை ஏ. ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார். உதாரணமாக அமெரிக்க ஜனாதிபதியினுடைய குடும்பத்திடமிருந்து கிறிஸ்துமஸ் விழாவுக்கான அட்டையை பெற்றுக் கொண்டதுடன் இரவு நேர உணவினை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியுடன் சேர்ந்து உண்பதற்காகவும் ரஹ்மான் அழைக்கப்பட்டார். அதுமட்டுமின்றி 2013 ஆம் ஆண்டில் கனடா நாட்டின் Markham நகரின் தெருவொன்றுக்கு ஏ. ஆர். ரஹ்மானின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
FINALLY
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த A.R. Rahman தன்னுடைய ஒன்பதாவது வயதிலேயே தந்தையை இழந்தார். வருமானத்திற்கு வழி இல்லாமல் தந்தையின் இசை உபகரணங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு ரஹ்மானின் குடும்பம் வாழ்க்கையை நடத்தியது.
இந்நிலையில் இசை மீது ரஹ்மானுக்கு இருந்த தீராத ஆசையானது அவரை பள்ளிப் படிப்பினை முற்றுமுழுதாக நிறுத்திவிட்டு இசையினை முழுமையாக கற்றுக்கொள்ள வைத்தது. இசையினை முழுமையாக கற்று தேர்ந்த பின் விளம்பரப்படங்கள் மற்றும் ஆவணப் படங்களில் இசையமைத்து வந்த ரஹ்மானுக்கு ரோஜா என்கின்ற மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரஹ்மான் இன்று One of the Greatest Musicians in the World ஆக திகழ்கின்றார். இதற்கு முழுக்க முழுக்க இறைவனின் மீது ரஹ்மான் கொண்டிருந்த நம்பிக்கையும், தன் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ரஹ்மான் மேற்கொண்ட முயற்சிகளும் தான் கரணம்.
இறை நம்பிக்கையும், தன்னடக்கமும், வெற்றி பெற வேண்டுமென்ற விடாமுயற்சியும் இருந்தால் யாராலும் வெல்ல முடியும் என்பதற்கு AR Rahman Biography சாட்சியாகும். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மற்றும் இளையராஜா போன்ற மிகப்பெரும் ஜாம்பவான்களுக்கு கிடைக்காத ஆஸ்கர் விருது ரஹ்மானுக்கு இரண்டு தடவைகள் கிடைத்தது என்றால் அது சாதாரணமான விடயம் கிடையாது.
ஆசியாவிலேயே இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற முதல் நபர் என்பதன் மூலம் முழு இந்தியாவுக்குமே பெருமை சேர்த்தவர் ஏ. ஆர். ரஹ்மான். ஆஸ்கார் விருது மட்டுமன்றி பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்று உலக அளவில் ஒரு இந்தியராக சாதனைகள் படைத்து மின்னுகின்ற எல்லோராலும் செல்லமாக ‘Mozart of Asia’ என அழைக்கப்படுகின்றவர் தான் இந்த ஏ. ஆர். ரஹ்மான்.
Inspiring Life Story of A.R. Rahman என்ற இந்தப்பதிவு உங்களுக்கு பயனுடையதாகவும், உங்களது வெற்றிக்கு ஊக்குவிக்கக்கூடியதாகவும் இருக்குமென்று நாங்கள் நம்புகின்றோம். மீண்டுமொரு சிறந்த பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம் நன்றி.