7 Laws of Money - Follow These 7 Steps to Become Rich and Successful

 


எல்லோருக்குமே பணம் உழைக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கும். எதிர்காலத்தில் தான் ஒரு பணக்காரன் ஆக வர வேண்டும் என்று எல்லா இளைஞர்களும் நினைப்பதுண்டு. ஆனால் என்னதான் நாம் பணக்காரனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் எல்லோராலும் அவ்வாறு வர முடிவதில்லை. அதற்கு காரணம் பணத்தினுடைய உண்மையான விதிகளை உணர்ந்து செயற்படாமை ஆகும்.

7 Laws of Money

இந்த பதிவில் நாம் 7 Laws of Money பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். பணத்தினுடைய இந்த 7 விதிகளும் உங்களை ஒரு மிகச்சிறந்த பணக்காரனாக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த 7 விதிகளையும் நீங்கள் உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாக பின்பற்றி வருகின்ற போது நிச்சயமாக உங்களால் Rich Person ஆக வர முடியும். 


இந்தப் பதிவினை வாசிக்கின்ற உங்களுக்கு நாங்கள் தருகின்ற வாக்குறுதி இதுதான் “Follow These 7 Steps to Become a Rich Person”. எனவே உங்கள் வாழ்வை மாற்றுகின்ற சிறந்த பதிவாக இது இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.


உண்மையிலேயே பணக்காரனாக வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் இந்த பதிவினை இறுதிவரை படித்துவிட்டு இதில் குறிப்பிட்ட விடயங்களை உங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். சரி வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

1. POWER OF COMPOUNDING 

இன்று எல்லோருக்கும் இருக்கின்ற கேள்வி என்னவென்றால், How to become a Rich Person? என்பதாகும். நீங்கள் பணக்காரராக வர வேண்டுமென்று ஆசைப்பட்டால் அதற்கு முதலில் நீங்கள் பணத்தை சேமிப்பதற்கு பழகிக்கொள்ள வேண்டும். நீங்கள் நினைக்கலாம் பணத்தை சேமிப்பதன் மூலம் எவ்வாறு பணக்காரனாவது? என்று. ஆனால் உண்மையிலேயே சேமிப்பு என்பது உங்களை பணக்காரனாக உருவாவதற்கு தயார் செய்யும். 


உங்களுடைய மொத்த வருமானத்தில் குறைந்தது 10% சதவீதத்தை எனும் நீங்கள் சேமித்துக்கொள்ள பழக வேண்டும். இவ்வாறு நீங்கள் சேமிப்பது உங்களிடம் பணமானது அதிகளவில் சேர்வதற்கு வழிவகை செய்யும். என்னுடைய மொத்த வருமானத்தில் 10% பணத்தை சேமிப்பதால் எப்படி அதிகளவில் பணம் சேரும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சிறு துளி பெரு வெள்ளம் என்பதை போல நீங்கள் இன்று சிறிது சிறிதாக சேர்க்கும் பணம் எதிர்காலத்தில் பெரும் தொகையாக மாற்றமடையும்.


இன்று நீங்கள் சேமிக்கின்ற பணம் சிறுதொகையாக இருந்தாலும் அதனை தொடர்ச்சியாக நீண்டகாலத்துக்கு சேமித்து வருகின்ற போது அது ஒரு பெரும் தொகையாக, பெரும் முதலீடாக உருவாகிடும். அப்போது அந்த முதலீட்டினை வைத்து நீங்கள் புது வணிகம் ஒன்றையோ அல்லது சொத்தோன்றினையோ உங்களால் வாங்கக் கூடியதாக இருக்கும்.


இதை விடுத்து சேமிக்காமல் அப்பணத்தினை செலவு செய்தீர்கள் என்றால் உங்களால் எந்தவொரு முதலீட்டினையும் உருவாக்க முடியாது. எனவே உங்களுடைய வருமானத்தில் குறைந்தது 10 சதவீதத்தை எனும் சேமிக்க பழகிக் கொள்ளுங்கள். 

2. CONTROL COSTS

இன்று பல நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் நடுத்தர வர்க்கத்திலேயே இருப்பதற்கு மிகப் பிரதான காரணம் என்னவெனில் அவர்கள் தங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதாகும். உங்களால் உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு முடியுமாக இருந்தால் நிச்சயமாக பணத்தினை பன்மடங்காகும் திறன் உங்களிடம் உள்ளது என்பது அர்த்தமாகும். நீங்கள் அதிகமாக செலவு செய்யக் கூடியவராக இருந்தால் இன்றிலிருந்து உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள். 


இங்கு நாம் செலவுகளை கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள் எனச் சொல்லுவது எந்த செலவும் செய்யாமல் இருப்பது என்று அர்த்தமாகாது. தேவையில்லாத அத்தியாவசியமற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதே எங்களது கருத்தாகும்.


கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய அத்தியாவசிய தேவைகளுக்காக நீங்கள் செலவு செய்வதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் ஆடம்பரமாக தேவையற்ற முறையில் செலவு செய்பவராக நீங்கள் இருந்தால் அப்பழக்கத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். 


பெரும்பாலான செல்வந்தர்களை நீங்கள் உற்று நோக்கினீர்கள் என்றால் அவர்கள் தேவையற்ற செலவுகளிலிருந்து விலகியவர்களாகவே இருப்பர். அவர்கள் தான் ஒரு பணக்காரன் என்பதற்காக அதிக ஆடம்பரம் உடையவர்களாக இருக்க மாட்டார்கள். மிகவும் எளிமையாகவே பெரும்பாலான பணக்காரர்கள் இருக்கின்றனர்.


இத்தகைய அவர்களது பண்புதான் அவர்களை மேலும் மேலும் பணக்காரனாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது. எனவே நீங்களும் உங்களுடைய தேவையற்ற செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். 

3. INVEST YOUR MONEY

நீங்கள் இப்போது இருக்கின்ற நிலையை விட பலமடங்கு பணக்காரராக வரவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுடைய பணத்தை நீங்கள் சிறந்த முறையில் முதலீடு செய்து கொள்ளப் பழக வேண்டும். முதலீடுகள் தான் உங்களுடைய பணத்தினை பன்மடங்காக பெருக்குவதற்குரிய சிறந்த ஆயுதம் ஆகும். Warren Buffett போன்ற மிகப்பெரும் செல்வந்தர்கள் முதலீட்டின் மூலமே இன்று இத்தகைய அந்தஸ்தினை அடைந்துள்ளனர். 


நீங்கள் உங்கள் பணத்தினை முதலீடு செய்கின்ற போது சரியான வழிகளில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் மிகவும் ஆராய்ந்து சரியான வழிகளில் பணத்தை முதலீடு செய்கின்ற போதுதான் அந்த பணமானது பன்மடங்காக நமக்கு திரும்பி கிடைக்கும். ஏனென்றால் நாம் போட்ட பணத்தை இழப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே முதலீடு செய்வது தொடர்பாக சரியாக கற்றுக் கொண்டதன் பின்னரே அதனை மேற்கொள்ளுங்கள். 


குறிப்பாக Share Market மற்றும் Start Up கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்கின்ற போது சரியான சந்தை மதிப்பாய்வினை மேற்கொண்ட பின்னரே முதலீட்டினை மேற்கொள்ளுங்கள். உங்கள் பணத்தினை நீங்கள் முதலீடு செய்கின்ற போது நிச்சயமாக அது பன்மடங்காக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏனெனில் இன்று பல மிகப் பெரும் பணக்காரர்களை உருவாக்கியதே இந்த முதலீடுதான். எனவே நீங்களும் முதலீடு செய்து கொள்ள பழகிக்கொள்ளுங்கள். 

4. MAKE A ASSET

நீங்கள் பணக்காரராக வரவேண்டுமென்றால் அப்பணத்தை உருவாக்கக்கூடிய சொத்தொன்றை உருவாக்க பழகிக்கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் பல வருடங்களாக தொழில் செய்து கொண்டு வருகின்றீர்கள் என்றால் அந்தத் தொழிலிலிருந்து சேமித்த பணத்தை வைத்து ஒரு நிலத்தையோ அல்லது தங்கத்தினையோ அல்லது ஒரு கடையினையோ வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் உழைப்பதனை நிறுத்தி விட்டாலும் சொத்து என்பது உங்களுக்கு தொடர்ச்சியான வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய ஒன்றாக இருக்கும். 


அல்லது நீங்கள் மாணவர்களாக இருந்தால் நீங்கள் இப்பொழுது கற்றுக்கொண்டிருக்கின்ற விடயத்தை நன்றாக கற்றுக்கொண்டு அதை வைத்து வருமானம் ஒன்றை உங்களால் ஈட்ட முடியும். இங்கே பணத்தை உருவாக்கும் சொத்து எனும்போது நிலம், வீடு, நகை, வாகனங்கள் மட்டும் கிடையாது. எதை வைத்து உங்களால் வருமானம் உழைக்க முடியுமாக இருக்குமோ அவையெல்லாம் பணத்தை உருவாக்கும் சொத்துக்களே. 


எனவே பணத்தை உருவாக்க கூடிய சொத்தினை உருவாக்குவதற்கு பழகிக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை அனைத்துமே உங்களுக்கு செயலற்ற வருமானத்தைப் (Passive Income) பெற்றுத்தரக்கூடியவை. பொதுவாக நாம் பணக்காரனாக வேண்டும் என்றால் நமது வருமானத்தில் பெரும் பங்கு செயலற்ற வருமானமாக இருக்க வேண்டும். செயல் வருமானத்தை (Active Income) விட செயலற்ற வருமானமானது அதிகளவில் பணத்தை உருவாக்க கூடியவை.

5. GUARD YOUR MONEY

நீங்கள் பணக்காரனாக வருவதற்கு தேவையான மிக முக்கியமான விதிகளில் ஒன்றாக பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதும் உள்ளடங்கும். இங்கு பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதன் மூலம் கூற வருவது யாதெனில் உங்களது பணத்தினை தேவையற்ற கடனிலிருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள் என்பதாகும். அதாவது எத்தகைய கஷ்டமான சூழ்நிலைகள் வந்தாலும் உடனே கடன் வாங்குவது என்ற முடிவை எடுக்காமல் அதற்கான வேறு வழிகளை தேட வேண்டும்.


கடன்  என்பது எப்போதுமே நமக்கு பொறுப்பை அதிகப்படுத்துகின்ற ஒரு விடயமே தவிர அது ஒரு சொத்து கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் வாங்கும் கடன், வட்டி மேல் வட்டி போட்டு உங்களை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளிவிடும். எனவே கடன் வாங்குவது என்று ஓர் எண்ணத்தை முதலில் உங்கள் மனதில் இருந்து முற்றுமுழுதாக அழித்துவிடுங்கள். 


மிகப்பெரும் பணக்காரர்கள் யாருமே கடன் வாங்குவதை பரிந்துரை செய்ய மாட்டார்கள். அத்தோடு அவர்களும் கடன் வாங்க நினைப்பதும் இல்லை. கடன் என்பது உங்களை மேலும் மேலும் கஷ்டத்திற்கு கொன்டு செல்லக்கூடிய ஒரு விடயமாகும். எனவே நீங்கள் அதிகளவான பணத்தை ஈர்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் கடன் என்ற மாபாதகத்திலிருந்து விலகியிருங்கள். அதுதான் உங்கள் பணத்தை பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.

6. INVEST YOURSELF

நீங்கள் பணக்காரராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நான் பணக்காரனாக வரவேண்டும் என்றால் எப்படி என்னை நான் தயார்படுத்திக் கொள்வது? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வி உங்களுக்குள் இப்போது எழுந்திருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் திறன்கள் மீது முதலீடு செய்ய வேண்டும். 


These 7 Steps to Become Rich and Successful


எப்படி என் மீது நான் முதலீடு செய்வது என்று நீங்கள் நினைக்கலாம். உங்கள் மீது முதலீடு செய்வது என்பதன் அர்த்தம் என்னவெனில் பணத்தினை அதிகம் ஈர்க்கக்கூடிய திறமைகளையும், ஆற்றல்களையும் நீங்கள் கற்றுக் கொள்தாகும்.


நீங்கள் என்னதான் படித்து பட்டம் பெற்று சிறந்த அறிவாளியாக இருந்தாலுமே பணத்தை கவரும் கலையைக் நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றால் ஒரு சாதாரண பட்ஜெட் வாழ்க்கையினையே உங்களால் வாழக்கூடியதாக இருக்கும். 


உலகின் மிகப்பெரும் பணக்காரர்களை நீங்கள் எடுத்துக்கொண்டால் அவர்கள் தனக்கென்று தனித்துவமான திறமையொன்றை வைத்திருப்பர். அத்தகைய திறமைகள் தான் இன்று அவர்களை இவ்வளவு பெரிய பணக்காரராக மாற்றி இருக்கின்றது. எனவே பணத்தை அதிகம் கவர்ந்து இழுக்கக்கூடிய, பணத்தை உருவாக்கக்கூடிய திறமைகள் என்னவென்று கண்டறிந்து அவற்றை கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் நீங்கள் உங்கள் மீது இடுகின்ற முதலீடாகும்.


இந்த 2022 ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய திறன்கள் என்னவென்று Top 10 Highest Paying Skills for Success in 2022 என்ற பதிவில் மிக விரிவாக குறிப்பிட்டுள்ளோம். இந்த 10 திறன்களில் ஏதாவது ஒன்றின் மீது நீங்கள் முதலீடு செய்து அதனை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த 10 திறன்களும் செயலற்ற வருமானத்தினை உருவாக்கி தரக்கூடிய High Demanded Skills ஆகும். 

7. PLAN YOUR FUTURE 

நீங்கள் உங்களது எதிர்காலத்தை பற்றி திட்டமிடுவது நீங்கள் பணக்காரராவதில் மிகப்பெரும் பங்கினை வகிக்கின்றது. உங்களிடம் இப்போது இருக்கின்ற பணத்தினை பன்மடங்காக மாற்றுவதற்காக எதிர்காலத்தில் எத்தகைய விடயங்களை செய்யப் போகின்றீர்கள் என்பது பற்றிய தெளிவான திட்டமானது உங்களிடம் இருக்க வேண்டும். மேலும் அத்திட்டத்தில் நீங்கள் அடைய நினைக்கின்ற பணத்தினை எவ்வாறு அடைந்து கொள்ள போகின்றீர்கள் என்பது பற்றிய தெளிவான செயல்முறை குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். 


அத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை தொடர்ச்சியாக நீங்கள் பின்பற்றி வர வேண்டும். அவ்வாறு நீங்கள் பின்பற்றுகின்ற போதுதான் உங்கள் இலக்கை நோக்கி உங்களால் செல்லக் கூடியதாக இருப்பதுடன் அதனை முழுமையாக அடைந்து கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.


அதேசமயம் உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முறையான திட்டமிடல் ஒன்று உங்களிடம் இல்லை என்றால் உங்கள் வாழ்க்கையானது எந்தவித குறிக்கோளுமின்றி ஏனோ தானோவென்று சென்றுவிடும். 


எனவே நீங்கள் எதிர்காலத்தில் அடைய நினைக்கின்ற பணத்தொகை எவ்வளவு? உங்களுடைய தெளிவான இலக்கு எது? என்பது பற்றி பற்றிய முறையான திட்டமிடல் ஒன்றை இப்போதே மேற்கொள்ளுங்கள். அத்திட்டத்தினை நீங்கள் எழுத்து வடிவில் எழுதுவது இன்னும் சிறந்தது.


அதனோடு அத்திட்டத்தினை தொடர்ச்சியாக உங்கள் வாழ்நாளில் பின்பற்றி வாருங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக பின்பற்றி வருவதன் மூலம் நிச்சயமாக நீங்கள் அடைய நினைக்கின்ற இலக்கினை அடைந்து கொள்ள முடியும். 

FINALLY 

மேலே குறிப்பிட்ட இந்த ஏழு விதிகள் தான் 7 Laws of Money ஆகும். இந்த 7 விதிகளையும் நீங்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வருகின்ற போது காலப்போக்கில் நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் பணக்காரராக மாற்றம் அடைவீர்கள். இதனை நாங்கள் வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை. இவை அனைத்துமே பல பணக்காரர்கள் உடைய வாழ்விலிருந்து எடுக்கப்பட்ட அவர்களது வாழ்வை மாற்றிய விதிகளாகும். 


இந்தப் பதிவினை வெறும் பதிவாக மட்டும் பார்க்காமல் உங்கள் வாழ்க்கையை மாற்றுகின்ற ஒரு பதிவாக பாருங்கள். இங்கே குறிப்பிட்டுள்ள விடயங்களை கூர்ந்து கவனித்து, அதனை உணர்ந்து செயற்படுங்கள்.


இங்கு குறிப்பிட்ட இந்த ஏழு விதிகளையும் உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாக பின்பற்றி வாருங்கள். முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் பணக்காரராக முடியும் என்று நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே எதுவும் வந்து சேரும். 


உங்கள் அனைவருக்கும் 7 Steps to Become Rich and Successful பதிவு பிடித்திருமென்று நம்புகின்றோம். நிச்சயமாக இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 7 விதிகளும் உங்களை பணக்காரனாக மாற்றும் என்று நாங்கள் நம்புகின்றோம்.


இந்த பதிவினை வாசிக்கின்ற அனைவரும் உங்கள் இலக்குகளை அடைந்து சமூகத்தில் மிகப்பெரும் பணக்காரனாக வர இறைவனை பிரார்த்திக்கிறோம். மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம். நன்றி.

     

Post a Comment

Previous Post Next Post