தன்னுடைய பழக்கவழக்கங்களில் முன்னேற்றத்தினை கொண்டு வரவேண்டும் என்று எல்லோருமே உழைக்கின்றனர். நம்மை ஆளுமை நிறைந்த ஓருவராக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எத்தனையோ விடயங்களை நாம் செய்து வருகின்றோம்.
இதனால் தன்னுடைய ஆளுமையினை அதிகரிப்பதற்காக பலரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் இன்று பலரும் Online Personality Development Course போன்றவற்றை எடுத்து வருகின்றனர்.
இன்னும் சிலர் Personality Development Tips தொடர்பாக Google மற்றும் YouTube போன்ற இணையதளங்களில் மூலம் அது தொடர்பாக கற்றுக்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்தளவு சிரமங்கள் இல்லாது உங்களுடைய ஆளுமையை விருத்தி செய்கின்ற சிறந்த வழிமுறைகளை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
How to Improve Your Personality? என்ற கேள்விக்கு சிறந்த விடை தரக்கூடிய பதிவொன்றாக இந்த பதிவு இருக்கப்போகின்றது. நிச்சயமாக இந்தப்பதிவு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
எனவே இங்கே குறிப்பிடுகின்ற விடயங்களை முடிந்தளவு உங்கள் வாழ்க்கையில் பின்பற்றி வாருங்கள். நிச்சயமாக நீங்களும் ஓர் ஆளுமை நிறைந்த மனிதராக மாற முடியும். சரி வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
ALWAYS BE A LISTENER
நீங்கள் மற்றவர்கள் மத்தியில் ஆளுமை நிறைந்தவராக வரவேண்டுமென்றால் நீங்கள் அதிகமாக பேசுவதற்கு பதிலாக அதிகம் கேட்பவராக இருங்கள். பெரும்பாலான நேரங்களில் மௌனத்தை கடைபிடியுங்கள்.
எந்த இடமாக இருந்தாலும் தேவையில்லாமல் அதிகம் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதிகம் பேசுகின்றவர்களாக நீங்கள் இருக்கின்ற போது உங்களை அறியாமல் சொல்லக்கூடாத பல விடயங்களை அந்த இடத்தில் சொல்லிவிடுவீர்கள்.
அதுமட்டுமின்றி இவ்வாறு அதிகம் பேசுவதனால் பெரும்பாலானவர்கள் உங்களோடு கதைப்பதற்கு விரும்ப மாட்டார்கள். ஏனெனில் நீங்கள் அதிகம் பேசி அவர்களுடைய நேரத்தையும் தின்று விடுவீர்கள் என்று உங்களைக் கண்டாலே பொய்யான காரணங்களைக் கூறி உங்களிடமிருந்து விலகி இருக்கவே எண்ணுவார்கள். இதனால் உங்கள் Personality மீதான தவறான எண்ணம் மற்றவர்களுக்கு வரக்கூடும்.
அதேசமயம் பல இடங்களில் நீங்கள் மௌனமாக இருந்து, எந்த இடத்தில் எதனை பேச வேண்டும் என்று உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொண்டால் பல பிரச்சினைகளிலிருந்து உங்களால் விலகி இருக்க முடியும்.
அதுமட்டுமன்றி மற்றவர்கள் கூறுவதை அதிகம் கேட்கக்கூடியவர்களாக இருந்தீர்கள் என்றால் பல ரகசியங்களை, மற்றவர்கள் பற்றிய பல விடயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இது எப்போதும் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.
மிகப்பெரும் ஆளுமைகள் எல்லாம் அதிகம் பேசுபவர்களாக இல்லாமல் மற்றவர்களிடமிருந்து அதிகம் கேட்பவர்களாகவே இருக்கின்றனர். இது மேலும் மேலும் அவர்களுடைய ஆளுமையை அதிகரிக்க செய்கின்ற ஒரு விடயமாகவும், மற்றவர்கள் மத்தியில் சிறந்து விளங்குவதற்கும் உதவி புரிகின்ற விடயமாகவும் இருக்கின்றது.
எனவே அதிகம் பேசுவதில் இருந்து விடுபட்டு மற்றவர்கள் பேசுவதை அதிகம் Listen பண்ணக்கூடியவர்களாக மாறுங்கள். இவ்வாறு செய்வது நிச்சயம் உங்கள் ஆளுமையை அதிகரிக்கும்.
ALWAYS BE WITH POSITIVE PEOPLE
நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நம்முடைய பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை தீர்மானிக்கின்ற ஒரு விடயமாக எம்முடைய சுற்றுச்சூழல் இருக்கின்றது. எம்மை சுற்றி இருக்கின்ற பல விடயங்கள் நம்முடைய பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் மீது பெரும்பாலான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில் தான் நாம் யாரோடு பழக்கம் வைக்கின்றோம், யாருடன் நட்பு வைக்கின்றோம் என்பதனை பொறுத்து எம்முடைய ஆளுமையும் தீர்மானிக்கப்படுகின்றது.
நீங்கள் கெட்ட எண்ணங்களை உடைய, எப்போதும் எதிர்மறையாகவே சிந்திக்கக்கூடியவர்களோடு நட்பு கொண்டிருந்தால், அவர்களுடனான பழக்கவழக்கங்களை நீங்கள் அதிகரித்தால் நீங்கள் எவ்வளவு நல்ல பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், நேர்மறையாக சிந்திக்கக்கூடிய தன்மை இருந்தாலுமே அவர்களுடன் மீண்டும் மீண்டும் பழகுகின்ற போது அவர்களுக்குள் இருக்கின்ற அந்த கெட்ட எண்ணங்களும், எதிர்மறையாக சிந்திக்கக்கூடிய தன்மையும் உங்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றது.
எனவேதான் உங்களை சுற்றி இருக்கின்ற நபர்களை நல்ல எண்ணங்களை உடைய நேர்மறையாக சிந்திக்க கூடியவர்களாக மாற்றிக்கொள்ளுங்கள். எதிர்மறையாக சிந்திக்கக்கூடியவர்களின் பழக்கத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.
இவ்வாறு உங்களை சுற்றி இருப்பவர்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்க கூடியவர்களாக இருக்கின்ற போது உங்களுடைய ஆளுமையும் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்ககூடியதாக மாற்றமடையும். இது உங்களை மேலும் மெருகூட்டி வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு வழிவகுக்கும்.
ALWAYS BE HONEST
நேர்மையாக இருப்பது என்பது எந்தவகையிலும் நமக்கு தீங்கு விளைவிக்காது. அது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் அதை நாம் தொடர்ச்சியாக பின்பற்றி வருகின்ற போது நம்மீதான மற்றவர்களின் நம்பிக்கையும், நம் மீது மற்றவர்கள் கொண்டிருக்கின்ற நல்ல எண்ணத்தையும் அதிகரிக்கச் செய்கின்றதாகவே நேர்மை அமையும். இந்த உலகில் விலைமதிப்பற்றது என்பது மற்றவர்கள் நம்மை முழுமையாக நம்புவது என்பதுதான். அதனைப் பெற்றுத்தருகின்ற ஒன்றாக நேர்மை அமையும்.
நேர்மையாக இருப்பதனால் எந்தவித நன்மையையும் அனுபவிக்க முடியாது என்பது பலரின் கருத்தாக இருக்கின்றது. இவ்வாறு பலர் கூறுவதற்கு காரணம் நேர்மையாக இருந்தால் அதிகளவான பணத்தினை உழைக்க முடியாது என்பதற்காகவாகும். ஆனால் நேர்மையாக இருப்பது என்பது பண அடிப்படையிலான நன்மைகளை விட சமூகத்தின் மத்தியில் சிறந்த ஆளுமை உடைய நல்ல மனிதன் என்ற அந்தஸ்தினை பெற்றுத்தரும்.
நீங்கள் நேர்மையை இழந்து சம்பாதிக்கின்ற பல லட்சங்களை விட நேர்மையாக இருந்து சம்பாதிக்க சில ஆயிரங்கள் பெறுமதியானது. மற்றவர்களை சுரண்டி, பொய் சொல்லி சம்பாதிக்கின்ற பணம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி என்ற ஒன்று இருக்காது. இதுதான் நிதர்சனம். இறைவனின் விதியும் இதுதான்.
எனவே நேர்மையை கடைபிடியுங்கள். எப்பொழுதும் அதனை இழந்து விடாதீர்கள். நிச்சயமாக நேர்மையாக இருப்பது உங்களை சிறந்த மனிதனாக மாற்றுவதோடு மட்டுமன்றி உங்களை சிறந்த ஆளுமை உள்ள மனிதனாக மாற்றும்.
பிறர் மத்தியில் உங்களுக்கென ஒரு தனி அந்தஸ்து உருவாகும். வாழ்வில் நேர்மையாக இருந்து மரணித்த பல ஆளுமைகளை இன்று உலகம் ஒவ்வொரு நாளும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது அல்லவா! அதுதான் நேர்மையின் பலன்.
READ BOOK DAILY
வாசிப்பு என்பது ஒரு மனிதனை பூரணமாக்கும் என்று சொல்வார்கள். உண்மையிலேயே வாசிப்பு என்பது ஒரு மனிதனை பூரணமாக்க கூடிய சக்தி வாய்ந்த ஒன்றுதான். தினமும் நீங்கள் உங்கள் வாழ்வை மாற்றக்கூடிய Self Help புத்தகங்களை நீங்கள் வாசித்துக் கொண்டு வருகின்ற போது உங்களுடைய ஆளுமையானது மின்னல் வேகத்தில் அதிகரிக்கும். அந்தளவுக்கு புத்தகங்கள் வாசிப்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது.
ஒவ்வொரு நாளுமே நீங்கள் புத்தகங்களை வாசித்துக்கொண்டு வருவது உங்களுக்கு பல விடயங்களை கற்றுத்தரும். மிகப்பெரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கற்றுத்தராத விடயங்களை ஒரு புத்தகம் உங்களுக்கு கற்றுத்தரும்.
ஒரு புத்தகம் என்பது அந்தப் புத்தகத்தை எழுதியவரின் வாழ்நாள் அனுபவம் மற்றும் அவரின் சொந்த அறிவு, ஞானங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படுவதனால் ஒரு புத்தகம் என்பது நமக்குள் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில் உங்கள் வாழ்வை மாற்றக்கூடிய நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய, உங்கள் ஆளுமையினை விருத்தி செய்கின்ற புத்தகங்களை Top 10 Self-Help Books என்ற பதிவில் நாம் குறிப்பிட்டுள்ளோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பத்து புத்தகங்களும் மிகவும் முக்கியமான நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய மிகச்சிறந்த புத்தகங்கள் ஆகும். எனவே அப்புத்தகங்களை வாசித்து பயன்பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
LEARN FROM THE LIVES OF OTHERS
எப்போதுமே நாம் ஒரு விடயத்தை செய்கின்ற போது தனியாக அல்லாமல் அந்த விடயத்தில் தேர்ச்சி பெற்ற சிலரின் உதவியைக் கொண்டு மேற்கொள்கின்ற போது அதில் நமக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சில நேரங்களில் அதைவிட அதிகமாகவே கிடைக்கும். இவ்வாறு மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு அல்லது அவர்களின் உதவியைப்பெற்று ஒரு விடயத்தை செய்வதானது தோல்வியில் இருந்து தவிர்ந்து கொள்ள உதவும்.
நீங்கள் உங்களுடைய ஆளுமையினை அதிகரிக்க வேண்டும் என்றால், உங்களுடைய வாழ்க்கையை வெற்றிகரமான வாழ்க்கையாக மாற்றி கொள்ள வேண்டும் என்றால் ஏற்கனவே சிறந்த ஆளுமைகளாக இருந்த, இருக்கின்ற தன்னுடைய வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்களுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டு அதிலிருந்து நீங்கள் படிப்பிணை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் யாரெல்லாம் வெற்றியாளர்களாக சிறந்து விளங்குகின்றார்களோ அவர்களுடைய வாழ்க்கை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உங்கள் துறையில் சிறந்து விளங்குபவர்களின் வாழ்க்கையில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விடயங்களை உங்கள் வாழ்வில் நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு சிறந்த ஆளுமையாகவும் வெற்றியாளராகவும் வர முடியும்.
உதாரணமாக Steve Jobs, Warren Buffett, Cristiano Ronaldo போன்ற சிறந்த ஆளுமைகளின் வாழ்க்கையினை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களிடம் இருக்கின்ற சிறந்த விடயங்களை நீங்கள் உங்கள் வாழ்விலும் பயன்படுத்தி சிறந்த ஆளுமைகளாக வர முடியும்.
BELIEVE YOURSELF
உங்களால் எந்த செயலையும் வெற்றிகரமாக செய்ய முடியும் என்று நீங்கள் மனதார நம்புகின்ற வரை உங்களால் எந்த விடயத்தையும் செய்ய முடியாது. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் இந்த உலகம் உங்களை ஒருபோதும் நம்பாது. நீங்கள் நினைக்கின்ற காரியம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதனை என்னால் செய்ய முடியும் என்று உறுதியாக நம்பி நீங்கள் அதனை மேற்கொள்ளும் போது நிச்சயமாக அது உங்கள் வசப்படும்.
தன்னால் எதுவும் முடியும் என்று துணிந்து செயற்படுபவனை எத்தகைய தோல்விகளாலும், மனிதர்களாலும் தடுக்க முடியாது. ஏனெனில் அவனது வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. முயற்சியாளன் ஒருபோதும் தன் மீதான நம்பிக்கையை இழப்பதில்லை.
வாழ்வில் வெற்றியடைந்து சிகரங்கள் தொட வேண்டுமென நினைப்பவன் ஒருபோதும் தன் மீதான நம்பிக்கையை இழப்பதில்லை. முழு உலகமுமே அவன் முன் வந்து இதை உன்னால் செய்ய முடியாது என்றாலும் என்னால் முடியும் என்று முயற்சி செய்யக்கூடியவன் அவன். ஒருபோதும் தன் தன்னம்பிக்கையை அவன் விடமாட்டான்.
நீங்கள் ஒரு முயற்சியில் ஈடுபட்டு அதில் எத்தகைய தோல்விகளை நீங்கள் கண்டாலும் பரவாயில்லை. உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் இதனை உன்னால் செய்ய முடியாது, அதற்கு நீ தகுதி இல்லை என்று உங்களை இழிவாகப் மட்டம் தட்டிப்பேசினாலும் அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டேயிருங்கள். நிச்சயம் ஒருநாள் உங்கள் மீது நீங்கள் கொண்டிருந்த அசாத்தியமான நம்பிக்கை வெற்றியைக் கொண்டுவரும்.
நீங்கள் Self Confidence அதிகம் உள்ளவராக இருப்பது உங்களுடைய ஆளுமையை இன்னும் அதிகரிக்க செய்கின்ற விடயமாகும். பௌதீக ரீதியாக நீங்கள் பலம் உள்ளவராக இருந்தாலும் சரி அல்லது சற்று குறைந்தவராக இருந்தாலும் சரி. நீங்கள் மனரீதியாக தைரியம் உள்ளவராக, உங்கள் மீது நம்பிக்கை வைப்பவராக இருந்தால் உங்களுடைய Personality அதிகரித்து காணப்படும். இதற்கு சிறந்த உதாரணம் Alibaba நிறுவனத்தின் Jack Ma.
FINALLY
மேலே கூறப்பட்ட இந்த ஆறு வழிமுறைகளும் உங்களுடைய ஆளுமையினை அதிகரிக்க செய்கின்ற Personality Development Tips ஆகும். இவற்றை நீங்கள் உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாக பின்பற்றி வருகின்ற போது நிச்சயமாக உங்களுடைய ஆளுமையினை அதிகரிக்கச் செய்யமுடியும்.
இவை மக்கள் மத்தியில் உங்களுக்கு சிறந்த மதிப்பினை பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகவும், உங்கள் மீதான நல்ல எண்ணத்தை உருவாக்கக்கூடிய சிறந்த பழக்கவழக்கங்களாகவும் அமையும்.
ஏனெனில் நம் ஒவ்வொருவருடைய பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை வைத்தே நம்முடைய Personality தீர்மானிக்கப்படுகின்றது. எனவே நம்முடைய பழக்க வழக்கங்களையும், செயல்பாடுகளையும் நல்லவைகளாக நாம் மாற்றிக்கொள்ளும் வரை எம்முடைய Personality அதிகரிப்பது என்பது சாத்தியமாகாது.
எனவே மேலே குறிப்பிட்ட 6 விடயங்களும் நிச்சயமாக உங்களை நல்ல பழக்கங்கள் உடையவர்களாக மாற்றி உங்கள் ஆளுமையினை அதிகரிக்க செய்கின்ற விடயமாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதியாகக் கூறிக்கொள்கின்றோம்.
இப்போது உங்களுக்கு How to Improve Your Personality? என்ற கேள்விக்கு மிகவும் தெளிவானதொரு பதில் கிடைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். அவ்வாறு உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்திருந்தால் இதனை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
இந்தப்பதிவு உங்களுக்கு பயனுடையதாக இருக்குமென்ற நம்பிக்கையில் மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம் நன்றி.