ஒரு விடயத்தை நேர்மறையாக எதிர்கொள்வதற்கும் அதனை எதிர்மறையாக எடுத்துக் கொள்வதற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. நம் வாழ்வில் நடக்கின்ற அல்லது நாம் சந்திக்கின்ற எந்தவொரு சூழ்நிலையையும் நேர்மறையாக அணுகுகின்ற போது நிச்சயமாக அதிலிருந்து நேர்மறையான விடயங்களே நம்மை வந்தடையும். மாறாக அதனை எதிர்மறையாக நாம் அணுகுகின்ற போது அதனுடைய விளைவுகள் எதிர்மறையாகவே இருக்கும்.
எனவே எந்தவொரு விடயத்தை நாம் அணுகுகின்ற போதும் நேர்மறையாகவே அணுகவேண்டும். மாறாக எதிர்மறையாக அணுகுவது கூடாத விடயமாகும். Positivity என்பது நிச்சயமாக உங்களை நீங்கள் நினைக்காத, எதிர்பார்க்காத வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்லும். அவ்வாறு Positivity இன் முக்கியத்துவத்தினை உணர்த்துகின்ற உங்களை சிந்திக்க வைக்கின்ற Inspiring Short Story ஒன்றினை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
POSITIVE VS NEGATIVE
அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் பல குடும்பங்கள் சந்தோஷமாகவும் செழிப்போடும் வாழ்ந்து வந்தனர். அந்த கிராமத்தில் செல்வம் என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளோடு புதிதாக வாடகைக்கு வீடொன்றை வாங்கி வாழ்ந்து வந்தார். இவ்வாறு சில வருடங்கள் உருண்டோடின. இந்நிலையில் அந்த ஊரில் உள்ள பலரும் செல்வத்தின் இரண்டு மகன்களைப் பற்றி பரவலாகப் பேச ஆரம்பித்தனர்.
செல்வத்தின் இளையமகன் போதைக்கு அடிமையாகி அதிகம் குடிப்பவனாகவும், வீட்டில் உள்ளவர்களை தினமும் அடிப்பது, ஏசுவது மட்டுமன்றி தன் வீட்டின் அருகில் உள்ளவர்களிடமும் தவறான முறையில் நடந்து கொண்டான். அது மட்டுமின்றி அந்த ஏரியாவில் உள்ள பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ளக் கூடியவனாகவும் இருந்தான். குறிப்பாக இரவு வேளைகளில் குடித்துவிட்டு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கலாட்டா செய்பவனாகவும் இருந்தான்.
ஆனால் செல்வத்தின் மூத்தமகன் இவற்றுக்கெல்லாம் மாறாக, மிகவும் சாந்தமாகவும், வீட்டில் உள்ளவர்களுக்கு மரியாதை கொடுப்பவனாகவும், தன் அயலவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளக்கூடியவனாகவும், பெண்களிடம் கண்ணியத்தைப் பேணக்கூடியவனாகவும் இருந்தான். அதுமட்டுமன்றி அந்த ஏரியாவில் நல்ல பெயரினை உடையவனாகவும், பலரால் விரும்ப கூடியதாகவும் இருந்தான். இவ்வாறு ஒரே வீட்டில் ஒரே தகப்பனின் பிள்ளையாகிய இவர்கள் இருவரும் எதிரும், புதிருமாக இருந்தனர். இதனால் அந்த ஏரியாவில் இவர்கள் இருவரின் மீதான பேச்சு மிகவும் பரவலாகக் காணப்பட்டது.
THE EFFECT OF NEGATIVE
இவ்வாறு ஒரே வீட்டில் உள்ள இரு பிள்ளைகளில் ஒன்று நல்லவனாகவும், இன்னொன்று கெட்டவனாகவும் இருக்கையில், ஒருநாள் அவர்கள் இருவரையும் அந்த ஊரில் உள்ள பெரியவர் ஒருவர் அழைத்து பேசினார். அதில் முதலாவதாக எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டிருக்கும் போதைபழக்கத்துக்கு அடிமையாகி பல தவறான தீய விடயங்களை செய்கின்ற தம்பியிடம் முதலில் விளக்கம் கேட்டார்.
“ஏனப்பா! உன்னுடைய அண்ணனைப் பார். அவன் எவ்வளவு நல்லவனாக இருக்கின்றான். நல்ல பண்புகளை உடைய, மற்றவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளக்கூடியவனாக இருக்கின்றான். ஆனால் நீயோ அவனுக்கு மாற்றமாக இருக்கின்றாய். அதிகமாக குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களை அடிக்கின்றாய். அத்தோடு அயலவர்களிடமும் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்கின்றாய். இதற்கு என்ன காரணம்” என்று இளையவனிடம் கேட்டார் அந்த ஊரின் பெரியவர்.
இதனை கேட்ட அவன் அந்த பெரியவரிடம், “நான் இவ்வாறு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சின்னாபின்னமாகவதற்கு கரணம் வேறு யாருமில்லை. என் அப்பா தான். எனக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடிப்பவராக இருந்தார். ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வீட்டிலுள்ளவர்களை போட்டு அடிப்பார். என்னையும் உட்பட. அதுமட்டுமன்றி அயலவர்களிடமும் தவறான முறையில் நடந்து கொண்டார். பெண்களிடமும் மோசமாக நடந்துகொண்டார். என் சிறுவயது முதல் அப்பாவை இந்த நிலையில் பார்த்ததனால் அவரின் பழக்கம் என்னை தொற்றிக்கொண்டது” என்று கூறினான்.
THE POWER OF POSITIVITY
இளையவனின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெரியவர் மூத்தவனை அழைத்து அவரிடம் கேட்டார், “உன் தம்பியோ! மிக மோசமானவனாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானவனாக இருக்கிறான். ஆனால் நீயோ! அப்படி இல்லை. ஏன் நீ அவனை போன்றல்லாது மிகவும் நல்ல பையனாக இருப்பதற்கு எது காரணம்”? என்று மூத்தவனிடம் கேட்டார் பெரியவர்.
“நான் எந்த கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் மற்றவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வதற்கு காரணம் என் தந்தை தான். ஏனென்றால் அவர் தன்னுடைய சிறுவயதிலிருந்தே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடிப்பவராக இருந்தார். அத்தோடு குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களையும் அடிப்பது, துன்புறுத்துவது என்று மிக மோசமாக நடந்து கொண்டார். அத்தோடு அயலவர்களிடமும் தவறான முறையில் நடந்து கொண்டார். இவ்வாறு என் தந்தையினுடைய இந்த பழக்கவழக்கங்கள் தான் இதுபோன்ற ஒரு மோசமான மனிதனாக நான் வரக்கூடாது என்ற எண்ணத்தை எனக்குள் தோன்ற வைத்தது” என்றான் மூத்தவன்.
மூத்தவன் சொல்வதைக் கேட்ட பெரியவர் அப்படியே திகைத்துப் போனார். தன் தந்தையுடைய கெட்ட பழக்கங்கள் தான் என்னை கெட்டவனாக மாற்றியது என்று கூறும் இளையவன். அதேசமயம் என் தந்தையினுடைய கெட்ட பழக்கம் தான் இது போன்றதொரு கெட்டவனாக நான் வரக்கூடாது என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்தது என்று கூறும் மூத்தவன் என இரு துருவங்களை பார்த்த அந்த ஊரின் பெரியவர் அசந்து போனார்.
FINALLY
எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதனை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்கின்றோம் என்பதை பொறுத்துதான் அதன் விளைவானது இடம்பெறுகின்றது. இந்தக் கதையிலும் அப்படித்தான். தன் தந்தை கெட்டவனாக இருப்பதை பார்த்து வளர்ந்த இளையவன் அவரை காரணம் காட்டி அவனும் கெட்டுப் போகின்றான். இதனால் அவனுடைய தந்தையைப் போன்றே சமூகத்தில் கெட்ட பெயரினை சம்பாதிதத்தவனாக மாறுகின்றான்.
ஆனால் மூத்த பிள்ளையோ தன் தந்தை இவ்வாறு கெட்டவனாக இருக்கின்றாரே, சமூகத்தில் மிகவும் மோசமான பெயரினை சம்பாதித்து இருக்கின்றாரே என்பதை பார்த்து இது போன்று நான் வரக்கூடாது என்று தன்னைத் திருத்திக் கொக்கின்றான். எனவே எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதனை நேர்மறையாக எடுத்துக்கொள்கின்ற போது அதன் விளைவானது நிச்சயமாக நேர்மறையானதாகவே இருக்கும். இதுவே Power of Positivity ஆகும்.
எனவே இந்த குட்டிக்கதை மூலம் நேர்மறையாக சிந்திப்பது மற்றும் அதன்படி முக்கியத்துவத்தினை உணர்த்திருப்பீர்கள். எந்தவொரு விடயத்தையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு தீங்கானதாக இருந்தாலும் சரியே. அவ்வாறு நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் போது அதன் விளைவும் நல்லதாகவே அமையும். நிச்சயமாக இந்த குட்டிக்கதை Inspiring Short Story ஆக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம். நன்றி.