Do These Habits Everyday For Your Life to Change | 5 Life-Changing Thoughts

 

நம்முடைய ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் நினைப்பது இன்று என்னுடைய நாள் மிகச் சிறப்பாக அமைய வேண்டும், இன்று நான் நினைத்த விடயங்களையெல்லாம் வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று. ஆனால் எல்லோராலும் அது முடிவதில்லை. நம்முடைய இலக்குகளை அடைந்து வாழ்வில் வெற்றியாளர்களாக வரவேண்டும் என்றால் நம்முடைய ஒவ்வொரு நாளும் மிகச்சிறப்பாக அமைய வேண்டும். அப்போதுதான் நம்முடைய இலக்கை நோக்கி செல்ல முடியும்.

Do These Habits Everyday For Your Life to Change

இப்போது உங்கள் எல்லோருக்கும் ஒரு வினா இருக்கும், how to change my life for the better? இதற்கான பதில், உங்களுடைய நாளாந்த பழக்கவழக்கங்கள் அல்லது எண்ணங்கள் சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். சிறந்த பழக்கவழக்கங்கள் மற்றும் எண்ணங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையினை மிகச்சிறந்த வாழ்க்கையாக மாற்றிக்கொள்ள முடியும். அவ்வாறு உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய, ஒவ்வொரு நாளும் பின்பற்றக்கூடிய 5 Life Changing Thoughts பற்றி இந்தப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

1. I AM THE BEST

ஒவ்வொரு நாளை நீங்கள் தொடங்குகின்ற போதும் “I am the Best” என்ற இந்த வார்த்தையை உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இவ்வாறு இந்த வார்த்தையை நீங்கள் சொல்லுவது உங்களுக்குள் ஒருவகை மன தைரியத்தை ஏற்படுத்தும். அதேபோல் ஒருபோதும் உங்களை நீங்கள் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு கொள்ளாதீர்கள். இவ்வாறு அடுத்தவர்களோடு உங்களை நீங்கள் ஒப்பிடுகின்றபோது உங்கள் மீதான நம்பிக்கை உங்களுக்குள் குறைந்து போய்விடும். 


உங்கள் இலக்கை அடைவதற்கான உங்களுடைய அணுகுமுறையில் நீங்கள்தான் சிறந்தவர். ஆதலால் மற்றவர்களுடன் உங்களை நீங்கள் ஒப்பிட்டுப் கொள்ளாதீர்கள். எனவே உங்களுடைய ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் “I am the Best” என்ற இந்த வாசகத்தை உங்களுடைய இதயமும், மூளையும் உணரக்கூடிய வகையில் கூறியவாறே உங்கள் காலை பொழுதை ஆரம்பியுங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வருகின்ற போது, நிச்சயமாக மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் வாழ்வில் நீங்கள் காண்பீர்கள்.

2. I CAN DO IT 

உங்களிடம் ஏதாவது இலக்குகள் இருந்தால், உதாரணமாக அடுத்த 10 வருடத்தில் நான் ஒரு மில்லியனராக மாற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்குள் இருவகையான உள்ளுணர்வுகள் தோன்றும். ஒன்று “உங்களால் அந்த இலக்கினை அடைய முடியாது, நீங்கள் அந்த இலக்கினை அடைவதற்கு தகுதியற்றவர்கள், அதற்கு தேவையான முதலீடு உங்களிடம் இல்லை, உங்களை பார்த்தல் அந்த இலக்கினை அடையக்கூடியவர் போன்று தெரியவில்லை” என்று பல்வேறு வகையான NEGATIVE THOUGHTS உங்களுக்குள் எழும்.


எது எப்படியிருந்தாலும் இரண்டாவதாக ஒரு குரல் உங்களிடம் சொல்லும், “உங்கள் இலக்கினை அடைவதற்கு என்ன தேவையோ அதற்கான அனைத்து தகுதியும் உங்களிடம் இருக்கின்றது என்று”. இந்த குரலின் அறிவுரையைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். இது தாமதமானதாகவும், சிறிய விடயமாகவும் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த அறிவுரையை நீங்கள் பற்றி பிடித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் இந்த அறிவுரையை ஞாபகப்படுத்திக்கொண்டே இருங்கள். நிச்சயமாக உங்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.


இரண்டாவது குரலுக்கே நீங்கள் கட்டுப்பட வேண்டும். ஏனெனில் அது POSITIVE THOUGHTS ஆகும். அவ்வாறு நீங்கள் உங்களுடைய POSITIVE THOUGHTS க்கு கட்டுப்படும் போது உங்கள் இலக்கினை அடைந்து கொல்வதற்கான நடவடிக்கைகள், அதற்கான விடாமுயற்சி, மற்றும் உங்களின் பயம் ஆகியவற்றை உங்களுடைய POSITIVE THOUGHTS பார்த்துக்கொள்ளும்.

3. GOD IS ALWAYS WITH ME

எம்முடைய இறைவன் அனைத்து விடயங்களையும் செய்வதற்கு சக்தியுடையவர். முழு உலகையும் படைத்து பரிபாலித்து கொண்டிருக்கின்ற இறைவனால் செய்ய முடியாதது எதுவுமே கிடையாது. உங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். உங்களால் முடியாததை உங்களுக்காக இறைவன் செய்து தருவார். உங்கள் நண்பர்கள் உங்களுடைய இலக்கினை கேட்டு நக்கலாக சிரிக்கின்றனர். உங்கள் பெற்றோர்களோ அதனை நம்ப மறுக்கின்றனர். ஆனால் நம்முடைய இறைவன் அவ்வாறு கிடையாது. 


யார் எம்மைப் பார்த்து சிரித்தாலும், யார் நம்மை நம்பாமல் போனாலும், கடவுள் எப்போதும் நம்முடனேயே இருப்பார். நமக்கு எது தேவையோ அதனை செய்து தரக்கூடிய வல்லமையும் அவரிடம் மட்டுமே உள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இறைவனிடம் கையேந்துவதுதான். எப்போதெல்லாம் நாம் பொறுமை இழக்கின்றோமோ, அப்போதெல்லாம் இறைவன் நம் விடயத்தில், நாம் தவறு செய்கின்ற போது எவ்வாறு பொறுமை காத்துள்ளார் என்பதை ஞாபகப்படுத்துங்கள். நான் தனியாக இல்லை. என்னோடு எப்போதும் இறைவன் இருக்கின்றான் என்று நம்புங்கள்.

4. I AM A WINNER

நீங்கள் எப்போதும் நம்ப வேண்டும், என்னால் வெற்றி பெற முடியும் என்று. நீங்கள் செய்கின்ற எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் பிறந்தது வெற்றியாளர்களாக வருவதற்கே அன்றி தோற்பதற்கு கிடையாது. என்னுடைய வாழ்வில் தோல்வி என்பதற்கு இடமே கிடையாது என்று நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்வில் வெற்றியடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். அவ்வாறு படிக்கும்போது பல வெற்றிக்கான ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள்.


நாம் செய்கின்ற முயற்சியில் சிறுது பிழைகள் ஏற்படலாம். ஆனால் அது தோல்வி கிடையாது. அவை நம் வெற்றிக்கான முதற்படிகள். எப்போதும் தன்னம்பிக்கையோடு இருங்கள். நான் ஒரு வெற்றியாளனாகவே மரணிப்பேனேயன்றி தோல்வியாளனாக வருவதில் எனக்கு எந்தவித உடன்பாடுமில்லை என்று உங்களுக்குள் ஆணையிடுங்கள். நிச்சயம் உங்களால் வெற்றிபெற முடியும். ஒருபோதும் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் விட்டுவிடாதீர்கள். அவைதான் வெற்றிக்கான சூத்திரங்களாகும்.

5. TODAY IS MY DAY 

நேற்று என்ன மாதிரியான நிகழ்வுகள் நடந்து இருந்தாலும் அதைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அது கெட்டதாகவே இருந்தாலும் சரி. இன்றைய நாள் இனிய நாள். உங்கள் முயற்சிகளை தொடங்குவதற்கான ஒரு புதிய நாள். எனவே இன்றைய நாளை உங்களுடைய நாளாக ஏற்றுக் கொண்டு அந்த நாளினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விடியலும் உங்களுடையது. எனவே நேற்றையதைப்பற்றி கவலைப்படாமல் முன்னேறிச்செல்லுங்கள்.


உங்களின் கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்து உங்களுடைய நேரங்களை வீணாக்கிக் கொள்ளாமல், உங்களுடைய எதிர்காலத்தை நினைத்து அதனை நோக்கிப் பயணியுங்கள். உண்மையிலேயே உங்களுடைய எதிர்காலம் மிக அழகான இருக்கும். அத்தகைய உங்கள் அழகான எதிர்காலத்தை பார்ப்பதற்காக வேண்டி இன்றைய நாளை எவ்வளவு சிறப்பாக  பயன்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சிறப்பாக பயன்படுத்துங்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் மலர்ந்த முகத்துடன் எழுந்து இன்றைய நாள் என்னுடையது (TODAY IS MY DAY) என்று கூறிப் பாருங்கள். பெரும் மாற்றத்தை உணர்வீர்கள்.

FINALLY 

Do These Habits Everyday For Your Life to Change | 5 Life-Changing Thoughts

மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து விடயங்களையும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வில் நீங்கள் பின்பற்றி வருகின்ற போது நிச்சயமாக உங்கள் வாழ்க்கையானது தோல்வியிலிருந்து வெற்றியை நோக்கிச் செல்லும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்த 5 Life Changing Thoughts உம் உங்கள் வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே முழுமையான நம்பிக்கையுடன் இதனை கடைபிடியுங்கள். நிச்சயம் மிகப் பெரும் மாற்றத்தினை உணர்வீர்கள். 


இந்தப் பதிவு உங்களுக்கு பயனுடையதாக இருக்குமென்று நம்புகின்றோம். பிடித்திருந்தால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இதே போன்றே உங்களை மோடிவேட் பண்ணுகின்ற பல்வேறு வித மான Motivational and Inspiring பதிவுகளுக்கு TAMIL MOTIVATIONS வலைத்தள பக்கத்தை பின்தொருங்கள். மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம். நன்றி.

Post a Comment

Previous Post Next Post