உலகில் எல்லா மனிதர்களுமே ஏதாவது ஒரு விடயத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம். நான் ஒரு டாக்டராக வரவேண்டும், நான் ஒரு இன்ஜினியராக வரவேண்டும், நான் ஒரு சினிமா இயக்குனராக வரவேண்டும் என்று ஒவ்வொருவரும் ஓர் இலக்கினை வைத்துக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் எல்லோராலும் அத்தகைய இலக்கினை அடைந்து கொள்ள முடிகின்றதா என்றால் நிச்சயமாக கிடையாது.
இந்த உலகைப் பொறுத்தவரையில் 2 வகையான மக்கள் பிரிவினரே இருக்கின்றனர். ஒன்று வெற்றியாளர்கள். இவர்கள் எப்போதுமே வெற்றி அடைய நினைப்பவர்கள். சில சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்தாலும், அத்தகைய தோல்வியிலிருந்து படிப்பினை பெற்று வெற்றியை நோக்கி செல்கின்றனர். மற்றொரு பிரிவினர் தோல்வியாளர்கள். இவர்கள் தொடர்ச்சியாக தோற்றுக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் தன்னுடைய தோல்வியிலிருந்து வெற்றியை நோக்கி செல்பவர்களாகவும் இல்லை. இதற்கு காரணம் Successful People Habits பற்றி அவர்கள் அறிந்திருக்காததாகும்..
இவ்வாறு பல காரணங்களால் நாம் நினைக்கின்ற வெற்றியினை நம்மால் அடைய முடியவில்லை. அதனடிப்படையில் நீங்கள் அடைய நினைக்கின்ற வெற்றியை அடைந்து கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் பின்பற்றவேண்டிய 10 Important Habits for Success in Your Daily Life பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். நிச்சயமாக இந்த 10 விடயங்களை நீங்கள் உங்கள் வாழ்வில் பின்பற்றி வருகின்ற போது நீங்கள் நினைக்கின்ற இலக்கினை அடைந்து வெற்றியாளராக உருவாக இவை வழிவகுக்கும்.
1. SELF-CONFIDENCE
ஒவ்வொரு மனிதனுடைய வெற்றியிலும் தன்னம்பிக்கை என்பது மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றது. என் மீது நான் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால், எவ்வாறு என்னை மற்றவர்கள் நம்புவார்கள்? எவ்வாறு நான் நினைக்கின்ற விடயத்தில் என்னால் வெற்றி பெறமுடியும்? உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அப்போதுதான் இந்த உலகம் உங்களை நம்பும்.
உங்கள் மீது நம்பிக்கை வைப்பது உங்களால் இயலாத காரியமாக இருந்தால் நிச்சயமாக உங்களால் வெற்றியை அடைவது என்பது இயலாத காரியமாகவே இருக்கும். எனவே முடிந்தவரை உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீதான உங்களுடைய தன்னம்பிக்கைதான் உங்களை ஒரு மிகப்பெரிய வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்லும்.
என்னால் முடியும்! என்னால் எதுவும் முடியும்! என்கின்ற தன்னம்பிக்கையுள்ள மனிதர்களே வரலாற்றில் சாதனையாளர்களாக மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனர். தன்னம்பிக்கை என்பது வெற்றி அடைவதற்கு தேவையான மிகப்பிரதானமான காரணியாகும். எனவே நீங்களும் உங்கள் மீதான தன்னம்பிக்கையை அதிகரித்து நீங்கள் அடைய எண்ணுகின்ற இலக்கினை அடைந்து வெற்றியாளராக உருவாகுங்கள்.
2. ALWAYS POSITIVE
உலகில் அதிக சக்தி வாய்ந்தது நம்முடைய எண்ணங்கள் தான். நம்முடைய எண்ணங்கள் எவ்வாறு இருக்கின்றதோ அதைப்பொருத்துதான் நம்முடைய வாழ்வும் அமையும். எனவே உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் உங்களுடைய எண்ணங்களை எப்பொழுதுமே நேர்மறையான சிந்தனையாக வைத்துக் கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்களை அதிகம் என்னும்போது நிச்சயமாக உங்களுடைய வாழ்வில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.
உங்களுடைய இலக்கினை அடைந்து மிகப்பெரும் வெற்றியாளராக வரவேண்டும் என்றால் அந்த இலக்கு சம்பந்தமான உங்களுடைய அனைத்து வகையான எண்ணங்களையும் நேர்மையானதாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாது எதிர்மறையாக சிந்திக்கின்ற போது நிச்சயமாக உங்கள் இலக்கிலிருந்து நீங்கள் தடுமாறக்கூடும். எனவே உங்கள் வெற்றியை நோக்கிய உங்கள் பயணத்தில் நேர்மறையான எண்ணங்களுடனேயே பயணியுங்கள். நேர்மறையான எண்ணங்கள் நிச்சயம் உங்களை மிகப்பெரும் வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்லும்.
3. BE EXCITEMENT
நீங்கள் எந்த வேலை செய்வதாக இருந்தாலும் அந்த வேலையில் முடிந்தளவு உற்சாகமாக இருங்கள். அவ்வாறு நீங்கள் செய்கின்ற வேலையில் உற்சாகத்தை அதிகப்படுத்துகின்றபோது அந்த வேலையின் மீதான உங்களுடைய கவனம் அதிகரிக்கும். அதேசமயம் அந்த வேலை மீதான உங்கள் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இவ்வாறு உற்சாகமாக இருப்பதன் மூலம் நீங்கள் நினைக்கின்ற வேலையை மிகவும் வினைத்திறனாகவும், எளிதாகவும் முடிக்க முடியம்.
இன்று தங்களது துறைகளில் வெற்றிபெற்ற எந்தவொரு மனிதரை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் தான் செய்கின்ற வேலையில் மிக உற்சாகமாக காணப்படுபவராக இருப்பர். ஒருபோதும் தான் செய்கின்ற வேலையில் இருந்து அவர்கள் சோர்ந்து விடமாட்டார்கள். இவ்வாறு உற்சாகமாக இருப்பதன் மூலம் அந்த வேலை மீதான அவர்களின் காதல் அதிகரிக்கின்றது. இதனால் அவர்களால் அந்த துறையில் வெற்றிபெற முடிகின்றது. எனவே நீங்களும் உற்சாகமுள்ள ஒருவராக மாறுவதன் மூலம் வெற்றியாளராகுங்கள்.
4. SELF-DISCIPLINE
உங்கள் ஒவ்வொருவருடைய வெற்றிக்கும் சுய ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. ஆரம்பகட்டத்தில் பல வெற்றிகளை பெற்று சுய ஒழுக்கம் இல்லாததன் காரணமாக பிற்காலத்தில் தோல்வியின் அடித்தளத்திற்கு சென்று நிரந்தர தோல்வியாளனாக மாறியவர்கள் பலர் உள்ளனர். எனவே சுய ஒழுக்கம் என்பது உங்களுடைய வெற்றியில் மிகப்பெரும் பங்கு வகிக்கக்கூடிய ஒன்றாகும். சுய ஒழுக்கம் உங்களை சமூகத்தில் மிகச்சிறந்த ஆளுமையாக காட்டுகின்ற விடயமாகும்.
சுய ஒழுக்கம் என்பது வெறுமனே இடத்திற்கு தகுந்தார் போல் நடப்பது மட்டுமல்ல. தான் செய்ய இருக்கின்ற வேலைகளைச் சரியாக, செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய அடிப்படையில் செய்து முடிப்பதாகும். உங்களோடு சேர்ந்து வேலை செய்யக் கூடியவர்களை மதித்து நடக்க வேண்டும். நீங்கள் செய்கின்ற வேலையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனை நேசிக்க வேண்டும். எனவே சுய ஒழுக்கம் உள்ள தன்னம்பிக்கையுடன், நேர்மறையாக சிந்திக்ககூடியவராக நீங்கள் இருக்கும்போது நிச்சயமாக உங்களால் வெற்றியினை அடைந்துகொள்ள முடியும்.
5. SELF DEVELOPMENT
இன்று ஒவ்வொரு மனிதனும் கவனம் செலுத்தக்கூடிய விடயம் யாதெனில், தன்னுடைய சுயத்தை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாகும். உங்களுடைய திறமைகளை கண்டறிந்து அத்திறமைகளை வளர்ப்பதற்கான ஆற்றல்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உங்கள் சுயத்தை எவ்வாறெல்லாம் அதிகரிக்க வேண்டுமோ அந்த வகையில் உங்கள் சுய முன்னேற்றத்துக்கான முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
சுய முன்னேற்றம் மற்றும் நிதி சார்ந்த புத்தகங்களை அதிகம் படித்தல், சுய முன்னேற்றத்துக்கான செமினார் போன்றவற்றில் கலந்து கொள்ளுதல், சுயமுன்னேற்றத்தினை அதிகரிக்க செய்கின்ற திரைப்படங்களைப் பார்வையிடுதல், மற்றும் வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்வது போன்ற பல்வேறு வகையில் உங்கள் சுய முன்னேற்றத்திற்காக நீங்கள் முயற்சி செய்யலாம்.
6. SET YOUR GOALS
இன்று பலரிடம் தன்னம்பிக்கையும், நேர்மறையான சிந்தனையும், தைரியமும் இருக்கின்றது. ஆனால் அவ்வாறான எல்லோராலும் வாழ்வில் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால் சரியான திட்டவட்டமான ஓர் இலக்கு ஒன்றினை நிர்ணயித்து கொள்ளாததாகும். இலக்கின்றி பயணிக்கின்ற யாராக இருந்தாலும் அவர் எவ்வளவு தன்னம்பிக்கையுடனும், நேர்மறையான சிந்தனையுடனும், ஆளுமை உள்ளவராக இருந்தாலும் இலக்கு ஒன்று இல்லையெனில் அவரால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது.
எனவே உங்கள் வாழ்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவராக இருந்தால் திட்டவட்டமான சரியான ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். நிர்ணயத்தை இலக்கினை அடைந்து கொள்வதற்கான சரியான திட்டமிடல் ஒன்றின் மூலம் தன்னம்பிக்கையுடனும், என்னால் வெற்றிபெற முடியும் என்ற தைரியத்துடனும் தொடர்ந்து பயணியுங்கள். நிச்சயமாக உங்கள் இலக்கினை அடைந்து நீங்கள் விரும்புகின்ற துறையில் வெற்றியாளராக உங்களால் வரமுடியும்.
7. EXPERTISE IN YOUR SKILLS
நீங்கள் நினைத்த இலக்கினை அடைய வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுடைய திறமைகளையும், ஆற்றல்களையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அதில் நீங்கள் நிபுணத்துவம் பெறவேண்டும். ஒரு விடயத்தில் நாம் நிபுணத்துவம் பெறுகின்ற போதுதான் நிச்சயமாக அதில் உள்ள எல்லா சிக்கல்களும், பிரச்சினைகளும் மற்றும் அதிலுள்ள வாய்ப்புக்களும் நமக்கு தெரியவரும்.
உங்கள் இலக்கினை அடைந்து வெற்றி பெறுவதற்கு தேவையான திறமைகளையும், ஆற்றல்களையும் கண்டறிந்து அதில் நிபுணத்துவம் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதில் சிறப்புத் தேர்ச்சி அடைந்து நிபுணத்துவம் பெறுகின்ற போது மிக இலகுவாக வெற்றியை அடைந்து கொள்ள முடியும். எனவே உங்கள் துறையில் நீங்கள் நிபுணத்துவம் உள்ளவராக மாற வேண்டும். அப்போதுதான் உங்களால் மிகப்பெரும் வெற்றியை நிலைநாட்ட முடியும்.
8. FOCUS YOUR GOAL
இன்று பலரிடம் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் கவனயீனம் தான். எந்தவொரு விடயத்தை செய்கின்ற போதும் அதில் முழு ஈடுபாட்டோடு இல்லாமல் கவனச்சிதறல் ஏற்பட்டு அதில் தோல்வியை சந்திக்கின்றனர். இவ்வாறில்லாமல் உங்களுடைய இலக்கின் மீது முழுமையான, தீவிரமான கவனத்தை செலுத்தி இலக்கை நோக்கி பயணிக்கின்ற போது மிக விரைவில் உங்கள் இலக்குகளை அடைந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
உங்கள் கவனத்தினை சிதறாமல் வைத்திருப்பதற்கு ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் ஒருமுறை மற்றும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு முறை என்று உங்கள் இலக்குகளை உங்களுக்குள்ளேயே மீட்டுப்பாருங்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பது உங்கள் இலக்கிலிருந்து உங்களைச் சிதறவிடாமல் இலக்கு நோக்கிய பயணத்தில் மிக ஆர்வத்தோடு செல்வதற்கு உங்களுக்கு உதவி புரியும். இதுமட்டுமன்றி கவனத்தினை சிதறாமல் இருப்பதற்கானபல விடயங்கள் இருக்கின்றன அவற்றை நீங்கள் பின்பற்றி வருகின்ற போது நிச்சயமாக உங்களால் வெற்றி பெற முடியும்.
9. TAKING THE ADVANTAGE OF OPPORTUNITY
வாய்ப்புக்கள் என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் இன்று பலர் கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் தடுமாறி கொண்டிருக்கின்றனர். வாய்ப்புக்களானது எப்போதுமே நாம் எதிர்பார்க்கின்ற நேரங்களில் வருவதில்லை. பல நேரங்களில் நாம் எதிர்பார்க்காத சந்தர்ப்பங்களில்தான் வரும். அதுவும் இது வாய்ப்பு என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஒரு பிரச்சினையின் வடிவில் கூட அது வரலாம். அதனை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று பலர் நம்மிடையே புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் திறமைகளும், அவர்களுடைய புத்திசாலித்தனமும் வெற்றி பெறாததற்கு மிக முக்கியமான காரணம் வாய்ப்புகளை தவறவிட்டதாகும். இன்னும் சொல்லப்போனால் வாய்ப்புகளை நாம் தவற விட்டோம் என்பது கூட தெரியாமல் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பது. எனவே கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக .கிடைக்கின்ற சிறிய வாய்ப்புகள் கூட உங்களை மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாற்றலாம்.
10. SELF CHECK
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 9 காரணிகளையும் நிர்வகிக்கக்கூடிய திறமை இதற்கு உள்ளது. அந்தளவுக்கு சுயபரிசோதனை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். நீங்கள் காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்குவதற்கு இடையில் அன்றைய நாளில் எதனை செய்தீர்கள், எதனை சாதித்தீர்கள், எதனையெல்லாம் செய்யாமல் உங்கள் நேரத்தை வீணடித்துக்கொண்டிருந்தீர்கள் என்று நீங்கள் உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டு அதற்கான பதிலையும் நீங்கள் கூறுவது தான் சுய பரிசோதனை ஆகும்.
ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன்னர் சுயபரிசோதனையை நீங்கள் மேற்கொண்டு வரும் போது உங்களிடமுள்ள பலம், பலவீனம், நீங்கள் தொடர்ச்சியாக செய்துவருகின்ற தவறுகள் போன்றவற்றை உங்களால் இலகுவாக இனங்காண கூடியதாக இருக்கும். சுயபரிசோதனையினை ஒவ்வொரு நாளும் நீங்கள் கடைப்பிடித்து வருகின்றபோது நீங்கள் செய்கின்ற அனைத்து பிழைகளை இனங்கண்டு அவற்றை திருத்திக்கொள்ள முடிவதோடு, வெற்றியை நோக்கிய உங்களுடைய பயணத்தையும் மிக இலகுவானதாக்கிவிடும்.
FINALLY
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 10 பழக்கவழக்கங்களும் வாழ்வில் வெற்றி பெற்ற Successful People Habits ஆகும். இவற்றை நீங்கள் பின்பற்றி வருகின்ற போது நிச்சயமாக உங்களாலும் வெற்றியாளனாக உருவாக முடியும். அதற்கு நீங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பத்து விடயங்களையும் முறையாக, தொடர்ச்சியாக பின்பற்றி வர வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்வீர்களானால் நிச்சயமாக நீங்கள் ஒரு வெற்றியாளராவீர்கள்.
உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் வெற்றியாளராவதற்கு பிறந்தவர்கள். நீங்கள் ஒன்றும் இயலாதவர்கள் கிடையாது. உங்களால் முடியாதது இந்த உலகில் எதுவுமே இல்லை. எங்களால் உங்களுக்கு இந்த விடயங்களை கூறவே முடியும். நிச்சயமாக உங்கள் இலக்கை நிர்ணயித்து அதன்பால் பயணியுங்கள். நிச்சயம் நீங்கள் உங்கள் இலக்கினை வென்று சமூகத்தில் மிகப்பெரும் வெற்றியாளராக வருவீர்கள். மீண்டும் ஒரு சிறந்த பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம் நன்றி.