Robert Downey jr Inspiring Life Story in Tamil - Life of Iron Man


இன்று உலகம் முழுக்க Marvel திரைப்படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக Iron Man சீரிஸிக்கென்று பெருவாரியான ரசிகர் கூட்டம் இருக்கின்றது. அந்த வகையில் Iron Man என்ற வார்த்தையை கேட்டதுமே நம் நினைவுகளுக்கு வருவது Robert Downey jr தான். அந்தளவுக்கு Iron Man கதாப்பாத்திரத்தில் Tony Stark ஆக பின்னியிருப்பார். 

Robert Downey jr Inspiring Life Story in Tamil

Robert Downey jr, Iron Man கதாப்பாத்திரத்தில் நடித்ததிலிருந்து அவருடைய மார்க்கெட் எந்தளவுக்கு உயர்ந்தது என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. 2013 - 2015 வரையான காலப்பகுதியில் Highest Paid Actor in Hollywood என்ற மகுடத்துக்கு சொந்தக்காரர் ஆனார். இன்றுவரை உலகம் முழுக்க அதிக ரசிகர்களை கொண்ட நடிகருள் இவரும் ஒருவர்.


இத்தகைய இடத்தினை அடைய Robert Downey jr தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையில் எவ்வாறான அவமானங்களையும், கஷ்டங்களையும் சந்தித்து வாழ்வில் வெற்றி பெற்றார் என்பதனை Robert Downey jr Inspiring Life Story in Tamil என்ற பதிவில் பார்க்க இருக்கின்றோம். சரி வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

BORN OF ROBERT DOWNEY JR 

1965 இல் ஏப்ரல் 4 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் Robert Downey Senior மற்றும் Elsie Ford தம்பதிக்கு இரண்டாவது பிள்ளையாக பிறக்கின்றார். அவர் பிறக்கும்போதே சினிமா பின்புலத்தில்தான் பிறக்கின்றார். அவரது அப்பா திரைப்படங்களின் இயக்குனராகவும், அம்மா திரைப்படங்களில் நடிப்பவராகவும் இருக்கின்றனர். இதுவே Robert Downey jr Family ஆகும்.


இவ்வாறு பிறக்கும் போதே சினிமா பின்புலத்தில் பிறந்ததினால் தன்னுடைய ஐந்தாவது வயதிலேயே தன்னுடைய அப்பா இயக்கிய Pound என்ற திரைப்படத்தில் 5 வயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கின்றது. இதுவே Robert Downey jr First Movie ஆகும். இவ்வாறு தன்னுடைய சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு வருகின்றது. அதன் காரணமாக அமெரிக்காவில் பேசப்படும் குழந்தை நட்சத்திரமாக வலம் வருகின்றார். 

EARLY LIFE OF ROBERT DOWNEY JR

என்னதான் சிறுவயது முதல் இருந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவரால் கல்வியின் மீதான முழுமையான ஈடுபாட்டினை காட்ட முடியவில்லை. அதற்கு காரணம் சிறுவயதில் இருந்தே போதைப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தது. இதனால் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்டார் Robert Downey jr.


தனது அப்பா போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் இவரும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாவது இலகுவாக இருந்ததது. என்னதான் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வந்தார் Robert Downey jr. அவ்வாறு அவர் நடித்த Less Than Zero (1987) என்ற திரைப்படம் அதுவரை காலமும் இல்லாத அங்கீகாரத்தையும், புகழையும் அவருக்கு பெற்றுகொடுத்தது.


இத்திரைப்படம் மூலம் சிறந்த நடிகராக அமெரிக்கா முழுவதும் அறியப்பட்டார். இத்திரைப்படத்தின் கதையினை பொறுத்தவரையில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வருகின்றான் என்பதுதான். இது அவருடைய நிஜவாழ்க்கையிலும் நடந்ததால் அந்த கதாப்பாத்திரமாக நடிக்காமல் வாழ முடிந்ததாக பின்னாளில் நிகழ்வொன்றில் Robert Downey jr கூறியிருந்தார்.


இவ்வாறு சினிமாவில் மற்றுமொரு ஏறுமுகமாக சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு Robert Downey jr க்கு கிடைக்கின்றது. தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய Robert Downey jr, Charlie Chaplin ஆகவே வாழ்ந்த்திருப்பார். சார்லி சாப்ளினுடைய நடை, உடை, பாவணை என அனைத்திலும் பின்னியிருப்பார். இதற்காக மிகச்சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஆஸ்கார் விருதுக்காகவும் Nominate செய்யப்பட்டார். 

BIG STRUGGLE WITH DRUG ADDICTION

இவ்வாறு சினிமாவில் சிறந்த திரைப்படங்களை தருகின்ற சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தயில் புகழ்பெற்று வந்த நிலையில் அவரது வாழ்வின் மிகப்பெரும் சரிவாக அவரது போதைப்பழக்கம் அமைகின்றது. அதிகமாக ஹெரோயின், கொக்கைன் ,மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகியதன் காரணமாக பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றார். இதற்கிடையில் Deborah Falconer ​என்ற பெண்ணை Dating செய்து அவரை தன் காதல் மனைவியாக திருமணமும் செய்கின்றார். 


சினிமாவில் சிறந்த நடிகராக புகழ்பெற்று கொண்டிருக்கும் வேளையில் அதிகரித்த போதைப்பழக்கம் காரணமாக படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே சுயநினைவை இழந்து மயங்கி விழுகின்றார். படங்களின் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லாமல் படத்தினுடைய செலவினையும், படங்களின் ரிலீஸ் தள்ளிபோவதற்கும் காரணமாக அமைகின்றார்.


இதனால் சினிமாவிலிருந்து சற்று ஒதுக்கப்படுகின்றார். சினிமா விமர்சகர்கள் எல்லோரும் மிகவும் கேவலமாக சித்தரித்து கட்டுரைகளை எழுதி Robert Downey jr ஐ அவமானப்படுத்துகின்றனர். அத்தோடு அவரோடு இருந்த பல நண்பர்களும், உறவினர்களும் அவரை விட்டு ஒதுக்குகின்றனர்.


அதுமட்டுமின்றி போதையின் காரணமாக இரவு தூங்குவதற்கு தன்னுடைய வீட்டில் தூங்காமல் பக்கத்து வீட்டில் சென்று தூங்குதல், தன்னுடைய காரை மற்றவர்களின் காரில் சென்று முட்டுதல் போன்ற வேறுசில தவறுகளையும் செய்கின்றார். இந்நிலையில் 1999 இல் ஹோட்டல் ஒன்றில் வைத்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களான ஹெரோயின் மற்றும் கொக்கைன் வைத்திருந்ததற்காக பொலிஸாரினால் கைது செய்யப்படுகின்றார்.


அதன் பின்னர் சிறைக்கும் செல்கின்றார். அத்தோடு போதை பழக்கத்திலிருந்து மீண்டுவருவதற்க்காக மறுவாழ்வு மையத்துக்கும் அனுப்பிவைக்கபடுகின்றார். இவ்வாறு 2003 வரை மிக மோஷமானதாக செல்கின்றது. இந்த சூழ்நிலையில் அவரது காதல் மனைவியும் அவரைவிட்டு பிரிந்துவிடுகின்றார். 

SECOND INNINGS OF ROBERT DOWNEY JR

இவ்வாறு போதைக்கு அடிமையாகி மிகமோசமாக சென்று கொண்டிருந்த Robert Downey jr இன் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பாக நீதிமன்றத்தில் வைத்து நீதிபதியினால் விடுதலை செய்யப்படுகின்றார். இந்த விடுதலைக்குப் பின்னர் தான் ஏதாவது சாதிக்க வேண்டும். என்னை விட்டு பிரிந்தவர்களுக்கு நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்து வாய்ப்புகளை தேடுகின்றார். ஆனால் அவருக்கான வாய்ப்புக்கள் எங்குமே கிடைக்கவில்லை. அவருக்கு உதவி செய்யவும் யாரும் முன்வரவில்லை. அவர் சிறந்த நடிகராக இருந்தபோது அவரின் ஆடம்பரத்துக்காக இருந்தவர்கள் எவரும் இப்போது அவருடன் இல்லை. 


இந்நிலையில் ஒரு சில நண்பர்களின் உதவியினால் சில வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கின்றது. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சில திரைப்படங்களில் நடித்தும் விடுகின்றார். அத்திரைப்படங்கள் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகின்றது. இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு Susan Downey (Robert Downey jr Second wife) என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணமும் செய்கின்றார். இவ்வாறு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்குகின்றார் Robert Downey jr.


இவ்வாறு சாதாரணமாக தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய Robert Downey jr இன் வாழ்க்கையில் மிகப்பெரும் பொக்கிசமாக, அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையினையும் மாற்றுகின்ற புதையலாக Marvel நிறுவனத்தினுடைய Iron Man திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு Robert Downey jr க்கு கிடைக்கின்றது. அதுவரை தான் சந்தித்த அவமானங்கள், தோல்விகள் மற்றும் புறக்கணிப்புக்கள் எல்லாவற்றுக்கும் தீனிபோடும் விதமாக அந்த வாய்ப்பு இருந்தது.

MARVEL'S IRON MAN SERIES

Robert Downey jr Biography | Robert Downey jr Inspiring Life Story in Tamil

2007 ஆம் ஆண்டு Marvel நிறுவனமானது Iron Man திரைப்படத்தை எடுப்பதற்கு முடிவுசெய்து அதில் அயன்மேன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பலரிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தது. அப்போது அந்த அயன்மேன் கதாபாத்திரத்திற்காக Robert Downey jr ஐ சிலர் பரிந்துரைக்கின்றனர். இதனால் மார்வெல் நிறுவனம் Robert Downey jr இடம் ஒப்பந்தம் செய்து அயன்மேன் கதாப்பாத்திரத்தை அவருக்கு வழங்கியது.

இவ்வாறு அயன்மேன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை மார்வெல் Robert Downey jr க்கு வழங்கியதற்கு பலரும் விமர்சனம் செய்தனர். போதைக்கு அடிமையான, சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வராத ஒருவரிடம் இத்தகைய மிகப்பெரும் கதாபாத்திரத்தை கொடுப்பது சிறந்ததொரு முடிவல்ல. மிகப்பெரும் ரிஸ்கினை மார்வெல் நிறுவனம் எடுக்கின்றது என்று விமர்சித்தனர். ஆனால் இத்தகைய அனைத்து விமர்சனங்களையும் அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் துவம்சம் செய்தார் Robert Downey jr.


அயன் மேன் திரைப்படத்தில் நடிக்கின்ற வரை சாதாரணமாக சென்று கொண்டிருந்த Robert Downey jr இன் வாழ்க்கை அத்திரைப்படத்திற்கு பிறகு முற்றிலுமாக மாறியது. அயன் மேன் திரைப்படம் வெளியாகி அதுவரை காலமும் இருந்த அனைத்து சூப்பர்ஹீரோ படங்களின் வசூலையும் முறியடித்து உலகளவில் பல கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்ற மிகச் சிறந்த திரைப்படமாக உருமாறியது. அதிலிருந்து Robert Downey jr இன் மார்க்கெட் பன்மடங்கு அதிகரித்தது.


அதுமட்டுமன்றி உலகளவில் உள்ள அவரின் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதுவரை காலமும் ஒரு போதைக்கு அடிமையான மற்றும் மோசமான கடந்த காலத்தை கொண்ட Robert Downey jr க்கு,மிகப் பெரும்  புகழையும், ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத ஸ்டார் என்கின்ற அந்தஸ்த்தையும் அயன்மேன் திரைப்படம் அவருக்குக் கொடுத்தது.

SUCCESS OF ROBERT DOWNEY JR

அதன் பின்னர் 2009 இல் Iron Man 2 , 2012 இல் The Avengers, 2013 இல் Iron Man 3 திரைப்படங்களில் நடித்தார். அதைத்தொடர்ந்து 2015 இல் Avengers age of ultron, 2016 இல் Captain America: Civil War, 2017 இல் Tom Holland உடன் சேர்ந்து The Spider Man: Homecoming திரைப்படத்தில் நடித்ததோடு 2018 இல் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் Avengers: Infinity War மற்றும் 2019 இல் Avengers: End Game ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார். 


இறுதியாக 2020 இல் Dolittle என்ற திரைப்படம் Robert Downey jr நடிப்பில் வெளியானது. இங்கு குறிப்பிட்ட அனைத்து திரைப்படங்களும் Robert Downey jr நடிப்பில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்கலாகும். அடுத்ததாக Robert Downey jr Upcoming Movies ஆக Sherlock Holmes 3, All-Star Weekend போன்ற திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றது. ஒரு காலத்தில் பலரால் ஒதுக்கப்பட்ட Robert Downey jr இன்று உலகளவில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் ஒருவராகவும், உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஹாலிவுட் நடிகராகவும் மாறியுள்ளார்.

FINALLY 

இவ்வாறு தன்னுடைய 5 வயதில் சினிமாவுக்கு வந்து தன்னுடைய தந்தையின் மூலம் சிறுவயதிலேயே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி, அதன் மூலம் தன் வாழ்வில் பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்து இன்று அதிக சம்பளம் பெரும் ஹாலிவுட்டின் ஈடுஇணையற்ற நடிகராக மாறியுள்ளார். இன்றைய Robert Downey jr Net worth $300 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். Captain Jack Sparrow என்றால் எப்படி Johnny Depp ஞாபகத்துக்கு வருவாரோ அதுபோல Iron Man என்றால் நமது ஞாபகத்துக்கு வருவது Robert Downey jr தான்.


எனவே இந்தப்பதிவினை வாசிக்கின்ற அனைவருக்கும் நாம் கூறவருவது ஒன்றுதான். இன்று உங்கள் வெற்றிக்கு தடையாக எது இருக்கின்றதோ அதனை கண்டுபிடித்து அதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இன்று நீங்கள் இருக்கும் நிலையானது நிரந்தரமல்ல.


இன்று நீங்கள் தோல்விகளில் துவண்டு கொண்டிருந்தாலும், அந்த அனைத்து தோல்விகளும் நிச்சயம் ஒருநாள் உங்களை வெற்றியின் பக்கம் சுவீகரித்து கொள்ளும். மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம். நன்றி...

Post a Comment

Previous Post Next Post