அவ்வாறு மிகப்பெரும் சக்தியாக இருக்கின்ற பணத்தினை ஒரு சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனிதர்களாலேயே தன்வசப்படுத்த முடிகின்றதே தவிர, மற்ற பெரும்பாலான மக்களால் பணத்தினை தன்வசப்படுத்துவது என்பது இயலாத காரியமாகவே இருக்கின்றது. அந்த வகையில் பணத்தை உங்கள் வசம் ஈர்ப்பதற்கான 8 விதிகளை (8 Rules for Attract More Money) இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். நிச்சயமாக இந்த பதிவு உங்கள் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம். வாருங்கள் செல்லலாம்.
1. BELIEVE YOURSELF
இந்த உலகிலேயே விலை மதிக்க முடியாத ஒன்று என்றால் அது நம்பிக்கைதான். அதிலும் குறிப்பாக உங்கள் மீது நீங்களே அளவுக்கதிகமாக வைத்திருக்கின்ற நம்பிக்கை, அதற்கு இந்த உலகில் ஈடு இணையே கிடையாது. எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சரி, அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி. உங்களால் முடியும் என்று நீங்கள் நம்புகின்ற போது நிச்சயமாக அதனை வெற்றி கொள்வது உங்களால் இயலுமாக இருக்கும்.
பணத்தினை உங்கள் வசம் ஈர்ப்பதற்கும் இது மிக முக்கியமான காரணியாக இருக்கின்றது. உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையாக இருந்தாலும் அதன் எண்ணிக்கையினைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எவ்வளவு பணமாக இருந்தாலும் அதனை என்னால் சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டாலே போதும் உங்களுக்கு தேவையான பணமானது உங்களிடத்தில் அடிபணியும்.
வெறும் வார்த்தைக்காக நாங்கள் இதைக் கூறவில்லை. நிச்சயமாக உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதனை உங்கள் மனதில் நிறுத்திக் கொண்டு, நிச்சயமாக என்னால் இந்த பணத்தினை அடைய முடியும் என்று உறுதியாக நம்பிக்கை கொண்டு பயணியுங்கள். சில மாதங்கள் கழித்தோ அல்லது சில வருடங்கள் கழித்தோ நீங்கள் நினைத்த பணம் உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்.
2. ATTRACT MONEY
இது மிகவும் முக்கியமான ஒரு விதியாகும். எப்போதும் நாம் பணத்தின் பின்னால் செல்லக்கூடாது. பணத்தினை நம்பக்கம் ஈர்க்க வேண்டும். அதாவது பணத்தை உங்கள் வசம் ஈர்ப்பதற்கான திறமைகளையும், ஆற்றல்களையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வெறுமனே Degree முடித்துவிட்டு ஏதாவதொரு வேலைக்கு செல்வதால் உங்களால் அதிகளவான பணத்தினை ஈர்க்க முடியாது. ஒப்பந்த அடிப்படையிலான மாதசம்பளத்தை மட்டுமே உங்களால் பெற முடியும்.
அவ்வாறில்லாமல் பணத்தை உங்கள் வசம் நோக்கி ஈர்க்கக்கூடிய ஆற்றல்களையும், திறமைகளையும் நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் கற்றுத் தேர்கின்ற எந்தவொரு ஆற்றலாக இருந்தாலும் நிச்சயமாக அது உங்களுக்கு பணத்தை ஈர்ப்பதற்கான கருவியாக வேலை செய்யும். இன்று உலகளவில் இருக்கின்ற எல்லா மிகப்பெரிய பணக்காரர்கள், தங்களிடம் இருக்கின்ற பணத்திற்கான ஓர் பெருமையினை வைத்திருக்கின்றனர். அப்பெருமதி அவர்களிடம் உள்ள திறமைகளும், ஆற்றலும் தான்.
உதாரணமாக போர்த்துக்கல் நாட்டின் காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் காற்பந்தில் மிகவும் திறமைசாலியாக இருப்பதனால் உலகளவில் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை பின்தொடர்கின்றனர். இதனால் அவரை நோக்கி பல விளம்பர நிறுவனங்கள் குவிகின்றன. அவ்வாறான விளம்பர பிராண்டுகளில் விளம்பரத்துக்காக நடிப்பதன் மூலம் மட்டுமே ஒவ்வொரு வருடமும் பல மில்லியன் கணக்கான டாலர்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
இதுதான் நாங்கள் இங்கே கூற வருகின்ற விடயமாகும். எனவே உங்களுக்கு எந்த விடயத்தில் ஆர்வம் அதிகமாக உள்ளதோ அத்தகைய ஆர்வமுள்ள விடயங்களில் உங்கள் திறமையையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். எந்தளவுக்கு உங்கள் திறமைகளை நீங்கள் அதிகரிக்கின்றீர்களோ அந்தளவுக்கு நீங்கள் நினைக்கின்ற பணம் உங்களைத் தேடி தானாகவே வரும்.
3. LEARN EVERY TIME
இன்று பலரால் அதிகளவான பணத்திற்கு சொந்தக்காரராக முடியாததற்கு பிரதான காரணம் இதுவாகும். நான் தேவையான அளவுக்கு படித்து விட்டேன். இது எனக்குப் போதுமானது என்று பலர் கற்பதை நிறுத்தி விடுகின்றனர். நிச்சயமாக எந்தவொரு மில்லியனரும் கற்பதை நிறுத்துவதில்லை. ஒவ்வொரு நாளுமே அவர்கள் கற்றுக் கொண்டே இருக்கின்றனர்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிகளவான பணத்தை ஈர்க்க நினைப்பவராக இருந்தால் தொடர்ந்து புதிதாக பல விடயங்களை கற்றுக் கொண்டே இருங்கள். அவ்வாறு நீங்கள் அதிகமாக கற்றுக்கொள்கின்ற போது அதிகளவான பணத்திற்கு சொந்தக்காரராவதற்கான தகுதியினை நீங்கள் வளர்த்துக் கொள்கின்றீர்கள். இன்றைய நவீன இன்டர்நெட் யுகத்தில் நீங்கள் கற்பது என்பது மிகவும் இலகுவான காரியமாகும். பெரிதாக ஒன்றும் நீங்கள் செய்ய தேவையில்லை.
Google, YouTube போன்ற தளங்களில் சென்று உங்களுக்கு என்ன தேவையாக இருந்தாலும் அதை நீங்கள் Search Box இல் தேடினாலே போதும் நீங்கள் கற்பதற்கு பல ஆயிரக்கணக்கான வலைத்தளங்கள் மற்றும் வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக How Earn Money on Blogger, How to Make Money in Online பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் Google, YouTube இல் சென்று Search பண்ணுவதன் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு உங்களுக்கு எதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டுமோ அவை அனைத்தையும் கற்றுக்கொள்வதற்கான வசதி இப்போதைய நவீன இன்டர்நெட் யுகத்தில் காணப்படுகிறது. எனவே ஒருபோதும் கற்றுக்கொள்வதில் இருந்து விலகி இருக்காதீர்கள். எனக்கு எல்லாம் தெரியும். நான் கற்றுக்கொண்டது போதும் என்று ஒருபோதும் நினைத்து விடாதீர்கள். நிச்சயமாக கற்றுக்கொண்டே இருப்பது உங்களுக்கு புதுபுது விடயங்களை, புதுப்புது அப்டேட்டுகளை தரக்கூடியதாக இருக்கும்.
4. STAY POOR
இங்கு நாங்கள் குறிப்பிட வருவது நீங்கள் ஏழையாக இருக்க வேண்டும் என்பது அல்ல. நீங்கள் அடைய நினைக்கின்ற பணத்தினை முழுமையாக அடையும்வரை ஓர் ஏழை எவ்வாறான மனநிலையில் இருப்பாரோ அவ்வாறு நீங்கள் இருக்க வேண்டும். அதை விடுத்து உங்களை நீங்கள் சமூகத்திற்கு பணக்காரர் போன்று காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தேவைக்கதிகமான ஆடம்பரங்களை செய்யக்கூடாது. இவ்வாறு நீங்கள் செய்வது அதிகளவான பணத்திற்கு சொந்தக்காரராக உங்களை ஒருபோதும் மாற்றாது.
அதேபோல் நீங்கள் அடைய நினைக்கின்ற பணத்தினை அடைந்த பின்னரும் மிகவும் சிம்பிளாக மற்றும் ஏனையவர்களை மதிக்கக்கூடிய நன்நடத்தை உள்ளவராக இருப்பீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கான பணம் ஒவ்வொரு நாளும் உங்களை தேடி வந்து கொண்டே இருக்கும். நீங்கள் அதற்காக கஷ்டப்பட வேண்டியதில்லை. ஆரம்பத்தில் ஒரு நிலையான அஸ்திவாரத்தை இடுவதற்காகவே நீங்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும். எனவே ஆடம்பரத்தை விடுத்து எப்போதும் சிம்பிளாக இருங்கள்.
5. AVOID DEBT
எத்தகைய கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் கடன் வாங்குவதில் இருந்து விலகியே இருங்கள். நிச்சயமாக கடன் வாங்குவது என்பது உங்களை மில்லியனராவதில் இருந்து தூரமாக்கக்கூடிய மிகப்பிரதானமான ஒரு காரணியாக இருக்கின்றது. நீங்கள் வாங்குகின்ற சிறுகடன், அதனை அடைக்க இன்னொரு கடனை, அதனை அடைக்க இன்னொரு கடன் என மிகப்பெரிய கடனாக இறுதியில் வந்து நிற்கும்.
இன்று பல கோடிகளுக்கு சொந்தக்காரராக இருக்கின்ற எந்தவொரு பணக்காரரிடமும் நீங்கள் சென்று, “நான் யாரிடமாவது கடன் வாங்கலாமா? உங்களுடைய விருப்பத்தை கூறுங்கள்” என்றால், அவர்கள் ஒருபோதும் கடன் வாங்குவதை பரிந்துரைக்கமாட்டார்கள்.
கடன் என்பது நிச்சயமாக உங்களை ஒரு பணக்காரனாக மாற்றக்கூடிய ஒரு செயலல்ல. அது மேலும் மேலும் உங்களை கடன்காரனாகவும், ஏழையாகவும் மாற்றுமே தவிர உங்களை ஒரு பணக்காரராக மாற்றவே மாற்றாது. எனவே முற்றுமுழுதாக கடனிலிருந்து விலகியே இருங்கள்.
6. SAVING LESS THAN EARN
இன்று பல மிடில்கிளாஸ் மக்களிடம் இருக்கின்ற ஒரு மூட நம்பிக்கை என்னவென்றால் அதிகமாக பணத்தை சேமித்தால் நாம் பணக்காரனாக மாற முடியும் என்பதாகும். நிச்சயமாக அதிகளவான பணத்தினை நீங்கள் சேமிப்பது உங்களுக்கு அதிகளவான பிரச்சினைகளை ஏற்படுத்துமே தவிர உங்களை ஒருபோதும் அது பணக்காரனாக மாற்றாது.
ஒவ்வொருவரும் பணத்தை சேமிப்பது என்பது எதிர்பாராத வகையில் இடர்கள் ஏற்படுகின்ற போது ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக அல்லது எதிர்காலத்தில் எதாவது தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காகவாகும். எனவே நீங்கள் பணத்தினை சேமிக்கின்ற போது உங்களுடைய மொத்த வருமானத்திலிருந்து 20 சதவீதமான பணத்தினை மட்டுமே மட்டுமே சேமியுங்கள். அதற்கு மேலதிகமாக சேமிக்காதீர்கள். ஏனென்றால் பணம் என்பது பணவீக்கத்திற்கு உட்படக்கூடியதாகும்.
நீங்கள் சேமித்து வைக்கின்ற பணத்தை இன்னும் 5 வருடங்கள் கழித்து பார்த்தால் அதேநிலையில் இருக்குமா என்றால் கிடையாது. பணத்தின் பெறுமதி குறைந்து பொருட்களின் விலையேறி பணவீக்கம் ஏற்பட்டிருக்கும். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் அதிகமாக சேமித்து வைக்கின்ற போது அதன் பணவீக்கத்தினால் பணத்தின் பெறுமதியை இழக்க நேரிடும்.
7. PLAN YOUR FUTURE
எந்தவொரு விடயத்தினை நாம் அடைவதாக இருந்தாலும் அதற்கு முறையான திட்டமிடல் என்பது அத்தியாவசியமானதாகும். நீங்கள் பணக்காரராக விரும்புகிறீர்கள் என்றால் அதனை எவ்வாறு, எப்போது அடைய விரும்புகிறீர்கள் என்று ஒரு தெளிவான திட்டமிடல் ஒன்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.
இப்போது நீங்கள் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இன்னும் பத்து வருடங்கள் கழித்து நான் இந்த நிலையில்தான் இருக்கவேண்டும் என்று ஓர் இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளை நீங்கள் செய்யும் போது நிச்சயமாக பணத்தை உங்கள் வசம் ஈர்க்க முடியும்.
உங்கள் இறுதி இலக்கினை அடையும் வரைக்குமான ஒவ்வொரு படி முறைகளையும் நீங்கள் கவனமாக திட்டமிட வேண்டும். அதேபோல் நிகழ்கால மற்றும் எதிர்கால செலவுகளையும் நீங்கள் முறையாக திட்டமிட்டு அதனை சரியாக செயல்படுத்த வேண்டும்.
இன்னும் பத்து வருடங்கள் கழித்து 100 மில்லியன் டாலர்களுக்கு நான் சொந்தக்காரனாக இருக்கவேண்டுமென நீங்கள் நினைத்தால், அந்த இறுதி இலக்கினை அடையும் வரைக்குமான ஒவ்வொரு படிமுறைகளையும் மிக கவனமாக திட்டமிட்டு அதனை செயற்படுத்தினால் நிச்சயமாக இன்னும் பத்து வருடங்கள் கழித்து நீங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். குறைந்தபட்சமாக அந்த இலக்கின் அருகிலாவது செல்லமுடியும்.
8. NEVER GIVE UP
பணத்தை ஈர்ப்பதற்கான உங்கள் பயணத்தில் பல்வேறுவிதமான தோல்விகளையும், பின்னடைவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். எவ்வாறான தோல்விகளை நீங்கள் சந்தித்தாலும் நிச்சயமாக அத்தோல்விகளில் இருந்து படிப்பினை பெற்றுக் கொண்டு, உங்கள் பணத்தை ஈர்க்கும் முயற்சியினை நீங்கள் தொடர வேண்டுமே தவிர அதை விட்டு விலகிவிடக்கூடாது. நிச்சயமாக பணமாது முயற்சியாளரிடம் மட்டுமே அடைக்கலம் தேடும்.
இன்று மில்லியனர்களாக இருக்கின்ற பலர் தங்கள் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் பலவிதமான தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்தவர்களே. அவ்வாறான தோல்விகளை அனைத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தன் வெற்றிக்கான மிகப்பிரதான உந்துசக்தியாக அதனை மாற்றியமைத்தனர்.
அதன் விளைவு இன்று அவர்கள் மிகப்பெரும் மில்லியன்களாக இருக்கின்றனர். எனவே நீங்களும் உங்கள் வாழ்வில் சந்திக்கின்ற அனைத்து தோல்விகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களாலும் ஒருநாள் மில்லியனர்களாக வர முடியும்.
FINALLY
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த எட்டு விதிகளும் நிச்சயமாக உங்களை மில்லியனர்களாக மாற்றக்கூடிய மிகச்சிறந்த விதிகளாகும் (These 8 Rules will Make You a Millionaire). இவற்றை உங்கள் வாழ்வில் நீங்கள் கடைப்பிடிக்கின்ற போது எண்ணற்ற பணத்தினை உங்களால் ஈர்க்க முடியும். பணம் என்பது எல்லோரிடமும் அடைக்கலம் போவதில்லை. ஒரு சிலரிடம் மட்டுமே பணம் அடைக்கலம் செல்கின்றது.
இவ்வாறு ஒரு சிலரிடம் மட்டுமே பணம் அடைக்கலம் செல்வதற்கு காரணம் மற்ற அனைவரிடமிருந்தும் வித்தியாசமான சில விதிகளை தங்கள் வாழ்வில் அவர்கள் கடைபிடிப்பதாகும். அத்தகைய அவர்கள் கடைபிடிக்கின்ற 8 விதிகளை உங்களுக்காக மேலே குறிப்பிட்டுள்ளோம். நிச்சயமாக இந்த 8 விதிகளையும் உங்கள் வாழ்வில் செயற்படுத்தி பாருங்கள். செயற்படுத்திய ஒரு சில வருடங்களில் அதற்கான மாற்றங்களை உணர்ந்து கொள்வீர்கள்.