These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Motivational Movies in Tamil

 

சினிமா திரைப்படங்கள் என்பது ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை மிக முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக இருக்கின்றது. ஒரு சினிமா என்பது சாதாரணமான பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமன்றி அது ஒரு வாழ்வியல் அம்சமாகவும் காணப்படுகின்றது. பலருடைய வாழ்வில் சினிமாக்கள் பல்வேறு கோணத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கும். வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, மிகச்சிறந்த அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய பல திரைப்படங்கள் இருக்கின்றன.

Top 10 Motivational Movies in Tamil

அவ்வாறு உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, உங்களை ஊக்குவித்து வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்லக்கூடிய, வாழ்வின் அர்த்தத்தை புரியவைக்கக் கூடிய, அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய, குறிப்பாக தமிழில் உள்ள 10 திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். நிச்சயமாக இந்த பதிவும் சரி அல்லது இதில் குறிப்பிடப்பட்டுள்ள படங்களும் சரி ஒரு வித்தியாசமான ஒரு அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.


இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து படங்களையும் குறைந்தது ஒரு தடவையாவது பார்த்துவிடுங்கள். நிச்சயமாக இத்திரைப்படங்கள் அனைத்தும் உங்களை ஊக்குவிக்கக்கூடிய, நீங்கள் இப்போது இருக்கின்ற வாழ்வியலில் இருந்து உங்களை மாற்றி வெற்றியின் பக்கம் அழைத்து செல்லக்கூடிய திரைப்படங்களாக இருக்கும். சரி வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

01. SOORARAI POTTRU - IMDB 9.1/10 (2020)

These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Best Motivational Movies in Tamil | Soorarai Pottru

2020 ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்திய திரைப்படங்களின் வரலாற்றில் IMDB இல் அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படம் என்றால் அது இத்திரைப்படம் தான். IMDB ரேட்டிங்கில் இத்திரைப்படம் உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதுமட்டுமன்றி தென்னிந்தியாவிலிருந்து ஒரு திரைப்படம் இந்தளவுக்கு அனைவரையும் கவர்ந்து சாதனை படைத்தது என்றால் அது சூரரைபோற்று படம்தான்.

இத்திரைப்படத்திற்கு IMDB 9..1/10 ரேட்டிங் கொடுத்துள்ளது. ஏர் டெக்கான் (Air Deccan) Founder கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.  இதில் கோபிநாத்தின் கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பார். நடித்திருப்பார் என்பதை தாண்டி அந்தக் கதாபாத்திரமாகவே நம் கண்முன் வாழ்ந்திருப்பார்.


ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்த படத்தின் ஹீரோ, ஏர்லைன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பிப்பதனை இலக்காக கொண்டிருக்கிறார். அதன் பின்னர் தன்னுடைய இலக்கினை அடைவதற்காக தன் வாழ்வில் எத்தகைய அவமானங்களையும், புறக்கணிப்புகளையும், இன்னல்களையும், மற்றும் தோல்விகளையும் சந்தித்து பின்னர் இறுதியாக ஏர்லைன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பித்தாரா? இல்லையா? என்பதை மிகவும் மோட்டிவேஷனல் கலந்து உணர்ச்சிபூர்வமாக கூறிய திரைப்படம்தான் சூரரைப்போற்று. 


நிச்சயமாக ஒரு உத்தரவாதத்தை எங்களால் உங்களுக்கு தர முடியும். வாழ்வில் வெற்றிபெற வேண்டும், தன் இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்று போராடுபவர்கள் அனைவரும் இத்திரைப்படத்தை பார்க்கலாம். ஏனெனில் உங்கள் வாழ்வில் இப்போது சந்தித்து கொண்டிருக்கின்ற தோல்விகளும், அவமானங்களும் உங்கள் இலக்கினை அடைவதற்கான ஒருபடியே என்பதனை இப்படம் உங்களுக்கு உணர்த்துவதோடு இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியையும் இத்திரைப்படம் நிச்சயமாக அதிகரிக்கும்.


நாம் இன்று எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் நம்முடைய இலக்கினை அடைவதற்கு அது ஒன்றும் தடையாக இருக்காது என்பதனை மிகவும் வலிமையாக கூறிய திரைப்படம்தான் சூரரைப்போற்று. இப்படத்தில் பல காட்சிகள் மிகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் பார்க்கும் போதே நம் கண்களிலிருந்து கண்ணீர் வருமளவுக்கு காட்சிப்படுத்தியிருப்பார் படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா.


குறிப்பாக தன்னுடைய தந்தையின் மரண செய்தி கேட்டு அவரை பார்க்க செல்வதற்காக சூர்யா ஏர்போர்ட்டில் டிக்கெட் வாங்குவதற்கு போதியளவு பணம் இல்லாமல் அங்கு வந்திருக்கும் பயணிகளிடம் கேட்டு, காலில் விழுந்து அலும் அந்தக்காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், பார்ப்பவர்களை கலங்கடிக்கச்செய்யும் காட்சியாகவும் இருக்கும்.


இவ்வாறு படம் முழுக்க உணர்ச்சிபூர்வமான காட்சிகள் அதிகம் காணப்படுகின்றன. அத்தோடு மிகச்சிறந்த மோட்டிவேஷனல் அண்ட் இன்ஸ்பிரஷனல் திரைப்படம் என்றால் அது சூரரைப்போற்று தான். சாதிக்கவேண்டும் என்ற வெறியுடன் இருக்கக்கூடிய படத்தின் ஹீரோ எத்தகைய தோல்விகள் மற்றும் அவமானங்கள் ஏற்பட்டு முடங்கிப்போய் கிடந்தாலும், தன்னுடைய இலக்கிலிருந்து சற்றும் தளராமல் இறுதியில் தன்னுடைய இலக்கினை எவ்வாறு அடைந்தார் என்பதனை மிக அழகாக காட்டுகின்ற திரைப்படம்தான் சூரரைப்போற்று. நிச்சயமாக ஒரு முறையாவது இத்திரைப்படத்தை பார்த்து விடுங்கள். 

02. THE PURSUIT OF HAPPYNESS - IMDB 8/10(2006)

These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Best Motivational Movies in Tamil | The Pursuit of Happyness

2006 ஆம் ஆண்டு Will Smith இன் நடிப்பில் வெளியான இத்திரைப்படமானது இன்று வரைக்கும் அனைவராலும் கொண்டாடப்படுகிற மிகச்சிறந்த மோட்டிவேஷனல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்திற்கு IMDB 8/10 ரேட்டிங் கொடுத்துள்ளது. Chris Gardner என்பவரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். 

இத் திரைப்படமானது எந்தவித அலப்பறைகளும் இல்லாமல் வாழ்வின் எதார்த்தத்தை கூறுகின்ற திரைப்படமாகும். குறிப்பாக இத்திரைப்படத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உள்ள பாச ஓட்டத்தினை உணர்வுகள் கலந்த காட்சிகளின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் படத்தின் இயக்குனர். தன்னிடம் பணம் இல்லை என்றால் மனைவி கூட மதிக்க மாட்டாள் என்பதை மிகவும் யதார்த்தமான காட்சிகள் மூலம் கூறிய திரைப்படம் இதுவாகும். 


திரைப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில் மிகவும் எளிமையான கதைதான். தன்னிடம் உள்ள பணத்தை வைத்து இயந்திரம் ஒன்றை வாங்கிய படத்தின் ஹீரோ வில் ஸ்மித் அதனை விற்று அதன் மூலம் பணக்காரர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவர் நினைத்தபடி அந்த இயந்திரங்களை எல்லாம் விற்று முடிக்க இயலவில்லை. ஏன் அவரால் ஒரு இயந்திரத்தை கூட விற்க முடியவில்லை. 


இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரிடமிருந்த எல்லா பணமும் இல்லாமல் போகின்றது. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவிக்கின்றார். இந்நிலையில் அவருடைய மனைவியும் அவரை விட்டு பிரிந்து விட, ஒற்றை ஆளாக அவரும் அவரது ஒரே மகனும் நடுத்தெருவில் நிற்கின்றனர். அதன் பின்னர் எவ்வாறு தன் வாழ்க்கையை தொடர்ந்து மேற்கொண்டார், மனைவியோடு மீண்டும் சேர்ந்தாரா? விற்பனையாளராக தான் நினைத்தபடி ஜெயித்தாரா? என்பதனை மிகவும் உணர்வுபூர்வமான காட்சிகள் மூலம் நமக்கு காட்டிய திரைப்படம் தான் The Pursuit of Happyness.


மிகவும் எளிமையான திரைக்கதையின் மூலம் வாழ்வின் எதார்த்தத்தை காட்டுகின்ற ஒரு திரைப்படமாகவும், வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள், வாழ்வில் நாம் சந்திக்கின்ற தொடரான தோல்விகள், பணத்திற்காக மனிதர்கள் படுகின்ற கஷ்டம் போன்றவற்றை நம் கண்முன் வெளிக்காட்டிய ஒரு திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் வில் ஸ்மித் நடித்த கதாபாத்திரமானது உண்மையிலேயே உள்ள கிறிஸ் கார்ட்னர் என்பவரின் கதாபாத்திரம் ஆகும். 


நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு ஒரு சிறந்த படிப்பினையாக இருக்கும். வாழ்வில் முன்னேற நினைப்பவர்கள், வாழ்வில் அதிகளவான தோல்விகளை கண்டு சலித்துப்போய் இருப்பவர்கள், ஒரு விற்பனையாளராக கஷ்டப்படுபவர்கள் என எல்லாத்துறையை சார்ந்த்வர்களும் பார்க்க வேண்டிய திரைப்படமாகும்.


நிச்சயமாக இந்த திரைப்படம் உங்களை கவரும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒருமுறையாவது இந்த திரைப்படத்தைப் பாருங்கள். வாழ்வின் எதார்த்தத்தை உணரவைக்கும் திரைப்படமாக இது இருக்கும். இன்றுவரை மிகச்சிறந்த Motivational and Inspiring திரைப்படமாக உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்ற திரைப்படமாகும்.

03. SHAWSHANK REDEMPTION - IMDB 9.3/10(1994)

These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Best Motivational Movies in Tamil | Shawshank Redemption

1994 ஆம் ஆண்டு Tim Robbins மற்றும் Morgan Freeman நடிப்பில் வெளியான இத்திரைப்படமானது உலக சினிமா ரசிகர்களின் One of the Best Evergreen Movie in the World என்றால் பெரும்பாலானோரின் தெரிவாக இருப்பது இந்த Shawshank Redemption தான். Stephen King எழுதிய Rita Hayworth and Shawshank Redemption என்ற நாவலினை அடிப்படியாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவரை 6 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள இத்திரைப்படத்திற்கு IMDB 9.3/10 ரேட்டிங் கொடுத்துள்ளது. 

1994 இல் எடுக்கப்படட இத்திரைப்படம் இன்றுவரை சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்ற மிகச்சிறந்த மோட்டிவேஷனல் திரைப்படமாகும். இது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படமாகும். குறிப்பாக இளைஞர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய படமாகும். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வாழ்க்கைக்கு தேவையான பல விடயங்களை  இயக்குனர் கூறியிருப்பார்.


இத்திரைப்படத்தில் வாழ்வில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நிச்சயமாக எந்த ஒரு நிலையிலும் தன்னம்பிக்கையை விட்டுக் கொடுக்க கூடாது என்பதனை Tim Robbins இன் Andy கதாபாத்திரம் உங்களுக்கு உணர்த்தும். அதேசமயம் எந்த ஒரு எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதனை இப்படத்தில் Brooks கதாபாத்திரம் மூலம் உணர்த்துவார் படத்தின் இயக்குனர்.


இத்திரைப்படத்தை நீங்கள் பார்க்கும்போது நிச்சயமாக உங்கள் வாழ்வின் கடந்த கால நினைவுகள் உங்களுக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக யதார்த்தமாகவும், வாழ்க்கைக்கு தேவையான படிப்பினைகளை தரக்கூடிய மிகச்சிறந்த மோட்டிவேஷனல் மற்றும் இன்ஸ்பிரேஷனல் திரைப்படமாகவும்  செதுக்கியிருப்பர் படத்தின் இயக்குனர். அதிலும் உண்மை கதையினை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் எனும்போது இன்னும் ஆச்சர்யமாக இருக்கின்றது.


நிச்சயம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய மிகச்சிறந்த வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை உள்ளடக்கிய ஒரு திரைப்படம் இதுவாகும். மிகப்பெரிய கஷ்டத்திற்கு பின்னால்தான் மிக அழகிய வாழ்க்கை உள்ளது, நாம் இப்போது செய்கின்ற தவறுகள் நிச்சயம் நம்மை நாளை மிகப் பெரிய குழியில் இட்டுச்செல்லும், தன்னம்பிக்கை உடைய மனிதன் ஒருபோதும் தோல்வியடைவதில்லை போன்ற பல முத்தான கருத்துக்களை இத்திரைப்படம் உள்ளடக்கியுள்ளது. நிச்சயம் உங்களை கவரும். 

04. JERSEY - IMDB 8.6/10(2019)

These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Best Motivational Movies in Tamil | Jersey

2019 ஆம் ஆண்டு Nani இன் நடிப்பில் வெளியான இத்திரைப்படமானது Raman Lamba என்பவரின்  வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் அவரது Biography கிடையாது. Raman Lamba வின்  வாழ்க்கையினை அடிப்படையாக வைத்து எடுக்கப்படட திரைப்படமாகும். IMDB இத்திரைப்படத்திற்கு 8.6/10 ரேட்டிங் கொடுத்துள்ளது. நிச்சயமாக இப்படம் வாழ்வில் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மிகச் சிறந்த Motivational And Inspiration ஆக  அமையும். 

கிரிக்கெட்டில் நன்கு திறமையுள்ள ஹீரோ தன் வாழ்வில் நடக்கும் ஒருசில அசம்பாவிதங்களால் கிரிக்கெட்டையே விடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. அதன் பின்னர் தன் காதல் மனைவியை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தகப்பனாகி ஒரு சாதாரண Middle Class வாழக்கையை வாழ்கின்றார். அதுவும் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல், மனைவியின் சம்பாத்தியத்தில். 


இவ்வாறு கனவுகளை தொலைத்துவிட்டு தனக்கு பிடிக்காத வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கின்ற அர்ஜுன் (Nani), பின்னர் அவருடைய வாழ்வில் நடக்கும் ஒருசில நிகழ்வுகள் மீண்டும் இனி விளையாடுவதே இல்லை என ஒதுங்கியிருந்த கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான கட்டாயத்தினை ஏற்படுத்துகின்றது. அதுவும் அவரது 30 வயதிற்கு மேல். அதன் பின்னர் கிரிக்கெட் விளையாடுவதென்று முடிவெடுக்கின்றார் படத்தின் ஹீரோ.


இவ்வாறு கிரிக்கெட் விளையாடுவதென்று முடிவெடுத்தபோது அவரது மனைவி உட்பட பலரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை நம்பியது அவரது மகனும், அவரது ஆரம்பகால பயிற்றுவிப்பாளரும் தான். இவ்வாறு பலரது எதிர்ப்புக்களை எல்லாம் தாண்டி இந்திய அணியில் இடெம்பெற வேண்டும் என்று தீராத வெறியுடன் தன் இலக்கை நோக்கி பயணிக்கிறார். அதன்படி இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடினாரா? இல்லையா? அதில் சாதித்தாரா? என்பதனை எதார்த்தமாக கூறிய படம் தான் இந்த Jersey.


இந்தப் படத்தில் ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயில் அவரை கடந்து பயணிக்கின்ற போது நானி தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தன் கைகளை முறுக்கி கத்துகின்றஒரு காட்சி வரும். இந்த ஒரே ஒரு காட்சி நம்மில் பலரது வாழ்வில் நாம் சந்திக்கின்ற பல்வேறு தோல்விகள் மற்றும் பிரச்சினைகளை மறந்து வெற்றியினை நோக்கி செல்ல எத்தனிக்கும்.


தோல்விகள் நம்மை ஒருபோதும் தோல்வியாளனாக மாற்றாது. தோல்விகளை கண்டு தன்னுடைய முயற்சிகளை விடுகின்ற போதுதான் ஒருவன் உண்மையான தோல்வியாளனாக மாறுகின்றான் என்பதனை இந்தப்படம் உங்களுக்கு கூறும். நிச்சயமாக ஒருமுறையாவது இந்தப்படத்தை பாருங்கள். சிறந்த மோட்டிவேஷன் மற்றும் இன்ஸ்பிரஷனாக அமையும்.

05. VINODHAYA SITHAM - IMDB 8.4/10(2021)

These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Best Motivational Movies in Tamil | Vinodhaya Sitham

2021 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையாவின் நடிப்பில் வெளியான இத்திரைப்படமானது வாழ்வின் எதார்த்தத்தை கூறுகின்ற மிகச்சிறந்த இன்ஸ்பிரேஷனல் திரைப்படமாக காணப்படுகின்றது. ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இத்திரைப்படமானது பாடல்கள், சண்டைக்காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இல்லாத குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய  திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு IMDB 8.4/10 ரேட்டிங் கொடுத்துள்ளது.

இத்திரைப்படத்தின் கதையினை பொருத்தவரையில் இக்காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு கதையாகும். இப்படத்தின் கதையினைப்பற்றி இங்கு கூறி Spoiler பண்ண விரும்பவில்லை. ஏனெனில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இத்திரைப்படம் வெளியானது. எனவே எந்தவித எதிர்பார்ப்புமின்றி இத்திரைப்படத்தை பாருங்கள். நிச்சயமாக இந்த திரைப்படம் உங்களுக்குள் மிகப் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய திரைப்படமாக இருக்கும். 


குறிப்பாக இத்திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் உங்கள் நிஜ வாழ்வில் நடப்பது போன்ற ஒரு எண்ண ஓட்டத்தினை உங்களுக்கு ஏற்படுத்தலாம். அதேபோல் இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நீங்கள் அழுவது உறுதி. 2021 இல் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் மிகச்சிறந்த திரைப்படம் என்றால் அது இந்த வினோதய சித்தம் (Vinodhaya Sitham) தான்.


அந்தளவுக்கு திரைப்படத்தின் கதையும் சரி, திரைக்கதையும் சரி, அதில் நடித்த கதாபாத்திரங்களும் சரி நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கின்ற பலரது வாழ்க்கை முறையினை வெளிப்படையாகக் காட்டுகின்ற ஒரு திரைப்படமாக இருக்கின்றது. நிச்சயமாக இத்திரைப்படத்தை தவறவிட்டு விடாதீர்கள். ஒன்றுக்கு இரண்டு முறை பார்க்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படம். எங்களது 100% Recommendation.

06. M.S. DHONI: THE UNTOLD STORY - IMDB 7.9/10(2016)

These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Best Motivational Movies in Tamil | M.S. Dhoni: The Untold Story

2016 ஆம் ஆண்டு Sushant Singh Rajput நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலக கிரிக்கெட் ரசிகர்களால் Captain Cool என செல்லமாக அழைக்கப்படும் M.S. Dhoni யின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு IMDB 7.9/10 ரேட்டிங் கொடுத்துள்ளது. 

ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த தோனி, எத்தகைய கஷ்டங்கள், தோல்விகள், மற்றும் புறக்கணிப்புகளை சந்தித்ததன்பின்னர் இந்திய அணியின் நீங்கா இடத்தினை பிடித்தார் என்பதனை முழுக்க முழுக்க தோனியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி மிகவும் உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்ட பயோபிக் திரைப்படம்தான் இந்த M.S. Dhoni: The Untold Story.


நிச்சயமாக இத்திரைப்படம் உங்களை மோட்டிவேஷனல் செய்கின்ற மிகச் சிறந்த திரைப்படமாக இருக்கும். எந்த ஒரு வெற்றியும் மிக இலகுவாக கிடைத்துவிடாது என்பதை இத்திரைப்படத்தைப் பார்த்த பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். திறமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயமாக நீங்கள் உங்கள் இலக்குகளை அடைந்து கொள்ள முடியும் என்பதற்கு தோனியின் வாழ்க்கை வரலாறு மிகச்சிறந்த சான்றாகும். குறைந்தது ஒருமுறையாவது பார்க்கவேண்டிய மோட்டிவேஷனல் திரைப்படம் இதுவாகும்.

07. PELE: BIRTH OF A LEGEND - IMDB 7.2/10(2016)

These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Best Motivational Movies in Tamil | Pele: Birth of a Legend

2016 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படமானது பிரேசில் நாட்டின் காற்பந்து வீரர் மற்றும் காற்பந்து உலகின் மிகப்பெரும் ஜாம்பவானான பேலேவின் (Pele) வாழ்க்கை வரலாற்றினை தழுவி எடுக்கப்பட்ட அமெரிக்க Biographical திரைப்படமாகும். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு IMDB 7.2/10 ரேட்டிங் கொடுத்துள்ளது. 

ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த பேலே, குடும்பத்தின் வறுமையின் காரணமாக மற்றவர்களின் சூக்களுக்கு பாலிஷ் போட்டு, அதன் பின்னர் சிறு சிறு ஃபுட்பால் கிளப்புகளில் விளையாடி எவ்வாறு பிரேசிலின் தேசிய அணியில் இடம் பெற்று பிரேசில் அணிக்காக மூன்று FIFA World Cup என பல்வேறு சாதனைகளை படைத்து, காற்பந்து உலகில் யாராலும் மறக்க முடியாத ஒரு ஜாம்பவானாக உருவானார் என்பதனை அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து கூறிய திரைப்படம்தான் இந்த Pele: Birth of a Legend.


விளையாட்டின் மீது அல்லது காற்பந்தின் மீது ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாக உங்களை இந்த படம் கவரும். அதே சமயத்தில் உங்களைப் ஊக்குவிக்கின்ற மிகச்சிறந்த மோட்டிவேஷனல் மற்றும் இன்ஸ்பிரேஷனல் திரைப்படமாகவும் இது காணப்படும். எனவே இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றால் உடனே சென்று பார்த்து விடுங்கள் தமிழில் உள்ளது.

08. SLUMDOG MILLIONAIRE - IMDB 8.0/10(2008)

These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Best Motivational Movies in Tamil | Slumdog Millionaire

2008 ஆம் ஆண்டு Dev Patel மற்றும் Anil Kapoor நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இதுவரை 11 ஆஸ்கார் விருதுகளுக்கு Nominate செய்யப்பட்டு 5 Oscar விருதுகளை வென்றுள்ளது. இத்திரைப்படத்திகாகவே ஏ ஆர் ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார். இத்திரைப்படத்திற்கு IMDB 8.0/10 ரேட்டிங் கொடுத்துள்ளது.

இத்திரைப்படத்தின் கதையினை பொருத்தவரையில் மும்பையில் உள்ள சேரியொன்றில் (Slum) பிறந்த படத்தின் ஹீரோ எவ்வாறு Kaun Banega Crorepati? நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் கூறி ஒரு கோடி ரூபாவை வென்றான் என்பதுதான். அவனிடம் கேட்கப்படுகின்ற ஒவ்வொரு கேள்விக்குமான பதிலினை அவனது வாழ்வில் நடந்த சில சுவாரஷ்யமான நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்கின்றான்.


இந்தியாவில், குறிப்பாக மும்பையில் உள்ள சிறுவர்கள். இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் எவ்வாறான வாழ்க்கை முறையினை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், எத்தகைய இன்னல்கள் மற்றும் கஷ்டங்களை தாண்டி தங்கள் வாழ்க்கையினை வடிவமைத்து கொண்டிருக்கின்றனர் என்பதனை அவ்வளவு அற்புதமாக காட்டிய திரைப்படம்தான் இந்த Slumdog Millionaire.


நிச்சயமாக இந்த திரைப்படம் உங்கள் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற மிகச்சிறந்த மோட்டிவேஷனல் திரைப்படமாக இருக்கும். குறிப்பாக இளைஞர்களுக்கு வாழ்க்கை எவ்வாறான திருப்பங்களை ஏற்படுத்தும், தொடரான முயற்சி மட்டுமே வெற்றிக்கு வழிசெய்யும் என்பதை உணர்த்துகின்ற அற்புதமான திரைப்படமாக இந்த Slumdog Millionaire இருக்கும்.

09. BRUCE ALMIGHTY - IMDB 6.8/10(2003)

These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Best Motivational Movies in Tamil | Bruce Almighty

2003ஆம் ஆண்டு Jim Carrey மற்றும் Morgan Freeman நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மிகச்சிறந்த Motivational and Inspirational திரைப்படமாக இருக்கின்றது. எந்தத் தொழில் செய்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்கின்ற அழகிய கருத்தினை இத்திரைப்படம் உங்களுக்குக் கூறும். இத்திரைப்படத்துக்கு IMDB 6.8/10 ரேட்டிங் கொடுத்துள்ளது.

படத்தில் நியூஸ் ரிப்போர்டராக வரும் ஜிம் கேரிக்கு அவருடைய அந்த ரிப்போர்ட்டர் வாழ்க்கையை அலுத்து போவதினால் கடவுளை பார்த்து குமுறுகிறார். அதற்கு பதிலளிக்கும் கடவுள் அவரது வேண்டுகோளுக்கிணங்க கடவுள் பொறுப்பினை அவரிடம் கொடுத்து சில வேலைகளையும் செய்ய செய்ய சொல்கிறார். அதனை சந்தோஷமாக வாங்கிய ஜிம் கேரி கடவுளாக சொன்ன வேலைகளை செய்ய முடியாமல் திணறுகிறார். விளைவு பல குழப்பங்கள் ஏற்படுகின்றது.


இறுதியில் என்ன நடந்தது என்பதனை மிகவும் சுவாரசியமாகவும், காமெடியாகவும் மோட்டிவேஷனளாகவும் கூறிய திரைப்படம் தான் இந்த Bruce Almighty. நிச்சயமாக இத்திரைப்படம் உங்களுக்கு மிகப்பெரும் படிப்பினையாகவும் மிகச் சிறந்த காமெடி திரைப்படமாகவும் இருக்கும். எனவே ஒருமுறையாவது இத்திரைப்படத்தை பாருங்கள்.

10. THE SECRET (Movie) - IMDB 5.6/10(2006)

These 10 Inspiring Movies will Change Your Life | Top 10 Best Motivational Movies in Tamil | The Secret

மேலே நாம் பார்த்த அனைத்து திரைப்படங்களும் முழுநீள திரைப்படங்கள் ஆகும். ஆனால் இது கொஞ்சம் சற்று வித்தியாசமான திரைப்படமாகும். அதாவது இது ஒரு Documentary Film ஆகும். இத்திரைப்படத்தின் நீளம் சுமாராக ஒன்றரை மணிநேரம் ஆகும். ஈர்ப்புவிதியினை (Law of Attraction) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்துக்கு IMDB 5.6/10 ரேட்டிங் கொடுத்துள்ளது.

எண்ணம் போல் தான் வாழ்க்கை. நாம் எதுவாக எண்ணுகின்றோமோ அதுவாகவே மாறி விடுகின்றோம் என்கின்ற மிகப்பெரிய தத்துவத்தை இத்திரைப்படம் உங்களுக்குச் சொல்லும். அதுமட்டுமின்றி வாழ்வில் எத்தகைய கஷ்டமான சூழ்நிலைகள் வந்தாலும் தன்னம்பிக்கையும், என்னால் முடியும் என்கின்ற நேர்மறையான சிந்தனையும் இருந்தால் நிச்சயமாக வாழ்வில் வெற்றிபெற முடியும் என்பதனை இத்திரைப்படம் ரியல் லைப் இன்சிடென்ட் மூலமாக உங்களுக்குக் கூறும்.


பணம், ஆரோக்கியம், இல்லற வாழ்க்கை என பல்வேறு துறைகளிலும் நாம் அடைய நினைத்ததை அடைவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளை அந்தந்தத் துறைகளில் சாதித்தவர்களின் வழியாக தொகுத்து கூறுகின்ற மிகச்சிறந்த ஆவணப் படமாக இது உள்ளது. எனவே நிச்சயமாக இத்திரைப்படத்தினை ஒருமுறையாவது முழுமையாக பாருங்கள். நாங்கள் இத்திரைப்படத்தினை 100% பரிந்துரைக்கிறோம்.

FINALLY 

மேலே குறிப்பிட்ட இந்த பத்து திரைப்படங்களும் தமிழில் உள்ள திரைப்படங்களாகும். எனவே அனைத்து படங்களையும் குறைந்தது ஒரு முறையாவது பார்த்து விடுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தை இத்திரைப்படங்கள் கொண்டுவரும்.


தமிழில் உள்ள மிகச்சிறந்த Top 10 Best Motivational and Inspirational Movies அனைத்தையும் உங்களுக்காக நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளோம். இது தவிர இன்னும் சில நல்ல திரைப்படங்களும் உள்ளன ஆனால் இவை எங்களின் Top 10 List ஆகும். நிச்சயமாக இத்திரைப்படங்கள் உங்கள் வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம். இன்னும் ஒரு மிகச்சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகிறோம். நன்றி.


Post a Comment

Previous Post Next Post