வைத்தியரைப் பார்த்து அப்பெண்மணி, “நான் என் வயிற்றில் உள்ள கருவினை கலைக்க போகிறேன்” என அழுதபடியே கூறுகின்றார். இதனைக்கேட்ட அனைவரும் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டனர். ஏன்? எதற்காக? உங்கள் வயிற்றில் உள்ள குழந்தையை நீங்கள் கலைக்கப் போகின்றீர்கள் என்று மருத்துவர்கள் அவரை பார்த்து கேட்க, அதற்கு அப்பெண்மணி பின்வருமாறு கூறுகின்றார்.
“நானோ மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவள். எனக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு செலவு செய்வதற்கு என்னிடம் போதுமான பணமோ, வசதியோ இல்லை. என் கணவரோ குடியும் ஆலுமாக இருக்கின்றார். நான் மற்றவர்களின் வீட்டில் சமையல் வேலை செய்துதான் என் குடும்பத்தையும், என் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்கின்றேன். என்னுடைய வருமானமானது என் பிள்ளைகளுடைய செலவுக்கே போதாமல் உள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு பிள்ளையை பெற்று அந்தப் பிள்ளையையும் நான் கஷ்டத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. எனவே தயவுசெய்து இந்த கருவினை கலைத்து விடுங்கள்” என கெஞ்சுகிறார்.
ஆனால் இதனைக் கேட்ட மருத்துவர்களும், அங்குள்ள ஊழியர்களும் அப்பெண்மணியை ஆசுவாசப்படுத்தி, அவர்களுக்கு உரிய அறிவுரைகளை சொல்லி, நீ இந்த கருவினை கலைக்க வேண்டாம். நிச்சயமாக கடவுள் உனக்கு உதவி செய்வார் என்று அவரின் மனதை மாற்றி அனுப்புகின்றனர். இவ்வாறு சில மாதங்கள் கழித்து அப்பிள்ளையும் பிறந்து விடுகிறது. அவ்வாறு பிறந்தது வேறு யாருமில்லை போர்த்துகளை சேர்ந்த World Number One Football Player ஆன Cristiano Ronaldo.
இவ்வாறு மிகுந்த வறுமைக்கு மத்தியில்தான் Ronaldoவின் வாழ்க்கை தொடங்குயது. ஆனால் இன்று Highest Paid Football Player in the World என்ற மகுடத்திற்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். இன்றைய பல இளைஞர்களின் Inspirational Life Story யாக ரொனால்டோவின் வாழ்க்கை மாறியது என்றால் அது மிகையாகாது. அத்தகைய Ronaldo’s Motivational Life Story பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
BORN AND FAMILY
1985 இல் போர்த்துக்களில் மடீரா என்ற சின்ன கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக பிறக்கிறார். ஏற்கனவே இவரின் பெற்றோருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். ரொனால்டோவின் தந்தை என்ன வேலை கிடைத்தாலும் செய்யக்கூடிய ஒருவராக இருக்கின்றார். அதே சமயம் அவரது அம்மா சமையல் வேலை செய்து அதன் மூலம் குடும்பத்தை நடத்துகின்றவராக இருக்கின்றார்.
ரொனால்டோவின் குடும்பமானது மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பம் ஆகும். ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட மிகவும் கஷ்டப்பட கூடியவர்களாக காணப்படுகின்றனர். அவர்களின் வீடானது மிகவும் சிறியதாகும். மொத்தமாகவே ஒரே ஒரு அறைதான் உள்ளதாம். அந்த ஒரு அறைக்குள் தான் இவரின் பெற்றோர்கள் உட்பட ரொனால்டோ மற்றும் அவரின் இரண்டு அக்கா மற்றும் அண்ணன் உட்பட முழு குடும்பமும் அந்த ஒரேயொரு அறைக்குள் தான் முழு நாட்களையும் கழிக்க வேண்டியிருக்குமாம்.
இவ்வாறான வறுமைக்கு மத்தியிலும் ரொனால்டோவின் அப்பா குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்தார். என்னதான் அவர் இனிமேல் நான் குடிக்க மாட்டேன் என்று தன் குடும்பத்திடம் சத்தியம் செய்தாலும் ரொனால்டோ பிறந்ததன் பிற்பாடும் அவர் குடிப்பதை நிறுத்திவிடவில்லை. மாறாக அதை அதிகரித்துக்கொண்டே செல்கின்றார். இதனால் ரொனால்டோவின் குடும்பத்தில் ஏழ்மையானது தலை விரித்து ஆடியது.
RONALDO'S ATTRACTION TO FOOTBALL
இவ்வாறு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்தாலும் ரொனால்டோவுக்கு சிறுவயதிலிருந்தே ஒரு விடயத்தின் மீது அதிக ஈர்ப்பு காணப்பட்டது. தன் கண்ணில் எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதை தன் காலால் உதைத்து உதைத்து விளையாடுவதனை விருப்பமாக கொண்டிருந்தார். இத்தகைய அவரது செயல் பிற்காலத்தில் அவரை Football மீது தீராத காதல் கொண்ட நபராக மாற்றியது.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் எவ்வாறு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களோ அதேபோன்று போர்த்துக்களில் Football க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பனர். இதனால் Football மீதான மோகம் அந்நாட்டில் உள்ள அனைவரின் மீதும் காணப்படும். அவ்வாறு ரொனால்டோவுக்கும் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்தே காணப்பட்டது.
FIRST FOOTBALL MATCH
இவ்வாறு புட்பால் மீதான காதல் ரொனால்டோவுக்கு அதிகரித்து கொண்டிருக்கின்ற வேளையில் ரொனால்டோவின் அப்பாவுக்கு அருகில் உள்ள புட்பால் கிளப் ஒன்றில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. அந்த கிளப்பில் ரொனால்டோவின் அப்பா மைதானத்தை விட்டு பந்து வெளியே சென்றால் அதனை மைதானத்துக்குள் எரிகின்ற வேலையினை செய்து வந்தார்.
இந்நிலையில் ரொனால்டோவுக்கு நேரடியாக புட்பால் மேட்ச் ஒன்றை பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கின்றது. இவ்வாறு முதன்முதலாக நேரடியாக புட்பால் மேட்ச் ஒன்றினை பார்த்ததினால் பூரித்து போகின்றார். அம்மேட்சை பார்த்த மறுகணமே நானும் நிச்சயமாக ஒரு நாள் இது போன்று புட்பால் விளையாடுவேன். புட்பால் விளையாட்டில் மிகச் சிறந்த வீரனாக மாறுவேன் என்று மனதிற்குள் உறுதி கொள்கிறார் ரொனால்டோ.
PLAYING FOOTBALL REGULARLY
என்னதான் புட்பால் விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்று ரொனால்டோ நினைத்தாலும் அவரின் வீட்டின் வறுமை முறையான பயிற்சிகளையோ அல்லது ஒரு புட்பால் விளையாடுவதற்கான பூட்ஸ் ஒன்றினையோ பெற்றுக்கொண்டு விளையாடுவதற்கு ஒத்துழைக்கவில்லை. இவ்வாறு தான் ஃபுட்பால் விளையாடுவதற்கு தன் குடும்பத்தின் வறுமை மிகப்பெரிய தடையாக இருந்தாலும் புட்பால் விளையாடுவதை ஒரு போதும் விட்டுவிடவில்லை.
தன் நண்பர்களோடு சேர்ந்து அருகிலுள்ள மைதானம் ஒன்றில் தினமும் இரவு 11 மணிவரை விளையாடுவார். அதன் பின்னர் தன் வீட்டிற்கு செல்லாமல் தான் விளையாடிய மைதானத்திற்கு அருகில் உள்ள McDonald's கடையின் பின்புறமாகச் சென்று அங்கு வேலை செய்கின்ற அக்கா ஒருவர் தருகின்ற இரண்டு பர்கரினை வாங்கிக் கொண்டு அதனை நண்பர்களோடு பகிர்ந்து உண்பார்.
ஏனெனில் எப்படியும் தன் வீட்டிற்கு சென்றால் இரவு உணவானது இருக்காது என்பதை ரொனால்டோ அறிந்திருந்தார். அந்தளவுக்கு அவரின் வீட்டின் வறுமை தலைவிரித்தாடியது. அந்த வறுமையிலும் புட்பால் மீது ரொனால்டோவுக்கு இருந்த காதல் அவரை புட்பால் விளையாடுவதில் இருந்து தூரமாக்கவில்லை.
LEAVING THE SCHOOL
அதிலிருந்து புட்பால் மீதான அவரது காதல் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் தான் செல்கின்ற இடமெல்லாம் கையில் புட்பாலிணை கொண்டு செல்வார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புட்பால் விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டார். இவ்வாறு ஒரு நாள் தன் பாடசாலைக்கும் கையில் புட்பாலினை எடுத்துச் சென்றார்.
அப்போது ஆசிரியர் வகுப்பில் புட்பால் வைத்திருப்பதைப் பார்த்து இது என்ன உனக்கு சோறு போடுமா? இந்த புட்பால் உனக்கு சம்பாத்தியத்தை தருமா? இதனை விட்டுவிடு என்று மிகவும் க.டுமையாக ரொனால்டோவை திட்டி தீர்த்தார்.இதனால் ஆத்திரமடைந்த ரொனால்டோ தன் அருகில் இருந்த கதிரையை எடுத்து ஆசிரியரை நோக்கி எறிந்தார். இதன் விளைவு பாடசாலையில் இருந்து நிரந்தரமாக விலக்கப்பட்டார்.
இவ்வாறு பாடசாலையிலிருந்து விளக்கப்பட்டது அவர்களின் பெற்றோருக்கு தெரியவரவே செய்வதறியாது திகைத்து போய் நின்றனர். பின்னர் ரொனால்டோவிடம் உனக்கு எதில் விருப்பம் அதிகம் இருக்கின்றது என்று அவரது விருப்பத்தை கேட்கின்றனர். அதற்கு அவர் ஃபுட்பால் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறவே, அவரது தாயார் “சரி இன்றிலிருந்து நீ படிப்பை விட்டுவிட்டு, புட்பால் மீது கவனம் செலுத்து. நிச்சயமாக அதில் நீ வெற்றி பெறுவாய் என்று ஊக்குவிக்கிறார்.
RONALDO IN FOOTBALL CLUB
இந்நிலையில்தான் ரொனால்டோவுக்கு தன் தந்தை வேலை செய்த ஃபுட்பால் கிளப்பில் சிறுவர்கள் அணியில் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. அவ்வாறு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கின்றார் ரொனால்டோ. ரொனால்டோவின் திறமையை பார்த்த அனைவரும், பார்ப்பதற்கு சிறுவனாக இருக்கிறான். ஆனால் மிகவும் திறமைசாலியாக இருக்கின்றான் என்று வியந்து பாராட்டுகின்றனர்.
இந்நிலையில் ரொனால்டோவின் திறமையினை பார்த்து கிளப் அணிகள் தங்களது கிளப்பில் விளையாடுவதற்கான வாய்ப்பினை அவருக்கு அளிக்கின்றது. அதனடிப்படையில் போர்த்துக்கலின் தலைநகரான லிஸ்பனில் உள்ள ஃபுட்பால் கிளப் ஒன்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தாலும் தன் குடும்பம் மற்றும் தன் சொந்த ஊரைவிட்டு செல்வது மிகவும் கவலைக்குரியதாக ரொனால்டோவுக்கு இருந்தது.
அதையும் தாண்டி லிஸ்பன்க்கு சென்று அங்குள்ள ஃபுட்பால் கிளப்பில் விளையாட ஆரம்பித்தார். ஆனாலும் தன் குடும்பத்தின் நினைவு, தன் பெற்றோர்கள் மீது இருக்கின்ற அன்பு ஒவ்வொரு இரவும் அவரை அவர்களை நினைத்து அழ வைத்தது. இதனால் ரொனால்டோவை அவரின் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பியது புட்பால் கிளப்.
இந்நிலையில் ரொனால்டோவின் தந்தையின் நண்பர் ஒருவர் லிஸ்பன் புட்பால் கிளப் ஒன்றில் விளையாடி வந்தார். அவர் ரொனால்டோவிடம் சென்று புட்பால் ஒன்றுதான் உன்னையும், உன் குடும்பத்தையும் வறுமையிலிருந்து காப்பாற்றும் ஆயுதம் ஆகும். எனவே அதற்காக வேண்டி நீ புட்பால் விளையாட வேண்டும் என அறிவுறுத்துகிறார். இதனால் ரொனால்டோ மீண்டு லிஸ்பன் சென்று தன் குடும்பத்துக்காக புட்பால் விளையாட தொடங்குகின்றார்.
RONALDO FOR SURGERY
இவ்வாறு தன் குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக கிளப் அணிகளில் விளையாடத் தொடங்கிய ரொனால்டோவுக்கு அவருடைய 15 வயதில் இதயமானது சீராக இயங்கவில்லை. ஒரு சாதாரண மனிதனை போன்று அல்லாது பலமடங்கு அவரது இதயம் துடிக்க ஆரம்பித்தது. இவ்வாறு விளையாடினால் மாரடைப்பு வந்து தன் உயிரை விடக்கூடிய வாய்ப்பு இருந்த காரணத்தினால் மருத்துவர்கள் அவரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அவரின் பெற்றோரிடம் கூறினார்.
அப்போது ரொனால்டோவின் பெற்றோர்களிடம் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணம் இருக்கவில்லை. இருந்தாலும் தன்னிடமிருந்து உள்ள அனைத்து பணத்தையும் சேர்த்து, ஒரு வழியாக ரொனால்டோவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து விடுகின்றனர். அப்போது எல்லோருமே நினைத்தனர். இதனோடு ரொனால்டோவின் ஃபுட்பால் கனவு முடிந்து விடுமென்று. ஆனால் அதன் பிறகுதான் அவர் மிகச்சிறந்த உலகின் புட்பால் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார்.
RONALDO IN MANCHESTER
இவ்வாறு தன்னுடைய இதய அறுவை சிகிச்சைக்கு பின்னரும் பீனிக்ஸ் பறவை போன்று மீண்டெழுந்து மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார் ரொனால்டோ. ஸ்போர்ட்டிங் அணியில் விளையாடி வந்த ரொனால்டோவின் சாகசங்கள் போர்த்துக்கல் மட்டுமன்றி உலகம் முழுக்க பேசு பொருளாக மாறியாது. ரொனால்டோவின் திறமையானது உலகம் பரவியது.
இவ்வாறு உலகம் முழுக்க உள்ள புட்பால் கிளப் அணிகள் ரொனால்டோவின் ஆட்டத்தினை கவனிக்க தொடங்கிய வேளையில் இங்கிலாந்தின் மஞ்செஸ்டர் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு ரொனால்டோவின் ஸ்பொர்ட்டிங் அணிக்கு கிடைத்தது. அவ்வாறு மஞ்செஸ்டர் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியின்போது தன் அசாத்திய திறமை வெளிக்காட்டிய எதிரணி வீரர்களை கலங்கச் செய்தார்.
அப்போது ரொனால்டோவின் திறமையினை பார்த்துக்கொண்டிருந்த Manchester United அணியின் பயிற்றுவிப்பாளர் Alex Ferguson ரெனால்ட்டோவை எப்படியாவது தனது அணிக்குள் எடுத்து விடவேண்டும் என்று சபதம் எடுத்தார். அதனடிப்படையில் கடந்த 2003 ஆம் ஆண்டு ரொனால்டோவை ஸ்போர்ட்டிங் அணியிடம் இருந்து £12.24 மில்லியன் யூரோக்கு விலைக்கு வாங்கினார். இந்திய மதிப்பின்படி 102 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்.
RONALDO IN THE NUMBER 7 JERSEY
இவ்வாறு அதிக தொகை கொடுத்து ரொனால்டோவை ஏலம் எடுத்த மான்செஸ்டர் அணியின் பயிற்றுவிப்பாளர் அலெக்ஸ் எழாம் நம்பர் ஜெர்ஸியினை கொடுத்து அழகு பார்த்தார். அந்த நேரத்தில் அது மிகப்பெரும் புரளியை ஏற்படுத்தியது. டேவிட் பெக்காம் போன்ற மிகப்பெரும் ஜாம்பவான்களின் எழாம் நம்பர் ஜெர்ஸியினை ஒரு அறிமுக வீரருக்கு கொடுப்பதா? என்று பலரும் விமர்சனம் செய்தனர்.
ஆனால் அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் அலெக்ஸ் நிச்சயம் இவன் வரலாற்றில் சாதிக்கக் கூடியவன். உங்களுடைய அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் இவனுடைய கால்கள் பதில் சொல்லும் என்று கூறினார். அவர் கூறியபடியே ரொனால்டோ தன் கால்களினால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
அதேபோல் ரொனால்டோ காற்பந்தில் தன்னுடைய தந்தை என்றால் அது அலெக்ஸ் பெர்குசன் தான் என்று பின்னாட்களில் கூறியதும் உண்டு. அந்தளவுக்கு ரொனால்டோவை செதுக்கியதில் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு.
DEATH OF FATHER
இவ்வாறு ரெனால்டோ மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டு உலகம் முழுக்க புகழ்பெற்று கொண்டிருக்கின்ற வேளையில் அவரை முற்றுமுழுதாக செயலிழக்கச் செய்கின்ற விதமாக அவருடைய தந்தை தந்தையின் மரணச் செய்தி நிகழ்ந்தது. மிக நீண்டகாலமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த ரொனால்டோவின் அப்பா நுரையீரல் நோய் காரணமாக 2005 இல் லண்டனில் இறந்த செய்தி மனதளவில் மிகப் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
தன் தந்தை இறந்த நேரத்தில் உலகக் கோப்பைக்கான தகுதிகாண் ஆட்டத்தில் ரஷ்ய அணிக்கு எதிராக போர்த்துக்கல் அணிக்காக விளையாட இருந்தார் ரொனால்டோ. போர்த்துக்கல் அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கு அது மிக முக்கியமான ஆட்டமாக இருந்தது. எனினும் தந்தை இறந்த செய்தியைக் கேட்டதும் அவர் ஊருக்கு சென்று விடுவார் என்று நினைத்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அந்தப் போட்டியில் களமிறங்கினார்.
தன் தந்தையின் விருப்பமே நான் ஒரு மிகச்சிறந்த புட்பால் பிளேயராக வரவேண்டும் என்பதே என்று கூறி தன் தந்தையின் கனவினை நனவாக்க போட்டியில் கலந்துகொண்ட ரொனால்டோ மிகவும் உணர்ச்சிபூர்வமான ஆட்டத்தை வெளிப்படுத்தி போர்த்துக்கல் மட்டுமன்றி ரஷ்ய வீரர்களையும் கலங்கடிக்க செய்தது. தந்தையின் மறைவு அவரை மிகப்பெரும் கஷ்ட்டத்திற்குள் ஆளாக்கியது இருப்பினும் அதை எல்லாம் தாண்டி மிகப்பெரும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ACHIEVEMENTS OF RONALDO
தன் தந்தையின் மறைவிற்குப் பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ரொனால்டோ தனது அசாத்திய திறமையால் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதுமட்டுமின்றி 2007 மற்றும் 2008 சீசன்களில் 31 கோல்களை அடித்ததன் மூலம் ஒரு சீசனில் அதிக கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையினை பெற்றுக்கொண்டார். அதுவரை யாரும் முறியடிக்க ஒரு சாதனையினை அப்போது அவர் நிலைநாட்டினார். அதே ஆண்டு தங்க காலனி விருதையும் பெற்று அசத்தினார்.
2007, 2008, 2009 என தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் ரொனால்டோவின் பலமான ஆட்டத்தினால் மான்செஸ்டர் யுனைடெட் அணி தொடர்ச்சியாக பிரீமியர் லீக் போட்டிகளில் பதக்கத்தை வென்று Hat-Trick சாதனை படைத்தது. அத்தோடு அதே 2009 ஆம் ஆண்டில் காற்பந்து உலகில் மிகப்பெரும் விருதான BALLON D’OR விருதினை உச்சி முகர்ந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அதன்பின்னர் FIFA மிகச்சிறந்த Football வீரருக்கான விருது, Golden Shoe விருது என தொடர்ச்சியாக பல விருதுகளை பெற்றுக்கொண்டார்.
RONALDO IN REAL MADRID
பின்னர் 2009 ஆம் ஆண்டில் இருந்து ரியல் மாட்ரிட் அணியினால் சுமார் €90 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ஏலம் விடப்பட்டார். சுமார் இந்திய மதிப்பின்படி 780 கோடிக்கும் அதிகமாகும். அதுவரை காலமும் எந்த ஒரு வீரரும் இவ்வளவு பெரிய விலைக்கு விலை போனதே இல்லை. இதுவே முதல் முறையாகும். அதனால் உலகின் மிகவும் விலை உயர்ந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்தார்.
இவ்வாறு ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ அதுவரை காலமும் இல்லாத அளவில் அந்த கிளப்பில் அதிகம் கோல் அடித்தவர் என்ற பெயருக்கு சொந்தக்காரராகவும் மாறினார். சுமார் 451 கோல்களை ரியல் மேட்ரிட் அணிக்காக ரொனால்டோ அடித்துள்ளார்.
RONALDO IN JUVENTUS
கடந்த 2011ஆம் ஆண்டு சுமார் 100 மில்லியன் யூரோக்களை கிறிஸ்டியானோ ரொனால்டோவை லண்டனில் ஏலத்திற்கு எடுத்தது ஜுவென்டஸ் அணி. இது சுமார் இந்திய மதிப்பின்படி 860 கோடிக்கும் அதிகமாகும். ரொனால்டோ ஜுவென்டஸ் அணிக்கு வந்ததிலிருந்து கோல் அடிக்க சற்று தடுமாறினார். இதனால் பலர் அவரை விமர்சனம் செய்யத் தொடங்கினர். இத்தோடு ரொனால்டோவின் ஆட்டம் முடிந்துவிட்டது என்றும் சிலர் எழுதினர். ஆனால் இவற்றுக்கெல்லாம் தன் கால்களின் மூலம் பதில் கூற விரும்பினார் ரொனால்டோ.
அவ்வாறே Atlético Madrid அணிக்கு எதிரான போட்டியில் யாருமே சற்றும் எதிர்பார்க்காத வேளையில் கோல்களை அடித்து ஐரோப்பாவின் தூணாக இருந்த Atlético Madridட் அணியை திணறச் செய்தார். தன்னை விமர்சித்தவர்கள் அனைவருக்கும் பெரும் பாடத்தினை புகட்டியதோடு மட்டுமன்றி, தான் ஒரு மிகச் சிறந்த காற்பந்து வீரர் என்பதையும் இன்னுமொரு முறை நிரூபித்தார்.
RONALDO FOR PORTUGAL NATIONAL TEAM
2016 ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஸ்பெயின், இத்தாலி என்று பல பெரும் பெரும் நாடுகளைத் தாண்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது போர்த்துக்கல். அப்போட்டியில் பிரான்ஸ் அணியோடு பலப்பரீட்சை நடத்தியது போர்த்துக்கல். இப்போட்டியின்போது கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும் தன்னம்பிக்கை இழக்காது, தன் அணி வீரர்களுக்கு தன் பயிற்சியாளர்களுக்கு இணையாக மைதானத்திற்கு வந்து ஊக்கமளித்து அதன் விளைவாக போட்டியின் இறுதி நேரத்தில் போர்த்துக்கல் அணி வீரர் கோல் அடித்து முதன்முதலாக போர்த்துக்கல் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இவ்வாறு போர்த்துக்கல் அணிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமைதாங்கியதன் பின்னர் அந்த அணியின் பலமானது பன்மடங்கு அதிகரித்தது என்றே கூறலாம். இதுவரை போர்த்துக்கல் அணிக்காக 180 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ 111 கோல்களை அடித்துள்ளார்.
SOCIAL MEDIA RECORDS OF RONALDO
ஃபுட்பாலில் மாத்திரமன்றி சமூக வலைத்தளங்களிலும் சாதனை புரிபவராக ரொனால்டோ திகழ்கின்றார். உலகளவில் Highest Followers Instagram Account என்றால் அது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அக்கவுண்ட் தான். சுமார் 353 மில்லியன் Followers அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை பின் தொடர்கின்றனர். உலகில் எந்தவொரு விளையாட்டு வீரரினதோ அல்லது சினிமா பிரபலங்களினதோ அல்லது அரசியல்வாதியினதோ இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் இத்தகைய போல்லோவ்ர்ஸ்களை கொண்டிருக்கவில்லை.
அதுமட்டுமன்றி முகநூலில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 150 million ஆகும். இதுவே அதிக எண்ணிக்கையிலான Followers உள்ள Facebook Account ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் 12 கோடி லைக்குகளை பெற்றவர் என்ற அடிப்படையில் கின்னஸ் புத்தகத்திலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றார். இதுவரை இந்த சாதனையை யாராலும் முறியடிக்கப்படவில்லை. இவ்வாறு புட்பால் மட்டுமன்றி பல்வேறு வகையில் சாதனை புரிந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
THE UNIQUENESS OF RONALDO
பொதுவாகவே விளையாட்டு வீரர்கள் என்று எடுத்துக் கொண்டால் தனது உடம்பில் டாட்டூ குத்துவதனை வழமையாகக் கொண்டுள்ளனர். தன் உடம்பு முழுக்க டாட்டூ குத்திக்கொண்டு வளம் வரும் விளையாட்டு வீரர்களை கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் ரொனால்டோ அப்படியில்லை. ரொனால்டோ தன் உடம்பில் எங்குமே பச்சை குத்தியது இல்லை. இதற்கான காரணம் தன் ஊரில் உள்ள வைத்தியசாலையில் ஒவ்வொரு வருடமும் குறைந்தது இரண்டு முறையாவது ரத்ததானம் செய்கின்றதாகும்.
அதேபோல் ரொனால்டோ புகைப்பழக்கம், மது போன்ற எந்த ஒரு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகதவர். காரணம், அவருடைய அப்பா மதுப்பழக்கத்தால் தான் தன் உயிரை விட்டார் என்பதனால் அவர் முற்றுமுழுதாக இவ்வாறான கெட்ட பழக்கங்களை எர்ப்பதோடு அதனை வெறுக்கின்றார.
அதே போன்று பல்வேறு நல்ல விடயங்களுக்காக உதவி புரிபவராக அவர் காணப்படுகின்றார். கேன்சர் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வது, சிறுவர்களை பாதுகாப்பது போன்ற பல்வேறு நல்ல விடயங்களுக்கு அவர் நிதியுதவி செய்து உதவி இருக்கின்றார். அதேபோன்று தனக்கு விருதாகக் கிடைத்த பல விருதுகளை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் நிதியை மக்கள் நலனுக்காக பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு சமூக சேவைகளில் ஈடுபடுவதிலும் அவர் முழு மூச்சுடனேயே செயற்படுகின்றார்.
FINALLY
இவ்வாறு மிகவும் வறிய மற்றும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கின்ற ஒரு குடும்பத்தில் பிறந்து பின்னாளில் உலகமே போற்றும் மிகச் சிறந்த கால்பந்து வீரராக இவர் உருவெடுத்துள்ளார் என்றால் அது சாதாரணமான விடயம் கிடையாது. உண்மையான திறமை இருந்தால் உலகம் நம்மை நிச்சயம் அங்கீகரிக்கும் என்பதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சான்றாகும்.
பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள் மற்றும் பல்வேறு இன்னல்கள் என்பவற்றைக் கடந்து இத்தகைய நிலைக்கு அவர் உயர்ந்திருக்கிறார் என்றால் அவருடைய திறமையும், அவருடைய விடாமுயற்சியும், அவருடைய தன்னம்பிக்கையுமே காரணமாகும். உலக அளவில் அதிக கோல்கள் (790 Goals) அடித்தவர்கள் பட்டியலில் முதலாம் இடத்திலும், இதுவரை 4 கோல்டன் ஷூக்களை பெற்றுள்ளதுடன், 5 முறை BALLON D’OR விருதையும் பெற்றுள்ளார். இவ்வாறு பல்வேறு சாதனைகளை கிறிஸ்டியானோ ரொனால்டோ குவித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு சாதனைகளை புரிந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை நிச்சயமாக உங்களை ஊக்குவித்து இருக்கும் என்று நம்புகின்றோம். நிச்சயமாக இது அவருடைய வாழ்வில் ஒரு சிறு பாகம் தான். நிச்சயம் இவருடைய வாழ்க்கையிலிருந்து படிப்பினை பெற்றுக் கொண்டு நீங்களும் உங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீங்களும் ஒரு வெற்றியாளராக நாளை உருவாகலாம். மீண்டும் ஒரு நல்ல சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்கள் இருந்து விடைபெறுகிறார் நன்றி.