INTRODUCTION
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே விரும்புகின்றான், தான் ஒரு பில்லியனராக வர வேண்டும் என்பதனை. நீங்கள் யாரிடமாவது சென்று நீங்கள் ஒரு பில்லியனர் ஆக வர விரும்புகின்றீர்களா? என கேள்வி எழுப்பினால் அதற்கு யாருமே இல்லை என்று கூற மாட்டார்கள். அந்தளவுக்கு ஒவ்வொரு மனிதனுக்குமான ஒரு பொதுவான ஆசைதான், தான் ஒரு பில்லியனராக வர வேண்டும் என்பது.
ஆனால் இன்று பல கோடிக்கணக்கான மக்கள் தன் எண்ணங்களின் மூலமாகவே பில்லியனராக வாழ்கின்றனரே தவிர செயற்பாட்டினால் பில்லியனராக ஆவதற்கான எந்த ஒரு முயற்சியையும் அவர்கள் செய்து பார்க்கவில்லை. அதற்குக் மிகப் பிரதானமான காரணம் அவர்களின் மனதை மிக இறுக்கமாக சூழ்ந்து கொண்டிருக்கின்ற பயம் தான்.
“அதைச் செய்தால் அதில் நான் தோற்று விடுவேன். இதைச் செய்தால் என்னிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும் நான் இழந்து விடுவேன். அவர் சொல்வதைக் கேட்டால் என்னை மற்றவர்கள் கேலி செய்வார்கள். இந்த விடயத்தை நான் செய்வது எனக்கு வெற்றியளிக்குமா”? என்று பலவிதமான கோணங்களில் எந்த ஒரு முயற்சியும் செய்து பார்க்காமலேயே அவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
“எவன் ஒருவன் தோல்வியினை சந்திப்பதற்கு விரும்பாதவளாக இருக்கின்றானோ நிச்சயமாக, அவனால் நிலையான வெற்றியை ஒருபோதும் பெற முடியாது” என்பது பல அறிஞர்களின் கூற்றாகவும், பிரபஞ்சத்தின் தவிர்க்க முடியாத விதியாகவும் இருக்கின்றது.
எனவே உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கின்ற தோல்விகள் தான் உங்களை நிலையான வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்பது மிகையாகாது. ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் உங்களுடைய இலக்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு அந்த இலக்கினை அடைந்து கொள்வதற்கான பயணமும் நீண்டதாகவே இருக்கும்.
1. YOU DON'T WAIT FOR HOLIDAYS
இதனை கேட்டதுமே உங்களில் பலரது முகம் மாறி இருக்கும். என்ன இது இதற்கும் நான் பில்லியனர் ஆவதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கும். ஆம் நிச்சயமாக இதற்கும் நீங்கள் பில்லியனர் ஆவதற்கும் சம்பந்தம் இருக்கின்றது.
தன்னுடைய இலக்கை அடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருப்பவர்களால் விடுமுறைக்காக காத்திருக்க முடியாது. அவர்கள் விடுமுறையை விரும்புபவர்களும் அல்லர். நீங்கள் விடுமுறையை விரும்புபவர்களாக இருந்தால் நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்கின்ற வேளையில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்பது தான் அர்த்தமாகும்.
நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற உங்கள் வேலையின் மீதான விருப்பமானது அதிகமாக இருந்தால் நீங்கள் ஒருபோதும் விடுமுறையை விரும்பமாட்டீர்கள். ஏனெனில் உங்களுடைய இலக்கை நீங்கள் மனதார விரும்புகின்றீர்கள்.
எந்தவொரு பில்லியனரும் விடுமுறையை விரும்புவதில்லை. ஏனெனில் அவர்கள் விடுமுறையை விட தான் செய்து கொண்டிருக்கின்ற வேலையினை அதிகம் விரும்புபவர்களாக இருக்கின்றனர்.
தன்னுடைய இலக்கினை முழுமையாக முடித்து அதன் பலனை அடைகின்ற வரைக்கும் தன் இலக்கு நோக்கியே கவனத்துடனயே நீங்கள் சென்று கொண்டிருப்பீர்கள். மாறாக விடுமுறைகளை எதிர்பார்த்தோ அல்லது களியாட்டங்களை எதிர்பார்த்தோ இருக்கமாட்டீர்கள்.
இன்று உலகில் வெற்றி பெற்ற பல பில்லியனர்களின் ஆரம்ப வாழ்க்கையினை நீங்கள் உற்று நோக்கினால், மிகுந்த கடின உழைப்புக்கு மத்தியில் தான் அவர்கள் இந்த இலக்கையும், இன்றைய அவர்களின் இடத்தினையும் அடைந்துள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியவரும். அவர்கள் யாருமே விடுமுறைக்காக ஏங்கியவர்கள் கிடையாது.
நான் வாரத்தில் ஐந்து நாள் வேலை செய்கிறேன். நான் செய்கின்ற வேலைக்கு ஏற்றாற்போல் சம்பளம் எனக்குக் கிடைப்பதில்லை. ஐந்து நாளும் வேலை செய்து என் உடல் மிகவும் களைப்படைந்துள்ளது என்று நீங்கள் யாராவது வார இறுதி நாட்களை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பீர்கள் ஆனால் உங்களால் நிச்சயமாக ஒருபோதும் பில்லியனராக முடியாது. ஒரு சாதாரண பட்ஜெட் வாழ்க்கையிலேயே உங்களது வாழ்க்கை கழிந்துவிடும்.
நிச்சயமாக நீங்கள் உங்கள் வாழ்வில் பில்லியனராக வர வேண்டும் என்றால் உங்களுக்கு என ஒரு இலக்கை வகுத்துக் கொண்டு அந்த இலக்கினை அடைவதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை முழு மூச்சாக செய்து அந்த இலக்கில் வெற்றி அடையும் வரை நீங்கள் போராட வேண்டும்.
அவ்வாறு போராடுகின்ற போது நீங்கள் எத்தகைய தோல்விகளைச் சந்தித்தாலும் சரி. எனவே விடுமுறைக்காக காத்திருப்பது மற்றும் அதனை விரும்புவது என்பதனை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கி விடுங்கள். நிச்சயமாக இந்தப் பண்பு உங்களை ஒரு பில்லியனராக எதிர்காலத்தில் மாற்றும்.
2. YOU SET IMPOSSIBLE GOALS
அடுத்ததாக நீங்கள் உங்கள் இலக்குகளை பெரிய இலக்குகளாக வையுங்கள். எந்தளவுக்கு எனில் நீங்கள் யார் என்பதை உங்களுடைய இலக்குகள் சொல்லும். உங்களுடைய இலக்குகள் மற்றவர்களைப் போன்று சாதாரண இலக்குகளாக இருந்தால் நீங்களும் அவர்களைப் போன்று சாதாரண மனிதர்களாக மாறிவிடுவீர்கள். மாறாக உங்களுடைய இலக்குகள் பெரியதாக அசாத்தியமான ஒரு இலக்காக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நீங்கள் ஒரு அசாத்தியமானவரே.
எப்போது மற்றவர்கள் உங்களுடைய இலக்குகளை இதை உன்னால் நிச்சயம் செய்ய முடியாது என்று சொல்கிறார்களோ அப்போது அதுதான் உங்களுடைய இலக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதேபோல் ஒரு விடயத்தை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இலக்குகளை ஒருபோதும் மற்றவர்களிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டாம்.
உங்களுக்கு நெருக்கமான ஒரு சிலரிடம் மட்டும் மிகவும் சூசகமாக உங்கள் இலக்கினை எத்திவைத்து அவர்களிடம் நீங்கள் கருத்து கேட்கலாம். அப்போது அவர்கள் உங்களிடம் இதுவா உன்னுடைய இலக்கு? இதை எவ்வாறு செய்து முடிக்க போகின்றாய்? இதை உன்னால் நிச்சயம் செய்ய முடியாது. என்று சொல்கின்ற அளவுக்கு உங்களுடைய இலக்குகள் பெரியதாக இருக்க வேண்டும்.
எப்போதும் நாம் வைக்கின்ற இலக்குகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும் இலக்காக இருக்குமானால் அது ஒரு சாதாரணமான இலக்கு தான். எப்போது அதை மற்றவர்கள் இதனைச் செய்வது கடினமானது என்று சொல்கிறார்களோ அப்போது உங்களுடைய இலக்காக அதனை நிர்ணயித்து கொள்ளுங்கள். ஏனெனில் அந்த இலக்கானது பெரிதாக உள்ளது என்பது அர்த்தமாகும்.
ஒருபோதும் நீங்கள் வைக்கின்ற இலக்கினை உங்களால் செய்ய முடியுமா? என்று நீங்களே சந்தேகம் கொண்டு விடாதீர்கள். ஏனெனில் அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களால் ஒருபோதும் அந்த இலக்கினை அடைய முடியாது. மற்றவர்கள் உங்கள் மீது சந்தேகம் கொள்ளலாம். மற்றவர்கள் உங்களால் செய்ய முடியாது என்று சொல்லலாம். ஆனால் நீங்கள் சொல்வது என்பது உங்களுடைய தன்னம்பிக்கையை இழக்கின்ற செயலாகும்.
எனவே உங்கள் இலக்குகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை உங்களால் செய்ய முடியும் என்று மனதார நம்பிக்கை வையுங்கள். உங்கள் இலக்குகளை நோக்கி பயணியுங்கள். நிச்சயம் உங்கள் இலக்கினை நீங்கள் அடைந்து கொள்வீர்கள். பில்லியனர்களுடைய எழுதப்படாத விதியாக இது இருக்கின்றது.
3. YOU DON'T REACT FAILURE
நமது இலக்கு நோக்கிய பயணத்தில் நாம் பல்வேறு தோல்விகளை சந்திக்க வேண்டி ஏற்படும். அவ்வாறு நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு தோல்வியையும் பாடமாக எடுத்துக் கொண்டு நமது இலக்கை நோக்கிய பயணத்தினை நாம் தொடர வேண்டும்.
அவ்வாறு அல்லாமல் தோல்விகளை பற்றி சிந்தித்து அதன் விளைவாக மனம் உடைந்து போனால் நிச்சயமாக நமது இலக்கை நோக்கிய பயணமானது நிரந்தர தோல்வியில் போய் முடிந்துவிடும்.
தோல்விகளே இல்லாத எந்த ஒரு நிரந்தரமான வெற்றியையும் இவ்வுலகில் நீங்கள் பார்க்க முடியாது. ஒருவன் தோல்வியே அடையாமல் வெற்றி அடைகிறான் என்றால் அவன் மிக விரைவாக அந்த வெற்றியின் பெறுமதியினை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தோல்விகள்தான் நமது வெற்றிக்கான உரமாகும். நீங்கள் அடைகின்ற வெற்றிகள் உங்களை உற்சாகப்படுத்தும். ஆனால் தோல்விகள்தான் உங்களை ஊக்கப்படுத்தும்.
உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் உங்களை வெறி கொண்டு பயணிக்க செய்வதும் இவ்வாறான தோல்விகள்தான். எனவே தோல்விகளை நேசியுங்கள். தோல்விகளை வெற்றி படிகளாக மாற்றுங்கள். தோல்விகளைக் கண்டு மனம் நொந்து உங்கள் முயற்சியை விட்டு விடாதீர்கள். ஒவ்வொரு சின்னச் சின்ன தோல்விகளும் ஒன்றாகி மிகப்பெரிய வெற்றி சிம்மாசனத்தில் உங்களை கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
அதேபோல் உங்கள் இலக்கு நோக்கிய பயணத்தில் நீங்கள் சிறுசிறு வெற்றிகளை அடைந்து கொள்ளலாம். அப்போது நீங்கள் எவ்வாறு தோல்விகளை கண்டு கொள்ளாமல் உங்கள் இலக்கினை 100% அடைந்து கொள்ளும் நோக்கில் பயணம் செய்தீர்களோ அது போன்றே இங்கும் நீங்கள் செயற்பட வேண்டும்.
சின்னச் சின்ன வெற்றிகளைக் கடந்து உங்களுடைய இலக்கை நோக்கி பயணியுங்கள். மாறாக சின்னச் சின்ன வெற்றிகளைக் கண்டு அதோடு உங்கள் முயற்சியை நிறுத்திக் கொள்ளாதீர்கள். உங்கள் உறுதியான இலக்கை அடையும் வரை இம்முயற்சி தொடர வேண்டும்.
4. YOU ARE HIGHLY PERSISTENT
இதுதான் உங்களுடைய நிரந்தர வெற்றிக்கான ஒரு அடிப்படை விடயமாகும். நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்கின்ற போது பல நெருக்கடிகளையும், தோல்விகளையும் சந்திக்க நேரிடும்.
அவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும் உங்களுடைய விடா முயற்சியினை நீங்கள் கொடுக்கின்ற போது அத்தகைய அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து உங்கள் வெற்றியை அடைந்து கொள்ள கூடியதாக இருக்கும்.
இதற்கு மாறாக நீங்கள் விடா முயற்சியினை அளிப்பதற்கு தவறுகின்ற போது நிச்சயமாக உங்களுடைய இலக்கு உங்களை விட்டும் தூரமாகி விடும். இன்று பில்லியனர்களாக இருக்கின்ற பலரும் தன்னுடைய விடா முயற்சியின் மூலமாக வெற்றி பெற்றவர்கள் தான்.
உங்கள் இலக்கினை அடைந்து அதன் 100% பலனை நீங்கள் சுவைக்கின்ற வரை விடாமுயற்சியுடன் நீங்கள் செயற்பட வேண்டும். நீங்கள் தோல்விகளைக் கண்டு அச்சப்பட தேவையில்லை.
நீங்கள் உங்கள் இலக்கினை முழுவதுமாக அடைந்து கொள்ளும் வரை உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். நிச்சயமாக இந்த விடாமுயற்சி உங்களை ஒரு பில்லியனராக மாற்றும்.
5. YOU ALWAYS ASK WHAT'S NEXT?
இறுதியானதும் மிக முக்கியமானதுமான படி இதுவாகும். ஏனெனில் இங்குதான் பலர் மாட்டிக்கொள்கின்றனர். தன்னுடைய இலக்கை நோக்கி பயணிக்கின்ற போது ஒரு சிறு வெற்றியினை அல்லது இலக்கின் ஒரு பகுதியினை அடைந்து கொள்கின்றபோது மனதளவில் அதிகமாக உற்சாகமடைந்து அல்லது சந்தோஷப்பட்டு அந்த நிலையினை கொண்டாடுகின்றோம். இதன் விளைவு நமது இறுதி இலக்கினை முற்று முழுதாக அடைவதில் இருந்து சற்று தாமதிக்கின்றோம்.
உதாரணமாக ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் இருந்தால் நீங்கள் விளையாடுகின்ற ஒரு மேட்சில் சதம் அடிப்பது உங்களுடைய இலக்காக இருக்கின்றது என வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் அரைசதம் கடந்து விட்டீர்கள். அப்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி ஒன்று ஏற்படும் அது இயல்பானதே.
ஆனால் அந்த மகிழ்ச்சியின் விளைவாக நீங்கள் அதிகமாக அந்த வெற்றியினை கொண்டாடினீர்கள் என்றால் உங்களால் சதத்தை நோக்கி செல்வது சற்று கடினமாக இருக்கும். அவ்வாறு இல்லாது அரைசதத்தை கடந்த பின்னர் சதத்தை நோக்கி உங்கள் கவனத்தை முற்று முழுதாக செலுத்தினீர்கள் என்றால் உங்களால் உங்களுடைய இறுதி இலக்காகிய சதத்தினை அடைந்து கொள்ள முடியும்.
எனவேதான் உங்கள் இறுதி இலக்கினை அடைவதற்கு முன்னர் எத்தகைய வெற்றியினை நீங்கள் கண்டாலும் அதையெல்லாம் தாண்டி அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று உங்கள் இலக்கினை முற்று முழுதாக அடைகின்ற வரை நீங்கள் செயற்பட வேண்டும். இல்லையென்றால் உங்களது இறுதி இலக்கை அடைகின்ற காலம் அதிகரிக்கலாம் அல்லது அந்த இலக்கிலிருந்து நீங்கள் திசை திருப்பபடலாம்.
FINALLY
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 5 அறிகுறிகள் மிக மிக முக்கியமானவையாகும். இந்த ஐந்து அறிகுறிகளும் உங்களிடம் இருந்தால் நிச்சயமாக இவை உங்களை ஒரு பில்லியனராக மாற்றும். ஏனெனில் அத்தகைய 5 பண்புகளும் பில்லியனர்கள் இடம் இருக்கக் கூடிய பண்புகளாகும். நீங்கள் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
அத்தகைய பில்லியனர்கள் யாருமே விடுமுறைக்காக காத்திருப்பதில்லை. அவர்களுடைய இலக்குகளை நீங்கள் உற்றுக் கவனித்தால் அது மற்றவர்களால் அடைய முடியாத அசாதாரணமான இலக்காகவே இருக்கும். அவர்கள் ஒருபோதும் தோல்விகளைக் கண்டு அஞ்சுவதில்லை. அதே சமயத்தில் சிறு சிறு வெற்றிகளை கண்டு அதன் உற்சாகத்தினால் தன்னுடைய இலக்கு நோக்கிய பயணத்தில் இருந்து சற்றும் அவர்கள் தடுமாறுவது இல்லை.
அதே சமயம் தன்னுடைய இலக்கை நோக்கிய பயணத்தில் எத்தகைய தடைகள் வந்தாலும், அத்தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்ததோடு தன் விடா முயற்சியினை எந்த ஒரு நிலையிலும் விட்டுக் கொடுத்தது இல்லை. தன் இலக்கை நோக்கிய பயணத்தில் பல்வேறு தற்காலிகமான வெற்றிகளை அவர்கள் குவித்தாலும் தன்னுடைய இலக்கை அடையும் வரை அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற ஒரு கேள்வி உடனேயே அவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.
எனவே இந்த அறிகுறிகளை முடிந்தவரை உங்களுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். இதில் ஏதாவது பண்புகள் உங்களிடம் இல்லாமல் இருந்தால் அவற்றை முழு கவனத்தோடு முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக இந்த பண்புகள் உங்களை ஒரு பில்லியனராக மாற்றும். நீங்கள் ஒரு பில்லியனராக உங்கள் வாழ்வில் வருவதற்கு Tamil Motivations சார்பாக வாழ்த்துக்கள். நன்றி..
-END-