Avoid These 8 Habits to Become Successful in Your Life - Self Development Tips in Tamil

 

INTRODUCTION

இவ்வுலகிலுள்ள அனைத்து மக்களும் தான் நினைக்கின்ற இலக்குகளை அடைந்து தனது வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு நினைக்கின்றவர்கள் எல்லோரும் தன்னுடைய வாழ்வில் வெற்றி பெறுகிறார்களா? என்று பார்த்தால் நிச்சயமாக கிடையாது. நூற்றுக்கு 95 சதவீதமானவர்கள் அவ்வாறு வெற்றி பெறுவதில்லை.


வெறும் 5 சதவீதமானவர்கள் மட்டுமே இவ்வுலகில் வெற்றியாளர்களாக உருவாகின்றனர். ஏன் இந்த நிலை? தன் வாழ்வில் Successful Person ஆக ஒருவர் வருவது என்பது அவ்வளவு கடினமான ஒரு காரியமா? அல்லது ஒரு சிலராலேயே முடியுமான காரியமாக இருக்கின்றதா? என்றால் அது கிடையாது. 


அப்போது ஏன் இவ்வளவு பெரும்பான்மையானவர்கள் தன் வாழ்வில் தோல்வியாளர்களாக இருக்கின்றனர்? ஏன் அவர்களுக்கு வெற்றியை சுவைப்பது  மிக கடினமாக இருக்கின்றது. இதற்கான விடையினை மிகத் தெளிவாக ஆராய்ந்தோமேயானால், அதற்கு அவர்கள் தங்களுடைய வாழ்வில் தொடர்ச்சியாக செய்து வருகின்ற சில தவறுகள் தான் காரணம்.


அதாவது தங்கள் வாழ்வில் தொடர்ச்சியாக சில செயற்பாடுகளை செய்து வருகின்றனர். இத்தகைய அவர்களுடைய செயற்பாடுகள் அவர்களை தொடர்ந்து தோல்வி நிலைமைக்கு கொண்டு செல்கிறது. வெற்றியின் அருகில் இவர்கள் நெருங்கினாலும் இத்தகைய அவர்களது பண்புகள் வெற்றியிலிருந்து அவர்களை மிக தூரமாக்கி அவர்களை பிரித்து விடுகின்றது. 


Avoid These 08 Habits to Become Successful in Your Life - Self Development Tips in Tamil


அத்தகைய ஒருவரை வெற்றியிலிருந்து தூரமாக்கி தோல்வி படுகுழிக்கு கொண்டு செல்கின்ற மிக மோசமான, உங்கள் வாழ்வில் நீங்கள் நிச்சயம் வெற்றியடைய வேண்டுமென்றால் தவிர்க்க வேண்டிய 08 பண்புகளை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம் (Please! Avoid these 8 habits to become Successful in your life).


இங்கு குறிப்பிடுகின்ற இந்த 08 பழக்கவழக்கங்களில் ஒன்றேனும் உங்களிடம் இருந்தால் நிச்சயமாக நீங்கள் அதனை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் வாழ்வில் வெற்றி அடைவதற்கு அது மிகப்பெரும் தடையாக அமையும். சரி வாருங்கள் அத்தகைய பண்புகள் எவை என்று பார்ப்போம்.

1. அதிகாலை தாண்டியும் தூங்குதல் 

யாரொருவர் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னரே தூக்கத்திலிருந்து எழும்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயம் தன் வாழ்வில் வெற்றி அடைவார் என்பது பல வெற்றியாளர்களின் கருத்தாகவும், வெற்றிக்கான சூத்திரமாகவும் இருக்கின்றது. ஏனெனில் அதிகாலை 5 மணிக்கு முன்னரே எழும்புவது என்பது அன்றைய நாளில் நாம் செய்ய இருக்கின்ற அனைத்து காரியங்களையும் இலகுவாகவும் மிக எளிமையாகவும் செய்து முடிப்பதற்கு மிக உதவியாக இருக்கும்.


உதாரணமாக நீங்கள் பறவைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவை அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுந்து தன்னுடைய அன்றைய நாளுக்கான இறையை தேடும் வேலையில் இறங்கிவிடும். இவ்வாறு எல்லா பறவைகளும் அதிகாலையில் எழுந்து தன் இலக்கினை தேடி கொண்டிருக்கையில் மனிதர்கள் மட்டும் அதிகாலை தாண்டி, சூரியன் உதித்ததன் பின்னரும் தூங்குகின்றனர். இன்னும் ஒரு சிலர் நண்பகல் வரை தூங்குகின்றனர்.


இவ்வாறு காலையில் அதிக நேரம் தூங்குபவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைய முடியும். அவர்களுடைய பெரும்பாலான நாட்களானது தூக்கத்திலேயே கழிந்துவிடும். பின்னர் எவ்வாறு அவர்கள் வெற்றியை நோக்கிச் செல்வது? இலக்குகளை அடைவதற்கான சரியான திட்டத்தினை வகுத்து அதன்படி தன் நேரத்தை செலவழித்து வெற்றியடைவது? ஒருபோதும் அவர்களால் வெற்றியடைய முடியாது. 


ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுவது என்பது உங்களுடைய வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காவது அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுவதற்கு முயற்சி செய்து பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் இப்போது இருக்கின்ற நிலைமையையும் இதற்கு முன்னர் நீங்கள் இருந்த நிலைமையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.


நிச்சயம் அதில் பெரும் மாற்றத்தை உணர்வீர்கள். உங்களுடைய என்ன ஓட்டமானது மாறி இருக்கும். இதுவரை நீங்கள் அறிந்திராத பல விடயங்களை, பல ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அந்தளவுக்கு அதிகாலையில் எழுவது என்பது பெரும் மாற்றத்தினை உங்கள் மத்தியில் ஏற்படுத்தும். 

2. எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருத்தல் 

ஒரு மனிதர் எப்போதுமே, தான் எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அது என்னால் முடியாது. அதை நான் செய்ய மாட்டேன். அதனை செய்வது மிகவும் கடினமானது என்று எதிர்மறையாகவே பேசிக்கொண்டிருந்தார் என்றால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டவர் ஆவார். அவருடைய மனமே அவரால் இந்த விடயத்தை செய்ய முடியும் என்று நம்ப முடியாதவிடத்து எப்படி அவரால் அதனை செய்ய முடியும்.


நாம் செய்கின்ற விடயம் எவ்வளவு கடினமாக, எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதனை நம்மால் செய்ய முடியும் என்று உறுதியாக மனதில் நம்பிக்கை கொள்கின்ற போதுதான் அதனை முற்று முழுவதுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கேனும் எம்மால் செய்ய முடியுமாக இருக்கும். இன்று பலரிடம் அதிலும் குறிப்பாக வளர்ந்து வருகின்ற இளைஞர்களிடம் இருக்கின்ற ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் எப்போதுமே எதிர்மறையான எண்ணங்களை சுமந்து கொண்டிருத்தல்.


எதிர்மறையான எண்ணங்கள் ஒருபோதும் உங்களை வெற்றியாளனாக உருவாக்காது. அவை உங்களை மீண்டும் மீண்டும் தோல்வியானாகவே மாற்றிக் கொண்டிருக்கும். தங்கள் வாழ்வில் வெற்றியடைந்த எந்த ஒரு வெற்றியாளனும் எதிர்மறையான எண்ணங்களை கொண்டவனாக இருக்க மாட்டான்.


மாறாக தன்னுடைய எதிர்மறையான எண்ணங்களை சுக்குநூறாக்கி அதனை வெற்றி அடைந்தவனாககவே இருப்பான். ஒரு விடயத்தை செய்து பார்க்காமலேயே அது என்னால் முடியாது என்று கூறுபவனைவிட மிகப்பெரும் கோழை இவ்வுலகில் உண்டா? எனவே உங்களுக்குள் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், நேர்மறையான எண்ணங்களையும் விதையுங்கள்.

3. நேரத்தை விரயம் செய்தல்

நேரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்திருக்கின்ற மிகப் பெரும் அருட்கொடையாகும். உலகில் உள்ள எந்த ஒரு மனிதனாலும் கடந்த காலத்தினை திரும்பப் பெற முடியாது. ஏன் இந்த பதிவினை வாசித்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் இதற்கு முந்திய ஒரு நிமிடத்தை அல்லது ஒரு செக்கன்டை கூட உங்களால் திரும்பப் பெற முடியாது.


அந்தளவுக்கு மிகவும் பற்றாக்குறையாக இருக்கின்ற மிக முக்கியமான வளம்தான் இந்த நேரம். ஆனால் இன்று நம்மில் பலர் தன்னுடைய நேரத்தை வீணாகவும், பயனற்ற முறையிலும் கழித்துவிட்டு பின்னர் எனக்கு நேரமில்லை, காலம் இல்லை என்று சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றனர். 


முடிந்தவரை உங்களுடைய நேரங்களை உங்களுடைய இலக்குகளுக்காகவும், உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் குடும்பம் போன்றவற்றிற்காக பயன்படுத்துங்கள். தேவை இல்லாத வகையில் எந்தவித பயனும் தராத நடவடிக்கைகளில் உங்களுடைய பெறுமதியான நேரங்களினை செலவழிக்காதீர்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்கள், Video Games விளையாடுதல், Web Series பார்த்தல் போன்ற பயனற்ற விடயங்களிலிருந்து உங்களுடைய நேரத்தினை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


4. சரியான திட்டமிடல் இல்லாமை

இன்றைய பல ஆரம்ப கட்ட முயற்சியாளர்கள் தோல்வியடைவதற்கு இது மிகப்பெரும் காரணியாக இருக்கின்றது. அவர்கள் தன்னுடைய முயற்சியினை தன்னம்பிக்கையோடும், நேர்மறையான சிந்தனையுடனும் செய்து வருகின்ற போதிலும் தோல்வி அடைகின்றனர். இதற்கு பிரதான காரணம் என்னவெனில் சரியான திட்டமிடல் ஒன்று இல்லாமல் முயற்சியினை மேற்கொள்வதாகும். முறையான திட்டமிடல் இன்றி நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்கின்ற போது அதில் உங்களால் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். 


முதலில் நீங்கள் நீண்டகாலத்தில் அடைய நினைக்கின்ற சரியான, திட்டவட்டமான இலக்கு எது என்பதனை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அதனை எவ்வாறு நான் அடையப் போகிறேன் என்பதை குறுங்கால இலக்குகளின் வழியாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இதனை மிகத்தெளிவாக நோட் ( Notebook) ஒன்றில் வரிசையாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அதனை ஒவ்வொரு நாள் தூங்கச் செல்வதற்கு முன்பும், காலையில் எழுந்ததற்கு பின்னும் உரக்க வாசியுங்கள்.


இவ்வாறு செய்வது உங்கள் ஆழ்மனதில் உங்கள் இலக்குகள் பதிவதற்கு உதவியாக இருக்கும்.  இவ்வாறு நீங்கள் அடைய நினைக்கின்ற இலக்குகளை திட்டமிடல் செய்த பின்னர் அதில் குறிப்பிட்ட ஒவ்வொரு படிமுறையிணையும் அடைந்து கொள்வதற்காக உங்களுடைய நேரத்தை செலவழியுங்கள்.


5. தாழ்வுமனப்பான்மை 

தாழ்வு மனப்பான்மை என்பது மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு அவர்களைவிட குறைந்தவர்களாக தன்னை கருதிக் கொள்வதாகும். உண்மையிலேயே இது மட்டும்தான் தாழ்வு மனப்பான்மையா என்று பார்த்தால் ஒரு விடயத்தினை பயத்தின் காரணமாக செய்ய மறுப்பதும் தாழ்வு மனப்பான்மைதான். முதலில் உங்களை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும். அவ்வாறு உங்களை நீங்கள் உறுதியாக நம்புகின்ற போதுதான் எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்ய முடியும்.


அவ்வாறில்லாமல் உங்களை நீங்களே சந்தேகம் கொண்டால், என்னால் இதை செய்வது கடினமானது என்று நீங்களே முடிவெடுத்து முத்திரை பதித்துக் கொண்டால் நிச்சயம் உங்களால் அவ்விடயத்தினை செய்வதென்பது கடினமாகவே இருக்கும். எனவே உங்களை நீங்களே தரக்குறைவாவோ அல்லது தாழ்வாகவோ நினைத்துக் கொள்ளாதீர்கள். 


உங்களால் முடியும். நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். நீங்கள் வெற்றியடைய பிறந்தவர்கள். உங்களால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியும். நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள். இப்பிரபஞ்சத்தில் பிறந்த யாருமே எதற்கும் முடியாதவர்களாக பிறக்கவில்லை. இன்று வெற்றியாளர்களாக உங்கள் முன் இருக்கின்றவர்கள் அனைவரும் உங்களை போன்ற சாதாரண மனிதர்களே. அவர்களுக்கு என்று வானத்திலிருந்து எதுவும் வரவில்லை.


அவர்கள் இந்நிலையை அடைவதற்கு பல்வேறு அவமானங்களையும், லிகளையும் எதிர்கொண்டவர்கள். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி தன்னுடைய அயராத  முயற்சியின் காரணமாக அவர்கள் இந்த நிலையை அடைந்துள்ளன.ர் எனவே நீங்களும் முயற்சி செய்யுங்கள் முதலில் உங்களை நம்புங்கள். தாழ்வுமனப்பான்மையை உங்களிடமிருந்து தூக்கி எறியுங்கள். 

6. மனம் எதற்கும் இலகுவில் அடிமையாதல் 

இங்கு கூறப்படுகின்ற விடயம் என்னவென்றால் நம்முடைய மனமானது எந்த ஒரு விடயத்தையும் சார்ந்து (Addict)  இருக்கக் கூடாது. அதாவது இந்த விடயம் இருந்தால் தான் என்னால் தொடர்ச்சியாக கொண்டு செல்ல முடியும் என்ற நிலைக்கு நாம் ஆகிவிடக் கூடாது.


இன்று பல இளைஞர்கள் வீடியோ கேம்ஸ் (Video Games) மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி (Addict) உள்ளனர். அதிலிருந்து மீண்டு வருவது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இதனை அவர்களுக்கு எடுத்துக் கூறினாலும் அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. மாறாக நமக்கு எதிராக வாதாடுகின்றனர். 


இந்த பதிவினை வாசித்துக் கொண்டு இருக்கின்ற நீங்கள் வீடியோ கேம்ஸ் மற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய சில பாதகமான செயற்பாடுகளுக்கு Addict ஆகி இருப்பீர்கள் என்றால் நிச்சயமாக அதிலிருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள். இது இருந்தால்தான் என்னால் மற்ற விடயங்களில் ஈடுபட முடியும் என்கின்ற அளவுக்கு அதற்கு நீங்கள் Addict ஆக வேண்டாம். வீடியோ கேம்ஸ் விளையாடுவதில், சமூக வலைத் தளங்களைப் பார்வையிடுவதில் அல்லது மற்ற விடயங்களில் ஈடுபடுவதில் தவறில்லை. ஆனால் இது இருந்தால்தான் என்னால் வாழ முடியும் என்கின்ற நிலைக்கு நீங்கள் ஆகிவிடக்கூடாது.

7. தொலைநோக்குப் பார்வை இன்மை

இன்று யாரை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் தான் செய்கின்ற செயலுக்கான முடிவினை மிக விரைவாக எதிர்பார்க்கின்றனர். நான் இந்த விடயத்தை செய்தால் அதற்கான பதில் எனக்கு இன்றே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு விடயமாகும்.


நமது இலக்கு பெரிதாக இருந்தால் நிச்சயமாக அதற்காக எடுத்துக் கொள்கின்ற காலமும் பெரிதாகவே இருக்கும். அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் நாம் அதிகமான தோல்விகளையும், அவமானங்களையும் சந்திக்க நேரிடும். அந்த அவமானங்களும், தோல்விகள் தான் நம்மை ஒரு திடகாத்திரமான, உறுதியான வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்லும்.


ஆனால் இந்த விடயம் தெரியாமல் பலர் ஒரு தொழிலை ஆரம்பித்து விட்டு அதற்கான லாபத்தினை மறுநாளோ அல்லது ஒரு வாரம் கழித்தோ அல்லது ஒரு மாதத்திலோ எதிர்பார்க்கின்றனர். இன்னும் சிலர் ஒரு சில தோல்விகளை மட்டுமே சந்தித்து விட்டு இதில் நான் தோற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னால் பயணிக்க முடியாது என்று தன்னம்பிக்கை இழக்கின்றனர்.


ஒரு விடயத்தினை நீங்கள் உங்கள் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். வெற்றி என்பது பல தோல்விகளை சந்தித்ததன் பின்னரே உங்களிடம் வந்துசேரும். அதேபோல் அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொள்ளும். எனவே பொறுமையுடன் இருங்கள். நீண்ட கால இலக்குகளை வையுங்கள். தொலைநோக்குப் பார்வையுடையவராக நீங்கள் இருக்க வேண்டும் அப்போது தான் உங்களால் வெற்றியடைவது இயலுமானதாக இருக்கும்.

8. உடற்பயிற்சி செய்யாமை 

உண்மையில் உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கு மாத்திரமன்றி நமது எதிர்கால வெற்றிக்கும் பங்களிப்பு செய்யும். ஏனெனில் நாம் நமது உடலையும், உளத்தையும் நன்றாக வைத்திருந்தாலே நம்மால் நம்முடைய இலக்குகளை அடைந்து கொள்ள முடியுமாக இருக்கும். நமது உடலோ அல்லது உளமோ சீரற்ற நிலையில் இருந்தால் நிச்சயமாக நம்மால் இலக்கை நோக்கிப் பயணிப்பது கடினமான ஒன்றாக இருக்கும். 


தினமும் நீங்கள் உடற்பயிற்சி செய்கின்ற போது உங்களுடைய உடல் ஆரோக்கியம் பெறுவதோடு உங்கள் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். உண்மையில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்ட ஒருவரை நீங்கள் பார்த்தால், அவர் உடலளவில் வலிமையாகவும், மனதளவில் ஆரோக்கியமானவராகவும் காணப்படுவார்.


எத்தகைய இறுக்கமான சூழ்நிலைகள் வந்தாலும் சிறந்த தீர்மானங்களை எடுத்து பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் அவரிடம் காணப்படும். எனவே Weekly Minimum 5 நாட்களாவது Exercise செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். Per Day Minimum 30 Minutes ஆவது நீங்கள் Exercise செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

FINALLY

இங்கே மேலே குறிப்பிடப்பட்டுள்ள 08 பண்புகளும் மிக மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். (Avoid these 8 habits to become Successful in your life) இவற்றில் ஏதாவது பண்பு உங்களிடம் இருந்தால் அவற்றினை மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நிச்சயமாக அவை நீங்கள் வெற்றியடைவதை தடுத்திட முதலாவது தடையாக இருக்கும். அதே போல் உங்கள் வாழ்வினை திசைமாற்றுகின்ற ஒரு விடயமாகவும் அது காணப்படும். 


நிச்சயமாக உங்களுக்கென்று ஒரு இலக்கினை நிர்ணயித்து அதை நோக்கி முழு கவனத்தோடு செயல்படுங்கள். நிச்சயம் உங்களால் வெற்றி பெற முடியும். நீங்கள் உங்கள் இலக்கினை அடைந்து சாதனையாளர்களாக வருவீர்கள். உங்கள் மீது அதிகம் நம்பிக்கை வையுங்கள். தோல்விகளை வெற்றிக்கான ஏணியாக நினையுங்கள். ஒருபோதும் விடாமுயற்சியை விட்டு விடாதீர்கள். பொறுமையுடன் காத்திருங்கள். நிச்சயம் உங்களை வெற்றியானது அணைத்துக் கொள்ளும். 

                                                                     -END-




Post a Comment

Previous Post Next Post