10 Signs That You Are Wasting Your Life in Tamil - Self Development Tips in Tamil

 

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?

இன்று பலர் தன்னுடைய வாழ்க்கையை வீணடித்த வண்ணமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் தங்களுடைய வாழ்வினை வீணடித்து வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அவ்வாறு ஒரு மனிதர் தன்னுடைய வாழ்வினை வீணடித்துக் கொண்டு இருக்கின்றார் என்பதற்கு 10 அறிகுறிகளை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.


நிச்சயமாக இந்தப் பதிவில் குறிப்பிடுகின்ற விடயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இங்கு கீழே குறிப்பிடுகின்ற அறிகுறிகள் யாதேனும் உங்களிடம் இருந்தால் அவற்றினை மாற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை அழகானதாகவும், வெற்றிகரமான ஒன்றாகவும் அமையும். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம். 


10 Signs That You Are Wasting Your Life in Tamil Self Development Tips in Tamil

1. அதிக நேரம் கைபேசி (Mobile Phone) பயன்படுத்துவது.

இன்று நம்மில் பலர் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகிவிட்டனர். ஒரு நாளில் மொத்தமாக மூன்றில் இரண்டு பங்கை விட அதிகமான நேரத்தினை ஸ்மார்ட் போன்களுக்கு பயன்படுத்துகின்ற பல ஆண்களும், பெண்களும் இருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக எந்தவித பயனும் தராத வீடியோ கேம்ஸ் விளையாடுதல், சமூக வலைத்தளங்களில் பல மணித்தியாலங்களாக வீணான முறையில் அரட்டை அடித்தல், ஆபாச வலைதளங்களை பார்த்தல் என பல்வேறு வகையில் தன்னுடைய பெறுமதிமிக்க நேரத்தினை இவ்வாறான வீணான செயல்களில் ஈடுபடுவதற்கு உபயோகம் செய்கின்றனர்.

இவ்வாறு எந்தவித இலக்கும் இல்லாமல் தன்னுடைய பெருமதியான நேரத்தை வீணாக்குவது என்பது மிகவும் மன வருத்தத்துக்குரிய விடயமாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சுமார் 5-6 மணித்தியாலங்களுக்கு மேல் ஒரு நாளில் Smartphone பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

10 சதவீதத்திற்கும் மேலான மக்கள் 7 மணித்தியாலங்களுக்கு மேல் கைப்பேசிகளில் நேரத்தை வீணடிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. அத்தோடு ஒரு நாளில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தை Smartphoneக்கு ஒதுக்குபவர்களின் எண்ணிக்கை 5 சதவீதமாக உள்ளது. இந்த ஐந்து சதவீத மக்கள் தொகையினரை தவிர மற்ற அனைவரும் ஸ்மார்ட்போன் பாவனைக்காக தன்னுடைய ஒரு நாளில் பெரும்பாலான நேரங்களை ஒதுக்குகின்றனர்.

இங்கு நாம் ஸ்மார்ட்போன் பாவிப்பது என்பது கூடாத செயல் என்றோ, அதனை பாவிக்க கூடாது என்றோ கூற வரவில்லை. முடிந்தவரை நீங்கள் பாவிக்கின்றதை உங்களுக்கு பயனுள்ளதாகவும், உங்கள் எதிர்காலத்திற்கு உபயோகம் அளிக்கக் கூடியதாகவும் பயன்படுத்துங்கள். உங்களுடைய பொழுதுபோக்குக்காக நீங்கள் ஒரு மணி நேரத்தினை ஸ்மார்ட்போனில் கழிக்கலாம். அதில் தவறில்லை.

ஆனால் தேவையற்ற உங்கள் எதிர்காலத்தை பாதிக்கின்ற, தீங்கான விடயங்களை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி செய்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துகின்ற போது உங்களால் நிச்சயம் வாழ்வில் வெற்றிபெற முடியும்.  

2. Social Media வில் அதிக நேரம் செலவழிப்பது.

இன்று சோசியல் மீடியா (Social Media) இல்லாதவர்கள் என்று எவருமே இருக்க முடியாது. அனைவருக்கும் குறைந்த பட்சம் ஒரு சோஷியல் மீடியாவில் ஆவது கணக்கு (Account) இருக்கும். அந்த அளவுக்கு அதனுடைய பயன்பாடும், தேவைப்பாடும் அதிகரித்து விட்டது என்றே கூற வேண்டும்.

சமூக வலைத்தளங்களுடைய பரிணாம வளர்ச்சியானது, இன்று பெரும்பாலான சமூக வலைதளங்களை பயன்படுத்தி பணம் உழைக்க கூடிய Online Money Earning Platform வாய்ப்பினையும் அவை தந்துள்ளன. அந்த அளவுக்கு அதனுடைய முக்கியத்துவமானது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இவ்வாறு பெறுமதிமிக்க மற்றும் முக்கியத்துவம் உள்ள இந்த சமூக வலைத்தளங்களை நாம் நமது வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நிச்சயமாக நம் வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்தும். முடிந்தவரை அவற்றை பயனுள்ளதாகவும் உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கின்ற ஒரு ஊடகமாகவும் பயன்படுத்துங்கள்.

அவ்வாறு இல்லாது தீய மற்றும் உங்கள் நேரத்தை வீணடிக்ககூடிய செயல்களுக்காக சமூக வலைத்தளங்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை சோசியல் மீடியாக்களை நல்ல விடயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக பயன்படுத்துங்கள். உங்கள் அறிவை வளர்க்கின்ற கல்வி சார்ந்த மற்றும் உங்கள் துறைசார்ந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பார்வையிடுங்கள்.

YouTube, Google போன்ற இணைய தளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துங்கள். ஏனெனில் அதில் உங்கள் வாழ்வை செம்மைப்படுத்த கூடிய பல நல்ல விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. அதே போன்று Facebook, Whatsapp போன்றவற்றில் தேவையற்ற, ஆபாசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். LinkedIn, Twitter போன்ற சமூக வலைத்தளங்களையும் நல்ல முறையில் பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள். 

ஏனெனில் சமூக வலைத்தளங்களில் தான் நமது வாழ்வை வளப்படுத்தக்கூடிய அதிகளவான வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எனவே அவற்றை உரிய முறையில் பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

அவ்வாறு இல்லாது அதனை உங்கள் நேரத்தை வீணடிக்கின்ற விடயமாகவோ அல்லது ஆபாசம், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலோ பயன்படுத்தினீர்கள் என்றால் நிச்சயமாக சமூக வலைத்தளங்கள் உங்கள் வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை கொண்டுவரும்.

3. Web Series பார்ப்பது , தொலைக்காட்சி பார்ப்பது.

இன்றைய சமூகத்தில் பரவிக் கிடக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால் வெப்சீரிஸ்களை (Web Series) அதிகளவில் பார்வையிடுவது மற்றும் தொலைக்காட்சியில் அதிக நேரத்தினை செலவிடுவது.

ஆண்களைப் பொருத்தவரையில் அவர்கள் வெப்சீரிஸ்களை அதிகம் பார்ப்பதையும், பெண்கள் தொலைக்காட்சிகளில் அதிகளவில் தொடர் நாடகங்களை (Drama Serial) பார்வையிடுவதற்காக நேரம் செலவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

வாரத்திலோ அல்லது மாதத்திலோ ஒரு சில மணி நேரங்களை வெப்சீரிஸ்களை பார்ப்பதற்கும், தொலைக்காட்சிகளில் நேரம் செலவிடுவதற்கும் ஒதுக்குவது என்பது தவறான விடயமல்ல. ஆனால் ஒரு நாளின் பெரும்பகுதியை இதற்காகவே ஒதுக்குவது என்பது உங்கள் நேரத்தை நீங்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். 

இவ்வாறு வெப்சீரிஸ்களை அதிகம் பார்ப்பதனை மற்றும் தொலைக்காட்சிகளில் அதிக நேரம் செலவிடுவதை குறைத்து கொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்வின் இலக்குகளை அடைவதற்காக, அதற்காக சிந்திப்பதற்காக உங்கள் மூளை ஆயத்தமாகிவிடும்.

மாறாக வெப்சீரிஸ்களை அதிகம் பார்ப்பதையும் தொலைக்காட்சிகளில் பல மணி நேரங்களை செலவிடுவதையும் உங்களால் விட முடியாது என்றால் நீங்கள் உங்கள் வாழ்வை வீணடித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என்பது அர்த்தமாகும்.

4. பகலில் உறங்குவது, இரவில் உறங்காமல் இருப்பது.

இன்று பல இளைஞர்கள் மத்தியில் இருக்கின்ற ஒரு தவறான விடயம் என்னவென்றால் பகலில் உறங்குவதும் இரவில் உறங்காமல் இருப்பதும் ஆகும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்வது என்பது மிக மோசமான பக்கவிளைவுகளை (Side Effects) ஏற்படுத்தும்.

இரவில் ஒரு மனிதன் தூங்குகின்ற போதுதான் அவனது உடலும் அவனுடைய மனதும் சாந்தி அடைகின்றது. வளர்ந்த ஒருவர் குறைந்தபட்சம் 5 தொடக்கம் 6 மணித்தியாலங்களாவது இரவில் தூங்க வேண்டும். அதற்கு குறைவாகத் தூங்குவது என்பது மனதளவில் பல்வேறு நோய்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.

இன்று பல்வேறு இளைஞர்களும் வயது வந்தவர்களும் பகல் முழுக்க தூங்கி விட்டு பின்னர் இரவு முழுக்க விழித்துக்கொண்டு வீடியோ கேம்ஸ் விளையாடுதல், சோசியல் மீடியாக்களில் அதிக நேரங்களை செலவழித்தல் போன்ற வீணான காரியங்களை செய்து கொண்டிருக்கின்றனர்.

அதன்பின்னர் அதிகாலை வேளையில் மீண்டும் உறங்கச் செல்கின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக சுழற்சி முறையில் செய்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் நீங்கள் இருந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது அர்த்தமாகும். 

5. அதிக கேம்ஸ் கைபேசியில் விளையாடுவது.

இன்றைய பல இளைஞர்கள் மத்தியில் பரவிக் கிடக்கின்ற போதையான விடயம் என்னவென்றால் Video Games ஆகும். இதற்காகவே பல மணி நேரங்களை அவர்கள் செலவிடுகின்றனர். குறிப்பாக இரவு முழுக்க விழித்திருந்து வீடியோ கேம்ஸ் விளையாடுகின்றனர். பின்னர் அதிகாலை வேளையில் மீண்டும் தூங்க செல்கின்றனர்.

எந்தளவுக்கு என்றால் பணம் கட்டி வீடியோ கேம்ஸ் விளையாடும் அளவுக்கு இன்றைய இளைஞர்கள் மத்தியில் இது தீராத போதையாக மாறிவிட்டது. இதனால் சில நாடுகள், குறிப்பிட்ட சில வீடியோ கேம்ஸ்களை அந்நாட்டில் தடைசெய்துள்ளது. 

என்னதான் தடை செய்தாலும் அவற்றை விளையாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அதற்காக தன் பெற்றோர்களிடம் சண்டை போட்டு விளையாடுகின்றளவுக்கு அவர்கள் இதற்கு Addict ஆகியுள்ளனர்.

இவ்வாறு நீங்களும் வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்களாக இருந்தால், உங்களால் முடிந்தால் அவற்றை முற்றுமுழுதாக விட்டுவிடுங்கள். அவ்வாறு முடியவில்லையெனில் அவற்றினை விளையாடுகின்ற நேரத்தினை சிறிது சிறிதாக குறைத்து அதனை முற்றுமுழுதாக விடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஏனெனில் இத்தகைய வீடியோ கேம்ஸ்களினால் எத்தகைய நன்மையும் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை. உங்களுடைய பொழுதுபோக்குக்காக வேண்டி நீங்கள் சிறிது நேரம் விளையாடலாம். ஆனால் இதனை பல மணி நேரங்களாக விளையாடி உங்கள் நேரத்தினை வீணடித்து கொள்ளாதீர்கள். 

6. காதலிப்பது.

காதல் என்பது மனிதர்கள் மட்டுமன்றி எல்லா உயிரினங்களுக்கும் இருக்கின்ற பொதுவான அற்புதமானதொரு உணர்வாகும். அதில் மனிதர்களைப் பொறுத்த வரையில் காதல் என்பது ஒருவரின் மீதான அளவு கடந்த அன்பினையும் அவரின் மீதான ஆசையினையும் குறிக்கும்.

இவ்வளவு அற்புதமான உணர்வினை இன்று பலர் தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில் காதலிக்கிறோம் என்கின்ற பெயரில் தேவையில்லாமல் தன்னுடைய நேரங்களை வீணடித்து கொண்டிருக்கின்றனர். 

காதல் என்பது உங்களை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்கின்ற, உங்கள் இலக்குகளை அடைந்து சாதனையாளனாக வருவதற்கு உதவுகின்ற சாதனமாக இருக்க வேண்டுமே தவிர உங்கள் இலக்குகளில் இருந்து திசை திருப்பிகின்ற உங்களுடைய பணத்தினையும், பொன்னான நேரங்களையும் விரயமாகின்ற ஒன்றாக இருக்கக் கூடாது. ஆனால் இன்று பலருடைய காதல் இவ்வாறு தான் இருக்கின்றது. 

உங்கள் விருப்பத்துக்குரிய காதலரை நீங்கள் அடைய வேண்டுமென்றால் அவரை நான் அடைந்தாக வேண்டும் என்கின்ற ஆசையினை உங்கள் ஆழ்மனதில் பதிய வைத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய நினைக்கின்ற இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும்.

இப்போது உங்களுடைய காதலானது உண்மையான காதல் என்றால், நிச்சயமாக உங்கள் காதலர் மீது நீங்கள் கொண்ட அந்த அளவிட முடியாத ஆசையானது உங்கள் இலக்குகளை வெற்றியடைய வைக்கும். அதன் பின்னர் நீங்கள் இருவரும் ஒன்று சேரலாம். 

இவ்வாறு காதல் என்பது உங்களுக்கு உதவி புரிகின்ற ஒன்றாக இருக்கவேண்டு.ம் இதன்மூலம் நீங்கள் உங்கள் இலக்கினையும் அடையலாம். உங்கள் விருப்பத்திற்குரிய காதலரையும் அடையலாம்.

அவ்வாறில்லாது தேவையற்ற முறையில் ஊர் சுற்றுவது, சமூக வலைத்தளங்களிலும், தொலைபேசிகளிலும் அதிக நேரங்களை உங்கள் காதலர்களோடு செலவிடுவது, திரையரங்குகள், கடற்கரைகள் என நேரங்களை கழிப்பது போன்ற வீணான செயல்களில் ஈடுபடுவது நிச்சயம் உங்கள் வாழ்வினை சீரழிக்கும் ஒன்றாக அமையும். 

7. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது.

உடற்பயிற்சி என்பது நம் ஒவ்வொருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். இவ்வாறு உடற்பயிற்சி செய்கின்ற போது நாம் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாகவும், பலமாகவும் மாறுகின்றோம். இவ்வாறு தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு நல்லதாகவே அமையுமே தவிர அது ஒருபோதும் வீணான ஒரு செயலாகவும் உங்கள் நேரத்தினை வீணடிக்கின்ற ஒன்றாகவும் அமையாது. நீங்கள் உடற்பயிற்சி செய்வதனை தவிர்க்கின்ற போது அல்லது அதனை முற்று முழுதாக ஒதுங்கி இருக்கின்ற போது நிச்சயம் உங்களுக்கு நீங்களே தீங்கு செய்கின்றீர்கள். 

8. வாய்ப்புக்காக காத்திருப்பது மற்றும் பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பது.

இன்று பலர் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர். யாராவது நமக்கு வாய்ப்புகள் தர மாட்டார்களா? தன்னை யாராவது ஊக்குவிக்க மாட்டார்களா? என்று மற்றவர்களையே எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அத்தோடு மற்றவர்களின் பண்புகளோடும், மற்றவர்களின் திறமைகளோடும் மற்றும் அவர்களுக்கு கிடைத்திருக்கின்ற ஆடம்பரமான வாழ்க்கையோடும் தன்னை ஒப்பிட்டு பார்க்கின்றனர். அவ்வாறு ஒப்பிட்டு பார்த்து அதில் அவரை விட தான் குறைவாக இருந்தால் அதற்காக வேண்டி கடுமையாக யோசித்து மன வருத்தப்படுகின்றனர். 

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ஒருபோதும் வாய்ப்புக்கள் உங்களுக்காக காத்திருப்பதில்லை. உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் தனக்கு ஏதாவது உதவி செய்ய மாட்டார்களா? யாராவது என்னை ஊக்குவிக்க மாட்டார்களா? என்று நினைப்பதை விட்டுவிட்டு நீங்கள் களத்தில் இறங்குங்கள். அதேபோல் மற்றவர்களோடு ஒப்பிட்டு உங்களை நீங்களே குறைத்து கொள்ளாமல் உங்களை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே நீங்கள் ஜெயிப்பதற்கு சிறந்த வழியாகும். 

9. திறமைகளை வளர்த்துக்கொள்ளாமையும் சதுரங்கம் (Chess) விளையாட தெரியாமையும்.

திறமைகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்கின்ற போது உங்கள் ஆற்றலானது அதிகரித்து குறிப்பிட்ட திறமையில் நீங்கள் சிறப்புத் தேர்ச்சி அடைவீர்கள்.

உதாரணமாக உங்களுக்கு ப்ரோக்ராமிங் (Programming) மீது ஆர்வம் இருந்தால் அது சம்பந்தமான திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு நீங்கள் முயல வேண்டும். அவ்வாறு முயல்கின்ற போது படிப்படியாக ப்ரோக்ராமிங்கில் உங்களுடைய ஆற்றல் அதிகரித்து சிறப்புத் தேர்ச்சி அடைவீர்கள்.

அவ்வாறு இல்லாது உங்களுடைய நேரத்தை வீணான முறையில் எந்தவித திறனையும் வளர்த்துக் கொள்ளாமல் பொடு போக்காக கழிப்பீர்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

அதேபோல நீங்கள் சதுரங்கம் (Chess) விளையாடவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் செஸ் விளையாடுவது என்பது உங்கள் புத்தியை கூர்மையாக்குகின்ற ஒரு அற்புதமான விளையாட்டாகும். நீங்கள் செஸ் விளையாடுபவர்களை சரியாக உற்று நோக்குவீர்கள் என்றால் அவர்கள் திறம்பட செயல்பட கூடியவர்களாகவும், முடிவுகளை சரியான நேரத்தில் சரியானதாக எடுக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதுநாள் வரை நீங்கள் Chess விளையாடியதில்லை அதன் மீது எனக்கு ஆர்வம் இல்லை என்றால் இன்றிலிருந்து அதன் மீதான ஆர்வத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.

10. சிரிக்காமல் இருப்பது.

ஒருவருடைய வாழ்வில் சந்தோஷம் என்பது முக்கிய பங்கு வகிக்கின்ற ஒன்றாகும். இவ்வாறு நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நமது மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு மனதார சிரிக்க வேண்டும். அப்போதுதான் நமது மனம் மகிழ்ச்சியாக, சந்தோஷத்தை நாம் உணர முடிவதோடு மனதளவில் வருகின்ற பல நோய்களையும் விட்டு விலகி இருக்கலாம்.

இன்று சிரிப்பு என்பது ஒரு மருத்துவமாகவே மாறிவிட்டது. எவர் ஒருவர் சிரிப்பதில் இருந்து விலகி இருக்கிறாரோ அல்லது எப்போதும் தன் முகத்தினை கோபமாகவோ அல்லது கவலையாக வைத்திருக்கிறாரோ அவரது வாழ்நாள் மிகக் கடினமாகவே இருக்கும். மன அழுத்தம், மன கவலை, மன பயம் போன்ற பல்வேறு விடயங்களில் இருந்து நாம் விலகி இருப்பதற்கு சிரிப்பது உதவும். 

Finally 

இங்கு மேலே குறிப்பிட்டுள்ள 10 அறிகுறிகளில் 5 அறிகுறிகளுக்கு மேல் உங்களிடம் காணப்படுமாயின் நீங்கள் உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது அர்த்தமாகும்.


அவ்வாறு இல்லாது மேலே குறிப்பிட்டுள்ள 10 அறிகுறிகளில் உங்களிடம் எந்த அறிகுறியும் இல்லை எனில் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். நீங்கள் உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். நிச்சயமாக ஒருநாள் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்து கொள்வீர்கள். 


ஏனெனில் இன்று வெற்றியாளர்களாக இருக்கின்ற அனைவரும் இங்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பத்து தவறுகளையும் தன் வாழ்வில் செய்யாதவர்கள். இவ்வாறான வீணான காரியங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டவர்கள்.


எனவே இந்த பதிவினை வாசிக்கின்ற அனைவரும் அவ்வாறான பிரிவினரில் ஒருவராக இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். பிடித்திருந்தால் இந்தபதிவை உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் மனம் விரும்புகின்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கிறோம். 

                                                                        -END- 



Post a Comment

Previous Post Next Post