அந்த வகையில் இன்று பலர் இணையத்தைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதித்து கொண்டு வருகின்றனர். இந்த நவீன யுகத்தில் அதற்கான வாய்ப்புகள் எங்கு பார்த்தாலும் கொட்டிக் கிடக்கின்றது. எனவே நீங்களும் ஆன்லைன் மூலம் பணம் உழைப்பதற்கு முயற்சி செய்யுங்கள் (Try to make money online).
அவ்வாறு நீங்கள் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு முயற்சி செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கான Beginners Guide பதிவாக இது இருக்கும். இந்தப் பதிவில் நாம் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு Basic காக தெரிந்திருக்க வேண்டிய சில விடயங்களையும், கட்டாயம் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒருசில வழிமுறைகளையும் மிகத் தெளிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
அத்தோடு எந்த எந்த வழிகளில் எல்லாம் Online மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதனையும் நாம் பார்க்க இருக்கின்றோம். அடுத்தடுத்த பதிவுகளில் அவற்றில் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதனை பற்றி விரிவாக பார்ப்போம். இப்போது வாருங்கள் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான Beginners Guide பதிவிற்குள் செல்லலாம்.
CAN I MAKE MONEY ONLINE?
உங்களில் பெரும்பாலானோருக்கு இந்த சந்தேகம் இருக்காது. ஆனாலும் ஒரு சிலருக்கு இந்த சந்தேகமானது இருக்கலாம். அவ்வாறானவர்களுக்கு ஒரு விடயத்தை மிகத் தெளிவாக கூறிக்கொள்கிறேன் ஒன்லைன் மூலம் 100% க்கு 200% சம்பாதிக்க முடியும்.
ஏனெனில் இன்று பலர் ஆன்லைன் மூலம் பல லட்சங்களில், கோடிகளில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். எந்தளவுக்கு எனில், தன்னுடைய நிரந்தர வேலையை விட்டு விட்டு ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதனை முழு நேர வேலையாக கொண்டிருப்பவர்களும் உள்ளனர். நிரந்தர வேலை ஒன்றினை விட்டுவிடுமளவுக்கு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா? என்று கேட்டால், நிச்சயமாக முடியும். ஒரு சாதாரண வேலையில் நீங்கள் வாங்குகின்ற சம்பளத்தை விட பல மடங்கு ஆன்லைன் மூலம் நீங்கள் சம்பாதிக்க முடியும்.
ஆனால் அதற்கு முன் நீங்கள் ஆன்லைனில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது? எந்தெந்த வழிகளில் தெரிவு செய்ய வேண்டும்? அதில் எந்தெந்த வியூகங்களை (Strategies) பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது? போன்ற பல்வேறு விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களால் இந்த அளவுக்கு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
ARE THERE ANY CONDITIONS?
சரி, ஆன்லைன் மூலம் 100% க்கு 200% பணம் சம்பாதிக்க முடியும் என்பதனை பார்த்துவிட்டேன். அடுத்ததாக நான் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு ஏதாவது நிபந்தனைகள் உள்ளதா? இது இருந்தால்தான் என்னால் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஏதாவது விடயம் உள்ளதா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கும்.
அதற்கு நாம் பதில் கூறுகின்றோம். ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் கீழே குறிப்பிடுகின்ற இந்த மூன்று விடயங்களும் உங்களிடம் இருக்க வேண்டும். இவை இருந்தால் தான் உங்களால் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இல்லை என்றால் அது முடியாத ஒரு காரியமாக போய்விடும். அவை, ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான உங்களுடைய விருப்பம், பொறுமை, விடாமுயற்சி போன்றவையாகும்.
இந்த மூன்று விடயங்களும் உங்களிடம் இருந்தால் தான் உங்களால் ஆன்லைன் மூலம் சம்பாதிக்க முடியும். ஆன்லைன் மட்டுமன்றி நீங்கள் செய்கின்ற எந்த ஒரு விடயமாக இருப்பினும் இந்த மூன்று விடயங்களில் ஒன்று உங்களிடம் இல்லாவிட்டாலும் அந்த விடயத்தில் உங்களால் வெற்றி பெற முடியாது.
இந்த மூன்று விடயங்களும் தவிர்த்து உங்களிடம் ஒரு Laptop அல்லது Personal Computer அல்லது Smartphone போன்றவற்றில் ஏதாவது ஒன்று இருத்தல் கட்டாயமாகும். அதனோடு சேர்த்து நல்லதொரு Internet Connection மற்றும் அடிப்படையான ஆங்கில திறமையும் காணப்பட வேண்டும். அதாவது புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதுமானது. சரளமாகப் பேச தெரியும் என்றால் அது உங்களுக்கு இன்னும் நன்மையாக அமையும்.
எனவே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான ஆசை உங்களிடம் இருந்தால், உங்களுடைய விருப்பம், பொறுமை, விடாமுயற்சி போன்ற மூன்று விடயங்கள் உங்களிடம் இருக்கின்றதா? என பார்த்துக்கொள்ளுங்கள். அவற்றோடு மேலே குறிப்பிட்ட விடயங்களும் உங்களிடம் இருந்தால் நிச்சயமாக ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
IN WHAT WAYS CAN YOU MAKE MONEY ONLINE?
ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. என்னதான் நூற்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகள் இருப்பினும் அவ்வாறான எல்லா வழிமுறைகள் மூலமும் எம்மால் பணம் சம்பாதிக்க முடியாது. ஏனெனில் அதற்கான மிகப் பிரதானமான காரணம் நேரம்தான்.
இங்கு நாம் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கின்ற மிகப் பிரதானமான, அதே சமயம் அனேகமானவர்கள் செய்து கொண்டு வருகின்ற ஒரு சில வழிமுறைகளை குறிப்பிடுகின்றோம். நிச்சயமாக இவை உங்களாலும் செய்யக்கூடியதாக இருக்கும். ஏனெனில் இது மிக இலகுவானதாகவும் அதே சமயம் மிகக் கூடுதலான வருவாய் தருகின்ற துறையாகவும் இருக்கும்.
1. Blogging
ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு வருகின்ற அனைவரினதும் முதன்மையான தெரிவாக இருப்பது பிளோக்கிங் (Blogging) தான். இதற்கான பிரதான காரணம் மிக எளிமையானதாகவும், எளிதாகவும் மற்றும் செலவு குறைந்ததாகவும் இருப்பதாகும்.
Blogging என்பது என்னவென்று மிகச் சுருக்கமாகக் கூறினால் நமக்கு தெரிந்த விடயங்களை இணையத்தை பயன்படுத்தி வெளியிடுதல். அதாவது வெப்சைட் ஒன்றினை நடாத்தி செல்லுதல் இதுதான் Blogging எனப்படும். இன்னும் தெளிவாக கூறப்போனால் நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கின்ற இந்த பதிவு கூட பிளோக்கிங் தான்.
இப்போது உங்களுக்குள் இது போன்று பிளோக்கிங் நான் எவ்வாறு, எதில் செய்வது? என்ற கேள்வி எழுந்திருக்கும். இதற்காக உங்களுக்கு பல்வேறு தெரிவுகள் இருக்கின்றன. ஆனாலும் இங்கு நாம் உங்களுக்கு பரிந்துரைப்பது கூகுளின் (Google) இலவசமான, எந்தவித பணமும் செலவழிக்கத் தேவையில்லாத ஒரு Platform ஆன கூகுளின் பிளாக்கர்.
இது தவிர WordPress , Wix என்று பல்வேறு வகையான Platform கள் காணப்படுகின்றன. இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் நீங்கள் ஆரம்பத்தில் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே நீங்கள் Beginners ஆக இருப்பீர்கள் ஆனால் Google உடைய Free Platform ஆன பிளாக்கரை முயற்சி செய்து பார்க்கலாம்.
சரி, பிளாக்கரை நான் தெரிவு செய்து விட்டேன். ஆனால் இதிலிருந்து எவ்வாறு நான் பணம் சம்பாதிப்பது என்ற கேள்வி உங்களுக்குள் அடுத்ததாக வந்திருக்கும். இதற்காகவே கூகுள் அறிமுகப்படுத்தியது தான் Google Adsense ஆகும்.
இந்த கூகுள் ஆட்சென்ஸ் மூலம் உங்களுடைய வெப்சைட்டில் விளம்பரங்களை தெரியவைப்பதன் மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அவ்வாறு Google Adsense விளம்பரங்களை உங்கள் வெப்சைட் மூலம் தெரிய வைக்க வேண்டுமென்றால் அதற்காக முதலில் நீங்கள் ஒரு ப்ளாக்கர் வெப்சைட்டினை செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு தெரிந்த விடயங்களை Articles ஆக பதிவு செய்ய வேண்டும்.
இது தவிர இன்னும் சில விடயங்களை நீங்கள் அதில் மேற்கொள்ள வேண்டும். Google Adsense க்கு Apply பண்ணுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளை பின்பற்றி நீங்கள் உங்கள் வெப்சைட்டை மேம்படுத்தி செய்கின்ற போது நிச்சயம் உங்களால் Adsense மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
இவ்வாறு பிளாக்கரை பயன்படுத்தி எவ்வாறு ஆன்லைன் மூலம் சம்பாதிப்பது என்பதை பற்றிய தெளிவான விளக்கங்களுக்கு கீழே கொடுக்கப்படுகின்ற YouTube Channel மற்றும் வலைத்தளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளுங்கள். பிளாக்கரில் பணம் சம்பாதிப்பதற்கான (How to earn money on Blogger) சகல விடயங்களும் இந்த Youtube Channel மற்றும் Website ல் உள்ளது.
2. YouTube
இன்று கூகுளுக்கு அடுத்து அதிகம் பேர் தேடுபொறியாக (Search Engine) பயன்படுத்துவது YouTube தான். அந்தளவுக்கு யூடியூப் இன்றைய நவீன உலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டது. அதேபோல் இன்று வரை 37 மில்லியன் சேனல்கள் யூடியூபில் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு நிமிடத்திற்கு சுமார் 500 மணித்தியாலங்கள் உடைய வீடியோ யூடியூப்பில் அப்லோடு (Upload) செய்யப்படுகின்றன.
இந்தப் பதிவினை வாசிக்கின்ற யாராக இருப்பினும் குறைந்தது ஐந்து சேனல்களையாவது யூடியூபில் Subscribe செய்து இருப்பீர்கள். அந்தளவுக்கு யூடியூப்பின் தாக்கமானது எம் எல்லோரையும் சூழ்ந்துள்ளது. இத்தகைய சிறப்புடைய யூடியூப்பின் மூலமும் பணம் சம்பாதிக்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த விடயமே.
இங்கும் நமக்கு வருமானமானது Google Adsense மூலமே கிடைக்கின்றது. அதாவது உங்களுடைய YouTube Channel 1000 Subscribers மற்றும் 4000 Watch Hours ஐ கடந்து விட்டதாயின் நீங்கள் Monetization க்கு அப்ளை செய்ய வேண்டும். அந்த Monetization Application YouTube இனால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உங்களுடைய யூடியூப் சேனலில் கூகுள் அட்சன்ஸ் உடைய விளம்பரங்கள் காட்டப்படும். இதன் மூலம் நீங்கள் யூடியூப்பின் மூலமாகவும் பணம் சம்பாதிக்க முடியும்
ஆனால் நம்மில் பலர் அதனை பயன்படுத்துவதில்லை இன்னும் சொல்லப்போனால் பயன்படுத்தத் தவறிவிட்டனர். எனவே இந்த பதிவினை பார்த்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நாங்கள் கூறுவது உங்களுக்கு தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் அதனை யூடியூபில் ஒரு காணொளியாக பதிவேற்றம் செய்து அதன் மூலமாக பணம் உழைப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள்.
ஏனெனில் இப்போது இருக்கின்ற காலப்பகுதியில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. அதற்கான மிகச் சிறந்த வழியாகவும் யூடியூப் இருக்கின்றது. எனவே முடிந்தவரை யூடியூப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களாலும் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
3. Affiliate Marketing
Affiliate Marketing என்பது மற்றொருவரின் ப்ராடக்டை விற்பனை செய்வதற்காக அந்தப் ப்ராடக்டை Promote செய்து அதனை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து விற்பனையை அதிகரிக்க செய்தல் ஆகும். இங்கு ப்ராடக்ட் இன் உற்பத்தியாளர் Vendor என அழைக்கப்படுவதோடு, அந்த Product இனை Promote செய்பவர் Affiliate Marketer என அழைக்கப்படுகின்றார். இங்கு நிங்கள் Affiliate Marketer ஆக இருப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க போகின்றீர்கள்.
இவ்வாறு வெண்டர் ஒருவரின் Product இனை மக்களிடம் ப்ரோமோட் செய்வதன் மூலம் நமக்கு அதிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் கிடைக்கும் இதனை Affiliate Commission என்பர். நீங்கள் Promote செய்கின்ற ப்ராடக்ட் பொறுத்து உங்களுக்கு கிடைக்கின்ற கமிஷனின் அளவும் வேறுபடும். சில ப்ராடக்டை நீங்கள் Promote செய்வதன் மூலம் நூற்றுக்கு 80% வரை கமிஷன் பார்க்க முடியும். ஒரு சில ப்ராடக்ட் இற்கு அதை விட குறைவாகவும் இருக்கலாம்.
எனவே Promote செய்கின்ற போது அதிக கமிஷன் கிடைக்கின்ற Product இனை Promote செய்தீர்கள் என்று உங்களுக்கு கிடைக்கின்ற வருமானமும் அதிகரிக்கும். இவ்வாறு Product இனை Promote செய்வதற்காக பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி Promote செய்வதன் மூலம் உங்கள் வருமானத்தினை அதிகரிக்கலாம்.
4. Freelancing
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான இன்னொரு வழிமுறை தான் Freelancing. பிரீலன்ஸிங் என்பது உங்களுக்கு தெரிந்த விடயங்களை மற்றவர்களுக்கு செய்து கொடுப்பதன் மூலம் வருவாயை ஈட்டிக் கொள்வதாகும் இதற்காக பல Freelancing Websites உள்ளன.
Fiverr, Freelancer, Upwork போன்ற பல்வேறு வலைத்தளங்களில் Freelancer ஆக இணைவதன் மூலம் நீங்கள் பிரீலன்ஸிங் சேவையினை வழங்க முடியும். இங்கே வேலை தேவைப்படுபவர்கள் (Buyers), அதேபோல் அந்த வேலையை தெரிந்தவர்கள் (Sellers) என இரு பிரிவினர் காணப்படுவர் காணப்படுவர்.
அதில் நீங்கள் Seller ஆகவே வேலை செய்யப் போகின்றீர்கள். அப்போதுதான் உங்களால் பிரீலன்ஸிங் சேவையை வழங்குவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இவ்வாறான பிரீலன்ஸிங் வலைத்தளங்களில், உங்களுக்கு எதில் திறமை இருக்கிறதோ அதனை உங்களுடைய Buyers க்கு செய்து கொடுப்பதன் மூலம் பணத்தை பெற்றுக் கொள்வீர்கள்.
5. Social Media Influencer
ஒன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான மிகப் பிரதான வழிகளில் இதுவும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒரு துறையாகும். இந்த முறையில் உங்களால் இலகுவாக பணம் சம்பாதிக்க முடியும். இதற்காக நீங்கள் பயன்படுத்த போவது உங்களுடைய சமூக வலைத்தளங்களை தான்.
Facebook, Instagram, Twitter மற்றும் LinkedIn போன்ற சோசியல் மீடியாக்களில் அதிக Followers களை நீங்கள் கொண்டிருப்பீர்கள் ஆயின் இவற்றின் மூலம் சம்பாதிப்பது உங்களுக்கு இலகுவாக இருக்கும். உங்களுக்கு தெரிந்த சேவையினை உங்களது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களை பெற்று உங்களால் சம்பாதிக்க முடியும். அதேபோல் மற்றவர்களுடைய சேவையை நீங்கள் உங்கள் சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதன் மூலமும் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
இவ்வாறு பல்வேறு வழிமுறைகளில் சோசியல் மீடியா Account வைத்து இன்று பலர் சம்பாதித்துக் கொண்டு வருகின்றனர். எனவே உங்களிடம் இருக்கின்ற சோசியல் மீடியா Account களை மிகவும் பயனுள்ள வகையில், குறிப்பாக அதன் மூலம் பணம் ஈட்டும் வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
FINALLY
மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து முறைகள் உள்ளடங்கலாக பல்வேறு முறைகள் மூலம் ஆன்லைனில் நீங்கள் சம்பாதிக்க முடியும். என்றாலும் உங்களுடைய பொறுமையும், விடாமுயற்சியும், என்னால் ஆன்லைன் மூலம் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் தான் உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க செய்யும்.
முதலில் இவற்றில் எதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் ஆன்லைன் மூலம் சம்பாதிப்பதற்கு விரும்புகிறீர்கள் என்பதை திட்டமிட்டு விட்டு, நீங்கள் தேர்ந்தெடுத்த துறை சம்பந்தமான முழுமையான அறிவினைப் பெற்றுக் கொள்வதற்காக அதனைக் கற்றுக் கொள்ளுங்கள்.
பின்னர் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை காலம் தாழ்த்தாது பிரயோகப்படுத்தி பாருங்கள். அவ்வாறு நீங்கள் பிரயோகப்படுத்தி பார்க்கின்ற போது உங்களுக்கு ஏன் சில தோல்விகள் ஏற்படலாம். அந்த தோல்விகளை முன்மாதிரியாகக் கொண்டு வெற்றி அடைவதற்கு முயற்சி அடையுங்கள். துவண்டு விடாதீர்கள். உங்களாலும் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.