வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வெற்றி அடைவதற்கு பல காரணங்கள் உண்டு. அவ்வாறு ஒவ்வொருவரும் வெற்றி அடைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பொதுவாக ஒரு சில காரணங்கள் அவர்களை மிகப்பெரிய பணக்காரர்களாக மாற்றியிருக்கும்.
அவ்வாறு ஒவ்வொருவரையும் மிகப்பெரிய பணக்காரராக மாற்றக் கூடிய முக்கியமான நான்கு பண்புகளை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். நிச்சயமாக இந்த பண்புகள் ஒவ்வொன்றும் மிக மிக முக்கியமானவையாகும். இவற்றை உங்கள் வாழ்வில் நீங்கள் கடைபிடிக்கின்ற போது நிச்சயம் ஒரு நாள் நீங்கள் மிகப் பெரிய பணக்காரராகவும், செல்வந்தராகவும் மாற முடியும்.
சரி வாருங்கள் அத்தகைய உங்கள் ஒவ்வொருவரையும் பணக்காரராக மாற்றக்கூடிய அந்த நான்கு பழக்க வழக்கங்களையும் பார்ப்போம். இந்த பதிவிற்குள் நுழைவதற்கு முன் முதல் விஷயமாக இன்றிலிருந்து என் வாழ்வில் இந்த இந்த நான்கு விடயங்களையும் கடைபிடிக்க போகின்றேன் என்றும் நிச்சயம் இந்தப் பண்புகள் என்னை ஒரு பணக்காரனாகவும், செல்வந்தனாகவும் மாற்றும் என்ற நம் முழு நம்பிக்கையுடன் இந்த பதிவிற்குள் செல்லுங்கள்.
HABITS ONE: READ A BOOK
இன்று உலகின் டாப் லெவல் பணக்காரர்களை நீங்கள் எடுத்துக் கொண்டால் அவர்கள் அனைவருமே இந்த நிலைமையை அடைந்து கொள்வதற்கு முன் அதிகளவில் புத்தகங்களை வாசிக்க கூடியவர்களாக இருந்துள்ளனர். அதேபோல் இன்று நான் மிகப்பெரிய பணக்காரனாகவும், செல்வாக்கு மிக்கவராகவும் மாறியதற்கு பின்பும் புத்தகம் வாசிப்பதனை தன்னுடைய அன்றாட பழக்க வழக்கமாக வைத்துள்ளனர். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பக்கங்களாவது படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவர்கள் இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக Bill Gates, Elon Musk, Warren Buffett, மற்றும் Mark Zuckerberg போன்ற உலகின் பல்வேறு முக்கியமான பில்லியனர்கள் அனைவரும் புத்தகம் வாசிப்பதனை கட்டாய குறிக்கோளாக வைத்துள்ளனர். குறிப்பாக பில்கேட்ஸ் ஒரு வருடத்திற்கு 50 புத்தகங்களை வாசிக்கின்றார். அதேபோல் எலான் மஸ்க் ஒரு நாளைக்கு இரண்டு புத்தகங்களை வாசிக்கின்றார். Facebook நிறுவனத்தின் ஸ்தாபகரான மார்க் ஸக்கர்பெர்க் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒரு புத்தகத்தையாவது முழுமையாக வாசிக்கின்றார். அதேபோல வாரன் பஃபெட் ஒரு நாளைக்கு குறைந்தது 600 தொடக்கம் 1000 பக்கங்களாவது ஒரு புத்தகத்தில் படித்து விடுவார்.
இவ்வாறு சொல்லிக்கொண்டு போவதென்றால் நாள் முழுக்க சொல்லிக் கொண்டே போகலாம். அந்தளவுக்கு பில்லியனர்களின் தவிர்க்க முடியாத ஒரு பண்பாக புத்தகம் என்பது காணப்படுகின்றது. அவர்களுடைய ஒவ்வொரு நாளிலும் புத்தகங்களை வாசிக்கின்ற போதுதான் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியே ஏற்படும். அந்தளவுக்கு அவர்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய மிக முக்கியமான ஒரு காரணியாக புத்தகங்கள் காணப்படுகின்றது.
ஒரு புத்தகம் என்பது ஒரு மனிதனை சரியான முறையில் வழி நடத்துகின்ற ஆசானை போன்றதாகும். புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் சாதாரண வார்த்தைகளை போன்றதல்ல. அது ஒரு மனிதனின் இதயம் ஆகும். ஒரு மனிதனுடைய அனைத்து விதமான சிந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக உள்ளடக்கியதுதான் ஒரு புத்தகம் ஆகும். முழுமையாக நீங்கள் ஒரு புத்தகத்தை வாசித்து முடிகின்ற போது அந்த புத்தகத்தை எழுதியவருடைய முழுமையான அறிவு உங்களுக்கு கிடைக்கும்.
அவருடைய எண்ண ஓட்டம், அவருடைய சிந்தனை, அவருடைய வாழ்க்கை முறை, அவர் வாழ்க்கையை பார்க்கின்ற விதம் என பல்வேறு கோணங்களிலான அறிவு உங்களுக்கு கிடைக்கும். புத்தகங்களை வாசித்து விட்டு மட்டும் போகாமல் அது குறிப்பிடுகின்ற விடயங்களையும் முடிந்தவரை உங்கள் வாழ்வில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். புத்தகங்களை வாசிப்பதற்கு தயங்குபவர்கள், புத்தகங்கள் வாசிப்பது வீணானது என்று நினைப்பவர்கள், புத்தகங்களை வாசிப்பதற்கு நேரம் போதவில்லை என்று கூறி அதனை விளக்குபவர்கள் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது.
நீங்கள் உங்கள் இலக்கில் வெற்றியடைந்து பில்லியனராக வர வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக புத்தகங்களை வாசிப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். ஏன் இவ்வாறு கூறுகின்றோம் என்றால் புத்தகங்கள் உங்களை சரியான முறையில் ஒழுங்குபடுத்தும். இக்கட்டான சூழ்நிலைகளில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு உங்களுக்கு உதவி செய்யும். பிழை எது? சரி எது?, சரியாக திட்டமிடுவது எவ்வாறு?, திட்டத்தை சரியாக முறைப்படுத்துவது எவ்வாறு?, பணத்தை எவ்வாறு கைவசப்படுத்துவது, எவ்வாறு மக்களிடையே சிறந்து விளங்குவது என்று பல்வேறு வகையில் புத்தகம் உங்களுக்கு உதவி புரியும். ஒரு முறை புத்தகங்களை வாசித்து பாருங்கள். புத்தகங்களை நேசித்து பாருங்கள். நாம் சொல்வது உங்களுக்கு புரியும்.
HABITS TWO: INVEST YOUR SKILLS
திறமைகள் என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும். எனக்கு எந்தத் திறமையும் இல்லை என்று யாரும் கூற முடியாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட சில திறமை என்று ஏதாவது ஒன்று இருக்கும். அந்தத் திறமைகளை முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் திறமைகளை வளர்ப்பதற்கான ஆற்றல்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு உங்கள் ஆற்றல்கள் மீது முதலீடு செய்ய வேண்டும்.
நாம் அனைவரும் நேரம், பணம் என பல்வேறு வகையில் முதலீடு செய்யக் கூடியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு நாம் செய்கின்ற முதலீடுகளில் மிகச்சிறந்த முதலீடு என்றால் அது நமது ஆற்றல்களை வளர்ப்பதற்காக செய்வதாகும். இங்கே முதலீடு என்று கூறுவது உங்கள் குறிப்பிட்ட திறமையில் உங்கள் ஆற்றலை அதிகரிப்பதற்காக, அதனை தெளிவாகவும், முழுமையாகவும் கற்றுக்கொள்வதற்கு நேரத்தை ஒதுக்கி அதனை கற்றுக் கொள்வதாகும்.
உதாரணமாக உங்களுக்கு புட்பால் அல்லது கிரிக்கெட் நன்றாக விளையாட தெரியும் என்றால், அதில் உங்களுக்கு திறமை இருக்கின்றது என்றால், அந்த விளையாட்டில் உங்கள் திறமையை அதிகரிப்பதற்காக நீங்கள் முறையான பயிற்சியினை எடுத்துக்கொள்ளுதல், அதிகளவான பயிற்சிப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் என்று பல்வேறு வகைகளில் உங்கள் ஆற்றலை அதிகரித்து கிரிக்கெட் அல்லது புட்பால் விளையாட்டில் நீங்கள் கொண்டிருக்கின்ற திறமையை இன்னும் மேம்படுத்த முடியும்.
இது போலவே நீங்கள் எதில் திறமையாக இருக்கிறீர்களோ அதை இன்னும் மேம்படுத்தி அதிலிருந்து இன்னும் பயன் அடைந்து கொள்வதற்கு, அதை இன்னும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்கு என்னென்னவெல்லாம் தேவையோ அதன் மீது நீங்கள் உங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து அதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயமாக இவ்வாறு ஒரு துறையில் நீங்கள் Expert ஆவது என்பது நிச்சயமாக உங்களை பில்லியனர்களாக மாற்றும். ஏனெனில் பில்லியனர்கள் அனைவருமே அவர்கள் சார்ந்த துறையில் Expert ஆக இருப்பார்கள்.
HABITS THREE: POSITIVE THOUGHTS
நாம் நம் மனதில் எத்தகைய எண்ணங்களை கொண்டிருக்கின்றோமோ அதற்கு ஏற்றாற்போல் தான் நமது செயல்களும் அமையும். நாம் ஒரு விடயத்தை நேர்மறையாக யோசித்தால் நிச்சயமாக அது நமக்கு நேர்மையாகவே நடக்கும். அதை விடுத்து எதிர்மறையாக நாம் சிந்தித்தால் நமது செயல்களும் எதிர்மறையாகவே மாறிவிடும்.
வாழ்வில் வெற்றியடைந்து பில்லியனர்களாக வருகின்ற அனைவருமே அவர்களுடைய இலக்கு குறித்தும், தமது வாழ்க்கை குறித்தும் நேர்மறையாகவே சிந்திக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருப்பதில்லை. எதிர்மறையான எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்ற போதெல்லாம் தன்னுடைய நேர்மறையான எண்ணங்களின் மூலமாக சிதைத்து விடுகின்றனர்.
நீங்கள் செய்கின்ற எந்தவொரு விடயங்களையும் அதனை செய்வதற்கு முன்னரே அல்லது அதை நினைத்த உடனேயே இதை என்னால் செய்ய முடியாது, இது மிகவும் கடினமானது, நான் இதை செய்தால் இதில் நான் தோற்றுவிடுவேன், இதை செய்வதற்கு போதுமான அறிவோ, திறமையோ என்னிடம் கிடையாது இன்று எதிர்மறையான எண்ணங்களை ஒரு போதும் நினைக்காதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு முறை தான். உங்களால் முடிந்த வரை நீங்கள் அடைய நினைக்கும் இலக்கினை துரத்திக் கொண்டே இருங்கள்.
உங்கள் இலக்கினை நீங்கள் முழுமையாக அடையும் வரை ஒரு போதும் உங்கள் விடாமுயற்சியை விட்டு விடாதீர்கள். அதில் நீங்கள் எப்போதெல்லாம் தொடர்ந்து தோல்விகளை சந்திக்கின்றீர்களோ அப்போதெல்லாம் மனம் சோர்ந்து விடாதீர்கள். நிச்சயம் உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்குள் நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை நம்பி நேர்மறையான எண்ணங்களை உங்கள் மனதில் விதைக்க விட்டால் நிச்சயமாக வெற்றி என்பது உங்களுக்கு ஒருபோதும் கைவசமாகாது.
HABITS FOUR: GOOD FRIENDS ENVIRONMENT
ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று அவரின் குணநலன்களை அறிவதற்கு, அவரின் நண்பர்களின் வட்டத்தை உற்று நோக்கினால் நாம் அவரைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளிடம் கூற முடியாத விடயங்களைக் கூட ஏன் நமது அந்தரங்க விடயங்களைக் கூட கூறுகின்ற ஒரு இடம் என்றால் அது நண்பர்களிடம் தான். அந்தளவுக்கு நண்பர்கள் என்பது நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு விடயமாகும்.
அதே போல் ஒருவர் தன் வாழ்வில் வெற்றி அடைந்து தன் இலக்குகளை எல்லாம் அடைந்து மிகப்பெரும் பில்லியனர்களாகவும், செல்வந்தர்களாகவும் உருவாவதற்கு அவர்களின் நண்பர்கள் வட்டமும் மிக முக்கியமான ஒரு காரணியாக திகழ்கின்றது. நீங்கள் கெட்ட எண்ணங்களை உடைய அல்லது எதிர்மறையான சிந்தனைகளை மட்டுமே கொண்ட நண்பர்கள் வட்டாரத்தை உங்கள் மத்தியில் வைத்துக் கொண்டீர்கள் என்றால் நீங்களும் அதே சிந்தனையில், அதே எண்ணத்திலேயே இருப்பீர்கள்.
அதே சமயத்தில் நல்ல செயல்களை உடைய, நேர்மறையாக சிந்திக்க கூடிய எதையும் விடாமுயற்சியுடன் செய்யக்கூடிய, பிறருக்கு உதவக் கூடிய பண்புகளை உடைய நண்பர்கள் வட்டாரத்தை நீங்கள் உங்கள் மத்தியில் வைத்து இருந்தால், நீங்கள் எதிர்மறையாக சிந்திக்க கூடியவர்களாகவும், தவறான செயல்களை கொண்டிருப்பவர்களாகவும் இருந்தாலும் உங்களுடைய நல்ல நண்பர்கள் உங்களை திருத்தி உங்களை செம்மையாக்குவார்கள். அதேசமயம் உங்கள் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அவர்கள் பல வழிகளில் உங்களுக்கு உதவி புரிவார்கள்.
எனவே நல்ல நண்பர்களை நல்ல எண்ணங்களை உடைய, நேர்மறையாக சிந்திக்க கூடிய நண்பர்களை உங்கள் வசம் வைத்திருங்கள். அப்போது நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவதற்கு அவர்கள் சிறு வகையிலாவது உங்களுக்கு உதவி புரிவார்கள். குறைந்தபட்சமாக உங்களுடைய கஷ்டத்திலாவது உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.
FINALLY
மேலே குறிப்பிட்டுள்ள இந்த நான்கு விடயங்களும் உங்கள் வாழ்வில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும். இவற்றை பல பில்லியனர்கள் இன்றும் கடைபிடித்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த நிலையை அடைந்ததற்கு இவை அனைத்துமே அவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்திருக்கின்றன.
ஏனெனில் இவை அனைத்துமே பார்ப்பதற்கு சிறிய விடயங்களாக இருந்தாலும் மிகவும் ஆழமான கருத்துக்களை உடைய விடயங்களாகும். எனவே நீங்களும் நிச்சயமாக இவற்றை உங்கள் வாழ்வில் பின்பற்றி வாருங்கள். மாற்றங்களை விரைவில் உணர்ந்து கொள்வீர்கள்.