உலகிலேயே காற்பந்தாட்டத்திற்கு (Football) பிறகு அதிக ரசிகர்களை கொண்ட, அனைவரும் அறிந்த விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்தான் (Cricket). இங்கிலாந்தில் (England) அறிமுகமான இவ்விளையாட்டு பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கம் இன்றுவரை சர்வதேச ரீதியாக நடைபெற்று வருகின்ற மிகவும் பிரபலம் வாய்ந்த விளையாட்டு ஆகும்.
இவ்வாறு பெரும் வரலாற்றைக் கொண்ட இவ்விளையாட்டின் மொத்த சுவாரசியமும் பேட்ஸ்மேன்களின் கையில் தான் தங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இருபதுக்கு-20 (T20), ஒருநாள் போட்டிகள் (ODI) ஆகிய போட்டிகளைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்களின் அதிரடி நிறைந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது.
அப்படி தங்களது வசீகரமான ஆட்டத்தினால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே தன் வசப்படுத்திய மிகச் சிறந்த டாப் 10 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களை (Top 10 Batsman in Cricket) பற்றித்தான் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
10. AB de Villiers
1984 இல் South Africa வில் பிறந்த AB de Villiers 2005 இல் இங்கிலாந்துக்கு (England) எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் (ODI International) அறிமுகமானார். அன்றிலிருந்து இன்றுவரை நாலா திசைகளிலும் சென்று பந்தை பவுண்டரி எல்லைக்கு அப்பால் பறக்க விடுவதில் இவர் வல்லவராகத் திகழ்கிறார்.இவரின் இந்த அசாத்திய திறமையினால் "Mr. 360" என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இதுவரை 228 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியதுடன், 114 டெஸ்ட் போட்டிகளிலும், 78 இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இவற்றுள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 53 அரைச்சதம், 25 சதம் அடங்கலாக 9,577 ஓட்டங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 46 அரைச்சதம், 22 சதம் உள்ளடங்கலாக 8765 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
அதுமட்டுமன்றி தன் அசாத்தியமான ஆட்டத்தினால் 16 பந்துகளில் அரைச்சதம், 31 பந்துகளில் சதம் மற்றும் 64 பந்துகளில் 150 ஓட்டங்கள் என ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 50, 100 மற்றும் 150 ரன்களை பெற்றவர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.
அதுமட்டுமன்றி இந்தியாவில் இடம்பெறுகின்ற பிரபலமானடி 20 தொடரான Indian Premier League போட்டியில் 169 போட்டிகளில் விளையாடிய ஏபி. டி. வில்லியர்ஸ் (AB de Villiers) 38 அரைச் சதங்கள் மற்றும் 3 சதங்களுடன் 4,849 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
ஏபி. டி. வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 50.7 இனை சராசரியாக கொண்டுள்ளதுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 53.5 இனை சராசரியாக கொண்டுள்ளார்.
இப்போதுள்ள அனைத்து பேட்ஸ்மேன்களிலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கின்றார். இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு-20 என மூவகை போட்டிகளுக்கும் தலைமை தாங்குபவராக அவர் காணப்படுகிறார்.
9. Virat Kohli
இப்போதுள்ள அனைத்து பேட்ஸ்மேன்களிலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கின்றார். இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு-20 என மூவகை போட்டிகளுக்கும் தலைமை தாங்குபவராக அவர் காணப்படுகிறார்.
1988 ல் பிறந்த விராட் கோலி 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். விராட் கோலி தனது திறமையினால் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமன்றி, கிரிக்கெட் ஜாம்பவான்களையும் தன் ரசிகர்களாக மாற்றியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் Michael Clarke விராட் கோலியை மிகச்சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் என்று பாராட்டினார். அதுமட்டுமன்றி அதே அணியின் முன்னாள் வீரரான Ian Chappell, விராட் கோலியை ஒருநாள் போட்டிகளின் பிராட்மேன் என கூறியுள்ளார்.
இவ்வாறு பலரது பாராட்டைப் பெற்ற விராட் கோலி இதுவரை 250 க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும், 90 க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அவற்றுள் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 60+ அரைசதங்கள், 43+ சதங்கள் உள்ளடங்களாக 12,000 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் 25+ அரைசதங்கள் 27+ சதங்கள் அடங்கலாக 7,000 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமன்றி ஒருநாள் போட்டியில் தனது சராசரியை 59+ க்கு மேலாக வைத்துள்ளதுடன், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் 50+ க்கும் மேற்பட்ட சராசரியைக் கொண்டுள்ளார்.
சச்சினுக்கு அடுத்து ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்தவராகவும் விராட் கோலி காணப்படுகிறார். ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட், ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டி20 என மூவகை போட்டிகளிலும் பலமுறை விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அத்தோடு ஐசிசியின் பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத வீரர்களில் Rahul Dravid ஒருவராவார். 1996 இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார் ராகுல் டிராவிட்.
8. Rahul Dravid
இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத வீரர்களில் Rahul Dravid ஒருவராவார். 1996 இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார் ராகுல் டிராவிட்.
இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 அரை சதங்கள் மற்றும் 36 சதங்கள் அடங்கலாக 13,288 ரன்களை டெஸ்ட் அரங்கில் குவித்ததோடு, 344 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 83 அரை சதங்கள் மற்றும் 12 சதங்கள் அடங்கலாக 10, 889 ரன்களை ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் அடித்த 233 என்ற ஆட்டம் ஆனது அவரது வாழ்வில் மறக்க முடியாத மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆக அது இருந்தது.
டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ராகுல் ட்ராவிட் 4-வது இடத்தில் உள்ளார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் 10-வது இடத்தில் உள்ளார்.
7. Mahela Jayawardene
1977 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் பிறந்த Mahela Jayawardene, 1997 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதோடு, அடுத்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளதுடன், 448 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் மற்றும் 55 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இவற்றுள் டெஸ்ட் போட்டிகளில் 50 அரை சதங்கள் மற்றும் 34 சதங்கள் உள்ளடங்கலாக 11,814 ஓட்டங்களையும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 77 அரை சதங்கள் மற்றும் 19 சதங்கள் உள்ளடங்களாக 12,650 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
2006 ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது மஹேல ஜெயவர்தன அடித்த 374 ஓட்டங்கள் ஆனது அவரது வாழ்வில் மிகச் சிறந்த இன்னிங்ஸ் ஆகக் கருதப்படுகிறது. அதுமட்டுமன்றி டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் ஒரு நபர் அடித்த அதிகபட்ச ஓட்டங்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 9 வது இடத்திலும், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் 5 வது இடத்திலும் மஹேல ஜயவர்த்தன உள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் Jacques Kallis ஒருவர். South Africa அணியின் மிகச்சிறந்த வீரர்களுள் ஜாக் காலிஸ் ஒருவர். 1995 இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
6. Jacques Kallis
கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் Jacques Kallis ஒருவர். South Africa அணியின் மிகச்சிறந்த வீரர்களுள் ஜாக் காலிஸ் ஒருவர். 1995 இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளிலும், 328 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் மற்றும் 25 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் ஜாக் காலிஸ். டெஸ்ட் போட்டிகளில் 58 அரைச்சதம், 45 சதம் உள்ளடங்களாக 13,289 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் ஒரு நாள் சர்வதேச அரங்கில் 86 அரைச்சதம், 17 சதங்கள் உள்ளடங்கலாக 11,579 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி டெஸ்ட் அரங்கில் 292 விக்கெட்டுகளையும், ஒருநாள் சர்வதேச அரங்கில் 273 விக்கெட்டுகளையும் பெற்று கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகவும் திகழ்கின்றார்.
ஜாக் காலிஸ் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 3 வது இடத்திலும், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் 8 வது இடத்திலும் உள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் Brian Lara தலை சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆகவும் காணப்படுகிறார்.
5. Brian Lara
மேற்கிந்திய தீவுகள் அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் Brian Lara தலை சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆகவும் காணப்படுகிறார்.
2004 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பிரையன் லாரா அடித்த 400 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஓட்டம் ஆகும்.
1990 பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான பிரையன் லாரா, இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளிலும் 299 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
இதில் டெஸ்ட் போட்டிகளில் 48 அரைச் சதங்கள் மற்றும் 34 சதம் உள்ளடங்கலாக 11,953 ஓட்டங்களையும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 63 அரை சதங்கள் மற்றும் 19 சதம் உள்ளடங்களாக 10,405 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
பிரையன் லாரா, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 7 வது இடத்திலும், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் 13 வது இடத்திலும் உள்ளார்.
இலங்கை அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் Kumar Sangakkara ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட கூடிய திறமை உள்ளவர்.
4. Kumar Sangakkara
இலங்கை அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் Kumar Sangakkara ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட கூடிய திறமை உள்ளவர்.
2015 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது குமார் சங்கக்கார ஓய்வடைதற்கு முந்திய ஐந்து போட்டிகளிலும், நான்கு தொடர்ச்சியான சதங்களுடன் மொத்தமாக 495 ஓட்டங்களை பெற்றிருந்தார். உலகக்கிண்ணப் போட்டிகளில் முதல் முதலாக 4 சதங்களை அடித்தது அதுவே முதல் முறையாகும்.
உலக கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதம் அடித்தவர் என்ற பெருமையும் குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டார். இந்த உச்ச நிலையிலேயே அவர் தனது ஓய்வினை அறிவித்தார். இது அவரின் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவலைக்குட்படுத்தியது.
2000 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான குமார் சங்கக்கார இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளிலும், 404 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் மற்றும் 56 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
அவற்றுள் டெஸ்ட் போட்டிகளில் 52 அரைசதங்கள் 38 சதங்கள் உள்ளடங்களாக 12,400 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 93 அரைசதங்கள் 25 சதங்கள் உள்ளடங்களாக 14,234 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
குமார் சங்கக்கார, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6 வது இடத்திலும், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் 2 வது இடத்திலும் உள்ளார்.
ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமன்றி சிறந்த விக்கெட் கீப்பர் ஆகவும் சங்கக்கார இருந்துள்ளார். இதுவரை 404 போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்த சங்ககார 383 பிடிகள் மற்றும் 99 ஸ்டம்புகள் அடங்கலாக மொத்தமாக 482 டிஸ்மிஸ்ஸல்களை செய்துள்ளார். இதன் மூலம் அதிக டிஸ்மிஸ்ஸல்களை செய்த விக்கெட் கீப்பர் ஆகவும், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களின் வரிசையில் முதலாம் இடத்திலும் சங்கக்கார உள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு இரண்டு தடவை உலக கோப்பையை வென்று கொடுத்ததோடு மட்டுமன்றி, அவுஸ்திரேலிய அணியை தலைமை தாங்கி அதிக போட்டிகளில் வெற்றிகளை சம்பாதித்த சிறந்த கேப்டனாகவும் மற்றும் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்தவர் Ricky Ponting ஆவார்.
3. Ricky Ponting
அவுஸ்திரேலிய அணிக்கு இரண்டு தடவை உலக கோப்பையை வென்று கொடுத்ததோடு மட்டுமன்றி, அவுஸ்திரேலிய அணியை தலைமை தாங்கி அதிக போட்டிகளில் வெற்றிகளை சம்பாதித்த சிறந்த கேப்டனாகவும் மற்றும் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்தவர் Ricky Ponting ஆவார்.
அதுமட்டுமன்றி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்திலும், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் 3-வது இடத்திலும் உள்ளார் ரிக்கி பொண்டிங்.
2002 - 2012 வரை ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கிய ரிக்கி பொண்டிங், மொத்தமாக 324 டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 220 வெற்றிகளை குவித்ததோடு 15 போட்டிகளில் வெற்றி தோல்வியின்றி சமனில் முடித்தார்.
ரிக்கி பொண்டிங் இதுவரை 168 டெஸ்ட் போட்டிகளிலும், 375 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் மற்றும் 17 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவற்றுள் டெஸ்ட் போட்டிகளில், 62 அரை சதங்கள் மற்றும் 41 சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 13,378 ஓட்டங்களையும் குவித்துள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், 82 அரை சதங்கள் மற்றும் 30 சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 13,704 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு இரண்டு தடவைகள் உலக கோப்பையை வென்று கொடுத்ததோடு மட்டுமன்றி பல முக்கியமான தருணங்களில் அவுஸ்திரேலிய அணிக்கு பல வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளையும் ரிக்கி பொண்டிங் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதன்காரணமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத, மிகச்சிறந்த அவுஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும், மிகச் சிறந்த பேட்ஸ்மேனாககவும் இவர் திகழ்கிறார்.
இந்திய ரசிகர்களால் மட்டுமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்களால் “God Of Cricket - கிரிக்கெட்டின் கடவுள்” என செல்லமாக அழைக்கப்படும் Sachin Tendulkar உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆவார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவர் ஆவார்.
2. Sachin Tendulkar
இந்திய ரசிகர்களால் மட்டுமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்களால் “God Of Cricket - கிரிக்கெட்டின் கடவுள்” என செல்லமாக அழைக்கப்படும் Sachin Tendulkar உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆவார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவர் ஆவார்.
இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்களை அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ளவராகவும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் இரண்டும் உள்ளடங்கலாக முதன் முதலில் 100 சதங்களை அடித்தவர் என்ற பெருமையையும் சச்சின் டெண்டுல்கர் தன்வசப்படுத்தி உள்ளார்.
1990 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்த டெண்டுல்கர், தனது இறுதி மற்றும் நூறாவது சதத்தை 2012 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக டாக்காவில் இடம்பெற்ற ஆசிய கிண்ணப் போட்டியின் போது அடித்தார். இதன் மூலம் 100 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இவ்வாறு கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை குவித்த சச்சின் டெண்டுல்கர் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளதுடன், 463 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
அவற்றில் டெஸ்ட் போட்டிகளில் 68 அரைசதங்கள் மற்றும் 51 சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 15,921 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 96 அரை சதங்கள் மற்றும் 49 சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 18,426 ஓட்டங்களை குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர்களில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சராசரியை கொண்ட வீரராக Sir Don Bradman காணப்படுகிறார். டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேனின் சராசரி 99.94 ஆகும்.
1. Don Bradman
கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சராசரியை கொண்ட வீரராக Sir Don Bradman காணப்படுகிறார். டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேனின் சராசரி 99.94 ஆகும்.
இந்த சராசரி ஆனது இதுவரை எந்த கிரிக்கெட் வீரராளும் முறியடிக்க முடியாத சாதனையாக காணப்படுவதுடன் இவருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் அடம் வோக்ஸ் ஆவார். அவரின் சராசரி 61.87 ஆகும். டான் பிராட்மேன் இதுவரை விளையாடிய அனைத்து கிரிக்கெட் வீரர்களை விடவும் மிகச் சிறந்த திறமையுள்ள வீரராவார்.
1908 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் 1928 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 13 அரை சதங்கள் மற்றும் 29 சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 6,996 ஓட்டங்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்றுள்ளார்.
அதுமட்டுமன்றி தனது அதிகபட்ச ஓட்டமாக 334 ஓட்டங்களை ஒரு இன்னிங்சில் பெற்றுள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனிநபர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்களில் 12 வது இடத்தில் உள்ளது. 52 போட்டிகளில் இத்தகைய சாதனையை செய்வது என்பது சாதாரணமான விடயம் அல்ல. ஆனால் அந்த சாதனையை Sir Don Bradman செய்து முடித்துள்ளார்.
-END-
Tags:
Top 10 List