INTRODUCTION
இன்று Hollywood மட்டுமன்றி உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் (Highest-paid actor) என்றால் அது Dwayne Johnson எனும் Rock ஆவார். ஆனால் இந்த நிலையை அடைய தன்னுடைய இளமைப்பருவத்தில் எத்தகைய தடைகளைத் தாண்டி, எத்தனையோ தோல்விகள், அவமானங்கள் என்பவற்றை தாண்டி இந்த நிலையை அடைந்துள்ளார் எனும்போது மிக ஆச்சரியமாக உள்ளது.
அப்படி Dwayne Johnson, அவருடைய வாழ்வில் எத்தகைய கஷ்டங்கள் மற்றும் துன்பங்களைக் கடந்து இத்தகைய நிலையினை அடைந்தார் என்பதனை மிகச் சுருக்கமாக இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். நிச்சயமாக Dwayne Johnson Biography உங்களை வெற்றியின் பக்கம் இழுத்துச் செல்லும் ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
BORN
1972 ஆம் ஆண்டு May மாதம் 2 ம் திகதி அமெரிக்காவின் California மாநிலத்தில் Dwayne Johnson பிறக்கிறார். அவர் பிறக்கும்போதே அவரது தந்தை மற்றும் தந்தையின் தந்தை என அவரது பரம்பரையில் அனைவருமே மல்யுத்த (Wrestling) வீரர்கள்.
இந்த ஒரு விடயமே பின்னாளில் அவரும் ஒரு மல்யுத்த வீரராக வருவதற்கு காரணமாக இருக்கின்றது. ஆனால் அவரது சிறு வயதில் அவருக்கோ அல்லது அவர்களது பெற்றோருக்கோ அது தெரிந்திருக்கவில்லை.
DAD'S NEGLECT
ஆனாலும் அந்த காலகட்டத்தில் மல்யுத்தத்த போட்டியின் மூலம் அதிகளவு வருமானம் என்பது சாத்தியமற்றதாக இருந்தது. இதனால் Dwayne Johnson இன் அப்பாவுக்கு Dwayne Johnson ம் அவரது அம்மாவும் சுமையாக தெரிந்தனர். இதனால் Dwayne Johnson இன் அப்பா அவரது அம்மாவை விவாகரத்து செய்துவிட்டு அவர்கள் இருவரையும் தனியாக விட்டு சென்றுவிட்டார்.
அத்தோடு Dwayne Johnson னின் அப்பா போதைக்கு அடிமையாகியதோடு அதிகமான அளவு பெண்களோடு தொடர்புகளையும் வைத்துக்கொண்டார். இதனால் Dwayne Johnson ம் அவரது அம்மாவும் வறுமையில் வாடினர். அப்போது Dwayne Johnson இன் வயது 14 ஆகும்.
MOM'S DIFFICULTIES
இவ்வாறு தன் கணவரே தன்னையும் தன் மகனையும் விட்டுச் சென்ற காரணத்தினால் உண்பதற்கு உணவும் தங்குவதற்கு இடமும் இல்லை அது மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால் Dwayne Johnson இன் அம்மா வேறு வழியில்லாமல் தன் மகனுக்காக பல வேலைகளை தேட ஆரம்பித்தார். பல வேலைகளை தேடியும் எந்த வேலையும் கிடைக்காததால் இறுதியாக கழிவறையை சுத்தம் செய்யும் வேலை செய்கிறார்.
இந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் தன் மகன் Dwayne Johnson மற்றும் அவனது கல்விக்காகவும் இந்த துயரங்களை எல்லாம் அவரது அம்மா பொறுத்துக் கொண்டார். இவ்வாறு வேலை செய்து ஒரு வழியாக அவர்கள் இருவரும் தங்களுடைய உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டதுடன் தங்குவதற்கு வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்தனர்.
இவ்வாறு சில நாட்கள் செல்கையில், ஒருநாள் Dwayne Johnson னை பாடசாலையிலிருந்து அவரது அம்மா அழைத்துக்கொண்டு தன் வீட்டருகே வரும்போது வீடு பூட்டப்பட்டு துணிகள் எல்லாம் வீசி எறியப்பட்டு இருந்தது. அதனோடு கதவில் “நீங்கள் 2 மாதம் வாடகை தரவில்லை. ஆதலால் வாடகை தந்தால் மட்டுமே வீடு கிடைக்கும்” என எழுதப்பட்டிருந்தது.
இதனை பார்த்த Dwayne Johnson மற்றும் அவரது அம்மாவுக்கு கவலையினால் முகம் சிவந்து அழுது விட்டனர். இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னர் அந்த வீட்டிற்கான வாடகையை கொடுப்பதற்கு தனக்குத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் உதவி கேட்டார் Dwayne Johnson உடைய அம்மா. ஆனால் யாருமே அவர்களுக்கு உதவி செய்யவில்லை.
வீட்டுக்காரர்களிடம் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் அந்த வீட்டை கொடுக்கவில்லை. பணம் கொடுத்தால் தான் கொடுப்பேன் என உறுதியாக கூறிவிட்டனர். அந்த காலகட்டத்தில் தன்னுடைய அதிகமான இரவுகளை வீதியோரங்களில் கழித்தனர். பின்னர் சில நாட்கள் கழித்து Dwayne Johnson இன் அம்மாவின் சொந்த நாடான நியூசிலாந்திற்கு சென்று தங்களின் கஷ்டங்களை தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி சிறிதளவு பணத் தொகையை பெற்று வேறு வீடொன்றில் குடிபெயர்ந்தனர்.
STARTING THE STEAL
ஆனாலும் அன்று இரவு வீட்டில் தங்கியபோது Dwayne Johnson க்கு தூக்கம் வரவில்லை. தன் தாய் படும் கஷ்டம் மற்றும் தன் தந்தையுடைய புறக்கணிப்பு என்பவற்றை பார்த்த Dwayne Johnson க்கு, தன்னுடைய இந்த நிலமைக்கு பணம் தான் காரணம் என்பதை உணர்ந்து பணத்துக்காக ஒரு திருட்டு கும்பலில் சேர்ந்து திருட ஆரம்பிக்கிறார்.
திருடிய குற்றத்திற்காக 8 முறை சிறையும் சென்றிருக்கிறார். அவ்வாறு எட்டாவது முறை அவர் சிறை செல்லும்போது திருடுவது என் வாழ்க்கையின் நோக்கம் இல்லை என்பதை உணர்ந்து திருடுவதை விட்டுவிட்டு மீண்டும் பாடசாலைக்கு செல்கிறார். ஆனால் இதில் இருந்து தான் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுகிறது.
PLAYING FOOTBALL
பாடசாலை கற்றுக் கொண்டிருக்கும் போதே Dwayne Johnson நல்ல Bodybuilder ராக இருந்த காரணத்தினால் அவருடைய பாடசாலை ஆசிரியர் அவரை Football விளையாட அழைக்கிறார். Dwayne Johnson ம் ஆசிரியரின் நம்பிக்கை வீண் போகாதவாறு சிறப்பாக விளையாட பாடசாலை ரீதியாக மட்டுமன்றி மாநில ரீதியாகவும் பேசப்படுபவராக மாறுகிறார்.
அதுமட்டுமன்றி மாநில ரீதியான போட்டியிலும் பணம் கொடுத்து வாங்கபடுகிறார். இது அவருக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதனால் Football விளையாட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் மிகுந்த பயிற்சியினை எடுப்பதோடு மிகச் சிறப்பாகவும் விளையாடுகிறார்.
CHASED OUT OF FOOTBALL
இவ்வாறே மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கையில் Dwayne Johnson னின் இடத்துக்கு இன்னொரு வீரர் போட்டியாக இருந்ததனால் நான் அவரை விட சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக Dwayne Johnson Over Work-Out செய்கிறார். இதனால் அவருக்கு உபாதை ஏற்படவே போட்டியிலிருந்து நீக்கப்படுகிறார்.
அது மட்டுமன்றி அவரது கனவாகிய தேசிய போட்டியில் (NPL) அவரது பெயர் பட்டியலிடப்பட்ட போதிலும் எந்த அணியும் அவரை வாங்க வில்லை. இருந்தாலும் மனம் தளராத Dwayne Johnson Canada சென்று அங்குள்ள Football club ஒன்றில் சேர்ந்து விளையாட சில நாட்களிலேயே அங்கிருந்தும் விரட்டி விடுகின்றனர். இதனால் மிகுந்த கவலையோடு தன் சொந்த நாடான அமெரிக்காவுக்கு திரும்புகிறார்.
இவ்வாறு திரும்பும் போது தன் தாய்க்கு ஏதாவது வாங்கிக் கொள்ள நினைக்கும் Dwayne Johnson, அவரது Purse ஐ எடுத்துப் பார்க்கிறார் வெறும் 7 டாலர்கள் மட்டுமே பணம் இருந்தன. இதனால் தன் தாய்க்கு எதுவும் வாங்கிக் கொள்ளாத நிலையில் வெறும் கையோடு வீடு திரும்புகிறார். இந்த ஒரு சம்பவம் Dwayne Johnson ஐ மிகவும் மனக் கவலைக்கு உள்ளாக்குகின்றது.
BECOMING POPULAR IN WRESTLING
தன்னுடைய Football கனவுகளை எல்லாம் விட்டுவிட்டு தன் தந்தையிடம் சென்று தனக்கு மல்யுத்தம் கற்றுத் தருமாறு கேட்கிறார். அதற்கு அவரது தந்தை மறுக்கவே விடாப்பிடியாக கற்றுத் தருமாறு அடம் பிடித்தார் Dwayne Johnson. இதனால் வேறு வழியின்றி அவரது அப்பாவும் ஒப்புக்கொண்டு கற்றுக்கொடுக்கிறார்.
இவ்வாறு கற்றுக்கொள்ள ஆரம்பித்து பின்னர் ஒருவழியாக Dwayne Johnson மல்யுத்தத்தை முழுமையாக கற்றுக் கொள்கிறார். அத்தோடு தான் கற்றுக்கொண்ட மல்யுத்தத்தினை கொண்டு தன்னுடைய முதலாவது Wrestling போட்டியில் கலந்து கொள்வதோடு அதில் வெற்றியும் பெறுகிறார்.
இவ்வாறு தன்னுடைய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. “இங்கிருந்து வெளியேறு” என கூச்சலிட்டனர். இதனால் ரசிகர்களின் மனதை அறிந்து கொண்டு அவர்கள் மனம் விரும்பும் படி தன் உடற்பாங்கு பேச்சு மற்றும் நடத்தை என்பவற்றை அமைத்துக்கொண்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த Wrestling வீரராக பின்னாட்களில் உருவெடுக்கிறார் Dwayne Johnson.
INTRODUCING IN CINEMA
அத்தோடு பல முன்னணி Wrestling வீரர்களோடு போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தான் பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் ஈடாக பல ஆயிரம் டாலர்களை சம்பாதிக்கிறார். தான் இதனோடு நிறுத்திவிடக் கூடாது என நினைத்து சினிமாவிலும் களம் இறங்குகிறார் Dwayne Johnson.
இதனால் ஆரம்பத்தில் சில எதிர்ப்புக்களை சந்திக்கவும் செய்கின்றார். பின்னர் ஒரு வழியாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வரவே, அந்த வாய்ப்புகளை பயன்படுத்தினார். அவ்வாறு அவர் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களும் வெற்றிநடை போட்டது. என்றாலும் அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் சினிமாவில் தனக்கான இடம் கிடைக்காது என்று அஞ்சினார் Dwayne Johnson.
SUCCESS IN CINEMA
இவ்வேளையில் தான் Dwayne Johnson னின் வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையாக Fast And Furious இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவரும் வாய்ப்பை தவறவிடாமல் சிறப்பாக நடித்துக் கொடுக்க படமும் சக்கை போடு போட்டது மட்டுமன்றி Dwayne Johnson கதாபாத்திரம் உலக அளவில் பேசப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் படத்தின் வெற்றிக்கு அவரது கதாபாத்திரம் பெரிதும் உதவியது என்று சொல்லலாம்.
அன்றிலிருந்து Dwayne Johnson மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது. அதன் பிறகு பல ஹாலிவுட் படங்களில் (Hollywood Movies) நடித்து உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக (Highest Paid Actor in the World), மற்றும் ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் (Highest Paid Actor in Hollywood) உயர்ந்தார்.
இதுவரை 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இன்றைய பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகவும், ரசிகர்களால் Rock என செல்லமாக அழைக்கப்படுபவர் ஆகவும் அவர் திகழ்கின்றார்.