INTRODUCTION
பொதுவாகவே பல கோடிக்கணக்கான மக்கள் உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பினும் பெயர் சொல்லும் அளவுக்கு சாதித்தவர்கள் எனும் பொழுது ஒருசில குறிப்பிட்ட நபர்களே நம் கண்முன் வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள், கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர்.
ஏனெனில் இவ்வுலகில் ஒரு ஆணாக சாதிப்பது என்பது கடினமான ஒன்றாக இருப்பினும் ஒருசில இலகுவான வழிமுறைகள் உண்டு. எனினும் ஒரு பெண்ணாக இவ்வுலகில் சாதனை புரிவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
பல கஷ்டங்கள், துன்பங்கள், குடும்பம், பிள்ளைகள், கணவன், தான் சார்ந்த சமூகம்,மற்றும் தன்னை சுற்றி இருக்கின்ற பிற ஆண்களின் சீண்டல்கள் என பல பிரச்சினைகளை தாண்டியே ஒரு பெண்ணால் சாதிக்க முடியும்.
சாதாரணமாக ஒரு ஆணால் எவ்வளவு வேண்டுமானாலும் வெளிப்படையாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண் என்பவள் அவ்வாறு இருப்பது என்பது இயலாத காரியம். அந்தளவுக்கு பெண் என்பவள் மறைக்கப்பட்ட ஒன்றாகவே இச்சமூகத்தில் காணப்படுகின்றாள்.
ஆனால் இந்த வரைமுறைகளை எல்லாம் தாண்டி தான் சார்ந்த துறையில் சாதித்து இவ்வுலகையே திரும்பிப் பார்க்க வைத்த சில பெண்களும் இருக்கின்றனர். அதற்கு உதாரணமாக அன்னை தெரேசா, கல்பனா சாவ்லா, ஓப்ரா வின்ஃப்ரே, ஜே.கே. ரவுலிங் போன்றவர்களை குறிப்பிடலாம். ஏன் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட இந்தப் பட்டியலில் உள்ளடங்குவார்.
இவ்வாறு உலகமே பெயர் சொல்லும் அளவுக்கு பல சாதனைகளை செய்து விட்டுச்சென்ற, செய்து கொண்டிருக்கின்ற பல பெண்களை நாம் காணலாம். அவ்வாறு தன் வாழ்வில் வேறு எந்தப் பெண்ணும் சந்தித்திராத வேதனையை அனுபவித்து அவற்றையெல்லாம் மிகப்பெரும் சாதனையாக மாற்றி வெற்றி பெற்ற, பெண்கள் மற்றுமன்றி ஆண்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக காணப்படுகின்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இரும்பு பெண்மணி Muniba Mazari யின் வெற்றி வரலாற்றினை பற்றி இந்த பதிவில் சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
MARRIAGE LIFE
1987ஆம் ஆண்டு March மாதம் 3 ஆம் திகதி Pakistan ல் பிறந்த Muniba Mazari ஒரு பெண்ணாக தனது 18 வயது வரை ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிறார். இந்நிலையில் அவரின் குடும்பம் அவருக்கு பதினெட்டு வயது இருக்கும் போது திருமணம் செய்து வைக்கின்றனர்.
ஆனால் இந்த திருமணத்தில் துளியும் கூட Muniba Mazari க்கு விருப்பம் இல்லை. என்றாலும் தன்னுடைய பெற்றோருக்காக திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதிக்கிறார். அதன்படியே அவருக்கு திருமணமும் நடந்து விடுகின்றது.
அவருக்கு திருமணத்தில் சற்றும் விருப்பமில்லை என்றாலும் தனது பெற்றோருக்காக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் அவர் நினைத்தபடியே அத்திருமண வாழ்க்கை Muniba Mazari க்கு மகிழ்ச்சியானதாக அமையவில்லை.
MUNIBA MAZARI UNEXPECTED ACCIDENT
சரியாக திருமணமாகி இரண்டாவது வருடத்தில் தன் கணவரோடு காரில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகின்றது. இதில் அவர்களின் கார் கடுமையாக அடிபட்டு அருகில் உள்ள சேற்றுக்குள் விழுந்தது.
Muniba Mazari யின் கணவர் Muniba Mazari யைப் பற்றி கவலைப்படாமல் அருகில் உள்ள பள்ளத்தில் குதித்து தன்னை காப்பாற்றிக்கொண்டார். ஆனால் Muniba Mazari காருக்குள் வசமாக அகப்பட்டுக் கொண்டார்.
உடம்பு முழுவதும் ஏராளமான காயங்கள் அவருக்கு ஏற்பட்டது. அவரின் முன் கை எலும்புகள், மணிக்கட்டு எலும்புகள், தோள்பட்டை எலும்புகள், விலா எலும்புகள் எல்லாம் முழுவதுமாக நொறுங்கிப் போயிருந்தன.
அதுமட்டுமின்றி நுரையீரல் மற்றும் கல்லீரல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவரால் மூச்சு விடக்கூட முடியவில்லை. சிறுநீரக குடல் கட்டுப்பாடும் இழந்தது. மேலும் முதுகுத்தண்டுவட எலும்புகள் உடைந்து முற்றுமுழுதாக செயலற்று முடங்கிப் போயிருந்தார் Muniba Mazari.
2 1/2 MONTHS IN THE HOSPITAL
இந்த விபத்து நடந்த இடமானது Hospital, Ambulance வசதிகள் இல்லாத இடம் என்பதனால் அவ்வழியே வந்தவர்களின் உதவியோடு Muniba Mazari காருக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டு JEEP ஒன்றின் பின்புறம் ஏற்றி அடுத்த மூன்று மணி நேர தொலைவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவ்வேளையில் தன் உடம்பில் ஒரு பகுதி நெருங்கியும் மற்றைய பகுதி செயலாற்றும் இருந்ததை உணர்ந்தார் Muniba Mazari. வைத்தியசாலையில் இரண்டரை மாதங்கள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டதோடு, உடல் முழுவதும் நிறைய அறுவை சிகிச்சைகளும், கைகள் மற்றும் முதுகில் அதிகளவான டைட்டானியம் இரும்புகளும் பொருத்தப்பட்டு இருந்தால் அந்த இரண்டரை மாதங்களை மிகவும் கடினமாக உணர்ந்தார் Muniba Mazari.
CONTINUING DIFFICULTIES
ஒருநாள் Doctor அவரிடம் வந்து, “நீங்கள் ஓவியராக விரும்புவதை கேள்விப்பட்டோம். ஆனால் மன்னிக்கவும், இனிமேல் உங்களால் ஓவியம் வரைய முடியாது. காரணம் உங்களது கை மணிக்கட்டு எலும்புகள் எல்லாம் நொறுங்கி விட்டது” என்றார். இதைக் கேட்ட Muniba Mazari அமைதியாக இருந்தார்.
மீண்டும் அடுத்த நாள் வந்த டாக்டர் Muniba Mazari இடம், “உங்கள் தண்டுவடமானது பாதிக்கப்பட்டிருப்பதால் உங்களால் இனிமேல் எழுந்து நடப்பதற்கு முடியாது” என்றார். அதற்கும் அமைதியாக இருந்தார் Muniba Mazari. மூன்றாவது நாளும் வந்து மருத்துவர் ஒரு விடயத்தைக் கூறினார், “உங்களால் இனி ஒரு குழந்தைக்கு அம்மாவாக முடியாது” இதைக் கேட்ட Muniba Mazari மிகவும் மனம் உடைந்து போனார்.
இந்நிலையில் Muniba Mazari ஐ அவரது கணவர் விவாகரத்து செய்ததுடன், Muniba Mazari யின் தந்தையும் அவர்களின் குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் கவலையின் உச்சத்தில் தன் அம்மாவிடம் சென்று, “ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கின்றது. எல்லாவற்றையும் இழந்து இனி நான் உயிர் வாழ வேண்டுமா” என தேம்பி அழுதார்.
இதற்கு அவரது அம்மா, “இதுவும் கடந்து போகும். இறைவன் உனக்காக மிகப்பெரும் வேறொரு திட்டத்தை வைத்திருப்பார். அமைதியாக இரு” என மிகப்பெரும் ஆறுதல் வார்த்தைகளை கூறினார். என்னால் இந்த மரணப் படுக்கையில் இருக்க முடியாது. நான் ஏதாவது செய்ய வேண்டும். நான் மாற வேண்டும் என மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் ஒரு ஓவியத்தை தீட்டி முடித்தார். அது அவரது மரணப்படுக்கையில் ஆரம்பித்தது. அதனை பார்த்து அனைவரும் பாராட்டினர்.
இரண்டரை மாதங்களுக்குப் பிறகு வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குச் சென்றாலும், அங்கு சுமார் இரண்டு வருடங்களை படுக்கையிலேயே கழித்தார். அந்த இரண்டு வருடங்களில், தன் ஜன்னலின் வழியாக குருவிகளின் சத்தத்தையும், மனிதர்களின் நடமாட்டத்தையும் பார்த்து மனிதர்கள் எல்லாம் எவ்வளவு கொடுப்பினையோடு வாழ்கிறார்கள் என்பதையும், ஆனால் அதனை மனிதர்கள் எவரும் புரிந்து கொள்வதில்லை என்பதையும் உணர்ந்தார் Muniba Mazari.
OVERCOMING FEAR
2 ஆண்டுகள் இரண்டரை மாத படுக்கைக்கு ஒரு விடிவுகாலம் கிடைத்தது. ஆம் படுக்கையிலிருந்து சக்கர நாற்காலிக்கு மாறினார். அவர் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு, என் வாழ்வில் ஏதாவது அதிசயம் நிகழும் என இனி காத்திருக்க முடியாது. என்னை நான் மாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார்.
கண்ணாடியை பார்த்து உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டு பின்னர் அதை அழித்துவிட்டு சக்கர நாற்காலியில் உள்ள பெண் இவ்வாறு செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என எண்ணினார். ஆனால் அடுத்த கணமே, நான் ஏன் மற்றவர்களுக்காக வாழ வேண்டும். எனக்கு பிடித்தவாறு நான் என்னுடைய வாழ்க்கையை வாழவேண்டும் என்று மீண்டும் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டார் Muniba Mazari.
அவருக்குள் இருந்த பயங்களை எல்லாம் பட்டியலிட்டார். அவரின் முதல் பயம் தனது கணவரின் விவாகரத்து. இதனால் Muniba Mazari. தன் கணவரின் இரண்டாவது திருமணத்தின் போது, “உன் திருமணம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்கள்” என்று குறுஞ்செய்தி அனுப்பி அந்த பயத்தில் இருந்து விடுபட்டார்.
அடுத்து அவரது இரண்டாவது பயமான தன்னால் அம்மாவாக முடியாது என்பதில் இருந்து விடுபட, அனாதை ஆசிரமத்தில் இருந்து ஒரு ஆண்பிள்ளையை தத்தெடுக்கிறார். இன்று அவர் வளர்ந்து பெரியவராக ஆகிவிட்டார்.
தனது இறுதி பயமான மக்களை சந்திப்பது என்பதில் இருந்து விடுபட ஒவ்வொரு தொலைக்காட்சிகளுக்கும் VJவாக ஆவதற்கு Interview செல்கிறார். அவரின் ஆசைப்படியே Pakistan ன் National Television யில் VJ வாக வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ACHIEVEMENTS OF MUNIBA MAZARI
இவ்வாறு தனக்குள் இருந்து கொண்டு தன்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடக்கி வைத்த மிகப்பெரும் பயங்களை எல்லாம் கண்டு அச்சப்படாமல் அதனை எதிர்த்து செயற்பட்டதன் மூலம் அந்தப் பயங்களை எல்லாம் அவரிடம் இருந்து விலக்கி வைத்தார்.
அதன் பின்னர் தன் அசாத்திய திறமைகளினாலும், தன் விடா முயற்சியினாலும் தன்னால் இயலாத நிலையிலும் கூட துவண்டு போகாமல், தான் ஒரு பெண்ணாக இருந்தும் அதை எல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் அயராது தொழிற்பட்டதன் விளைவு, இன்று உலகறியும் பாகிஸ்தானின் இரும்புப் பெண்மணியாகவும் உருவெடுத்துள்ளார்.
தற்போது Pakistan ன் First Wheel Chair Painter என்ற பட்டத்தை பெற்றுள்ளதுடன், Modeling துறையிலும் பணியாற்றி வருகின்றார். அதுமட்டுமன்றி ஐ.நா சபைக்கான Pakistan ன் First Social Welfare Ambassador வும் தேர்வாகி Pakistan ன் Iron Lady என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார் Muniba Mazari.
FINALLY
"என்னால் எதனையும் சாதித்து காட்ட முடியும். என்னால் முடியாதது என்பது இவ்வுலகில் எதுவுமே இல்லை", என்ற அசாத்திய தன்னம்பிக்கையுடன், விடாமுயற்சியையும் உரமாக கொண்டு செயற்படுகின்ற போது நிச்சயமாக நம் வாழ்வில் நாம் நினைக்கின்ற உச்சத்தை அடையலாம் என்பதற்கு Muniba Mazari யின் வாழ்க்கை ஒரு சிறந்த படிப்பினையாகும்.
தன் வாலிபப் பருவம் வரை ஒரு சாதாரண பெண்ணாக வாழ்ந்த அவர் தன் திருமணத்திற்கு பின்னர் நடந்த ஒரு அசம்பாவிதம் அவரது வாழ்வையே மாற்றிப்போட்டது.
தன்னால் எழுந்து நடக்கவோ அல்லது பிற மனிதர்களை போல சாதாரணமாக இருக்கவோ முடியாது என்றாலும், என்னால் எதுவுமே முடியாது என்று வீட்டிற்குள் ஒரு சாதாரண பெண் போல முடங்கிக் கிடக்காமல், என் வாழ்வில் நான் இழந்த இன்பங்களை திரும்பப்பெற வேண்டும், நான் ஏதாவது சாதிக்க வேண்டும். வெளி உலகுக்கு என் பெயர் தெரிய வேண்டும் என்ற ஒரு தன்னம்பிக்கை அவரை இன்று இந்த நிலைக்கு ஆளாக்கியது.
உண்மையிலேயே ஒவ்வொரு பெண்ணுக்கும் இவர் சிறந்த முன்மாதிரியாக இருப்பதுடன் ஒவ்வொரு ஆணுக்குமே இவரது வாழ்க்கை மிகப்பெரும் படிப்பினையாக உள்ளது.
எனவே நாம் அனைவருமே Muniba Mazari யின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, “முதலில் நம்மை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனதை பயத்தில் இருந்து நீக்கி தெரியப்படுத்த வேண்டும்” என்பதைத்தான். இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் ஒரு மிகச்சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகின்றோம்.