Soichiro Honda Biography - The Real History of Honda | Honda Founder Life Story in Tamil

 

Introduction

இன்றைய நவீன உலகில் மோட்டார் (Motor) வாகனங்களின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அந்தளவுக்கு அதன் பயன்பாடும் தேவையும் அதிகரித்து விட்டது. மண்ணோடு மண்ணாகிப் போன ஜப்பானிலிருந்து (Japan) மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவரான, உலகின் மிகப்பெரும் மோட்டார் கம்பெனிகளில் ஒன்றான ஹோண்டா (Honda) நிறுவனத்தைத் தொடங்கிய சோய்சிரோ ஹோண்டாவின் தோல்விகளும், வலிகளும் அதிகம் நிறைந்த வாழ்க்கையினை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் Soichiro Honda Success Story க்குள் செல்லலாம். 


Soichiro Honda Biography - The Real History of Honda | Soichiro Honda Success Story in Tamil

Birth And Family 

1906-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி ஜப்பானில் (Japan) ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறக்கிறார் Soichiro Honda. அவரது அப்பா Gihei Honda இரும்பு பட்டறை ஒன்றில் வேலை செய்பவர். சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடையையும் வைத்திருக்கிறார். அது மட்டுமன்றி அவரது அம்மா Mika Honda ஒரு திறமையான நெசவாளி. எந்தவிதமான சிக்கலான நெசவுகளையும் லாவகமாக செய்யக்கூடிய தறி ஒன்றை தானே வடிவமைக்கும் அளவுக்கு புத்திசாலியாகவும் இருக்கின்றார்.


இதுவே சோய்சிரோ ஹோண்டாவின் சிறிய குடும்பம். சோய்சிரோ ஹோண்டா தன் சிறு வயதிலிருந்தே தன் தந்தையுடன் அவரது சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடையில் வேலை செய்வதன் மூலம் அவரது அப்பாவுக்கு உதவி செய்து வந்தார். அத்தோடு அவரது சிறுவயதிலிருந்தே கல்வியின் மீதான ஆர்வம் மிகக் குறைவாகவே சோய்சிரோ ஹோண்டாவுக்கு இருந்தது. தான் கல்வியில் சிறந்தவனாக இல்லை என்றாலும் அவருக்கு என்று ஒரு கனவு இருந்தது. 

Soichiro Honda’s Dream

1930 இல் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார மந்த நிலைமை (The Great Depression) ஆட்கொண்டிருந்த காலப்பகுதி அது. இதில் உழைப்புக்கு பெயர் போன ஜப்பானும் அகப்பட்டுக் கொண்டது. அப்போது சோய்சிரோ ஹோண்டா பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தார்.


தான் ஒரு ஏழை மாணவன் என்றாலும் அவருக்கு என்று ஒரு கனவு இருந்தது. மோட்டார் வாகனத்தின் இன்றியமையாத உதிரிபாகமான பிஸ்டன் ரிங் (Piston Rings) ஒன்றை தனது கற்பனை படி செய்வது என்பதே அவரது கனவு. இதற்காக காலை முழுவதும் பள்ளியிலும் , மாலைக்கு வீட்டுக்கு வந்ததும் தனது கனவுக்காக நேரத்தினை ஒதுக்குவார். 


அவரது அந்த ஆராய்ச்சி நள்ளிரவு தாண்டியும் இடம்பெறும். இதன்போது அவரது ஆடை அழுக்காவதுடன் முகமெங்கும் கிரீஸ் அப்பிக் கொள்ளும். கையில் சேமித்து வைத்த பணத்தையும் தன் ஆராய்ச்சியில் செலவழித்து விடுவார் சோய்சிரோ ஹோண்டா.


ஆனால் இவ்வாறு சோய்சிரோ ஹோண்டா கஷ்டப்பட்டதெல்லாம் தான் கண்டுபிடிக்கும் பிஸ்டன் ரிங்கை முன்னணி மோட்டார் நிறுவனமான Toyota நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்பதற்காகவாகும். இந்த ஆராய்ச்சிக்கு இடையில் சோய்சிரோ ஹோண்டாக்கு திருமணமும் நடந்துவிட்டது. இவ்வாறு இருக்க தன்னுடைய ஆராய்ச்சிக்காக அவரது மனைவியின் நகைகளையும் கூட அடமானம் வைத்தார்.

Soichiro Honda in Series Defeat

ஒரு வழியாக Soichiro Honda ஒருநாள் அவர் நினைத்தபடி பிஸ்டன் ரிங்கை வடிவமைத்தார். உடனே அதை எடுத்துக்கொண்டு பல கனவுகளுக்கு மத்தியில் டொயோட்டாவின் கதவுகளைத் தட்டினார். ஆனால் அங்கு நாங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இது இல்லை. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என அடிக்காத குறையாக விரட்டி விட்டனர்.


அதன் பின்னர் சோய்சிரோ ஹோண்டா கல்லூரிக்கு சென்ற போது சக மாணவர்களும், “இதெல்லாம் ஒரு மாடல். இதைக் கொண்டுபோய் வேற காட்டினயா? உன்னை உதைக்காம விட்டார்களே” என கேலி செய்தனர்.  ஆனால் இந்த அவமானங்களுக்கு சற்றும் தளராத சோய்சிரோ ஹோண்டா, அடுத்த இரண்டு வருடத்தில் தனது கனவின் மீது முழுக் கவனம் செலுத்தி தன்னுடைய அயராத முயற்சியின் பலனாக டொயோட்டாவின் Contract பெற்றுக்கொண்டார்.


இந்நிலையில் உடனடியாக தொழிற்சாலை ஒன்றை துவங்க வேண்டிய தேவையானது சோய்சிரோ ஹோண்டாக்கு இருந்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்த காலப் பகுதி என்பதால் கட்டுமான பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.


ஆனாலும் மனம் தளராது சோய்சிரோ ஹோண்டா, கட்டுமானத்திற்கு தேவையான காங்கிரட் மிக்சரை தயாரிக்க புது யுக்தி ஒன்றை கண்டுபிடித்தார். அதன்படி தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தொழிற்சாலையை கட்டி முடித்தார். இனி உற்பத்தியை துவங்குவதுதான் மீதி வேலை என்ற நிலையில் ஒரே நாளில் போரினால் விமானங்களின் குண்டுகளுக்கு இரையாகி முற்றுமுழுதாக தரைமட்டமானது சோய்சிரோ ஹோண்டாவின் தொழிற்சாலை. 


அப்போதும் மனம் தளராத Soichiro Honda, தனது ஊழியர்களை அழைத்து “அதோ அந்த விமானங்களை பின் தொடருங்கள். விமானத்தில் எரிபொருள் நிரப்பிய பின் கீழே வீசப்படும் Gasolene கேன்களை சேகரியுங்கள். அதில் நமது தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருள்கள் உள்ளது. அது வேறு எங்கும் கிடைக்காது" ன்று கூறினார் .


இது அவருக்கே உரித்தான நேர்மறை சிந்தனையின் அற்புதம் ஆகும். அதன்பின்னர் தொழிற்சாலையை ஓரளவு நிர்மாணித்து உற்பத்தியை தூங்கும் நேரத்தில் ஜப்பானுக்கே உரித்தான நிலநடுக்கம் ஏற்பட்டு ஜப்பான் மட்டுமன்றி சோய்சிரோ ஹோண்டாவின் தொழிற்சாலையும்  தரை மட்டமாக்கியது. இதனால் வேறு வழியின்றி தனது பிஸ்டன் தொழில்நுட்பத்தை டொயோட்டாவுக்கே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

Soichiro Honda on The Road to Success

இவ்வாறு தொடர் தோல்விகளை சந்தித்த சோய்சிரோவின் வெற்றிக்கான காலம் மிக விரைவில் நெருங்கியது. ஜப்பானில் போர் எல்லாம் முடிந்து ஜப்பானை தலைகீழாக புரட்டிப் போட்ட காலமது. மக்கள் மூலப்பொருள் பற்றாக்குறையை எதிர்நோக்கியதுடன் அத்தியாவசியப் பொருட்களைக் கூட ரேஷனில் வாங்கினர்.


எரிபொருள் தட்டுப்பாடும் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டிருந்தது. தன்னிடம் சொந்தமாக மோட்டார் வாகனம் இருந்தபோதும் சந்தைக்குச் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டார் சோய்சிரோ ஹோண்டா.


இப்பிரச்சனையில் இருந்து மீள தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டார், “என் குடும்பத்தை எப்படி நான் காப்பாற்றுவது? என்னிடம் உள்ள திறமையை வைத்து நான் எப்படி வாழ்க்கையில் ஜெயிப்பது?” இதுதான் அவர் தனக்குள் கேட்டுக் கொண்ட கேள்வி. அவரின் கேள்வி தேடலாக மாறியது. விளைவு விடை கிடைத்தது. 


அவரிடம் இருந்த சிறிய மோட்டாரினை தனது சைக்கிளில் பொருத்தி சைக்கிளை மோட்டார் சைக்கிள் (Motorcycle) ஆக மாற்றினார். இதுதான் Motorcycle உருவான கதை ஆகும். வீட்டுக்கும் மார்க்கெட்டுக்கும் இடையே அந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தினார் சோய்சிரோ ஹோண்டா.


இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் தனக்கும் இதுபோன்று செய்து தரும்படி சோய்சிரோவிடம் கேட்டுக் கொள்ள அவரும் தன்னிடம் உள்ள மூலப்பொருட்களை வைத்து சில மோட்டார் சைக்கிளையே செய்து கொடுத்தார். அதற்கு மேல் செய்ய முடியாது போனதால் இதற்கென ஒரு தொழிற்சாலையை உருவாக்குவது என்று முடிவெடுத்தார் சோய்சிரோ ஹோண்டா. 


ஆனால் அந்த நேரத்தில் போரினால் Japan நிர்மூலமாகி காணப்பட்டதனால் தொழிற்சாலையினை அமைப்பதற்கு முதலீடு இல்லாமல் தவித்தார் Soichiro Honda. இதற்காக ஜப்பான் முழுவதும் உள்ள பதினெட்டாயிரம் சைக்கிள் கடைகளுக்கு கடிதம் எழுதினார்.


ஜப்பானை மீண்டும் கட்டியெழுப்ப தன்னுடைய கண்டுபிடிப்பு எந்த வகையிலும் உதவும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டார். அத்தோடு தனது Motorcycle காரை விட விலை மலிவாக கிடைக்கும் என்றும், இதனை மக்கள் எங்கு வேண்டுமென்றாலும் கொண்டு செல்ல முடியும், சிறிய குறுகலான சாலைகளிலும் கூட இதனால் பயணம் செய்ய முடியும் என அக்கடிதத்தில் எடுத்துக் கூறி தனது தொழிற்சாலையில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.


இதன்படி அவர் அனுப்பிய 18 ஆயிரம் பேரில் 3000 நிறுவனங்கள் தொழிற்சாலையில் முதலீடு செய்ய முன்வந்ததன் காரணமாக சோய்சிரோ ஹோண்டா தனது உற்பத்தியை துவக்கினார்.

Soichiro Honda in The Automobile Market

ஆனால் இந்த முறையும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. பொருத்தப்பட்ட மோட்டார் பெரியதாக இருந்ததால் அதனை வெகு சிலரே வாங்கினர். இதன் பிறகு தன் தவறை உணர்ந்து தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் தனது மோட்டார் சைக்கிளுக்கு ஏற்ற அழகான சிறிய என்ஜின்களை (Engines) வடிவமைத்தார் சோய்சிரோ ஹோண்டா (Soichiro Honda). அதற்கு சிங்கக்குட்டி (THE CUB) என பெயரிட்டார். சிங்கக்குட்டி (THE CUB) ஹிட்டானது. அவரது இந்த கண்டுபிடிப்புக்கு ஜப்பான் (Japan) அரசின் எம்பரர் அவார்டும் (The Emperor) கிடைத்தது. 


ஜப்பான் (Japan) முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய பின்னர் அமெரிக்கா (America) மற்றும் ஐரோப்பிய (Europe) நாடுகளுக்கு சோய்சிரோ (Soichiro Honda) வின் மோட்டார் சைக்கிள் என்ஜின்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் இந்த முறை அமெரிக்காவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதால் ஆட்டோமொபைல் (Automobile) சந்தையின் கவனம் சிறிய ரக கார்களின் பக்கம் திரும்பியது. இதனால் சிறிய ரக கார்களை தயாரித்து சந்தைக்கு விட்டார் சோய்சிரோ ஹோண்டா. இதுவரை இல்லாத அளவு அவை சிறியதாக இருந்ததினால் மிகப் பெரிய அளவில் விற்பனையானது. இதனால் நான்கு சக்கர வாகன சந்தையையும்  தன்வசப்படுத்தினார் (Soichiro Honda).

Death And Achievements of The Soichiro Honda

இவ்வாறு பல கஷ்டங்கள், தோல்விகளைக் கடந்து பல புதுமைகளை ஆட்டோமொபைல் (Automobile) துறையில் அவர் மேற்கொண்டதன் காரணமாக இன்று உலகின் முன்னணி மோட்டார் நிறுவனமாக Honda திகழ்கிறது.


இன்று America மற்றும் Japan ல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். 1991 இல் சோய்சிரோ ஹோண்டா இறக்கும் போது சுமார் 470 கண்டுபிடிப்புகள், 150 பேட்டன்ட்டுகள் அவரது சாதனையாக இருந்தது.


மிக்கிகன் பல்கலைக்கழகம், ஓஹியோ பல்கலைக்கழகம் என்பவற்றில் கௌரவ டாக்டர் பட்டம் என ஜப்பான் நாட்டின் மிக உயர்ந்த விருதான Blue Ribbonஎனும் விருதையும் பெற்றுக் கொள்கிறார் Soichiro Honda.


இவ்வாறு ஒன்றரை இலட்சம் ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட சோய்சிரோவின் Honda நிறுவனம் இன்று ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிகளில் வர்த்தகம் செய்கிறது. “உங்களுடைய உழைப்பில் ஒரு சதவீதம் மட்டுமே வெற்றி. மற்றையது தடைகளைத் தகர்ப்பதில் தான் உள்ளது” என்றார் சோய்சிரோ ஹோண்டா. 

Finally

இத்தகைய இவரின் அழகிய முன்மாதிரியான வாழ்க்கையிலிருந்து நாமும் நமது வாழ்வில் எத்தகைய தோல்விகள் நம்மை சூழ்ந்து கொண்டாலும் அதனை எல்லாம் தகர்த்துக்கொண்டு எமது முயற்சியில் வெற்றி பெறும்வரை தொடர்ச்சியான தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயற்படுவதற்கு பழகிக் கொள்வோம்.


நிச்சயமாக Soichiro Honda வின் Success Story, உங்கள் தோல்விகளை எல்லாம் தகர்த்தெறிந்து மிகப்பெரிய நிலையான வெற்றியின் பக்கம் உங்களை அழைத்துச் செல்லும் என்று நாங்கள் நம்புகின்றோம்.  மேலும் இது போன்ற உங்களை ஊக்கப்படுத்தகின்ற பதிவுகளை தொடர்ச்சியாக பார்வையிடுவதற்கு எங்கள் தளத்தினை பின்தொடரவும் நன்றி.

-END-

Post a Comment

Previous Post Next Post