Introduction
“பீத்தோவன் (Beethoven) எப்படி இசைக்காக பிறந்தாரோ அதேபோல் நான் காற்பந்தாட்டதிற்காக பிறந்தேன்” இந்த வார்த்தைகள் உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரரான Brazil ன் Pele ன் வார்த்தைகளாகும்.
உண்மையிலேயே இந்தப் பெருமைக்கு அவரை விட ஒப்பானவர் யாரும் இல்லை. Brazil அணிக்கு முதன் முதலில் காற்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை 17 வயதில் பெற்றுக்கொடுத்த காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் தான் இந்த Pele. தான் விளையாடுகின்ற காலகட்டத்தில் அதுவரை காலமும் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்து Football உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தார்.
இன்றளவில் எந்த ஒரு காற்பந்தாட்ட வீரரும் செய்யாத சாதனைகளை நிலை நிறுத்திய The Greatest Football Champion என்றால் அது Pele தான். அத்தகைய Pele வின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி சுருக்கமாக இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். நிச்சயமாக Pele வின் வாழ்க்கை வரலாறு உங்கள் வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
Born And Childhood
1940 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி பிரேசிலின் (Brazil) Tres Coracoes என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த Edison Arantes Do Nascimento எனும் Pele. Pele வின் தந்தை ஒரு நிபுணத்துவ காற்பந்தாட்ட வீரர். அவரது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காற்பந்தாட்டத்தை கைவிட வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் Pele க்கு 4 வயது இருக்கின்றபோது அவர்களின் சொந்த ஊரான Tres Coracoes இனை விட்டு Bauru என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தது அவரது குடும்பம். அவ்வாறு குடிபெயர்ந்ததன் பின்னர் Pele மற்றும் அப்பகுதியில் உள்ள சிறுவர்களும் சேர்ந்து காலுறையில் செய்தித்தாள்களை திணித்து ஒரு பந்து போல செய்து அதனைக் கொண்டு காற்பந்தாட்டத்தை விளையாடி வருவதை வழமையாக்கிக் கொண்டனர்.
இவ்வாறு காலையிலிருந்து மாலை வரை விளையாடுவர். அப்போதிலிருந்தே Pele சிறப்பாக Football விளையாடுபவராக இருந்தார். இதன் காரணமாக Pele வின் தந்தை அவருக்கு காற்பந்தாட்ட நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். தன் தன் தந்தையின் உடைய பயிற்சியினை பெற்றுக்கொண்டே Football விளையாடினார் Pele. இவ்வாறு விளையாடுகின்ற சந்தர்ப்பங்களில், தன் விளையாட்டு முடிந்ததும் பிறருடைய காலனிகளுக்கு பாலிஷ் போடும் வேலையையும் செய்து வந்தார்.
Pele on The Football Team
தன் சிறுவயதிலேயே திறமையாக காற்பந்தாட்டம் விளையாடியதால் Bauru நகர Football Club ல் விளையாடுவதற்கான வாய்ப்பு Pele க்கு கிடைத்தது. Pele அந்த கிளப்பில் இணைந்து விளையாடியதன் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளும் தொடராக Junior பிரிவில் வெற்றியாளருக்கான விருதினை தட்டிச் சென்றது Bauru நகர Football Club.
இவ்வாறு Bauru நகர Football Club ல் சிறப்பாக விளையாடியதன் காரணமாக அதன் பின்னர் நிபுணத்துவ காற்பந்தாட்டம் அவரை அழைத்தது. இதனால் Pele ம் Santos குழுவில் இணைந்து விளையாட ஆரம்பித்தார். அவ்வாறு Pele Santos குழுவில் சேர்ந்து முதலாவது ஆண்டிலேயே மிகப்பெரும் சாதனையாக சுமார் 17 கோல்களை அடித்து அசத்தினார்.
இத்தகைய அவரது அபார திறமையை பார்த்து அக்குழுவினர் 1958 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் பிரேசில் (Brazil) அணியில் விளையாடுவதற்கு Pele வின் பெயரை பரிந்துரை செய்தனர். அதன் விளைவாக 1958 FIFA உலக கிண்ண போட்டிகளில் பிரேசில் (Brazil) அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு Pele க்கு கிடைத்தது.
Pele's Record at The World Cup
1958 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியானது ஸ்வீடனில் (Sweden) நடைபெற்றது. அதன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பிரேசில் (Brazil) அணி அந்தப் போட்டியில் சுவீடனை (Sweden) 5:2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முதலில் உலகக் கிண்ணத்தை பிரேசில் அணி சுவைத்தது. இதற்கு பிரதான காரணமாக இருந்தது Pele தான். அவ்வாறு முதன்முதலில் உலகக் கிண்ணத்தை பிரேசிலுக்கு அவர் வென்று கொடுத்த போது அவருடைய வயது 17 ஆகும்.
அதன்பிறகு 1962 ஆம் ஆண்டு சிலியில் (Chile) இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டியில் Czechoslovakia வை 3:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்றதுடன், 1970 ஆம் ஆண்டு மெக்சிகோவில் (Mexico) இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டியில் 4:1 எனும் கோல்கள் வித்தியாசத்தில் இத்தாலியை (Italy) வீழ்த்தி மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை பிரேசில் அணி சுவைப்பதற்கும் Pele பெரும் பங்கு வகித்தார்.
அதுவும் தான் மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தை இத்தாலி அணிக்கு எதிராக வென்ற அந்த இறுதியாட்டத்தில் தலையால் முட்டி போட்டு கோல் தான் தன்னால் மறக்க முடியாத கோல் என Pele வின் உடைய ஒரு போட்டியில் குறிப்பிட்டார்.
Pele's Incredible Talent
மூன்றாவது முறை பிரேசில் (Brazil) உலகக் கிண்ணத்தை வென்ற அடுத்த நாள் Sunday Times எனும் பத்திரிகை Pele வை பெருமைப்படுத்தும் விதமாக “HOW DO U SPELL PELE?? G-O-D” என முதல் பக்கத்தில் தலையங்கத்தை வெளியிட்டது.
அந்த அளவுக்கு முழு Football உலகமே வியந்து போகுமளவுக்கு ஒரு அசாத்திய திறமையை தன்னுள் வைத்தவராக Pele காணப்பட்டார். பிரேசில் அணியின் மொத்த பலமாகவே அவர் காணப்பட்டார். பிரேசிலை கண்டு அச்சபட்டவர்களை விட Pele வை கண்டு அஞ்சிய எதிரணிகள் தான் அதிகம்.
Pele மைதானத்தில் இருந்தாலே எதிரணியின் முழங்கால்கள் வலுவிழந்து போகுமாம். மைதானம் முழுவதும் ஆட்டத்தை உணர்ந்து ஆடும் பாங்கு, கன கச்சிதமாக பந்தை Pass செய்யும் முறை, லாவகமாக இரண்டு மூன்று தற்காப்பு ஆட்டக்காரர்களை ஏமாற்றி முன்னேறும் திறன், தலையாலும், மார்பாலும், தொடையாலும் பந்தை கட்டுபடுத்தும் மந்திரம், குறி தவறாது பந்தினை வலைக்குள் சேர்க்கும் தந்திரம் என உலகின் கால்பந்து ரசிகர்களை தன் அசாத்திய திறமையினால் வசப்படுத்தினார் Pele.
இவ்வாறு மூன்று முறை பிரேசில் அணிக்கு உலக கிண்ணத்தை வென்று கொடுத்த Pele 1970 ஆம் ஆண்டு தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவ்வாறு அவர் தன் ஓய்வினை அறிவித்த போது பல பிரேசில் ரசிகர்கள் மட்டுமன்றி உலக Football ரசிகர்களும் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள். ஆனாலும் தொடர்ந்து Santos அணிக்காக விளையாடினார். இதன் மூலம் தன் ரசிகர்களின் கவலையினை போக்கினார் Pele.
The Popularity of Football in America
அதைத்தொடர்ந்து 1974 இல் காற்பந்தாட்டத்தில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தபோது அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி அணியின் தலைவர் தனது அணிக்காக விளையாடும் படி Pele விடம் கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்தால் அமெரிக்காவிலும் (America) காற்பந்தாட்ட மோகம் அதிகரிக்கும் எனவும் Pele விடம் குறிப்பிட்டார்.
இதனால் அமெரிக்காவிலும் கால்பந்தாட்டத்தில் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு நியூயார்க் சிட்டி அணியின் தலைவரின் கோரிக்கையினை Pele ஏற்றுக்கொண்டு நான்கு ஆண்டுகள் அமெரிக்கர்களுக்காக விளையாடினார்.
இதனால் அமெரிக்கர்கள் மத்தியில் காற்பந்தாட்ட மோகம் அதிகரித்தது. இவ்வாறு அமெரிக்காவில் காற்பந்தாட்டத்தை பிரபலப்படுத்திய பெருமையையும் Pele பெற்றுக்கொண்டார்.
Pele's Achievements
22 ஆண்டுகால காற்பந்தாட்ட வாழ்க்கையில் மொத்தமாக 1282 கோல்களை அடித்துள்ளார். ஹாட்ரிக் (Hat Trick) என்னும் ஒரு ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்தலிலும் 92 ஹாட்ரிக் கோல்களை அடித்து இதுவரை யாரும் செய்திராத , முறியடிக்காத சாதனையை நிலைநாட்டினார் Pele.
காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் (The Greatest Football Champion) கருதப்படும் Pele வை “கருப்பு முத்து (Black Pearl)” என பத்திரிகையாளர்கள் அழைத்தனர். அதுமட்டுமன்றி அவர் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையை ஏற்றுக்கொள்வார் எனும் அச்சத்தில் பிரேசில் (Brazil) Pele வை தேசிய புதையலாக அறிவித்தது.
அதுமட்டுமன்றி Pele வின் ஆட்டத்தினை காண்பதற்காக உள்நாட்டு போர் ஒன்றினையே நிறுத்தியுள்ளனர். ஆமாம் Pele என்ற சகாப்தத்திற்காக அது நிகழ்த்த பட்டதாகும். 1970 நைஜீரியாவின் (Nigeria) லாகோஸ் (Lagos) நகரில் இடம்பெற்ற Pele வின் ஆட்டத்தை காண அப்போது நைஜீரியாவில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த இரண்டு குழுக்கள் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது.
இது ஆச்சரியம் என்றால் இதைக் கேளுங்கள். ஆறாம் போபாலை சந்திக்க Pele சென்ற போது, Pele வை பார்த்து Pope “உங்களுக்கு ஏன் நடுக்கம்? நீண்ட நாட்களாக உங்களைச் சந்திக்க வேண்டும் என விரும்பிய எனக்குத்தான் அதிக நடுக்கமாக உள்ளது” என்றாராம்.
Pele's Retirement And Important Awards
இவ்வாறு தன்னுடைய அபரிமிதமான ஆட்டத்தால் பிரேசில்க்கு மட்டுமன்றி காற்பந்தாட்டதிற்கே பெருமை சேர்த்த Pele 1978 ஆம் ஆண்டு சகலவிதமான கால்பந்தாட்ட போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
அவ்வாறு Pele தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சியில் 25 நாடுகளைச் சேர்ந்த 761 பத்திரிகையாளர்கள் உட்பட, சில நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டு அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.
அதுமட்டுமன்றி அதே ஆண்டில் அனைத்துலக அமைதிக்கான பரிசும் வழங்கப்பட்டது. அத்தோடு Pele வை பெருமைப்படுத்தும் விதமாக இருபதாம் நூற்றாண்டு முடிவதற்கு 20 ஆண்டுகள் இருந்த போதே அந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த விளையாட்டு வீரராக அறிவித்தது அனைத்துலக ஒலிம்பிக் குழு.
Finally
இவ்வாறு சிறுவயதில் பிறருடைய காலனிகளுக்கு பாலிஷ் போட்ட சிறுவனால் பின்னாளில் தன் கால்களால் விளையாட்டு உலகையே மெய்மறக்கச் செய்ய முடியும் என்றால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இதற்கு அவரது கடின உழைப்பும், பயிற்சியும் , திறமையும் , தன்னடக்கமும் , சுயகட்டுப்பாடும் தான் காரணம். எந்தவொரு வெற்றியும் இலகுவாக யாரிடமும் வருவதில்லை. அதற்கான தகுதியை நாம் வளர்த்துக் கொண்டாலே தவிர, தன்னுடைய இலக்கினை அடைவது என்பது எவராலும் இலகுவான ஒன்றாக இருக்காது.
இந்த Pele Biography பதிவினை படித்து கொண்டு இருக்கின்ற அனைவருக்கும் நாங்கள் கூறுவது ஒன்றுதான், நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றியடைய வேண்டுமென்றால் உங்களுக்கென தனித்துவமான இலக்கினை நீங்கள் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நிர்ணயித்துக்கொண்டே இலக்கினை நோக்கி அதனை அடையும் வரை தொடராது முயற்சி செய்ய வேண்டும்.
எவ்வாறு பிறருடைய காலனிகளுக்கு பாலிஷ் போட்ட Pele பின்னாளில் புட்பால் உலகின் ஜாம்பவானாக உருவெடுத்தாரோ அதுபோல நீங்களும் உங்கள் இலக்கினை அடைய வேண்டும். நிச்சயமாக அதற்கு Pele வின் உடைய இந்த Pele Biography வாழ்க்கை பதிவு உங்களுக்கு உதவி இருக்கும் என்று நம்புகின்றோம். Pele வின் உடைய வாழ்வில் இருந்து நாமும் படிப்பினை பெறுவோம்.