Colonel Sanders Biography - Founder of KFC | Story of Kentucky Fried Chicken in Tamil

 

Introduction

இன்று உலக அளவில் பல கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தன் சுவையால் ஈர்த்து முன்னணி சங்கிலித்தொடர் உணவகமாக KFC திகழ்கின்றது. 


KFC Chicken சுவைக்கு அடிபணியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு KFC Chicken க்கான வாடிக்கையாளர்கள் அதிகம். ஆனால் அந்நிறுவனத்தைத் தொடங்கிய Colonel Sanders ன் தீராத முயற்சியினால் தான் இந்த  மாபெரும் வெற்றி சாத்தியம் என்பது நம் ஒவ்வொருவருக்குமான படிப்பினையாகும்.


ஆமாம் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியன இணைந்தால் எந்த வயதிலும்  வெற்றியினை அடைய முடியும் என்பதற்கு Colonel Sanders ன் வாழ்க்கை சிறந்த படிப்பினையாகும். அத்தகைய படிப்பினை நிறைந்த Colonel Sanders ன் வாழ்க்கை வரலாற்றினை இந்த பதிவில் சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம்.


Colonel Sanders Biography - Founder of KFC | Story of Kentucky Fried Chicken in Tamil

Born And Childhood

1980 செப்டம்பர் மாதம் 9ம் திகதி America வின் Indiana மாநிலத்தின் Henryville எனும் ஊரில் பிறக்கிறார் Colonel Sanders. Colonel Sanders க்கு 5 வயது இருக்கும் போதே அவரது தந்தை இறக்கின்றார். அது மட்டுமின்றி அவருடைய 12 வது வயதில் அவரது தாயார் மறுமணம் செய்து கொள்ள, வேறு வழியில்லாமல் Colonel Sanders தன்னுடைய மாமா வீட்டில் வளர்கிறார்.


இந்நிலையில் தன்னுடைய ஏழாவது வயதில் படிப்பதை நிறுத்தி விடுகிறார் Colonel Sanders. Colonel Sanders அவருக்கு 15 வயதாகும் போது இராணுவத்தில் சேர்ந்து விடுகின்றார். அங்கு கழுதையை மேய்ப்பவராக நான்கு மாதங்கள் வேலை செய்துவிட்டு அந்த வேலை பிடிக்காத காரணத்தினால் அந்த வேலையை விட்டு விட்டு, அந்த இராணுவ Camp ஐ  விட்டு ஓடி விடுகின்றார். 

Doing Various Jobs 

இவ்வாறு ராணுவத்திலிருந்து விலகியதன் பின்னர் தன்னுடைய 40 வது வயது வரை ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலை என மாறி மாறி வேலை செய்கிறார். அவ்வாறு தன்னுடைய நாற்பதாவது வயது வரை நீராவி ரயில் என்ஜினில் எரிபொருள் நிரப்புதல், காப்பீடுகளை விற்பனை செய்தல், விளக்குகளை உருவாக்கி அதனை விற்றல், டயர்களை விற்றல் மற்றும் படகு ஓட்டுதல் என பல்வேறு வகையான வேலைகளை செய்கிறார். 


என்னதான் அவர் பல வேலைகளைச் செய்தாலும் எந்த ஒரு வேலையும் அவருக்கு நல்ல வருமானம் ஒன்றினைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் தான் ஒரு வேலையை செய்கின்ற போதும் அதிலிருந்து விலகி இன்னுமொரு வேலைக்கு அவர் சென்றார். இவ்வாறு தன்னுடைய நாற்பதாவது வயது வரை எந்த வித முன்னேற்றமும் இன்றி கழிக்கின்றார் Colonel Sanders. 

Rejection of KFC Chicken

இவ்வாறு பல்வேறு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும்போதும் 1930 இல் தன்னுடைய 40வது வயதில் Kentucky பகுதியில் Shell Oil நிறுவனத்தின் உடைய உணவகத்தை எடுத்து நடத்துகிறார் Colonel Sanders. இவ்வாறு அந்த உணவகத்தின் எடுத்து நடத்துகின்ற போதுதான்  பல மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் சேர்த்து சமைக்கப்பட்ட Kentucky Fried Chicken (KFC) ஐ தயாரித்தார் Colonel Sanders. அவ்வாறு  அமைக்கப்பட்ட Chicken சுவையாக இருக்கவே KFC Chicken உரிமையை விற்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கி விடுகிறார்.


இவ்வாறு தன்னுடைய Kentucky Fried Chicken உரிமையை விற்க முடிவு செய்த அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல நிறுவனங்களில் கேஎஃப்சி சிக்கன் உரிமையினை விற்பதற்காக முயற்சி செய்து அதன் பலனாக 1009 முறை நிராகரிக்கபடுகிறார். KFC Chicken உரிமையினை விற்பதற்காக பல உணவகங்களில் கேட்க, எங்களுக்கு KFC Chicken உரிமையே தேவை இல்லை எனச்சொல்லி நிராகரிக்கப்படுகிறார் Colonel Sanders.


இவ்வாறு 1009  முறை நிராகரிக்கபடுவதுடன், பல்வேறு வகையில் அவமானத்துக்கும் உள்ளாக்கபடுகிறார். ஆனாலும் மனம் தளராது தன்னுடைய KFC Chicken உரிமையினை விற்பதற்காக அவருடைய காரில் இரண்டு குக்கர், மாவு மற்றும் மசாலா கலவையை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று அங்குள்ள ஒவ்வொரு உணவகங்களிலும் தன்னுடைய சிக்கன் செயன்முறையை விளக்கி விற்பனை செய்ய முயல்வார்.

KFC Chicken Sale

இவ்வாறு தன்னுடைய KFC Chicken உரிமையை விற்பதற்காக தன்னுடைய நாற்பதாவது வயதில் இருந்து கிட்டத்தட்ட தன்னுடைய 65 வயது வரை போராடுகின்றார் Colonel Sanders. எனினும் KFC Chicken உரிமையை விற்பதில் பல்வேறு பிரச்சினைகளையும், தோல்விகளையும் சந்திக்கின்றார். இவ்வாறு பல தோல்விகள் மற்றும் அவமானங்களுக்கு பின்னர் ஒரு வழியாக உணவகம் ஒன்றிற்கு KFC Chicken உரிமையினை விற்பனை செய்கிறார் Colonel Sanders. 


இவ்வாறு KFC Chicken உரிமையை விற்கும்போது அவருடைய வயது 65 ஆகும். தனது 65 ஆவது வயது வரை குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த ஒரு வெற்றியையும் கண்டிராத Colonel Sanders தன்னுடைய 65வது வயதில் பின்னர் KFC Chicken உரிமையை விற்றதன் விளைவாக மிகப் பெரும் சாதனையையும், வெற்றியையும் படைத்துள்ளார் என்றால் அது மிகவும் வியப்பிற்குரிய ஒரு விடயம்தான். 

Growth of KFC 

இவ்வாறு அந்நிறுவனம் KFC Chicken உரிமையினை வாங்கியதன் பின்னர், அதனை முறையாக சந்தைப்படுத்தி மக்களுக்கு விற்பனை செய்தபோது KFC Chicken சுவையில் மக்கள் மயங்கியதால், மக்கள் மத்தியில் KFC Chicken ஆனது பிரபல்யம் அடைந்தது. இதன் விளைவாக கேஎப்சி நிறுவனத்தின் விற்பனை பன்மடங்காக அதிகரித்தது.


இதனால் அடுத்த 9 வருடங்களில் 600 உணவகங்களை திறக்கின்றார் Colonel Sanders. இதன் பின்னர் சரியாக ஒரு வருடம் கழித்து 1956 இல்  தன்னுடைய 66 வது வயதில் 105 டாலர்கள் ஓய்வூதியம் பெற்று KFC இலிருந்து விலகியதுடன், 1965இல் பிரவுன் என்பவருக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு KFC நிறுவனத்தை Colonel Sanders விற்று விடுகிறார். 


McDonald's நிறுவனத்துக்கு பிறகு இன்று உலகளவில் விற்பனை அளவில் இரண்டாவது பெரிய சங்கிலித்தொடர் உணவகம் KFC ஆகும். அது மட்டுமன்றி 123 நாடுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான உணவகத்தை கொண்டுள்ளதுடன் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களையும் தன்வசப்படுத்தி உள்ளது KFC Chicken.


இவ்வாறு  உலகின் மூலை முடுக்கெல்லாம் Kentucky Fried Chicken (KFC) கடையினை திறந்த Colonel Sanders தன்னுடைய 90 வது வயதில் 1980இல் America வின் Kentucky மாநிலத்தில் மரணிக்கிறார். அதுமட்டுமின்றி Colonel Sanders தன்னுடைய மரணம் வரையான காலப்பகுதியில் இரண்டரை லட்சம் மைல் தூரம் பயணம் செய்ததாக Houston பல்கலைக்கழகம் கூறுகின்றது. 

Finally

Colonel Sanders ன் இந்த வாழ்க்கையானது வெற்றி பெறுவதற்கும், வரலாற்றில் சாதனை புரிவதற்கும் ஒரு மனிதனால் எந்த ஒரு வயதிலும் முடியும் என்பதனை உணர்த்துகின்றது. தன் வாழ்வில் தான் நினைக்கின்ற வெற்றியினை அடைவதற்கு வயது என்பது ஒரு பொருட்டல்ல என்பதனை இவருடைய வாழ்வின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்டிருப்பீர்கள்.


நிச்சயமாக KFC Founder Colonel Sanders ன் Life Story உங்களை Motivate பன்னி இருக்கும் என்று நம்புகின்றோம். னவே இவரின் படிப்பினை மிகுந்த  வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு நாமும் நமது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு முயற்சிப்போமாக! நன்றி.                                 

                                                                -END-

Post a Comment

Previous Post Next Post