Arnold Schwarzenegger Biography - Motivational life story of Arnold Schwarzenegger in Tamil


Arnold Schwarzenegger என்ற பெயரைக் கேள்விப்படும்போது Mr.Universe மற்றும் Mr.Olivia பட்டங்களை பல தடவைகள் வென்றவர், ஹாலிவுட்டின் அக்காலப் பெண்களின் கனவு நாயகன் மற்றும் ஹாலிவுட்டின் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் இரண்டு முறை  இடம் பெற்றவர். அத்தோடு கலிபோர்னியாவின் கவர்னராக இரண்டு முறை பதவி வகித்தவர் போன்ற அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் வெற்றிப்படிகள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.

ஆனால் அதற்குப் பின்னால் உள்ள வலிகளும், வேதனைகளும் எந்தளவுக்கு கடினமான நாட்களையும், நிமிடங்களையும் தன் வாழ்வில் அனுபவித்துள்ளார் என்பதனை உணர்த்தக்கூடிய மற்றும் உங்களை ஊக்குவிக்கக் கூடிய அற்புதமான ஒரு பதிவினை நாம் இன்று பார்க்க இருக்கின்றோம். இதோ உங்களுக்காக Arnold Schwarzenegger Motivational Life Story.


Arnold Schwarzenegger Biography - Motivational life story of Arnold Schwarzenegger in Tamil

BORN AND PERIOD OF BIRTH 

1947 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் இரண்டாம் உலகப் போர் நடக்கும் தருவாயில் பிறக்கிறார் Arnold Schwarzenegger. என்னதான் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தாலும் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் பெற்றோருக்கு சற்று துக்கமே. ஏனெனில் அவர் பிறந்த காலகட்டம் ஆனது இரண்டாம் உலகப் போர் நடக்கும் காலகட்டம்.


ஆஸ்திரியா ஜெர்மனிக்கு அருகில் இருந்ததினால் இரண்டாம் உலகப்போரின் போது அவரது குடும்பம் உட்பட முழு ஆஸ்திரியாவும் ஜெர்மனியின் பக்கம் இருந்தது. இந்நிலையில் ஜெர்மனி உலகப் போரில் தோற்று போகவே ஆஸ்திரியா முழுவதும் துக்கம் நிலவியது.


ஜெர்மனி தோல்வியுற்ற விரக்தி காரணமாக அதிகமான ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகினர். அதிலும் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் அப்பா போலீசாக இருந்த காரணத்தினால் அவரும் அதிகளவில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகினார். 

ARNOLD'S CHILDHOOD AND SCHOOL SEASON 

அர்னால்ட் தன்னுடைய சிறு வயதில் மிகவும் ஒல்லியான தேகம் உடையவராக காணப்பட்டார். அவருக்கு என்று பெரிதாக நண்பர்கள் இல்லை. பாடசாலையில் எல்லோரும் அர்னால்டை போட்டு அடிப்பார்கள்.


அவரை அடிப்பதற்காகவே விளையாட்டிலும் சேர்த்துக் கொள்வார்கள். பாடசாலையிலும் அர்னால்டை அதிகம் கேலி செய்வதோடு அவரை துன்புறுத்தவும் செய்தனர்.


இவ்வாறு சக மாணவர்களின் துன்புறுத்தலை தன் அப்பாவிடம் சொல்லப்போனால் அங்கு அர்னால்ட் உடைய அப்பாவும், “நீ ஏன் இந்த அளவுக்கு அடி வாங்க வேண்டும். உனக்கு திரும்பி அடிக்க தெரியாதா?” எனச்சொல்லி அர்னால்டின் அப்பாவும் மாறி அர்னால்டை அடிப்பாராம்.


ஏனெனில், அர்னால்டின் அப்பாவுக்கு அர்னால்டை பிடிக்கவே பிடிக்காதாம். அர்னால்டின் அண்ணனை தான் பிடிக்குமாம். தன்னை தன் அப்பாவுக்கும் பிடிக்கவில்லை, தன் அயலவர்களுக்கும் பிடிக்கவில்லை. சரி பாடசாலை சென்றாலும் அங்கும் கேலி , கிண்டல். இதனால் மிகவும் மனம் உடைந்து போனார் அர்னால்ட். 

ARNOLD AS BODYBUILDER

அந்தக் காலகட்டத்தில் அர்னால்டின் வீட்டில் தொலைபேசி, குளிர்சாதன பெட்டி என்பன எதுவும் கிடையாது. ஏன் கழிவறை கூட கிடையாது. இந்நிலையில் தான் தன்னுடைய பாடசாலையில் திரையிடப்பட்ட Documentary திரைப்படம் ஒன்றில் அமெரிக்காவைப் பார்த்து அதன் நீண்ட அழகிய சாலைகள், பெரிய கட்டிடங்கள், வண்ணமயமான கடற்கரை, மகிழ்ச்சிகரமான பாடசாலைச் சூழல், அதீத தொழில்நுட்பம் என எல்லாவற்றினாலும் ஈர்க்கப்படுகிறார். அன்றிலிருந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார்.


அந்த வேளையில்தான் Magazine ஒன்றில் Bodybuilder ஒருவரின் புகைப்படத்தினை பார்க்கிறார். அதனை பார்த்து தானும் இதேபோல் பாடிபில்டராக வரவேண்டும் என ஆசைப்படுகிறார். அப்போதுதான் அவருக்கு தெரிய வருகிறது அந்த புகைப்படத்தில் இருந்த பாடிபில்டர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று.


அத்தோடு அவர் பாடிபில்டராக இருந்து பல பட்டங்களை வென்றவர் என்றும், தற்போது அவர் அமெரிக்காவின் ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகராக உள்ளார் என்பதும் தெரியவருகிறது. தானும் இவ்வாறு பாடிபில்டராகி பல பட்டங்களை வென்று அமெரிக்காவில் ஹாலிவுட்டின் மிகப்பெரும் நடிகராக வேண்டும் என்று தனக்குள் ஆசைப்படுகிறார். 

ARNOLD'S DESIRE

இதற்காக அவர் படிக்கும் எல்லா Magazine களிலும் உள்ள பாடிபில்டர்களின் புகைப்படங்களை எல்லாம் கிழித்து தன் அறையில் ஒட்டி அவர்கள் போல நானும் எதிர்காலத்தில் வரவேண்டுமென தினமும் அதிக  உடற்பயிற்சியினை செய்கிறார்.


முறையான உடற்பயிற்சி கருவிகள் இல்லாமல் தன்னிடம் இருப்பதை வைத்து மட்டுமே உடற்பயிற்சி செய்ததால் உடல் எடை அவ்வளவாக ஏறவில்லை. இதனை பார்த்த அவரது அப்பா நீ இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாய் என்று Police ஆவதற்காக மிலிட்டரி ட்ரெய்னிங்கில் சேர்த்து விடுகிறார். அங்கு சென்றாலும் அவரது தீராத ஆசை அவரை விடவில்லை.


தான் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் கேம்ப்க்கு அருகாமையில் ஒரு உடற்பயிற்சி கூடம் இருப்பதனை அறிந்து தான் பயிற்சி பெற்ற நேரம் போக மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதற்காக அருகில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு யாருக்கும் தெரியாமல் சென்றுவிடுவார் Arnold Schwarzenegger. 


இவ்வாறு சில நாட்கள் செல்ல ஒரு நாள் அர்னால்டின் பித்தலாட்டம் கேம்ப்க்கு தெரியவர அர்னால்டுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டதுடன், தீவிரமாக கண்காணிக்கவும் செய்கின்றனர். என்னதான் அவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தாலும் அர்னால்டுக்கு இருந்த தீராத ஆசை அவரை விடவில்லை.


ஐரோப்பாவில் Bodybuilder Competition நடப்பதை அறிந்து அதில் கலந்து கொள்வதற்காக கேம்ப்க்கு தெரியாமல் ஐரோப்பா சென்று அப்போட்டியில் கலந்து கொண்டதுடன் முதல் பரிசையும் பெறுகிறார் Arnold. இதுவே அவருடைய முதல் வெற்றியாகும். இது கேம்ப்க்கு தெரியவரவே அங்கிருந்து நீக்கப்படுகிறார் அர்னால்ட்.

Mr.UNIVERSE AND Mr.OLIVIA

இவ்வாறு கேம்பிலிருந்து நீக்கப்பட்டதை வாய்ப்பாகக் கருதிய அர்னால்ட் இங்கிலாந்துக்குச் சென்று மிஸ்டர் யுனிவர்ஸ் (Mr. Universe) பட்டத்தை வெல்ல நினைத்து இங்கிலாந்துக்கும் செல்கிறார். ஆனால் அங்கு சென்றதும் அவரைவிட அங்குள்ள சக போட்டியாளர்கள் அதிக உடற்கட்டு இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்.


இந்நிலையில் இப்போட்டிக்கு தலைமை தாங்கிய நீதிபதி ஒருவரின் பழக்கம் கிடைக்கவே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற இடம் இல்லாமல் இருந்த அர்னால்டுக்கு அவர் தன்னுடைய வீட்டில் தங்கி உடற்பயிற்சி செய்து கொள்ளுமாறு உதவி செய்கிறார்.


அர்னால்டும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காலையில் உடல் வலிக்க கட்டுமான வேலை செய்வது, மாலையிலிருந்து நள்ளிரவு வரை கடுமையாக உடற்பயிற்சி செய்வது என கடின உழைப்பை தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு மேற்கொண்டு வருகிறார்.


அத்துடன் தான் வேலை செய்வதனால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தன் உடலை பலமாக வைத்திருக்க தேவையான உணவுப் பொருட்களை வாங்குகிறார். இவ்வாறு கடின உழைப்பை செய்ததன் விளைவாக Mr. Universe பட்டத்தை ஒருமுறை மட்டுமல்லாது தொடராக ஐந்து முறை வெற்றி பெறுகிறார் Arnold Schwarzenegger.


அடுத்ததாக அவரது கனவாகிய America சென்று அங்கும் மிஸ்டர் ஒலிவியா (Mr. Olivia) பட்டத்தை வெல்ல நினைக்கிறார். அவ்வாறு நினைத்து பல கஷ்டங்கள் மற்றும் விடா முயற்சிக்கு பிறகு ஆறு முறை மிஸ்டர் ஒலிவியா (Mr. Olivia) பட்டத்தை வெற்றி பெறுகிறார்.

ARNOLD IN CINEMA 

இதனோடு நிறுத்திக் கொள்ளாமல் தனது மிகப்பெரிய கனவாகிய சினிமாத்துறையில் சாதிப்பதற்காக ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக வாய்ப்புக்காக ஏறி இறங்குகிறார். ஆனாலும் அவரது முகபாவனை , நடிப்பு திறன் இன்மை, ஆங்கிலம் பேசத்தெரியாமை என்பவற்றினால் ஆரம்பத்தில் உதாசீனப்படுத்தபடுகிறார்.


ஆனாலும் விடாமல் தன்னிடம் உள்ள குறைகளான நடிப்பு , ஆங்கிலம் என்பவற்றை வளர்த்துக்கொள்ள தனியாக வகுப்புகளுக்குச் சென்று அதிலும் தேர்ச்சி பெற்றதோடு , ஒவ்வொரு நாளும் 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்து தனது உடலையும் கச்சிதமாக வைத்துக் கொள்கிறார்.


இதுபோக மிகுதி நேரத்தில் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புக் கேட்கிறார். ஆனாலும் ஆரம்பகட்டத்தில் நாடகங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பே வந்தது. ஆனால் அர்னால்ட் அதனையும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இவ்வாறு சிறிது சிறிதாக பிரபலமாகி தன்னை உதாசீனப்படுத்திய தயாரிப்பு நிறுவனத்தின் படமான THE TERMINATOR 2 இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


இதனை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அர்னால்ட் அவரது நடிப்புத் திறமையை காட்டியதன் விளைவு, THE TERMINATOR 2 இரண்டாம் பாகத்தில் Arnold Schwarzenegger கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதோடு மட்டுமன்றி அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைவதற்கும் அவரது கதாபாத்திரம் மிக முக்கிய காரணமாக இருந்தது.


அன்றிலிருந்து ஹாலிவுட்டின் தவிர்க்கமுடியாத மிகப்பெரும் நட்சத்திரமாக உருவெடுத்ததோடு மட்டுமன்றி அதிக சம்பளம் பெறும் ஹாலிவுட் நடிகர்களின் (Highest Paid Actor in Hollywood) பட்டியலிலும் இரண்டு முறை முதலிடம் பிடித்தார். 


இவ்வாறு தன்னை வாழ வைத்த அமெரிக்க மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இரண்டு முறை கலிபோர்னியாவின் கவர்னராக போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றதோடு மட்டுமன்றி தான் கவர்னராக இருந்த காலத்தில் சம்பாதித்த ஆண்டு வருமானம் முழுவதையும் அனாதை ஆசிரமத்திற்கு அன்பளிப்பாக கொடுத்தார். அதேபோல் தனது உடலை கச்சிதமாக நிறைவேற்றியவர் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். 

FINALLY

Arnold Schwarzenegger தான் சிறுவனாக இருந்தபோது பட்ட அவமானங்களை எல்லாம் தாண்டி, தன் இலக்கை அடைய வேண்டும் என்ற தீராத ஆசையும் அதற்காக அவர் மேற்கொண்ட கடின உழைப்பும் தான் அர்னால்டை இந்த சாதனைகளுக்கு எல்லாம் வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது.


இவருடைய இந்த வாழ்க்கையினை முன்மாதிரியாகக் கொண்டு நீங்கள் அடைய நினைக்கின்ற வெற்றியையும் அடைவதற்கு எங்களது சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம். நன்றி..

                                                                 

Post a Comment

Previous Post Next Post