A.P.J. Abdul Kalam Biography - Education, Achievements| Success Story of Abdul Kalam in Tamil

 

இந்தியாவின் கடைக்குட்டி ஊரான ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடியில் பிறந்து இந்தியாவுக்கு பல ராக்கெட்டுகள், ஏவுகணைகளை பரிசளித்து இந்தியாவின் தலைசிறந்த விண்வெளி விஞ்ஞானியாகவும், இந்தியாவின் குடியரசுத் தலைவராக, இந்தியாவுடைய 11 வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

அவர் இன்று உயிருடன் இல்லாவிட்டாலும் அவருடைய சாதனைகளும், சேவைகளும் இந்திய மக்களின் மனதில் மங்காத நினைவுகளாக ஊன்றி நிற்கின்றன. இத்தனை சாதனைகள் எல்லாம் சாதிப்பதற்கு அப்துல் கலாம் தன்னுடைய வாழ்வில் பட்ட கஷ்டங்களும், அவர் அடைந்த தோல்விகளும் தான் காரணம். அத்தகைய அவருடைய அற்புதமான, உங்களை ஊக்குவிக்கக்கூடிய மிகச்சிறந்த வாழ்க்கை சரித்திரத்தை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

A.P.J. Abdul Kalam Biography - Born, Education, Awards and Achievements| Success Story of A.P.J. Abdul Kalam

BIRTH AND FAMILY

1931 இல் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி என்ற ஊரில் ஜெயினுலாபுதீன் , ஆசியா உம்மா தம்பதியினருக்கு ஐந்தாவது மகனாக பிறக்கிறார் வுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். கலாமுக்கு 4 சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருந்தனர்.


அவருடைய குடும்பம் வறுமையான குடும்பம் என்பதால் சிறுவயதிலிருந்தே குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக பல்வேறு தொழில்களைச் செய்யத் தொடங்கினார் அப்துல் கலாம். அப்துல் கலாம் சிறு வயதில் இருந்தே பல்வேறு மதங்களை உடைய சூழலில் வளர்க்கப்பட்டாலும் ஒரு மதத்தின் வழக்கத்தையே பின்பற்றுவதாக அவர் இருந்தார். 

INTEREST IN EDUCATION

கலாமுக்கு சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது அதிக ஆர்வம். ஆனால் அவரின் வீட்டின் வறுமை அதற்கு இடமளிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் தன்னுடைய எட்டாவது வயதில் தன் வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் ஒன்றில் இலவசமாக கணிதம் கற்றுத் றப்படுகின்றது என்பதை அறிந்து அதிகாலை 3 மணிக்கே எழுந்து அவசர அவசரமாக தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அதிகாலை 4 மணிக்கெல்லாம் அந்த இலவச கணித வகுப்பில் கலந்து கொள்கிறார்.


அந்த வகுப்பு முடிந்ததும் சுபஹ் தொழுகையை அதிகாலை தொழுகை) தொழுதுவிட்டு காலை 6 மணியளவில் ரயில் நிலையத்திற்கு சென்று பத்திரிகைகளை திரட்டி அவற்றை விற்பனை செய்து அதன் மூலம் வருகின்ற பணத்தை தன் பெற்றோரிடம் ஒப்படைப்பதன் மூலம் தன் குடும்பத்தின் வறுமையை போக்கவும் வழி செய்தார். இவ்வாறு மிகச் சிறிய வயதிலேயே மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டார் கலாம்


இவ்வாறு மிகச் சிறிய வயதிலேயே கலாம் கஷ்டப்படுவதைப் பார்த்த அவரது தந்தை கலாம் இடம் சென்று, “கலாம் உனக்கு ஏதாவது வேணுமா?” எனக் கேட்க, சற்றும் யோசிக்காமல் எனக்கு படிக்கவேண்டும் என கூறுகிறார். இதனால் கலாம் ன் தந்தை அவரை ராமநாதபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சேர்த்து விடுகிறார்.


இவ்வாறு சேர்த்துவிடவே தன் வீட்டிலிருந்து ராமநாதபுரத்தில் உள்ள பாடசாலைக்குச் செல்வது மிகவும் தூரம் என்பதால் பாடசாலையின் விடுதியில் தங்கி படிக்கும் நிலை கலாமுக்கு ஏற்படுகிறது. எனினும் கலாமுக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் அவரை விடுதியில் தங்கி படிக்க வைத்ததோடு, பாடசாலை கல்வியையும் சிறப்பாக தேர்ச்சி  அடைய வைத்தது.


INTEREST IN ASTRONOMY


பாடசாலையை வெற்றிகரமாக முடித்த கையோடு, திருச்சியில் உள்ள கல்லூரியில் தன் மேற்படிப்பை தொடர்கிறார் கலாம். அங்கு அவர் இயற்பியலை (Physics) எடுத்து படிக்கிறார். அவ்வாறு இயற்பியலை எடுத்து படித்துக் கொண்டிருக்கும் போது இயற்பியல் மீதான ஆர்வம் இல்லாது போய் அவருக்கு வானவியலின் மீதான ஆர்வம் அதிகரிக்கவே, தான் கற்றுக் கொண்டிருந்த திருச்சி கல்லூரியில் சிறப்பாக கற்று ஸ்கோளர்ஷிப் பெற்று சென்னையில் உள்ள எம்ஐடி (MIT) யில் விண்வெளி பொறியியல் (Aerospace Engineering) கற்பதற்காக செல்கிறார். அங்கும் சிறப்பாக கற்று ஸ்கோளர்ஷிப் பெறுகிறார்.


FIRST PROJECT


இவ்வாறு சென்னை எம்ஐடியில் சிறப்பாக கற்றுக் கொண்டிருக்கும்போது கலாம் தனக்குக் கொடுக்கப்பட்ட ப்ரொஜெக்டை சரிவர செய்ய தவறுகிறார். இதனால் கலாம் ன் ப்ராஜெக்ட் மேனேஜர், “நீ இந்த ப்ரொஜெக்டை செய்யாததால் நான் உன்னுடைய ஸ்கோளர்ஷிப் ஐ நிறுத்தி விடுவேன்” என ஆவேசமாக கூறினார். 


அதற்கு கலாம், “எனக்கு ஒரு மாதம் தாருங்கள். அதற்குள் செய்து தருகிறேன்” எனக் கேட்க அதற்கு ப்ராஜெக்ட் மேனேஜர், “உனக்கு மூன்று நாள் தருகிறேன். அதற்குள் நீ இந்த ப்ரொஜெக்டை முடிக்க வேண்டும்” என கூறவே, அன்றிலிருந்து கடுமையாக உழைத்து அந்த ப்ரொஜெக்டை எப்படியாவது சரியாகச் செய்து ப்ராஜெக்ட் மேனேஜர் இடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் என பாராமல் சரியாக சாப்பிடாமல் , தூங்காமல் தொடர்ச்சியாக கண்விழித்து அந்த ப்ரொஜெக்டை, ப்ராஜெக்ட் மேனேஜர் சொன்ன நாள் முடிய ஒரு நாள் முன்னரே முடித்துக் கொடுக்கிறார். 


அந்த இரண்டு நாட்களில் அவர் தூங்கியது வெறும் நான்கு மணி நேரம்தான். அப்துல் கலாம் செய்த அந்த புராஜெக்ட் எந்தவித குறையும் இல்லாமல் சரிவர இருந்ததினால் அவரின் இந்த அர்ப்பணிப்பையும் கெட்டிக்கார தனத்தையும் பார்த்து வியந்த ப்ராஜெக்ட் மேனேஜர் கலாமை பெரியளவில் பாராட்டினார். அத்தோடு நான் உனக்கு மிகக் கடினமான வேலையைச் செய்து முடிக்க மிகவும் குறைவான  நாட்கள் தந்துவிட்டேன் என கூறினார். இந்த நிகழ்வானது கலாமை பெரிய அளவில் ஊக்கப்படுத்தியது.  


ABDUL KALAM IN A SERIES FAILURES 


சென்னை எம்ஐடியில் (MIT) தன்னுடைய முதுகலை பட்டப் படிப்பினை சிறப்பாக முடித்துவிட்டு தனது கனவாகிய விமானப்படையில் சேர வேண்டும் என்பதற்காக அதன் நேர்முகத்தேர்வுக்கு செல்கிறார். அங்கு அவர் ஒன்பதாவது ஆளாக தெரிவு செய்யப்படுகிறார். அந்த தேர்வுக்கு வந்த 25 பேரில் தான் 9-வது நபராக தெரிவு செய்யப்பட்ட போதும் அவ்வேலைக்கு 8 பேர் தான் தேவை என்பதனால் துரதிஷ்டவசமாக கலாமுக்கு அந்த வேலை கிடைக்காமல் போகிறது. 


தான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது இந்த வேலைக்காக தான் என்பதனால் கலாமுக்கு இந்த ஒரு நிகழ்வு பெரும் மன அழுத்தத்தை தந்ததோடு தற்கொலைக்கும் முயற்சிக்கிறார். அவ்வேளையில் தான் ஞானி ஒருவரின் அறிமுகம் கலாமுக்கு கிடைக்கவே, அவர் கலாமிடம் “உனக்கு ஒரு வாய்ப்பு  தவறவிடப்படுகின்றது என்றால் அதைவிட பெரிய வாய்ப்புக்காக வாழ்க்கை உன்னை நகர்த்துகிறது” என அறிவுரை கூறவே அப்துல் கலாம் மனம் மாறுகிறார்.  


இதனால் கலாம் தனக்கு வந்த இன்னொரு வாய்ப்பான பாதுகாப்பு படையில் சேர்ந்து அங்கு சீனியர் அசிஸ்டெண்ட் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். அவ்வாறு அப்துல் கலாம் பாதுகாப்பு படையில் பணிபுரியும் போது அங்கு அவருக்கு அதிக அழுத்தங்களை கொடுக்கின்றனர். ஆனால் கலாம் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தன்னுடைய வேலையை சிறப்பாக செய்வதில் மும்முரமாக ஈடுபடுகிறார். 


இந்நிலையில் 1950 இல் கலாமுக்கு முதல் ப்ராஜெக்ட் ஆக தாழ்தளத்தில் பறந்து தாக்கக்கூடிய “நந்தி(Nandhi) விமானத்தின் ப்ராஜெக்ட் வரவே அதனை அப்துல் கலாம் சிறப்பாக செய்து முடித்த தருவாயில் சிலரது தலையீட்டினால் அந்த ப்ராஜெக்ட் கைவிடப்படவே மீண்டும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் கலாம். 1950 இல் கைவிடப்பட்ட அந்த ப்ராஜெக்ட் இனை இந்தியா இன்றுவரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றது என்பது இன்னும் வேதனைக்குரிய ஒரு விடயம். 


ABDUL KALAM IN ISRO


இந்நிலையில் இஸ்ரோ கலாமின் திறமையை பார்த்து கலாமை இஸ்ரோவுக்கு அழைத்து அவருக்கு முதல் ப்ராஜெக்ட் ஆக Ratto வின் நான்காம் கட்ட பணியை ஒப்படைக்க, அதையும் அப்துல் கலாம் மிகச்சிறப்பாக செய்து முடிக்க இறுதியில் அதுவும் கூட கைவிடப்படுகிறது. இதன் பின்னரும் கலாமிடம் ஒரு ப்ராஜெக்ட் வர அதையும் அப்துல் கலாம் தன் பாணியில் சிறப்பாக செய்ததோடு, அந்த ப்ராஜெக்ட்டும் சிலரது தலையீட்டினால் கைவிடப்படுகிறது.


இதன் பின்னரும் மனம் தளராத அப்துல் கலாம் தன்னிடம் வந்த நான்காவது ப்ராஜெக்ட் இனை செய்யும் முயற்சியில் இறங்கி அதனை எந்தவித பிரச்சினையுமின்றி சிறப்பாக செய்து லோன்ச் செய்ய, லோன்ச் செய்த பத்தாவது நிமிடத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவ்விமானம் முழுவதும் வெடித்து சிதறுகிறது.


இந்நிலையில் தன் அப்பா , அம்மா மற்றும் தன் தங்கையின் கணவன் என தனக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் தனக்கு உறுதுணையாக இருந்தவர்களின் மரணமும் அந்த சூழ்நிலையில் ஏற்படவே மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி மன அழுத்ததின் உச்சத்திற்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் தூக்கத்தில் இருக்கிறார் அப்துல் கலாம்.

அதன் பின்னரும் இஸ்ரோ கலாமை நம்பி ரோகிணி என்ற ப்ராஜெக்ட் இனை ஒப்படைக்க அதனை சிறப்பாக முடித்து எந்தவித பிரச்சினையும் இன்றி லோன்ச் செய்து தன் முதல் வெற்றியை சுவைக்கிறார் அப்துல் கலாம். தன் முதல் வெற்றியின் போது தனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் , தங்கையின் கணவன் ஆகியோர் உயிருடன் இல்லை என்பதே கலாமுக்கு இருந்த மிகப்பெரிய கவலை. 


ACHIEVEMENTS AND AWARDS 


அதன் பின்னர் பாதுகாப்பு துறையில் சென்று ஐந்து ஏவுகணைகளை உருவாக்கி உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அத்தோடு இந்திய அரசு கலாமின் சேவையினையும் அவரின் திறமையினையும் கௌரவிக்கும் விதமாக பாரத் ரத்னா, பத்ம விபூஷண், பத்மபூஷன் உட்பட பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது.


அப்துல் கலாம் தன்னுடைய வாழ்நாளில் அக்னி சிறகுகள், இந்தியா 2020 ஆகிய பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளதுடன் 2002 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றதுடன் இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக தெரிவு  செய்யப்பட்டார். 


WHEN DID A.P.J. ABDUL KALAM DIE? 


இந்நிலையில் 2015 July 27 இல் தனது 83 வது வயதில் Shillong ல் மாணவர்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.


பின்னர் 2015 ஜூலை 30 இல் முழு ராணுவ மரியாதையுடன் இராமேஸ்வரத்தில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அப்துல் கலாம் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


FINALLY


A.P.J. Abdul Kalam Biography - Born, Education, Awards and Achievements| Success Story of A.P.J. Abdul Kalam


இந்தியாவின் கடைக்குட்டி கிராமமான இராமேஸ்வரத்தில் பிறந்து இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்று இந்திய மக்களின் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்து இருக்கும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு நிச்சயம் நம் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரும் படிப்பினையாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

நாம் எங்கு, எத்தகைய சூழ்நிலையில் பிறப்பினும் வெற்றியை அடைவது என்பது நம் ஒவ்வொருவருடைய முயற்சியிலும் தனக்கு உள்ள திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் தான் இருக்கின்றது. 

நிச்சயமாக அனைவரும் கனவு காணுங்கள். தூங்கும்போது அல்ல. நீங்கள் விழித்திருக்கும் வேளையில். நீங்கள் எதுவாக விரும்புகிறீர்களோ அதை நடந்தது போல் எண்ணிப்பாருங்கள். இதைத்தான் அப்துல் கலாம் ஐயா அவர்களும் நமக்கு சொல்லித்தந்த விடயமாகும். மீண்டும் ஒரு சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகின்றோம். 
                                                                      -END-






Post a Comment

Previous Post Next Post