தொடர் தோல்விகளாலும், அவமானங்களாலும் துவண்டுபோய் இருப்பவராக நீங்கள் இருந்தால் கவலை வேண்டாம். இந்தப் பதிவு உங்களுக்கானது... வாழ்வில் பல தோல்விகள், நிராகரிப்புகள், அவமானங்கள், சூழ்ச்சிகள் என பல இன்னல்களை சந்தித்து அதை தன் தன்னம்பிக்கையினாலும், விடா முயற்சியினாலும் வெற்றி கொள்பவனே வரலாற்றில் சாதனையாளனாக மாறுகின்றான்.
அப்படி தன் வாழ்வில் எண்ணற்ற தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்து தனது ஒல்லியான தேகம் மற்றும் பலவீனமான தோற்றம் என்பவற்றினால் பலரது கேலி, கிண்டலுக்கு உள்ளாகி இன்று உலகின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் தலைவராக, அதன் ஸ்தாபகராக இருக்கின்ற ஜாக் மாவின் Inspiring Life Story பற்றி சுருக்கமாக இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
இன்று உலகில் வெற்றி பெறத்துடிக்கும் எல்லா மனிதர்களுமே முன்னோடியாக நினைக்கும் வாழ்க்கை வரலாறு என்றால் அது ஜாக் மாவின் வாழ்க்கை வரலாறுதான். ஏனெனில் இன்று வரை Coding தெரியாத ஒருவரினால் Internet உலகின் ஜாம்பவானாக முடியும் என்றால் அது ஜாக் மா தான். சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டிய கதை ஜாக் மாவின் கதைதான். வாருங்கள் Inspiring Life Story of Jack Ma பதிவிற்குள் செல்லலாம்.
JACK MA’S BIRTH AND CHILDHOOD
1964 இல் சீனாவில் பிறந்த இவருக்கு அவரது பெற்றோர்கள் Ma Yun என பெயர் சூட்டுகின்றனர். இப்பெயரே பிற்காலத்தில் Jack Ma என மாற்றம் பெறுகிறது. சிறுவயதிலிருந்தே ஜாக் மாவிற்கு கல்வியின் மீது ஆர்வம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய Primary School Exam ல் இரண்டு முறை தோல்வி அடைகிறார். அதுமட்டுமின்றி Middle School Exam இலும் மூன்று முறை தோல்வி அடைகிறார்.
தனக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை என்றாலும் சிறுவயதிலிருந்தே அவருக்கு ஆங்கில மொழி மீது அதிக ஈர்ப்பு. எப்படியாவது ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவருக்குள் வேரூன்றியது.
ஆனால் சீனாவில் அக்காலகட்டத்தில் ஆங்கிலம் பேசுவது என்பது சாதாரண விடயமல்ல. ஏனெனில் அக்காலகட்டத்தில் சீனாவில், சீன மொழிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் ஜாக் மாவிவிற்க்கு ஆங்கிலத்தை கற்பதில் சில சிக்கல்கள் இருந்தன.
என்னதான் ஜாக் மா பார்ப்பதற்கு ஒல்லியாகவும், பலவீனமாகவும் தெரிந்தாலும் சிறுவயதில் இருந்தே அதிகளவு நேர்மறை சிந்தனை உடையவராகவும், தனது இலட்சியத்தை அடைய எத்தகைய காரியத்தையும் துணிந்து செய்யக் கூடியவராகவும் காணப்பட்டார்.
தான் நினைத்த விடயத்தில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற ஊக்கம் அவருக்குள் வேரூன்றி காணப்பட்டது. இத்தகைய அவரது பண்பு தான் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள உதவி செய்தது.
HOW DID JACK MA LEARN ENGLISH?
அதன்படி தான் தீராத காதல் கொண்ட ஆங்கில மொழியை எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தினமும் அதிகாலையில் எழுந்து, தன் வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள சுற்றுலா பயணிகளின் ஹோட்டலுக்கு சைக்கிளில் தனியாக சென்று, சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பயணம் செய்து அங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருப்பதன் மூலம் தன்னுடைய இலக்கான ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்கிறார்.
இவ்வாறு அவர் ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளும் போது அவருடைய வயது 8. அதனோடு அங்கு வரும் வெளிநாட்டவர்கள் சென்ற பிறகும் அவர்களோடு கடிதம் மூலம் நன்றாக பழகுவார்.
அவ்வாறு பழகும்போது ஒரு நபர் அவருடைய Ma Yun என்ற பெயரை பெயரை ஜாக் என அழைக்க பின்னாளில் அது ஜாக் மா என மாறியது. இவ்வாறு தீராத ஆசைக்கு மத்தியில் ஆங்கிலத்தை நன்றாக கற்றுக் கொண்டார்.
UNIVERSITY LIFE OF JACK MA
பின்னர் ஒரு வழியாக ஆங்கிலத்தை கற்றுக் கொண்ட ஜாக் மா அடுத்து தான் ஏதாவது சாதிக்க வேண்டும் என எண்ணி சீனாவில் உள்ள Hangzhou Normal எனும் பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்காக விண்ணப்பிக்கிறார். ஆனால் சிறுவயதிலிருந்தே கல்வியின் மீது ஆர்வம் இல்லாது இருந்து ஜாக் மாவிற்கு பல்கலைக்கழகத்திற்கு செல்வதென்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
அவர் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்காக இரண்டு முறை விண்ணப்பித்து, இரண்டு முறை நுழைவுப் பரீட்சையில் தோற்றி, தோற்றிய இரண்டு முறையும் தோல்வி அடைகிறார்.
இவ்வாறு தன்னுடைய பல்கலைக்கழக வாழ்க்கையில் பல்வேறு தோல்விகளை ஜாக் மா சந்திக்கின்றார். பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு மூன்றாவது தடவையில் 1980 இல் Hangzhou Normal எனும் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பட்டம் பெருகின்றார்.
தான் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றதன் பின்னர் அதே கல்லூரியில் விரிவுரையாளராகவும் ஜாக் மா பணி புரிகிறார். அதற்காக அவர் பெற்ற மாத சம்பளம் வெறும் $10 டாலர் மாத்திரமே. அதுமட்டுமன்றி இப்பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனது மனைவியான Cathy Zhang ஐ ஜாக் மா காதலித்து திருமணம் செய்கிறார்.
APPLYING FOR MULTIPLE JOBS
இதுவரை தனியாளாக இருந்த ஜாக் மாவுக்கு குடும்பம் ஒன்று இருப்பதனாலும், தான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக கடமையாற்றிய போது தனக்கு ஊதியமாக கிடைத்த பத்து டாலர்கள் தனது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய போதாமையினால் வேறு வழியின்றி வெவ்வேறு வகையான 30 வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறார் ஜாக் மா. அவ்வாறு விண்ணப்பித்த அத்தனை வேலைகளிலும் நிராகரிக்கப்பட்டு மிகப்பெரும் தோல்வியை சந்திக்கிறார்.
ஒருமுறை அவர் போலீஸ் வேலைக்கு சேர்வது என்று அதற்காக விண்ணப்பித்த போது “நீங்கள் சிறந்தவர் இல்லை - You not good” என அவரது தோற்றத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து KFC இல் பணிபுரிவதற்காகவும் விண்ணப்பிக்கிறார். இந்த முறையும் ஜாக் மா KFC நிறுவனத்தினரால் நிராகரிக்கப்படுகின்றார்.
அப்போது அவரோடு சேர்த்து 24 பேர் KFC வேலைக்காக விண்ணப்பித்தனர். ஆனால் விண்ணப்பித்த 24 பேரில் ஜாக் மா மட்டுமே நிராகரிக்கப்பட்டார். காரணம் அவர் உயரம் குறைவானவர் மற்றும் நல்ல தோற்றப் பொலிவு இல்லாதவர் என்பதற்காக. அதுமட்டுமின்றி Harvard பல்கலைக்கழகத்திற்கும் 10 முறை விண்ணப்பித்து, விண்ணப்பித்த 10 முறையும் அவர் நிராகரிக்கப்பட்டார்.
இவ்வாறு தன்னுடைய முப்பதாவது வயது வரை எந்த ஒரு வெற்றியையும் சுவைக்காமல் தொடர் தோல்விகளால் நிரப்பப்பட்டு, நிராகரிப்புகளின் தாயகம் ஆகவே ஜாக் மா திகழ்ந்தார். ஆனாலும் தான் ஒவ்வொரு முறை தோல்வியை சந்திக்கும் போதும் தன் தன்னம்பிக்கையை இழக்காது தனது அடுத்த முயற்சியில் இறங்கி விடுவார் ஜாக் மா.
HOW DID JACK MA START ALIBABA?
இவ்வாறு எந்த நிறுவனமும் தனக்கு வேலை தராது நிராகரித்ததால், தானே சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்குவது என்று அதற்கான நிதியை திரட்டி ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க அதில் மிகப் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார் ஜாக் மா.
இதனால் பெருமளவில் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்நிலையில் அவரது நண்பர் அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லவே அங்குதான் முதன்முதலில் Computer என்ற ஒன்று இருப்பதையும் இன்டர்நெட் என்று ஒன்று காணப்படுவதையும் அறிகிறார்.
அப்போது அவருடைய வயது 31 ஆகும். அத்துடன் சீனாபற்றிய தகவல்களை இன்டர்நெட்டில் தேடி பார்க்கிறார் ஜாக் மா. ஆனால் சீனா பற்றிய எந்த ஒரு விடயமும் இன்டர்நெட்டில் இல்லை என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இதனால் சீனாபற்றிய தகவல்களை இன்டர்நெட்டில் பதிவிட வேண்டும் மற்றும் சீனாவில் இணையத்தளத்தை பிரபல்யபடுத்த வேண்டும் என்று நிதி திரட்டி China Yellow Page என்ற சீனாவின் முதல் இணையதளத்தை தொடங்கி வைக்கிறார் ஜாக் மா.
ஆனால் இந்த முறையும் அவரது முயற்சி அவரை சோதித்து. சீனாவின் முதல் இணையத்தளமான China Yellow Page இனை மக்கள் பார்வைக்காக Launch செய்து பல மணி நேரங்கள் ஆகியும் அது Launch ஆகவில்லை. என்னதான் அது Launch ஆகவில்லை என்றாலும் சீனாவின் முதல் இணையதளத்தை உருவாக்கிய பெருமை ஜாக் மாவையே சேரும்.
China Yellow Page மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இவ்வாறு தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து மன உளைச்சலின் உச்சத்திற்குச் சென்றாலுமே தன் முயற்சியைக் கைவிடாத ஜாக் மா அடுத்ததாக ஒரு முயற்சியை எடுக்கிறார். அதுதான் அலிபாபா நிறுவனத்தை தொடங்குவது.
அதன்படி தான் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த போது தன்னோடு நண்பர்களாக இருந்த 18 பேரை அழைத்து கொள்வனவாளர்களையும், விற்பனையாளர்களையும் இணைக்கும் Alibaba என்ற நிறுவனத்தை 1998 இல் ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஆக ஆரம்பிக்கவில்லை. மாறாக வணிகர்களுக்கு வெப்சைட் கிரியேட் செய்து கொடுக்கும் நிறுவனமாகவே ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு ஜாக் மாவிற்கு தேவைப்பட்டது. அதற்காக இதற்கான நிதியினை அமெரிக்காவின் Silicon Valley இல் உள்ள நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்த முறை அவருக்கு வெற்றி என்றாலும் முதல் மூன்று ஆண்டுகளில் அலிபாபா எந்தவித லாபத்தையும் ஈட்டவில்லை. ஆனாலும் தன் முயற்சியை கைவிட ஜாக் மா தொடர்ந்தும் முயற்சி செய்தார். அதன் விளைவாக அலிபாபா நிறுவனத்தை தொடங்கி அடுத்த 20 வருடங்களில் சீனாவின் மிகப்பெரும் பணக்காரராக உருவெடுத்தார்.
THE GROWTH OF JACK MA
அலிபாபா நிறுவனத்தோடு எந்த ஒரு வங்கியும் பணப்பரிவர்த்தனை செய்ய இணங்காத காரணத்தினால் தானே சொந்தமாக Alipay எனும் பணப்பரிவர்த்தனை நிறுவனத்தை தொடங்குவதாக எண்ணி Alipay நிறுவனத்தையும் தொடங்கினார் ஜாக் மா.
ஜாக் மா, அலிபாபா நிறுவனத்தை ஆரம்பித்து சுமார் இருபது வருடங்களில் சீனாவின் மிகப் பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார். ஜாக் மா 2014 இல் சீனாவின் முதல் பெரிய பணக்காரராகவும் இன்றுவரை சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்வதோடு உலகின் 21 வது Most Powerful Person ஆகவும் திகழ்கிறார். அது மட்டுமன்றி உலக பணக்காரர்கள் பட்டியலில் 20 வது இடத்திலும் உள்ளார்.
உலக அளவில் E-Commerce வர்த்தகத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கின்ற அலிபாபா நிறுவனமானது உலகம் முழுக்க பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்வசம் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி சீனாவின் 80% ஆன்லைன் விற்பனை அலிபாபா மூலமே இடம்பெறுகிறது. இதன் சந்தை மதிப்பு சுமார் $212 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். வருமானத்தின் அடிப்படையில் உலகின் ஆறாவது மிகப்பெரிய E-commerce நிறுவனமாக அலிபாபா திகழ்கிறது.
UNIQUENESS OF JACK MA
இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரராக ஜாக் மா காணப்பட்டாலும் இன்றுவரை கோடிங்என்பது பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. கம்ப்யூட்டரில் அவருக்குத் தெரிந்ததெல்லாம் Browsing, Email Sending, Videos Watching மட்டுமே. இதைத் தவிர அவருக்கு வேறு எதுவும் கம்ப்யூட்டரில் தெரியாது.
ஆனால் கோடிங்கை மையப்படுத்தி இயங்கும் E- commerce வர்த்தகத்தில் முதன்மை நிறுவனமாக அலிபாபாவை கொண்டுவந்துள்ளார். இதற்கு காரணம் ஜாக் மாவின் உடைய Idea மற்றும் தன்னோடு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வைத்துக் கொண்டதுடன் அவர்களை சரியான முறையில் ஊக்கப்படுத்தி முகாமைத்துவம் செய்ததாகும்.
அது மட்டுமன்றி தன்னோடு பார்ட்னராக ஜாக் மா சேர்த்துக்கொண்ட கல்லூரி நண்பர்கள் 18 பேருக்கும் Equal Share கொடுத்துள்ளார். அதாவது அவர் பெரும் இலாபத்தின் அளவை அவர்களுக்கும் கொடுத்துள்ளார். இது ஜாக் மாவின் பெருந்தன்மையை குறித்துக் காட்டுகிறது. ஜாக் மாவின் விண்ணப்பத்தை 10 முறை பத்து முறை நிராகரிக்க செய்த Harvard University ஜாக் மாவுக்கு கோடிங் தெரியாது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி கிண்டலும் செய்தது.
ஆனாலும் இதற்கெல்லாம் மனம் தளராத ஜாக் மா என்றாவது ஒருநாள் ஹார்வார்டில் நான் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பேன் என உறுதி பூண்டார். அதன்படி சிறிது காலம் கழித்து Harvard University தங்களது மாணவர்களுக்கு Motivational Speech கொடுக்கும்படி ஜாக் மாவை அழைத்தனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.
FINALLY
இவ்வாறு தன் வாழ்வில் பல தோல்விகளை கண்ட ஜாக் மாவின் இன்றைய சொத்து மதிப்பு வருடத்திற்கு $48.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த சாதனைகளை அவர் நிகழ்த்தியதற்கு காரணம் அவரது மனவலிமையும் தன்னம்பிக்கையும் தான்.
அவமானப்பட்டு தோல்வியடையும் போதெல்லாம் துவண்டுவிடாமல் தொடராக தன் விடாமுயற்சியை தொடர்ந்ததினால் ஆகும். அதனால்தான் அவருக்கு இந்த இலக்கு சாத்தியமானது. எனவே நாமும் இவரது வாழ்க்கையை படிப்பினையாக கொண்டு சாதனை செய்ய முயற்சிப்போம்.
தோல்விகளை சந்திக்காமல் எந்தவொரு வெற்றியும் இலகுவில் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைக்கின்ற வெற்றியானது நீண்ட காலம் நிலைப்பதில்லை என்பதற்கு Inspiring Life Story of Jack Ma பதிவு சிறந்த சான்றாக இருக்குமென்று நினைக்கின்றோம்.
இந்தப்பதிவு உங்களுக்கு பயனுடையதாக இருந்தால் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம். அதுவரை மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம் நன்றி.