Steve Jobs Biography - Steve Jobs Motivational Story in Tamil


உலக அளவில் 800 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பினும் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைந்து இந்த உலகையே திரும்பிப்பார்க்க வைத்தவர்கள் எனும் போது ஒருசில சாதனை மனிதர்களே நம் கண்முன் வந்து நிற்கின்றனர். 

அவ்வாறு வெற்றி கண்டவர்கள் எல்லாம் தன் வாழ்வில் அதிகளவான தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்து அவற்றையெல்லாம் தாண்டியே இந்நிலையை அடைந்துள்ளனர்.

அந்த வகையில் தன் வாழ்வின் இலட்சியத்தை அடைந்து, இன்று முழு உலகமே போற்றி கொண்டிருக்கின்ற, தொழிநுட்ப உலகின் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கின்ற Apple நிறுவனத்தின் உடைய உப ஸ்தாபகரான ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி சுருக்கமாக இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். சரி வாருங்கள் Steve Jobs Motivational Story பதிவிற்குள் செல்லலாம்.

Steve Jobs Biography

BORN OF STEVE JOBS 

எத்தனை வகையான Branded Smartphones மக்கள் பாவனைக்கு வந்தாலும் IPhone இன் இடத்தினை எந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் நெருங்கவில்லை என்பது உலகறிந்த உண்மை.


ஆனால் இத்தனை மகத்தான வெற்றிக்கு பின்னால் ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் தனி மனிதனின் வலிகள் நிறைந்த கடின உழைப்பு உள்ளது என்பதை எத்தனை பேரால் உணர முடியும். அந்த வலிக்கு அவரது பிறப்பே மிகப் பெரிய உதாரணம்.


இரண்டு காதலர்கள் கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கும்போது ஒருவரை ஒருவர் காதலித்து அதன் பின்னர் தவறான உறவில் ஈடுபட்டு பிள்ளையையும் பெற்று எடுக்கின்றனர். திருமணத்துக்கு முன்னரே பிள்ளை பெற்று விட்டதால் அந்தப் பிள்ளையை அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுவதாக இருவரும் முடிவு செய்து அனாதை ஆசிரமம்  ஒன்றில் பிள்ளையை கொடுத்து, இந்தப் பிள்ளையை நன்றாக கல்வி கற்ற, செல்வந்த தம்பதிகளுக்கு மட்டுமே தத்து கொடுக்குமாறு  ஒப்பந்தமும் செய்து கொள்கின்றனர். 


அவர்கள் சொன்னபடியே நன்றாக கல்விகற்ற, செல்வந்த தம்பதிகள் அந்தப் பிள்ளையை தத்தெடுக்க வந்தனர். ஆனால் பிள்ளையைப் பார்த்து விட்டு நாங்கள் தத்தெடுக்க நினைத்ததோ பெண் குழந்தை. ஆனால் இதுவோ! ஆண் குழந்தை என குழந்தையை தத்தெடுப்பதற்கு மறுத்துவிட்டனர்.


அதன்பிறகு சில நாட்கள் கழித்து வேறு தம்பதியினர் இந்த ஆண் குழந்தையை தத்தெடுக்க வந்தாலும் அவர்கள் நடுத்தரக் குடும்பம் மற்றும் நன்றாக கல்வி கற்காதவர்கள் என்பதால் அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோர் மறுத்து விட்டனர். 


ஆனால் இந்த ஏழைத் தம்பதியினர் இந்த குழந்தையை நாங்கள் நன்றாக படிக்க வைப்போம் என  வாக்குறுதியளித்து தத்தெடுகின்றனர். அவ்வாறு ஏழைத் தம்பதியினர் தத்தெடுத்த பிள்ளைதான் ஸ்டீவ் ஜாப்ஸ். இவ்வாறு தன்னை பெற்றெடுத்த பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு தன்னை பெறாத ஏழை பெற்றோரிடம் இருந்து தொடங்குகிறது ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை.

EDUCATION & CHILDHOOD OF STEVE JOBS 

ஸ்டீவ் ஜாப்ஸின் வளர்ப்புப் பெற்றோர்கள் அவர்கள் சொன்னது போலவே ஸ்டீவ் ஜாப்ஸை சிறப்பாக  வளர்க்கின்றனர். அவரை படிக்க வைப்பதற்காக அதிகம் செலவு செய்கின்றனர். ஆனாலும் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு சிறுவயதில் இருந்தே கல்வியில் அதிகம் ஈடுபாடு கிடையாது. பாடசாலையில் தனக்கு தருகின்ற வீட்டு வேலைகளை கூட பணம் கொடுத்து தன் வகுப்பில் உள்ள சக மாணவர்களிடம் கொடுத்து செய்துகொள்வார். 


இவ்வாறு சிறு வயதிலிருந்தே படிப்பின் மீது ஆர்வம் இல்லாது இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு மெக்கானிக்கல் துறை மீது ஆர்வம் ஏற்படுகின்றது. இதனால் தன்னுடைய சிறுவயதிலேயே மெக்கானிக்கல் சம்பந்தப்பட்ட பல விதமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். இவ்வாறு மெக்கானிக்கல் துறையில் தன்னை ஈடுபடுத்தியவாறே சில வருடங்கள் செல்கின்றது. 


இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு 17 வயதாகின்றது. அப்போது அவரது வளர்ப்பு பெற்றோர்கள் அவரை செல்வந்தர்கள் கல்வி கற்கும் பெரிய கல்லூரி ஒன்றில் சேர்த்து விடுகின்றனர். ஆனால் இது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு மிகுந்த கவலையைத் தருகிறது.  தன்னுடைய படிப்பிற்காக அதிகளவான பணத்தை தன்னுடைய பெற்றோர்கள் செலவிடுவதை பார்த்து தன்னுடைய கல்லூரிப் படிப்பை நிறுத்தி விடுகிறார் .

INVOLVEMENT IN SPIRITUALITY

தன்னுடைய கல்லூரிப் படிப்பை விட்டு விட்டு தன்னுடைய பெற்றோர்களுக்கு எந்த தொல்லையும்  கொடுக்காமல் இனி நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி வீட்டைவிட்டு கிளம்புகிறார். அந்த காலகட்டத்தில் தங்குவதற்கு இடமில்லாமல் தன் நண்பர்களின் வீட்டின் படிகளில் உறங்குவதோடு வீதியில் கிடக்கும் பாட்டில்களை விற்று அதில் வரும் பணத்தை வைத்துக்கொண்டு தனக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வார் ஸ்டீவ் ஜாப்ஸ்.


இவ்வாறு தன் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் ஏற்பட்ட கஷ்டங்களின் காரணமாக மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றார். மன அழுத்தம் அதிகரிக்கவே அதிலிருந்து  மீண்டு வருவதற்காக ஆன்மிகத்தை கையில் எடுக்கின்றார். அதன்படி ஆன்மீக அமைதி தேடி 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பௌத்த ஆசிரமத்திற்கு தன் நண்பரோடு செல்கின்றார் ஸ்டீவ் ஜாப்ஸ். 


அங்கு சென்ற பின் அங்குள்ள பௌத்த போதகர் ஒருவரின் உரையினை கேட்டு அந்த உரையின்பால் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக பௌத்த மதத்தினை ஸ்டீவ் ஜாப்ஸ் ஏற்றுக்கொள்கிறார். அதுமட்டுமன்றி வாரத்தில் ஒருநாள் ஏழு மைல் தூரம் சென்று கோவில் ஒன்றில் அன்னதானமும் சாப்பிடுவார். அக்காலகட்டத்தில் அதுவே அவரது முழுமையான உணவாக இருந்தது.

APPLE COMPANY

இவ்வாறு பல கஷ்டங்களை தாண்டி தன்னுடைய இருபதாவது வயதில் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து தன் வீட்டின் பின்பக்கத்தில் உள்ள கரேஜில் Apple எனும் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்குகிறார்.


இரண்டு நபர்களோடு ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தினை தன்னுடைய பல வருட கடின உழைப்பின் மூலம் 10 வருடங்கள் கழித்து 4000 ஊழியர்கள் மற்றும் சுமார் 2 BILLION டாலர்களுடன் முன்னுக்கு கொண்டு வந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். 


ஆனால் அக்கால கட்டத்தில் தான் செய்த சிறு தவறின் காரணமாக தன்னுடைய நிறுவனமான ஆப்பிளில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் விலக்கப்பட்டார். ஆனாலும் மனம் தளராத ஸ்டீவ் ஜாப்ஸ், Next எனும் கணினி தொழில்நுட்ப நிறுவனமான தனது அடுத்த நிறுவனத்தை தொடங்கி அதில் வெற்றியும் கண்டதோடு Pixar எனும் Animation திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கினார். இந்த நிறுவனமே Toy Story எனும் பிரபலமான இன்றும் சிறுவர்கள் மத்தியில் சிறந்து விளங்குகின்ற Animation திரைப்படத்தை உருவாக்கியது. 


இவ்வாறு ஆப்பிள் நிறுவனம் தன்னை விலக்கியதன் பின்னரும் தன் முயற்சியை கைவிடாத ஸ்டீவ் ஜாப்ஸ், மற்றுமொரு நிறுவனத்தை தொடங்கி அதில் வெற்றி கண்டிருக்கும் வேலையில் அவரை விலக்கிய அவரது தாய் நிறுவனமான ஆப்பிள் நிறுவனமானது மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது.


இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்சின் இரண்டாவது நிறுவனமான Next நிறுவனத்தை விலைக்கு வாங்கியதோடு, ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸை இணைத்துக் கொண்டது.


அவ்வாறு மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் இணைத்துக் கொண்டதோடு மட்டுமன்றி அவருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியையும் வழங்கியது ஆப்பிள் நிறுவனம். ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் Ceo ஆக ஆனதில் இருந்து ஆப்பிள் நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது. அதன்பின்னரே IPhone, IPad என பல நவீன புத்தாக்கங்களை உலகுக்கு ஆப்பிள் நிறுவனம் தந்தது. 


இன்று அவை ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் மிகப்பெரிய இலட்சிய கனவாக இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. வாழ்வில் ஒரு முறையேனும் ஐபோனை வாங்கிவிட வேண்டும் என்கின்ற கனவை லட்சியமாக கொண்ட பலரை நாம் இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. ஏன் இந்தப் பதிவினை வாசித்து கொண்டிருக்கின்ற நீங்களும் அத்தகைய மன நிலையில் இருக்கலாம். அந்தளவுக்கு மிகப்பெரும் தொழில்நுட்ப சாதனத்தை Steve Jobs எனும் ஆளுமை நமக்கு தந்திருக்கின்றது. 

DEATH OF STEVE JOBS 

இவ்வாறு பல சோதனைகளையும், தோல்விகளையும் கடந்து வெற்றி கண்ட, உலகையே தன் கண்டுபிடிப்பினால் கட்டிப்போட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் 2011 ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி கலிபோர்னியா நகரில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அப்போது அவருடைய வயது 56 என்பதுடன் அப்போதைய அவரது சொத்து மதிப்பு சுமார் $7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.


ஸ்டீவ் ஜாப்ஸ் தன் இறப்புக்கு முன்னரான உரை ஒன்றில் பின்வருமாறு கூறினார். “எனக்கு கணையப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இந்நோயை குணப்படுத்த முடியாது. நீங்கள் மூன்று நாட்களோ அல்லது ஆறு மாதங்களோ தான் உயிர் வாழ்வீர்கள் என்று என்னுடைய மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் நான் இன்று நலமாக இருக்கிறேன்.


எனினும் என்னுடைய இறுதி நாட்கள் எனக்கு தெரிகின்றது. ஆகவே நமக்கு கொடுக்கப்பட்ட நேரமானது மிக மிகக் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துக்களை வேதவாக்காகக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்; பசியோடு இருங்கள்; புதிய சிந்தனையோடு வாழுங்கள்” என தன் உரையை முடித்துக்கொண்டார். 

FINALLY

எனவேதான் இந்த பதிவினை வாசித்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நான் குறிப்பிட இருப்பது, ஒரு போதும் உங்களுடைய நேரங்களை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் உங்களை குறை கூறினும், அதை எல்லாம் விட்டு விட்டு உங்களிடம் இருக்கின்ற ஆளுமையை வளர்த்துக் வளர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். புதிய விடயங்களை மற்றும் திறமைகளை கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை மேம்படுத்தி கொண்டாலே தவிர நீங்கள் வெற்றிபெற முடியாது. 


உங்களுடைய இலக்கை நோக்கி முடிந்தவரை பயணியுங்கள். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது தோல்விகள் ஏற்பட்டால் அந்த தோல்விகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொள்ளுங்கள். மாறாக தோல்விகள் உங்கள் முயற்சியினை விடுவதற்கான ஒரு காரணமாக இருந்துவிடக்கூடாது.


எந்த அளவுக்கு நீங்கள் தோல்விகளை அதிகம் சம்பாதிக்கின்றார்களோ அந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. நிச்சயம் உங்களாலும் முடியும் முயலுங்கள். உங்களது வாழ்வில் வெற்றி பெறுவதற்கான உந்துதலானது Steve Jobs Motivational Story என்ற இந்தப்பதிவின் மூலம் உங்களுக்கு கிடைத்திருக்குமென்று நாங்கள் நம்புகின்றோம்.


ஸ்டீவ் ஜாப்ஸினுடைய இந்த வாழ்க்கை வரலாற்று பதிவானது உங்களுக்கு பயனுடையதாக இருந்தால், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அதுவரை மீண்டுமொரு சிறந்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம். நன்றி.  

Post a Comment

Previous Post Next Post